Sunday 19 September 2021

*🛡️உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்களின் பணி, ஊதியம் பற்றி தவறான தகவல் தெரிவிப்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்.*

*🛡️உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்களின் பணி, ஊதியம் பற்றி தவறான தகவல் தெரிவிப்பதை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும்!*

*_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 17/2021  நாள்: 19.09.2021_*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தீர்மானம்._

*⚔️*                              
*🛡️ஆசிரியர்களின் பணி நிலை, ஊதியம் ஆகியவை பற்றி தவறான, பொய்யான விமர்சனங்களை தமிழக அரசில் உயர் பொறுப்பில் உள்ளவர்களே முன்வைக்கும் போக்கைத் தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கேட்டுக்கொண்டுள்ளது.*

*⚔️*                              
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (19.09.2021) மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*🛡️கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார்.*
                             
*🛡️கூட்டப் பொருள்கள் மீதான விவாதத்தை தொடக்கி வைத்தும், இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்.*

*⚔️*
*🛡️இக்கூட்டத்தில் ஆசிரியர் தினத்தன்று கடலூரில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர்களுக்கு டாக்டர்.ராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவிலேயே அரசுப் பள்ளி ஆசிரியர்களின் பணி நிலை பற்றியும், குறிப்பாக ஆரம்பப்பள்ளி ஆசிரியர்களின் ஊதியம் பற்றியும் தவறான பொய்யான தகவலைக் கூறிய தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சரின் பேச்சுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*⚔️*                              
*🛡️அதேபோன்று கொரோனா தொற்றால் விடுமுறை அளிக்கப்பட்ட ஒரு பள்ளியை பார்வையிடச் சென்ற போது தனது பதவியின் கண்ணியத்திற்கு மாறாக தரக்குறைவான வார்த்தைகளைப் பேசிய கரூர் மாவட்ட ஆட்சித்தலைவரின் பேச்சுக்கும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசின் உயர் பொறுப்பில் உள்ளவர்களே ஆசிரியர்கள் மனதைப் புண்படுத்தும் வகையில் இது போன்று பொறுப்பில்லாமல் பேசுவதை தமிழக முதல்வர் உடனடியாக தலையிட்டு தடுத்து நிறுத்த வேண்டும் என கூட்டத்தில் கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*⚔️*
*🛡️மேலும், கொரோனா பெருந்தொற்றால் கடந்த 1½ ஆண்டுகளாகப் பள்ளிகள் மூடப்படுள்ள நிலையில் 01.09.2021 முதல் 9, 10, 11, 12 வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன. இதனால் மாணவர்கள் பயன் பெற்று வருகின்றனர்.*

*⚔️*
*🛡️இதேபோன்று 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் ஆரம்ப, நடுநிலைப்பள்ளி மாணவர்களின் கல்வி நலன் கருதி இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் (ICMR) வழிகாட்டுதல்களின் படி ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளை உடனடியாகத் திறக்க வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
                       
*🛡️கூட்டத்தின் நிறைவாக மாநிலப் பொருளாளர் J.மத்தேயு நன்றி கூறினார்.*

*🛡️இக்கூட்டத்தில் துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன், இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண் கிறிஸ்துராஜ் உட்பட மாநில நிர்வாகிகள், மாநிலம் முழுவதுமிருந்து மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Tuesday 7 September 2021

*🛡️அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! _பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்!_*

*🛡️அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக 110 விதியின் கீழ் முதலமைச்சர் அறிவிப்பு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்பு! _பழைய ஓய்வூதியத் திட்டத்தை நிறைவேற்ற வலியுறுத்தல்!_*

*ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 16/2021 நாள் : 07.09.2021*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*🛡️இன்று (07.09.2021) தமிழ்நாடு சட்டப்பேரவையில் விதி 110ன் கீழ் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்புக்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது. அதே நேரத்தில் தேர்தல் அறிக்கையில் கூறியவாறு அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டம், இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளையும் விரைந்து நிறைவேற்றுவதோடு, அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் 01.07.2021 முதல் வழங்க வேண்டும் எனவும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கேட்டுக்கொள்கிறது.*

*🛡️கடந்த 27.08.2021 அன்று தலைமைச் செயலகத்தில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 4 சங்கங்களின் தலைவர்களுடன் தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் மனித வள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்பேச்சுவார்த்தையில் சங்கத் தலைவர்களால் முன்வைக்கப்பட்ட பல கோரிக்கைகளில் 13 அறிவிப்புக்களை 110 விதியின் கீழ் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் அறிவித்துள்ளார்.*

*🛡️பேச்சுவார்த்தையின் போது வலியுறுத்திய கோரிக்கைகளான, அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்காலத்தில் பெற்றிடும் கூடுதல் கல்வித்தகுதிக்கான ஊக்க ஊதியம் விரைவில் வழங்கப்படும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும், ஓய்வு பெறும் நாளில் அரசு ஊழியர்களைத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யும் நடைமுறை தவிர்க்கப்படும், 2016, 2017, 2019 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்களில் ஈடுபட்ட அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தக் காலம், தற்காலிகப் பணிநீக்கக் காலம் ஆகியவை பணிக்காலமாக முறைப்படுத்தப்படும், வேலை நிறுத்தக்காலத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல்கள், ஒழுங்கு நடவடிக்கைகள் கைவிடப்படுவதோடு அதன் காரணமாக பாதிக்கப்பட்ட பதவி உயர்வுகள் சரிசெய்யப்படும் ஆகிய அறிவிப்புக்கள் வரவேற்கத்தக்கவை.*

*🛡️அதே போன்று பணிக்காலத்தில் காலமான அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாரிசுகளுக்கான கருணை அடிப்படை நியமனம் தொடர்பான நடைமுறைச் சிக்கல்கள் நீக்கப்படும், அரசு ஊழியர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் வயது வரம்பினைக் கருத்தில் கொள்ளாமல் மகன்கள், மகள்கள் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள், கொரோனா நோய்த் தொற்றுக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் கட்டணமில்லா சிகிச்சை வழங்கப்படும், கணக்கு மற்றும் கருவூலத்துறையின் IFHRMS பணிகள் எளிமைப்படுத்தப்படும், அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்துள்ளதால், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத் தேவைக்கேற்ப ஆசிரியர் பணி நியமனம் மேற்கொள்ளப்படும் என்பன உள்ளிட்ட 13 அறிவிப்புக்களை வெளியிட்டதற்காக மாண்புமிகு.முதலமைச்சர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.*

*🛡️அதே நேரத்தில் அகவிலைப்படி உயர்வை ஒன்றிய அரசு போல் தமிழக அரசும் 01.07.2021 முதல் வழங்கிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.*

*🛡️மேலும், அரசு ஊழியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி நிறைவேற்ற வேண்டும். இடைநிலை ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும். ஆசிரியர் நியமனத்திற்கான வயது வரம்பு 40 என்பதை ரத்து செய்திட வேண்டும்.*

*🛡️நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றிவரும் 12500க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பாசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்*

*🛡️காப்பீட்டுத் திட்டத்தில் தாய், தந்தை இருவரையும் சேர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளும் பேச்சுவார்த்தையின்போது வலியுறுத்தப்பட்டன. அக்கோரிக்கைகளையும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்ற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்துகிறது.*

*🛡️ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் மீது மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அதற்கேற்ப அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் வாழ்வாதாரக் கோரிக்கைகளை மாண்புமிகு.முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றுவார் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெரிதும் எதிர்பார்க்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Monday 6 September 2021

*🖥️ கள்ளக்குறிச்சி TNPTF - இ பைலிங் பயிற்சி வகுப்பு அறிவிப்பு👨‍🏫*

*🖥️ கள்ளக்குறிச்சி TNPTF - இ பைலிங் பயிற்சி வகுப்பு அறிவிப்பு👨‍🏫*


*🖥️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான  ஆசிரியர்கள் தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இ-ஃபைலிங் பயிற்சியானது, எதிர்வரும் 12.9.2021- (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10:30 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஆண்கள்) நடைபெற உள்ளது.*

*🖥️அப்பயிற்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தங்களது வட்டாரத்தில் அனைத்து ஆசிரியர்களும் பயனடையும் வகையில் இந்த ஆண்டிற்கான இ-ஃபைலிங்கை செய்துதர ஆர்வமுள்ள இயக்கத் தோழர்கள் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். ஏனெனில், இப்பயிற்சியானது இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒரு காரணியாக இருக்கும் என்று மாவட்ட கிளை கருதுகிறது.*

*🖥️ மேற்கண்ட பயிற்சியானது சரியாக 11.00 மணிக்கு தரப்பட உள்ளதால் பயிற்சிக்கு வரும் தோழர்கள் கீழ்க்காணும் இனங்களைக் கொண்டு வந்தால் நலம்.*

*⚡1. நன்றாக சார்ஜ் செய்யப்பட்ட லேப்டாப்.*

*⚡2. நெட் கனெக்சன் கொடுப்பதற்கு உகந்த மொபைல் போன்.*

*⚡3. இ-ஃபைலிங் செய்ய வேண்டிய வருமான வரி கணக்கீட்டு படிவம்.*

*⚡4. மேற்கண்ட படிவத்திற்கான படிவம் 16 part-A and part-B.*

*⚡5. கொண்டுவரும் வருமானவரி கணக்கீட்டு படிவத்திற்கான username and password தெரிந்து வந்தால் நன்று. தெரியவில்லை என்றால் பயிற்சியில் விவரம் கூறப்படும்.*

*🤝தோழமையுடன்*

*_க.கலாநிதி_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*கள்ளக்குறிச்சி மாவட்டம்*