Monday 29 October 2018

*அரசாணை எரிப்புப்போர்-26.11.2018-தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உறுதியுடன் முன்னெடுக்கும்.இது ஜேக்டோ ஜியோ தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு பலம் சேர்க்கும் - TNPTF பொதுச்செயலாளரின் மிக முக்கிய சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/10/26112018-tnptf.html



*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண் : 18 நாள் : 29.10.2018*



*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*



*⭐நேற்று (28.10.2018) சென்னையில் நடைபெற்ற ஜேக்டோ ஜியோ மாநில உயர்மட்டக்குழுக் கூட்டத்தில் நிதிக்காப்பாளர் தோழர்.ச.மோசஸ் அவர்களுடன் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலத்தலைவர் தோழர்.மூ.மணிமேகலை மற்றும் மாநிலப்பொருளாளர் தோழர்.க.ஜோதிபாபு உள்ளிடோர் கலந்து கொண்டனர்.*



*⭐கூட்டத்தில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நவம்பர் - 26-ல் அறிவித்துள்ள பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தினைக் கைவிடுமாறு ஜேக்டோ ஜியோ சார்பாக கேட்டுக் கொள்ளப்பட்டது.*




*⭐இது குறித்து உயர்மட்டக்குழுவில் பதிலளித்த நமது பேரியக்கத்தின் மாநிலத்தலைவர் தோழர்.மூ.மணிமேகலை “ இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் உரிமையை மீட்டுத்தருவதற்கான களப்போராட்டத்தில் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைக்கு கூடுதல் அழுத்தம் தரும் நோக்கோடே தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் விரிவடைந்த மாநிலப் பொதுக்குழுக் கூட்டத்தில் தீர்மாணிக்கப்பட்டு, சென்னையில் நடைபெற்ற பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் பங்கேற்ற பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநில மாநாட்டில் நவம்பர் 26-ல் இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு அரசாணை எரிப்புப் போராட்டத்தினை நடத்துவது என பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.*



*⭐அதற்கான மண்டல ஆயத்தக் கூட்டங்களும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன. இவ்விசயத்தில் இடைநிலை ஆசிரியர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அவர்களின் பறிக்கப்பட்ட ஊதியத்தை முழுமையாக மீட்டெடுப்பதே எமது பேரியக்கத்தின் ஒட்டு மொத்த முடிவாக உள்ளது. எனவே இப்போராட்டத்தைக் கைவிடும் நிலையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இல்லை.*




*⭐மேலும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இப்போராட்டமானது எந்நிலையிலும் ஜேக்டோ ஜியோ கூட்டமைப்பின் போராட்ட நடவடிக்கைக்கு குந்தகம் ஏற்படுத்தாது. இப்போராட்டமானது ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்திற்கு கூடுதல் வலிமை சேர்ப்பதாகவே அமையும்” என்று நமது பேரியக்கத்தின் நிலைபாட்டை உறுதிபட தெரிவித்துள்ளார்.*



*⭐அதன்பின்பு வெளியிடப்பட்ட ஜேக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தீர்மானத்தில் தீர்மான எண்: 2ல் “ ஜேக்டோ ஜியோ 2018 நவம்பர் 27 முதல் நடத்தவுள்ள காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தினை சக்தியாக நடத்திடும் பொருட்டு, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ள போராட்டத்தைக் கைவிட வேண்டுமென கேட்டுக்கொள்ளப்பட்டது. மேலும் இடைநிலை ஆசிரியர்களுக்கு  ஊதியக்குழுவால் அறிவிக்கப்பட்ட அநீதியைத் தனிக்கோரிக்கையாகப் பட்டியலிடுவது என முடிவு செய்யப்பட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.*




*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அரசாணை எரிப்புப் போராட்ட நடவடிக்கையானது ஜேக்டோ ஜியோவின் கோரிக்கைகளில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதியக் கோரிக்கையை தனிக்கோரிக்கையாகப் பட்டியலிடும் நிலையை உருவாக்கியுள்ளதை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் மதிப்பிற்குரிய நமது ஜேக்டோ ஜியோவின்  தலைவர்கள் நமது பேரியக்கத்தின் இப்போராட்ட நடவடிக்கை எவ்விதத்திலும் ஜேக்டோ ஜியோவின் போராட்ட நடவடிக்கைகளுக்கு  பாதிப்பை ஏற்படுத்தாது என்பதை உணர்ந்து வரலாற்றுச் சிறப்புமிக்க  நம் அரசாணை எரிப்புப் போராட்டம் ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு கூடுதல் பலத்தையும் ஆசிரியர்கள் மத்தியில் அளப்பரிய போர்க்குணத்தையும் உருவாக்கும் என்பதையும் உணர்ந்து சிறைக் கொட்டடிகளை நோக்கிய நமது போர்ப்பயணத்திற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*



*⭐எனவே சமரசமற்ற களப்போராளிகளான நமது பேரியக்கத்தின் மாநில மாட்ட வட்டார நகரக்கிளைகளின் பொறுப்பாளர்கள் எதிர்வரும் நவம்பர் 26 அரசாணை எரிப்புப் போராட்டத்தையும், நவம்பர் 27 முதல் நடைபெறவுள்ள ஜேக்டோ ஜியோவின் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தையும் வெற்றிகரமாக்கிட முழு பலத்தையும் பயன்படுத்தி இமைப்பொழுதும் இடைவெளியின்றி களப்பணியாற்றிட மாநில மையம் கேட்டுக்கொள்கிறது.*



*⭐எதிர்வரும் நவம்பர் - 3 அன்று மதுரை, காங்கேயம் விழுப்புரம் ஆகிய மூன்று மையங்களில் நடைபெறவுள்ள மண்டல அளவிலான அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களை மிகுந்த உற்சாகத்துடன் வெற்றிகரமாக நடத்திடவும் மாவட்டச்செயலாளர்கள் சமூகவலைதளங்களில் வெளியிட்ட மண்டல ஆயத்தக் கூட்டங்களுக்கான அழைப்பிதழை வட்டார நகர மாவட்ட மாநில நிர்வாகிகளுக்கு நகல் எடுத்து உடனடியாக வழங்கிட வேண்டுமெனவும் அனைத்துப் பொறுப்பாளர்களும் மண்டலக் கூட்டங்களில் கலந்துகொள்வதை உறுதிப்படுத்த வேண்டும் எனவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*



*⭐மேலும் நவம்பர் 11 அன்று அனைத்து மாவட்டங்களிலும் நடைபெறவுள்ள மாவட்ட அளவிலான அரசாணை எரிப்புப் போராட்ட ஆயத்தக் கூட்டங்களையும் எழுச்சியுடன் நடத்திட அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்ள வேண்டும்.*



*⭐நவம்பர்-26 அரசாணை எரிப்புப் போராட்டத்திற்கான வால்போஸ்டர் அனைத்து மாவட்டச்செயலாளர்களுக்கு பார்சல் சர்வீஸ் மூலம் இன்று (29.10.2018) அனுப்பப்பட்டுள்ளது உடனடியாக அதைப்பெற்று அனைத்து வட்டார நகரக்கிளைகளுக்கும் வழங்கி பிரதான இடங்களில் உடனடியாக ஒட்டுவதற்குரிய ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் நவம்பர் 26 அரசாணை எரிப்புப் போராட்டத்திற்குரிய களப்பணிகளை தொய்வின்றித் தொடரவும் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*


*⚡தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: