*தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களின் தபால் வாக்குகளை முழுமையாக செலுத்தி 100 விழுக்காடு வாக்குப்பதிவினை எய்துவது தொடர்பாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்.*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/03/100.html
*🌟இந்தியாவின் பதினேழாவது நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான நாடாளுமன்றத் தேர்தலும் தமிழகத்தில் காலியாகவுள்ள 18 சட்டமன்ற உறுப்பினர்களைத் தேர்வு செய்வதற்கான சட்டமன்ற இடைத் தேர்தலும் வரும் 18-04-2019 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலின் போது 100 சதவிகித வாக்குப்பதிவு என்ற இலக்கினை எய்துவதற்காக பல்வேறு நடவடிக்கைகளை இந்திய தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.*
*🌟சில அரசியல் கட்சிகள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்களை தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தல் பணியில் ஈடுபடுத்தக்கூடாது என்று தேர்தல் ஆணையத்திடம் தெரிவித்தாலும், தமிழகத்திலுள்ள ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் தேர்தல் பணியினை எப்போதும் போல் நடுநிலையுடன் செய்வார்கள் என்பதில் இந்திய தேர்தல் ஆணையம் உறுதியாக உள்ளது என்பதனை பறைசாற்றும் வகையில், ஆசிரியர்களை அரசு ஊழியர்களையும் தேர்தல் பணியில் ஈடுபடுத்தி உள்ளதை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பணியாளர்களின் கூட்டமைப்பான ஜாக்டோ ஜியோ வரவேற்கிறது.*
*🌟ஆனால், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் தங்களின் வாக்குகளை பதிவு செய்வதில் காலங்காலமாக மிகுந்த இன்னலை சந்தித்து வருகின்றனர் என்பதனை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்குக் கொண்டு வருகிறோம். நடைபெறவுள்ள தேர்தலின்போது, இந்திய தேர்தல் ஆணையத்தின் இலக்கான 100 சதவிகித வாக்குப்பதிவினை எய்தும் முயற்சியில், தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களும் தங்களது வாக்கினை 100 சதவிகிதம் செலுத்துவதற்கான சில ஆலோசனைகளை ஜாக்டோ ஜியோவின் சார்பாக தங்களின் கவனத்திற்குக் கொண்டு வந்து, தேர்தல் ஆணையம் அவற்றை செயல்படுத்துமாறு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.*
*⚡தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களை அவர்களது வாக்கு உள்ள நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆறு சட்டமன்ற தொகுதிகளில் எதாவது ஒன்றில் பணியமர்த்த வேண்டும்,*
*⚡இவ்வாறு பணியமர்த்தும் போது அந்த அலுவலர் தங்கள் தேர்தல் பணியாற்றும் வாக்குச் சாவடியிலேயே தங்களது வாக்கினை EVM ல் செலுத்திடலாம்,*
*⚡தேர்தல் அலுவலர்கள் பணியாற்றும் வாக்குச் சாவடியானது அவர்களது நாடாளுமன்றத் தொகுதிக்கு உட்படாத வாக்குச் சாவடியாக இருக்கும் பட்சத்தில், அனைத்து அலுவலர்களுக்கும் தபால் வாக்குகளை பதிவிடுவதற்கான அனைத்து நட வடிக்கைகளையும் கண்டிப்பாக மேற்கொள்ள வேண்டும்.*
*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களே தபால் வாக்குகளில் செல்லாத வாக்குகளை அளிப்பதற்கு வாய்ப்பு என்பதே இல்லை. அலுவலர்கள் இரண்டு சின்னத்தில் குறியிடுகிறார்கள் என்பது ஏற்புடையதாக இல்லை. இதனைத் தவிர்ப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல் ஆணையம் எடுத்திட வேண்டும்.*
*⚡தபால் வாக்குகளை எண்ணும்போது ஏற்படும் குளறுபடிகளைத் தவிர்த்து, தபால் வாக்கு எண்ணிக்கை முழுவதையும் வீடியோ பதிவு செய்திட வேண்டும்.*
*⚡தபால் வாக்குகளை அளிக்கும் போது பெறப்பட வேண்டிய சான்றிதழை (attestation) அரசு அதிகாரிகள் எந்த நிலையில் அளித்தால் செல்லுபடியாகும் என்பதனை அனைத்து நாளிதழ்களிலும் தேர்தல் ஆணையம் வெளியிட வேண்டும்.*
*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து அலுவலர்களின் பாதுகாப்பினை உறுதிசெய்திட வேண்டும்.*
*⚡தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அலுவலர்களுக்கு தொகுதி வாரியாக வழங்கப்பட்ட தபால் வாக்கு படிவங்களின் எண்ணிக்கை, தேர்தல் அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட பூர்த்தி செய்யப்பட்ட தபால் வாக்குகளின் எண்ணிக்கை, திரும்பப் பெறப்படாத தபால் வாக்குகளின் எண்ணிக்கை ஆகிய விவரங்களைத் தேர்தல் ஆணையம் சட்டமன்ற தொகுதி வாரியாக வலைதளங்களில் வெளியிட வேண்டும்.*
*🤝தோழமையுடன்;*
*_ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள்_*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment