Saturday 30 March 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_30.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் (31.03.2019) ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் வட்டாரத்தில்  நடைபெற உள்ளது.*


*🌟மாவட்ட சிறப்புப் பொதுக்குழு கூட்டம் மாவட்டத் தலைவர் _தோழர்.கு.குணசேகரன்_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*




*_வேலை அறிக்கை:_*


*⚡மாவட்டச் செயலாளர் _தோழர். சண்முகசாமி_ அவர்கள்,*


*_சிறப்புரை:_*


*⚡மாநிலத்தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள்,*

*⚡மாநில துணைத்தலைவர் _தோழர்.அ.ரஹும்_ அவர்கள்,*


*_நன்றியுரை:_*


*⚡மாவட்டப் பொருளாளர் _தோழர்.தண்டபாணி_ அவர்கள்,*


*🌟மாவட்ட, வட்டார நிர்வாகிகள் கூட்டத்தில் தவறாது கலந்துகொள்ளுமாறு மாவட்ட மையத்தின் சார்பாக அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*🤝தோழமையுடன்;*


*_கு.குணசேகரன்,_ மாவட்ட தலைவர்,*

*_சண்முகசாமி,_ மாவட்ட செயலாளர்,*

*_தண்டபாணி,_ மாவட்ட பொருளாளர்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 29 March 2019

*தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 விழுக்காடு வாக்குப்பதிவினை எய்துவது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/100.html


*🌟இந்தியாவின் பதினேழாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலும் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் வரும் 18-04-2019 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை எய்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.*


*🌟சில அரசியல் கட்சிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தாலும், தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியினை எப்போதும் போல் நடுநிலையுடன் செய்வார்கள் என்பதில் இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என்பதனை பறைசாற்றும் வகையில், ஆசிரியர்களை அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளதை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.*


*🌟ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில் காலங்காலமாக மிகுந்த இன்னலை சந்தித்து வருகின்றனர் என்பதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நடைபெறவுள்ள தேர்தலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் இலக்கான 100 சதவிகித வாக்குப்பதிவினை எய்தும் முயற்சியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தங்களது வாக்கினை 100 சதவிகிதம் செலுத்துவதற்கான சில ஆலோசனைகளை ஜாக்டோ ஜியோவின் சார்பாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, தேர்தல் ஆணையம் அவற்றை செயல்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.*


*⚡தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவர்களது வாக்கு உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் எதாவது ஒன்றில் பணியமர்த்த வேண்டும்,*


*⚡இவ்வாறு பணியமர்த்தும் போது அந்த அலுவலர் தங்கள் தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே தங்களது வாக்கினை EVM ல் செலுத்திடலாம்,*


*⚡தேர்தல் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச் சாவடியானது அவர்களது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்படாத வாக்குச் சாவடியாக இருக்கும் பட்சத்தில், அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குகளை பதிவிடுவதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.*


*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களே தபால் வாக்குகளில் செல்லாத வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பு என்பதே இல்லை. அலுவலர்கள் இரண்டு சின்னத்தில் குறியிடுகிறார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. இதனைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்திட வேண்டும்.*


*⚡தபால் வாக்குகளை எண்ணும்போது ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்த்து, தபால் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்திட வேண்டும்.*

 


*⚡தபால் வாக்குகளை அளிக்கும் போது பெறப்பட வேண்டிய சான்றிதழை (attestation) அரசு அதிகாரிகள் எந்த நிலையில் அளித்தால் செல்லுபடியாகும் என்பதனை அனைத்து நாளிதழ்களிலும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.*


*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும்.*


*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக வழங்கப்பட்ட தபால் வாக்கு படிவங்களின் எண்ணிக்கை, தேர்தல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகளின் எண்ணிக்கை, திரும்பப் பெறப்படாத தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தொகுதி வாரியாக வலைதளங்களில் வெளியிட வேண்டும்.*


*🤝தோழமையுடன்;*


*_ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்_*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி தனியார் பள்ளியில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/22.html


*🌟தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கைக்கு ஏப்.22 முதல் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை அறிவித்துள்ளது.*


*🌟இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி சிறுபான்மை அல்லாத தனியார் பள்ளிகளில் 25 சதவீத இடங்களில் இலவசமாக ஏழைக் குழந்தைகள் சேர்க்கப்படுவர். இந்தத் திட்டத்தில் எல்கேஜி அல்லது 1-ம் வகுப்பில் இலவசமாக சேரும் மாணவர்கள் 8 ம் வகுப்பு வரை கட்டணம் செலுத்தத் தேவையில்லை.*


*🌟அனைத்து தனியார் பள்ளிகளும் இந்தச் சட்டத்தின்படி மாணவர்களைக் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதன்படி வரும் கல்வியாண்டு இலவச மாணவர் சேர்க்கைக்கான இணையதள விண்ணப்பப் பதிவு ஏப்ரல் 22-ல் இருந்து மே 18-ம் தேதி வரை நடைபெற உள்ளது.*


*🌟பள்ளிக்கல்வித் துறையின் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும். ஒப்புகைச் சீட்டு வழக்க வேண்டும்.*


*🌟சிறுபான்மை அந்தஸ்து பெறாத அனைத்து தனியார் நர்சரி, பிரைமரி, மெட்ரிக், ஐசிஎஸ்இ மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளில் இலவசமாக மாணவர் சேர்க்கை பெறலாம். இதற்காக அந்தந்த பள்ளிகள் விண்ணப்பங்களை பெற்று ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும்.*


*🌟மேலும், வட்டார வளமையம், மாவட்டக் கல்வி அலுவலகம், முதன்மைக் கல்வி அலுவலகங்களில் பெற்றோர் தங்கள் விண்ணப்பங்களை இணையதளம் மூலம் பதிவு செய்யலாம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*பள்ளிக் கல்வி அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Card) வழங்குதல் - கல்வித்தகவல் மேலாண்மை மையத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்துள்ள விரைங்களை ஆவணங்களுடன்ஒப்பிட்டு சரிப்பார்த்தல் குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/03/smart-id-card.html


*🌟அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு மாணவர் அடையாள அட்டை (Smart ID Carel) வழங்குவதற்கு கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்யப்பட்ட தகவல்கள் பயன்படுத்தி அச்சடிக்கப்படவுள்ளது.*



*🌟மாணவ, மாணவியர்களுக்கு வழங்கப்படவுள்ள மாணவர் அடையாள அட்டையில் வழங்கப்படவுள்ள தகவல்கள் அனைத்தும் பிழையின்றி முற்றிலும் சரியான தகவல்களாக அச்சடிக்கும் பொருட்டு பின்வரும் விவரங்கள் அனைத்தும் சார்ந்த பலனளித் தலைமையாசிரியர்களால், பள்ளியில் பராமரிக்கப்படும் ஆவணங்களுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டு அதற்கான இணையவழி ஒப்புதல் பெறப்பட வேண்டியுள்ளது.*



*⚡மாணவ மாணவியின் பெயர் தமிழில்*

*⚡மாணவ, மாணவியின் பெயர் ஆங்கிலத்தில்*

*⚡தந்தை தாயின் பெயர் ஆங்கிலத்தில்*

*⚡பள்ளியின் பெயர் மற்றும் முகவரி ஆங்கிலத்தில்,*

*(பெயர் மட்டும் சுருக்கப்பட்ட முறையில்)*

*⚡பிறந்த தேதி* 

*⚡இரத்தப்பிரிவு*

*⚡தொடர்பு எண்*

*⚡வீட்டு முகவரி ஆங்கிலத்தில்*

*⚡மாணவ /மாணவியின் புகைப்படம் சமீபத்திய (recent photos) புகைப்படம் என்பதை உறுதிசெய்ய வேண்டும், இல்லையெனில் புதிய புகைப்படத்தினை பதிவேற்றம் செய்ய வேண்டும்*



*🌟எனவே, மேற்காணும் விவரங்களை தொடர்புடைய பள்ளி தலைமை ஆசிரியரியர்களை கல்வி தகவல் மேலாண்மை மையத்தின் http://tnschools.gov.in என்ற இணையதளத்தில், கீழ்குறிப்பிடப்பட்டுள்ளவாறு இணைய்வழி சரிபார்த்து மென்நகலில் சான்றளிக்க புதிய இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.*



*🌟எனவே, இதனை பயன்படுத்தி சரிபார்ப்பு பணிகளை மேற்கொண்டு அரசு / அரசு உதவி பெறும் மேலாண்மை வகையின் கீழ் இயங்கும் அனைத்து வகை பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் இணையதளத்திலேயே மாணவர்கள் பட்டியலுக்கு கீழே மென்நகல் ஒப்புகையினை 08.04.2019 ற்குள் அளிக்க சுற்றறிக்கை மூலம் உரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக்கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ள தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





Wednesday 27 March 2019

*EMIS - கல்வி தகவல் மேலாண்மை முறைமையில் SCHOOL PROFILES, TEACHER PROFILES AND STUDENT PROFILES விவரங்களை விடுதல் மற்றும் தவறுகளின்றி உள்ளீடு செய்து முடித்தல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/03/emis-school-profiles-teacher-profiles.html


*🌟2018-19 ம் கல்வியாண்டில் அனைத்து வகை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் விவரங்களை கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் (EMIS Web Portal) உள்ளீடு செய்தல் (Data Entry) மற்றும் மேம்படுத்துதல் (Updation) பணியினை உடனுக்குடன் முடித்திடுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை வாயிலாக ஏற்கனவே தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟ஆனால் பல மாவட்டங்களிலுள்ள பள்ளிகளில் மாணவர்களின் விவரங்களை உள்ளீடு செய்யும் போது மாணவர் சார்ந்த விவரங்கள் (பிறந்த தேதி, இரத்த வகை, இன்னும் பிற) தவறாகவோ அல்லது பல்வேறு தகவல் பதிவு செய்ய வேண்டிய கலங்கள் பூர்த்தி செய்யப்படாமல் காலியாகவோ உள்ளது எனவும், பள்ளிகள் (School Profile), ஆசிரியர் (Teachers Profile) தகவல் தொகுப்பிலும் பல்வேறு பதிவுகள் பூர்த்தி செய்யப்படாமல் உள்ளது என ஒருங்கிணைந்த கல்வி (Samages Shiksha) மாநில திட்ட இயக்குநர் அவர்களால் 22.03.2019 நாளன்று நடத்தப்பட்ட ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.*


*🌟எனவே, கல்வி தகவல் மேலாண்மை முறைமை இணைய வழி பதிவுகளில் அனைத்து கலங்களும், விடுதல் இன்றியும் தவறுகளுக்கு இடமளிக்காவண்ணம் முழுமையான அளவில் Student Profiles, Teacher Profiles, School Profile ல் கேட்கப்பட்டுள்ள விவரங்களுக்கு ஏற்ற சரியான பதிவுகளை முழுமையாக பூர்த்தி செய்திட, அவ்வாறு பூர்த்தி செய்யப்பட்ட விவரங்களை பள்ளியின் தலைமை ஆசிரியர்/ வட்டாரக் கல்வி அலுவலர்/ மாவட்ட கல்வி அலுவலர் ஆகியோரால் சரிபார்த்து உறுதி செய்து (Validate) முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக்கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Tuesday 26 March 2019

*தேர்தல் பணிகளில் அரசு ஊழியர் வதைபடுவது தொடரக் கூடாது!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_2.html


*🌟நடக்கவிருக்கும் மக்களவை மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில்,  வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் அலுவலர்களுக்கு முதற்கட்ட பயிற்சி வகுப்புகள் நடந்து முடிந்திருக்கின்றன. இன்னும் இரண்டு கட்டங்களாக இந்த பயிற்சிகள் நடத்தப்படவிருக்கின்றன. ஆனால் பெரும்பாலான அரசு ஊழியர்கள் தாங்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடுத்தப்படுவதை விரும்பவில்லை. அரசு ஊழியர்களின் இந்த தயக்கத்துக்கான காரணங்களை பரிசீலிக்க, தேர்தல் ஆணையம் முன்வர வேண்டியது அவசியம்.*


*🌟வாக்குப்பதிவு அலுவலர்கள் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்களிடமிருந்து உணவுப்பொருள்களை பெறுதல் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. உணவை தாங்கள் சொந்த பொறுப்பில் ஏற்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று கூறியிருப்பது நடைமுறையில் வேடிக்கையானதும்கூட. வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்கள் அங்கிருந்து நகர முடியாத அளவுக்கு முழுப் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு உணவு ஏற்பாடு செய்யக்கூட தேர்தல் ஆணையத்தால் முடியாதா என்ன?*


*🌟வாக்குப்பதிவு அலுவலர்கள் தேர்தலுக்கு முதல் நாளே வாக்குச்சாவடிகளில் தங்கவேண்டியிருக்கிறது. வாக்குப்பதிவு முடிந்து அன்றைய இரவு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் பாதுகாப்பாக அனுப்பி வைப்பது வரைக்கும் அவர்கள் வாக்குச்சாவடிகளில் காத்திருக்க வேண்டும். அநேகமாக நள்ளிரவு வேளையில் தான் அங்கிருந்து அவர்கள் கிளம்ப முடியும்.*


*🌟போக்குவரத்து வசதியற்ற பகுதிகளில் பணியாற்றுபவர்களுக்கும்கூட   தேர்தல் ஆணையம் எந்த ஏற்பாடும் செய்வதில்லை. தொடர்ந்து ஏறக்குறைய மூன்று நாட்களுக்கு ஓய்வின்றி பணிபுரிய வேண்டியிருக்கும் அந்த அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து ஏற்பாடுகளைச் செய்வது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு.*


*🌟சில வாகணங்களை ஏற்பாடு செய்தால்கூடப் போதும் நூற்றுக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு உணவு, போக்குவரத்து வசதிகளை வழங்கிவிட முடியும்.* 


*🌟பெரும்பாலும் வாக்குச்சாவடிகள் என்பது அந்தந்த பகுதிகளில் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களாகவே இருக்கின்றன. அனைத்து பள்ளிகளிலுமே கழிப்பறை வசதிகள் இருப்பதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.*


*🌟வாக்குப்பதிவில் முறைகேடுகள் நடந்தால் தொடர்புடைய அலுவலர்களைத் தண்டிப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்பதால்தான் அரசு ஊழியர்கள் தேர்தல் பணிகளுக்கு பயன்படுத்திக்கொள்ளப்படுகிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு குறைந்தபட்ச வசதிகளைச் செய்துதருவதில்கூட தேர்தல் ஆணையம் அலட்சியம் கா ட்டுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது!*


*✒செய்தி வெளியீடு;*


*_இந்து தமிழ் நாளிதழ்_*

*26.03.2019*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தேர்தல் பணி காரணமாக ஆரம்பப்பள்ளிகள் 210 நாட்களாக இயங்குவதில் சிக்கல்* *_தவிர்ப்பாணை வழங்க தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தல்_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/210.html


*🌟ஆரம்பப் பள்ளிகளில் ஆண்டு பள்ளி வேலை நாட்கள் 206 நாட்களே வருவதால் தவிர்ப்பாணை வழங்க தொடக்கப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.*


*🌟நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 11ல் தொடங்கி மே 19-ம் தேதி வரை நடைபெற உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஏப்ரல் 18-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதனுடன் 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலில் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வாக்குச்சாவடி பணிகள் வழங்கப்பட உள்ளன. இதனால் கல்விப் பணிகள் பாதிக்கப்படாத வண்ணம் பள்ளி வேலை நாட்களை ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிக்க தொடக்கக்கல்வி துறை உத்தரவிட்டது. அதற்குள் ஆண்டு இறுதித் தேர்வுகளை முடிக்கவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. அனால், பெரும்பாலான ஆரம்பப் பள்ளிகளில் வேலை நாட்கள் 206 தினங்களே வருவதால் தவிர்ப்பாணை வழங்க தலைமை ஆசிரியர்கள் கோரியுள்ளனர்.*


*🌟இதுதொடர்பாக ஆரம்பப்பள்ளி தலைமையாசிரயர்கள் தொடக்கப் பள்ளிகளுக்கு 210 பள்ளி வேலை நாட்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்த சூழலில் மக்களவைத் தேர்தலையொட்டி அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் கல்வி ஆண்டின் வேலை நாளை ஏப்ரல் 13-ம் தேதியுடன் முடிக்க வேண்டும். வேலை நாட்கள் இழப்பை சனிக்கிழமைகளில் ஈடு செய்ய வேண்டும் என்று இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.*


*🌟ஆனால், ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் 85 சதவீத தொடக்கப் பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்றதால் பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டன. இதனால் நடப்பு கல்வி ஆண்டின் இறுதியில் (ஏப்ரல் 13) பெரும்பாலான பள்ளிகளுக்கு 206 வரையே வேலை நாட்கள் வருகின்றன.*


*🌟சனிக்கிழமைகளிலும் பள்ளிகளை நடத்தினாலும் 210 நாட்களை எட்ட முடியாது. ஞாயிற்றுக் கிழமைகளில் தேர்தல் பயிற்சிகள் நடைபெறுவதால் அன்றும் பள்ளிகளை திறப்பதில் சிக்கல் நிலவுகிறது. ஏப்ரல் 13-க்கு பின் தேர்தல் பணிகளில் ஆசிரியர்கள் ஈடுபட வேண்டியிருக்கும். பள்ளிகளில் தேர்தல் பணிகள் நடைபெறும் என்பதால் தொடக்கக் கல்வித்துறை தவிர்ப்பாணைவழங்க வேண்டும்" என்றனர்.*


*✍️நாளிதழ் செய்தி*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தபால் ஓட்டினை சரியாக கையாண்டு அளிக்க வேண்டிய வழிமுறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_26.html


*_ஆசிரியர்களுக்கு வணக்கம்_*


*🌟கடந்த சட்டமன்ற தேர்தலில் 24000 தபால்  ஓட்டுகள் செல்லவில்லை என சொன்னார்கள்.*


*_காரணம்:_*


*🌟1⃣ வேட்பாளர் பெயர் நேராக ஒரு டிக் செய்யாமல்*

*இரண்டு டிக் செய்தீர்கள் என்று சொன்னார்கள்.*



*🌟2⃣Attestation BT teacher,Middle HM இடம் வாங்கியது செல்லாது என சொன்னார்கள்.*


*🌟நெல்லை மாவட்டம் இராதாபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் தபால் வாக்கு சம்மந்தமாக  நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது இன்னும் நிலுவையில் உள்ளது.*


🌟ஆகையால் இந்த முறை *சம்பளம் பெற்று வழங்கும் அலுவலர்களான*



*⚡உயர் நிலை பள்ளி தலைமை ஆசிரியர்*


*⚡மேல்நிலைபள்ளி தலைமையாசிரியர்*


*⚡வட்டார கல்வி அலுவலர் BEO*


*_அவர்களிடம் இருந்து பெற்று நமது கடமையை சரியாக செய்வோம்._*


*📧தகவல் பகிர்வு;*


*_செ.பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*திருநெல்வேலி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*JACTTO-GEO வழக்கு : ஓய்வு பெறுவோர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மட்டும் நீக்கம் - அடுத்த விசாரணை 08.04.2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/jactto-geo-08042019.html


*🌟ஜாக்டோ-ஜியோ போராட்டம் மீதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் இன்று (25.03.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது.*


*🌟ஜாக்டோ-ஜியோ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் திரு.N.G.R.பிரசாத், திரு.சங்கரன் & திரு.லஜபதிராய் உள்ளிட்டோர் வாதிட்டனர்.*


*🌟மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R.பிரசாத் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஓய்வு பெற்றோரும் பெறுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதையும் நீதிமன்ற வழிகாட்டல் படி தலைமைச் செயலாளர் செய்துமுடிக்காததையும் குறித்து வாதிட்டார்.*

*🌟வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான பொய் வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு வாதிட்டார்.*



*🌟வழக்கறிஞர் திரு.லஜபதிராய் அவர்கள், CPS நீக்கம் குறித்த ஸ்ரீதர் குழுவின் அறிக்கையை வெளியிடாதது, தமிழக அரசு அரசாணை எண்.254-ன் படி நடந்து கொள்ளாதது, தையலாசிரியராக இருந்து தற்போது தனது வயோதிகத்திலும் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலை செய்து வரும் ஆசிரியர்.எலிசபத் பற்றியும் வாதிட்டார்.*

*🌟நீதிபதிகள் தரப்பில், நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் படித்தவர்களே விமர்சிப்பதும், ஓய்வு பெற்றோர் இயக்கங்களை நடத்துவதையும், ஆளும் தரப்பிற்குச் சாதகமானோர் போராடாமலும் எதிர்த்தரப்பினர் போராட்டத்தைத் தூண்டுவதும் மாறி மாறி நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.*



*🌟சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்கம் குறித்த ஒழுங்கு நடவடிக்கைகளில், இக்கல்வியாண்டில் பணி நிறைவு பெறுவோருக்கு மட்டும் தற்போது நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.*

*🌟கோரிக்கைகள் தொடர்பான வாதங்களுக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அதுகுறித்து உறுதியளிக்க முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டது.*



*🌟கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் திரு.பழனிச்சாமி அவர்களை நாளது தேதிவரை பணியேற்க விடாது பிறப்பிக்கப்பட்ட தடையாணை ஜாக்டோ-ஜியோ தரப்பு வலியுறுத்தலைத் தொடர்ந்து திரும்பப் பெற உறுதியளிக்கப்பட்டது.*


*🌟முன்னதாகத் தேர்தலைக் காரணம் கூறி, வழக்கு விசாரணையை சூன் மாதத்திற்கு ஒத்திவைக்கக் கோரியது அரசு தரப்பு. ஆனால், நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல்-8-ற்கு ஒத்திவைத்தனர்.*


*📧தகவல் பகிர்வு:*

*_TNPTF விழுதுகள்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Monday 25 March 2019

*தேர்தல் பணி தொடர்பான செய்தி துளிகள் மற்றும் காணொளி காட்சிகள் தொகுப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_25.html


*⚡தேர்தல் பணி தொடர்பாகவும், மின்னனு வாக்குபதிவு இயந்திரத்தை கையாள்வது, வாக்குபதிவு இயந்திரம் (EVM) மற்றும் VVPAT பற்றி தெரிந்துகொள்ளவும் காணெளி காட்சிகளாக கொடுக்கப்பட்டுள்ளது.*



*⚡கீழே உள்ள ஒவ்வொரு link யும் கிளிக் செய்து காணொளியை கண்டுகளியுங்கள், இந்த காணொளி தேர்தல் பணிக்கு செல்லும் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.* 



*_TNPTF AYAN YOUTUBE CHANNEL_*



*🌟 PRESANTATION ON _EVM_ AND _VVPAT_ - பாராளுமன்ற தேர்தல் 2019 - தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையம் வெளியீடு*


https://youtu.be/pW2uMx6HqUU



*🌟EVM - மின்னனு வாக்குபதிவு இயந்திரம் குறித்து தெரிந்துகொள்ளுதல் - தலைமை தேர்தல் ஆணையம் வெளியீடு*


https://youtu.be/H4p7jW-9Q20



*🌟VVPAT - VOTER VERIFIABLE PAPER AUDIT TRAIL குறித்து தெரிந்துகொள்ளுதல் - தலைமை தேர்தல் ஆணையம் வெளியீடு*


https://youtu.be/3p7WvWx_EAE



*🌟POLL PERSON குறித்து தெரிந்து கொள்ளுதல் - தலைமை தேர்தல் ஆணையம் வெளியீடு*


https://youtu.be/qNJ01AqyLVk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 24 March 2019

*SLAS TEST - SCHOOL LIST FOR CLASS IV*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/slas-test-school-list-for-class-iv.html


*🌟தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக SLAS TEST நான்காம் வகுப்பிற்கு நாளை (25.03.2019) திங்கட்கிழமை நடைபெற உள்ள பள்ளிகளின் பெயர் பட்டியல்*


*🌟பெயர் பட்டியல் கீழே உள்ள link ல் PDF வடிவில் கொடுக்கப்பட்டுள்ளது, link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளவும்.*

👇👇👇👇👇👇👇👇


https://drive.google.com/file/d/1ynBsAy5BLLDe8iNAVMABmBqDA7WPGVLI/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி கையேடு - 2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/2019.html


*🌟மக்களவை பொதுத் தேர்தல் - 2019, வாக்குச்சாவடி அலுவலர்களுக்கான (PO, PO1, PO2, PO3, PO4) பயிற்சி கையேடு*


*Please click the link - Download PDF file*

👇👇👇👇👇👇👇👇


https://drive.google.com/file/d/1ngKCy6rFXRGWZgTm0FxtKF7n1iXaAv1l/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_24.html


*🌟தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை.*


*⚡ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் மீது எடுத்துள்ள ஒழுங்கு நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும்.*


*⚡பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.*


*⚡குறிப்பாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் 3 சதவீத அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இந்த அகவிலைப்படி உயர்வு தமிழக அரசின் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படவில்லை.*


*🌟தேர்தலைக் காரணம் காட்டி தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளிவருகின்றன.*


*🌟அகவிலைப்படி உயர்வு என்பது ஒரு வழக்கமான நடைமுறை ஆகும். இதுபோன்ற அறிவிப்புகளை வெளியிடுகிறபோது தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வெளியிடலாம். இதற்கான முன்மாதிரிகள் கடந்த தேர்தல்களில் நடைபெற்றுள்ளன.*


*🌟எனவே, தமிழக அரசு காலம் தாழ்த்தாமல் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று தமிழக அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்களுக்கு 3 சதவீத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 22 March 2019

*ISRO Free Course இஸ்ரோவில் கட்டணமில்லா படிப்பு; விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆலோசனை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/isro-free-course.html


*🌟''இஸ்ரோவில், கட்டணமின்றி படித்து வேலைவாய்ப்பை பெறலாம்,'' என, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, ஆலோசனை தெரிவித்து உள்ளார்.*



*_கருத்தரங்கில், விண்வெளி அறிவியல் குறித்து, மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், இஸ்ரோ விஞ்ஞானி  மயில்சாமி அண்ணாதுரை பேசியதாவது:_*


*🌟இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான, 'இஸ்ரோ' சிறப்பாக, செயல்பட்டு வருகிறது.விண்வெளி ஆராய்ச்சி துறையில், உலக அளவில் இந்தியா, ஐந்தாம் இடத்திலும்; செயற்கைக்கோள் தொழில்நுட்பத்தில், முதல் இடத்திலும் உள்ளது.விண்வெளி ஆராய்ச்சி விஷயங்கள் மட்டுமின்றி, மக்களின் அன்றாட தொழில்நுட்ப தேவைகளுக்கு உதவும் செயற்கை கோள்களை ஏவுவதில், இந்தியா முன்னிலையில் உள்ளது.*


*🌟இந்த செயற்கைக்கோள்களின் தொழில்நுட்ப பணிகளுக்கும், செயற்கை கோள்களின் பராமரிப்பு, கண்காணிப்பு பணிகளுக்கும், ஏராளமான தொழில்நுட்ப வேலை வாய்ப்புகள் உள்ளன. இஸ்ரோ சார்பில், தனியாக நிகர்நிலை பல்கலை செயல்படுகிறது. அவற்றில் மாணவர்களை சேர்க்க, ஜே.இ.இ., நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். படிப்பில் சேர்ந்தவர்களுக்கு, முதல் செமஸ்டருக்கு மட்டும், கட்டணம் வசூலிக்கப்படும்.*


*🌟தேர்வுகளில், 75 சதவீதம் மதிப்பெண்கள் எடுத்தால், மீதமுள்ள மூன்றரை ஆண்டுகளுக்கும் கட்டணம் கிடையாது. படிப்பை முடிப்பவர்களுக்கு, இஸ்ரோ நிறுவனமே வேலை வாய்ப்பு அளிக்கும். அதில் விருப்பம் இல்லாதவர்கள் செயற்கை கோள், ராக்கெட் தொழில்நுட்பம் மற்றும் உதிரி பாக தயாரிப்பில் உள்ள தனியார் தொழில்நுட்ப நிறுவன பணிகளில் சேரலாம். மேலும், செயற்கைக்கோள் சமிக்ஞைகளை பயன்படுத்தி, பல்வேறு அரசு துறைகள் செயல்படுகின்றன. அதற்கான 'ரிமோட் சென்சிங்' மையங்களிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தேர்தல் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் ஆசிரியர்கள் பயிற்சி வகுப்பிற்கு செல்லும் போது எடுத்து செல்ல வேண்டிய தகவல்கள் மற்றும் அத்தகவல்களை எவ்வாறு பெறுவது என்பது குறித்த செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_22.html


*_ஆசிரியப் பேரினமே!_*

*வணக்கம்*

  

*🌟தேர்தல் பணிக்கான முதல் பயிற்சி  வகுப்பிற்கு செல்லும் போதே நமது ஆசிரிய சகோதர சகோதரிகள்  அனைவரும்,*


*⚡அவர்கள் இருப்பிடம் மற்றும் பள்ளி முகவரி,*



*⚡பாராளுமன்றத் தொகுதியின் பெயர்*


*⚡பாராளுமன்றத்தொகுதியின் எண்*


*⚡சட்டமன்ற தொகுதியின் பெயர்*


*⚡சட்டமன்ற தொகுதியின் எண்*


*⚡வாக்குச்சாவடி மைய எண்*


*⚡தங்களின் பாகம் எண்*


*⚡தங்களின் வரிசை எண்*


*⚡பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் 2*


*🌟ஆகிய விபரங்கள்  கண்டிப்பாக எடுத்து செல்லவும்.*


*_மேற்கண்ட விபரங்களை எவ்வாறு பெறுவது;_*


*⚡கீழே உள்ள link ஐ கிளிக் செய்து Voter Helpline mobile App ஐ தங்கள் Android Mobile ல் Install செய்துகொள்ள வேண்டும்.*


*⚡பிறகு அந்த Mobile App ஐ Open செய்து உள்ளே செல்ல வேண்டும்.*


*⚡ search box ஐ கிளிக் செய்தால் உங்கள் பெயர், தந்தை பெயர், வயது, பாலினம், மாநிலம், மாவட்டம் மற்றும் சட்டமன்ற தொகுதி கேட்கும் இவற்றிற்கு சரியான பதிலினை கொடுத்தால் மேற்கண்ட தகவல்களை எளிதில் பெறலாம்.*

*⚡தங்களுடைய வாக்காளர் அடையாள அட்டை எண் தெரிந்திருந்தால் அதனை பதிவு செய்து மேற்கண்ட தகவல்களை மிக எளிதாக பெறமுடியும்.*


*_Voter Helpline Mobile App Link:_*

*👇👇👇👇👇👇👇👇*

Let me recommend you Election Commission Of India Voter Helpline


https://play.google.com/store/apps/details?id=com.eci.citizen



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Thursday 21 March 2019

*சென்னையில் கல்வி தொலைக்காட்சி நிகழ்ச்சி திட்டமிடுதல் சார்ந்த பணிமனை - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_11.html


*சென்னை, மார்ச்.20:*

*🌟தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில் ஆரம்பிக்கப்படவுள்ள கல்வி தொலைக்காட்சியின் மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்களுக்கு நிகழ்ச்சி திட்டமிடுதல் சார்ந்த பணிமனை சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிடத்தில் நடைபெற்றது.*


*🌟தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி சேனல் தொடங்கப்படு்கிறது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.*


*🌟தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வி தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய சேனல் தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8வது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.*

*🌟இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி சேனல் ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன. பள்ளிக் கல்வி அமைச்சர் _திரு.செங்கோட்டையன்,_ முதன்மைச் செயலர் _திரு.பிரதீப்யாதவ்,_ பள்ளிக் கல்வி இயக்குநர் ஆகியோரது மேற்பார்வையில், கல்வித் துறை இணை இயக்குநர்கள் ஒருங்கிணைப்புப் பணியில் ஈடுபட்டு வருகினறனர்.*


*_நிகழ்ச்சி நிரல்:_*


*🌟இந்த தொலைக்காட்சியில் 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாக உள்ளன. இதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.*


*_🌟கல்வி தொலைக்காட்சி அரசு செட்டாப் பாக்ஸில் 200 வது சேனலில் ஒளிபரப்பாகவுள்ளது._*


*⚡தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறலைப் பற்றிய விளக்க உரையும், அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும்.*

*⚡காலை 5.30 மணிக்கு நாள் குறிப்பு என்ற தலைப்பில் அன்றைய முக்கிய நிகழ்வுகள் குறித்து விளக்கப்படும். இந்த நாள் இனிய நாள் என்ற தலைப்பில் உலக நிகழ்வுகள், செய்தித் தொகுப்புகள், அந்த நாளின் முக்கிய நிகழ்வுகள் கொண்டு சேர்க்கப்படும்.*



*⚡காலை 5.30 மணி முதல் 6 மணி வரை நலமே வளம் என்ற தலைப்பில் உடற்பயிற்சி, யோக செயல் விளக்கம், ஆரோக்கியம் குறித்த விளக்கவுரை, உணவு முறை, எளிய மருத்துவம் குறித்து விளக்கப்படும்.*


*⚡6 முதல் 6.30 மணி வரை குருவே துணை என்ற நிகழ்ச்சி மூலம்  சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த விளக்கப் படம், அவர்களது சாதனைப் பேட்டிகள், கல்வியாளர்களின் கருத்துகளும் இடம் பெறும்.*


*⚡காலை 6.30 முதல் 7 மணி வரை சுட்டி கெட்டி என்ற நிகழ்ச்சியில் சாதனை மாணவர்கள், அவர்களது கண்டுபிடிப்புகள் இடம் பெறும்.*


*⚡தொடர்ந்து 7 மணி முதல் 7.30 மணி வரை வல்லது அரசு என்ற நிகழ்ச்சியின் மூலம் தமிழக அரசின் கல்வித் துறையின் செயல்பாடுகள், அறிவிப்புகள், பேட்டிகள், கல்வித் துறை மானியங்கள், நலத் திட்டங்கள், அரசின் சாதனை விளக்கங்கள் இடம் பெறும்.*

*⚡7.30 மணி முதல் 8 மணி வரை ஒழுக்கம் விழுப்பம் தரும் என்ற நிகழ்ச்சியில் நல்லொழுக்கக் கதைகள், மாணவா்களின் குறு நாடகங்கள், வாழ்வியில் உரைகள் இடம் பெறும்.*



*⚡8 மணி முதல் 8.30 மணி வரை மணியோசை என்ற  நிகழ்ச்சி மூலம் சிறந்த பள்ளியின் செயல்பாடுகள் குறித்த சிறப்புப் பார்வை, கட்டமைப்பு வசதிகள், சாதனைகள் குறித்து விளக்கப்படும்.*


*⚡8.30 முதல் 9 மணி வரை தாயே தமிழ் நிகழ்ச்சி மூலம் தமிழ்ப் பாடங்கள், பாடல்கள், தமிழறிஞர்களின் உரைகள், குழந்தைப் பாடல்கள், தமிழ்ப்பாரம்பரிய காட்சிகள் இடம் பெறும்.*

*⚡9 மணி முதல் 9.30 மணி  வரை ஏ டூ இசட் என்ற நிகழ்ச்சியில் ஆங்கில உச்சரிப்புப் பயிற்சி,  ஆங்கில இலக்கியம், ஆங்கிலம் பேசும் பயிற்சிகள், ஆங்கில அறிவை வளர்க்கும் நிகழ்ச்சிகள் இடம் பெறும்.*



*⚡9.30 முதல் 10 மணி வரை எளிய கணிதம் என்ற நிகழ்ச்சியில், கணிதப் பாட விளக்கம், கணித செயல்பாடுகள், கணிதப் புதிர்கள், கணித ஆய்வக விளக்கம் உள்ளிட்டவை  இடம் பெறும்.*


*⚡10 மணி முதல் 10.30 மணி வரை அறிவோம் அறிவியல் என்ற நிகழ்ச்சி மூலம் அறிவியல் கண்டுபிடிப்புகள், அறிவியல் பாடங்கள், செய்முறை விளக்கங்கள் இடம் பெறும்.*


*⚡10.30 மணி முதல் 11 மணி வரை சுவடுகள் நிகழ்ச்சியில் பழைய வரலாற்றுப் பின்னணிகள், புவியியல் பாடங்கள், பொது அறிவு நிகழ்ச்சிகள் இடம் பெறும்.*


*⚡11 மணி முதல் 11.30 மணி வரை உயிர்த்துளி என்ற நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் முறை சாராக் கல்வி, மாற்றுத்திறனாளி மாணவர் ஊக்கப்படுத்துதல், முதியோர் பாதுகாப்பு, தையல், கைவினை பொருட்கள் தயாரிப்பு, ஓவியம் வரைதல், விவசாயம் குறித்த நிகழ்ச்சி இடம் பெறும்.*

*⚡11.30 மணி முதல் 12 மணி வரை ஏணிப் படிகள் என்ற நிகழ்ச்சி மூலம் போட்டித் தேர்வுகளுக்கு கற்றல், நீட், ஜேஇஇ, சி.ஏ., டி.என்.பி.எஸ்.சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கான வழிகாட்டிகள், பயிற்சி வகுப்புகள் நேரடியாக வழங்கப்படுகின்றன.*



*⚡பகல் 12 மணி முதல் 12.30 மணி வரை ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதில் குழு விளையாட்டுகள், விளையாட்டில் சாதித்த மாணவர்கள், உடற் கல்வி ஆசிரியர்கள் சாதனைகள் குறித்து விளக்கப்படும்.*


*⚡மதியம் 12.30 மணி முதல் 1 மணி வரை முத்தமிழ் முனையம் என்ற நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கல்வி சார்ந்த பாடல், நடனம், தமிழ் பாடல்கள், வாய்ப்பாட்டு, இசைக் கோர்வை உள்ளிட்ட நிகழ்சிகள் நடைபெறுகிறது.*


*⚡இவ்வாறு பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தினமும் தொகுத்து வழங்கப்படவுள்ளன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்.*


*_மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமனம்:_*


*🌟இதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் மீடியா ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்கள். இவர்கள் ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.*


*🌟இவ்வாறு 32 மாவட்டங்களிலும் கல்வி தொலைக்காட்சியின் மீடியா ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு காட்சிப் பதிவுகள் நடைபெற்று வருகின்றது. இவை சென்னை காட்சி பதிவு மையத்தில், ஒருங்கிணைக்கப்பட்டு, விரைவில் ஒளிபரப்பு தொடங்கவுள்ளது.*


*🌟இந்தத் தொலைக்காட்சி, தொடக்கப் பள்ளி முதல் பிளஸ் 2 வரை உள்ள அனைத்துத் தரப்பு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் பயனுள்ள தகவல்களை வழங்கும். பாடத் திட்டங்களுக்குள்தான் பயிற்சிகள் வழங்கப்படும்.*


*_பள்ளிகளில் தொலைக்காட்சிகள்:_*


*🌟அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர். மீண்டும், மாலையில் மறு ஒளிபரப்பு செய்யப்பட உள்ளதால் வீட்டில் சென்றும் மாணவர்கள் கல்வித் தொலைக்காட்சி சேனலை பார்த்து பயன் பெற முடியும்.*


*🌟இது, இந்திய அளவில் கல்வித் துறையின் முன்னோடி திட்டமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை கல்வியாளர்கள் தெரிவித்தனர்.*


*🌟மதிப்புமிகு பள்ளிக்கல்வி இயக்குநரின் ஆலோசனையின் பேரில் இந்த பணிமனையின் மாநில ஒருங்கிணைப்பாளர் _திரு.அமலன் ஜெரோம்,_ இணை ஒருங்கிணைப்பாளர் _திரு.ஆப்ரகாம் மேஷாக்_ ஆகியோர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி அளித்தார்கள்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*CPS NEWS:* *_21.03.2019_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/03/cps-news-21032019.html



*🌟01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது என்ற தகவல் அறியும் உரிமைச்சட்ட வினாவிற்கு, பதில் அளிக்க மிக அதிக அளவில் மனித உழைப்பு தேவைப்படுவதால் பதில் அளிக்க இயலாது என RBI பதில்.*


*📧தகவல் பகிர்வு;*


*_தோழர். பிரடெரிக் ஏங்கல்ஸ்,_*

*திண்டுக்கல்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*தேர்தல் பணி தொடர்பாக _இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையாளர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_70.html


*🌟2019 - நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குமுதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கு சீட்டு (படிவம்: 12, 12A, 12B, 12C, கொடுத்தல், தேர்தல் பணிச்சான்று (EDC) வழங்குதல், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உடல்நலம் பாதிக்கப்பட்டோர், 50 வயதை தாண்டிய ஊழியர்களுக்குதேர்தல் பணியில் விலக்கு அளித்தல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி*

*_⚡தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும்,_*

*_⚡தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும்,_*

*_⚡திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும்,_*

*_⚡வருவாய் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கும்,_*


*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பாக கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.*


*_கோரிக்கைகள் விபரம்:_*


*🌟தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் - 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1 லட்சத்து 97  ஆயிரம் பெண்கள் உள்பட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.*


*🌟இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.*


*🌟திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் மொத்தம் 2,931 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு8 வாக்குப் பதிவு மைய அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் 23,448 வாக்குப்பதிவு அலுவலர்களும் 40% பேர் ரிசர்வ் அலுவலர்களாக வைக்கப்படுவதால் கூடுதலாக 9,379 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் என மொத்தம் சுமார் 32,887 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கான பணியில் ஈடுபடப்போகிறார்கள்.*


*🌟இவர்களில் பெரும்பாலும் 80% விழுக்காட்டிற்கு மேல் பெண் ஆசிரியர்கள் ஆவர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின்போது ஒரு பாராளுமன்ற தொகுதி விடுத்து அடுத்த பாராளுமன்றதொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் பணி வழங்கியதால் பல்வேறு இன்னல்களை குறிப்பாக பெண் ஆசிரியர்கள்  அடைந்துள்ளனர். எனவே இம்முறை தாங்கள் பணிபுரியும் சட்டமன்ற தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கு பணியாணை வழங்க வேண்டுகிறோம்.*


*🌟கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள் 50 வயதை கடந்தவர்கள் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.*


*🌟இவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களையும், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்.*


*🌟வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு சென்றுவர ஆசிரியர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும். வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குடிநீர், உணவு, மின் விசிறி வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.*


*🌟கடந்த மே-2016 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட பெரும்பாலான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. அரசு எதிர்பார்க்கும் 100% சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டினை படிவம் -12, 12A,12B, 12C-யினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்கள் வழங்க வேண்டும். குறிப்பாக முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கு சீட்டு படிவங்களை வழங்க வேண்டும்.*


*🌟மேலும் ஒரே பாராளுமன்றதொகுதிகளுக்குள் வாக்குப்பதிவு அலுவலராக நியமனம் செய்யப்படும் பட்சத்தில் ஒவ்வொரு பணியாளரும் பணியாற்றக்கூடிய வாக்குச் சாவடியிலே தனது வாக்கினை செலுத்தும் விதமாக அவர்களுக்கு தேர்தல் பணிச்சான்று (ELECTION DUTY CERTIFICATE) வழங்கப்பட வேண்டும்.*


*🌟ஆசிரியர்கள் கல்விப் பணியை பாதிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் வகையிலான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் தேர்தல் நடக்கும் நாளன்று ஒரே நேரத்தில் நண்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை வழங்க வேண்டும்.*


*🌟கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் II க்கு 17A பதிவேட்டை பராமரிப்பது உள்ளிட்ட 4 விதமான வேலைகளை செய்ய வேண்டியது இருந்தது. இதனை கருத்தில்கொண்டு இம்முறை கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.*


*🌟ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் இதரப்பொருட்களை ஓட்டுப்பதிவு நிறைவு பெற்ற 2 மணி நேரத்திற்குள் மண்டல அதிகாரி பெற்றுக்கொள்ளஏற்பாடு செய்ய வேண்டும்.*


*🌟கடந்த தேர்தல் காலங்களில் மூன்று தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதில் மூன்றாவது பயிற்சி வகுப்பில்தான் தேர்தல் பணிக்கான  ஓட்டுச்சாவடி இருப்பிடம் தெரிவிக்கப்படும். உடனடியாக பயிற்சி வகுப்பில் இருந்து அப்படியே ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.*


*🌟தேர்தல் பணிக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை முதல் அல்லது இரண்டாவது பயிற்சி வகுப்பிலேலே வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த காலங்களில் 704 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக்கண்டறியபபட்டுள்ளது. எனவே அத்தகையே வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்குகூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ள வேண்டும்.*


*🌟தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவ குழுவை  அமைத்திட வேண்டும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் வாக்குச்சாவடிக்குஉள்ளே மரணம் தழுவிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதால், மண்டல அளவிலான மருத்துவக் குழுவைக் கொண்டு அனைத்து மருத்துவ வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.*


*_மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுதல்:_*


*🌟கடந்த காலங்களில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது. தலைமைத் தேர்தல் அலுவலருக்கு ரூ.1700/-ம் மற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.*


*🌟வாக்குப் பதிவு நடைபெறும் அன்று வாக்குப் பதிவு முடிவுற்று மண்டல அலுவலர் (Zonal Officer) வந்து மின்னனு வாக்குப்பதிவு (EVM) இயந்திரம் மற்றும் வாக்குப் பெட்டிகளை பெற்று செல்லும் வரை வாக்குச் சாவடியிலேயே இருக்க வேண்டும். அன்று வாக்குச்சாவடியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலைதான் பெரும்பலான கிராமங்களில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களின் நிலையாக உள்ளது. இந்த தேர்தல் பணிக்காக ஒவ்வொரு பணியாளர்களும் 5 நாட்கள் தேர்தல் பணியாற்ற வேண்டியது உள்ளது.*


*🌟அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுவது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து நாங்கள் 100% முழுமனதுடன் தேர்தல் பணி புரிகின்றோம். ஆனால் தற்போது உள்ள விலைவாசி உயர்வு, போக்குவரத்து செலவு, உணவு செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் மதிப்பூதியமானது மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது.*


*🌟எனவே தற்போது உள்ள விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்க அவர்கள் பெறும் மொத்த ஊதியத்தில் 10% சதவீதம் மதிப்பூதியமாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*


*🤝தோழமையுடன்;*


*_செ.பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*திருநெல்வேலி மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм