Tuesday, 22 January 2019

*CPS கொடூரம் - நூறுநாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் இணைந்து கூலி வேலை செய்து வரும் ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/01/cps.html


*_அன்று தையல் ஆசிரியை : இன்று மண் சுமக்கிறார் 'வயிற்றை கழுவ' கவுரவம் பார்க்காத எலிசபெத்_*


*🌟குஜிலியம்பாறை அருகே, அரசு மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியையாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஆசிரியை எலிசபெத், பென்ஷன் கிடைக்காததால், கவுரவம் பார்க்காமல் வேலைக்கு சென்று வருகிறார்.*


*🌟திண்டுக்கல் சாமிமுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் சூசைஏசு மகள் எலிசபெத், வயது 60, திருமணமாகாதவர். பத்தாம்வகுப்பு வரை படித்த இவர் தையல் தொழில் பயிற்சி முடித்துள்ளார்.*


*_ஆசிரியை பணி:_*


*🌟கடந்த 01.07.1982 ல் குஜிலியம்பாறை ஒன்றியம் சின்னழகுநாய்க்கனூரில் அங்கன்வாடி பணியாளராக சேர்ந்தார். 2004 ல் நத்தம் சிறுகுடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தையல் ஆசிரியராக பணி நியமனம் செய்யப்பட்டார். 2007 முதல் வேடசந்தூர் தாலுகா கே.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் பணிபுரிந்த இவர், 28.02.2011 ல் பணி ஓய்வு பெற்றார். புதிய பென்ஷன் திட்டத்திற்காக இவரது சம்பளத்தில் மாதந்தோறும் பணம் பிடித்தம் செய்யப்பட்டது. (சி.பி.எஸ் . எண் - 7018030) பணி ஓய்வு பெற்று இரண்டு ஆண்டுகளான போதும் இவருக்கு இதுவரை பென்ஷன் வரவில்லை.*


*_மனதிற்கு ஓய்வு இல்லை:_*


*🌟பென்ஷன் தாமதம் மற்றும் தன்னிடம் பிடித்த தொகையையும் திருப்பி வழங்காததால் பணமின்றி எலிசபெத் சிரமம் அடைந்தார். 'பென்ஷன் வந்தால் அடைத்து விடுவேன்' என கூறி யாரிடமும் கடன் வாங்க இவருக்கு விருப்பமில்லை. நூறு நாள் வேலைத் திட்டத்தில் மண் சுமக்கும் வேலை செய்கிறார்.*


*_எலிசபெத் கூறியதாவது:_*


*🌟பென்ஷன் கேட்டு மாநில கணக்காயருக்கு தபால் அனுப்பப்பட்டது. புதிய பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தில் அரசு முடிவு எடுக்காததால் தபால் திருப்பி அனுப்பப்பட்டது. மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடுத்துள்ளேன். தீர்ப்பு வரும் வரை சாப்பிடாமல் இருக்க முடியாது அல்லவா, இதனால் மாரம்பாடி ஊராட்சியில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் வேலை செய்கிறேன். இதில் கிடைக்கும் கூலியால் சாப்பாடு பிரச்சனை தீர்ந்துள்ளது. பென்ஷன் கிடைத்தாலும் இப்பணிக்கு செல்ல முடிவுசெய்துள்ளேன். ஆசிரியராக இருந்த நான் கூலிவேலைக்கு செல்வதால் எந்த சங்கடமும் இல்லை. மன திருப்தியுடன் ஆத்மார்த்தமாக பணி செய்கிறேன். இருந்தபோதும் என்னிடம் பிடித்தம் செய்த தொகையை அரசு வழங்க வேண்டும், இவ்வாறு அவர் கூறினார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: