Saturday 28 August 2021

*📌Income Tax E-File (ITR) செய்ய மதுரை TNPTF சார்பில் இலவசப் பயிற்சி!*

*🔥  T  N  P  T  F  🔥*
    *🛡  அயன்🛡*

*📌Income Tax E-File (ITR) செய்ய மதுரை TNPTF சார்பில் இலவசப் பயிற்சி!*

*📌IT return இணைய வழியில் File செய்வதை பெரும்பான்மை ஆசிரியர்கள் புரியாத புதிராகவே கருதி வருகின்றனர். ஒருசில வட்டாரங்களில் ஆசிரிய இயக்கங்களே செய்து தருகின்றன. சில இடங்களில் இதற்கும் வசூல் வேட்டை நடத்தும் அலுவலகங்களும் உண்டு.*

*📌இவ்வாண்டு முதல் புதிதாக மாற்றம் செய்யப்பட்டுள்ள E-file முறை புரிந்தோருக்கே சுமையாகுமளவு உள்ள நிலையில், அதுகுறித்த பயிற்சி இன்று (28.08.2021) தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்டக் கிளையின் சார்பில் நடத்தப்பட்டது.*

*📌வருமான வரி கணக்கு 2021-22-ஆம் ஆண்டிற்கான இ-ஃபைலிங் செய்வதற்கான பயிற்சி முகாம் மாவட்ட துணை தலைவர் தோழர்.ஆதி நாராயணன் அவர்கள் தலைமையில் மதுரை TNPTF மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.*

*📌வருமான வரித்துறையிலிருந்து வருமான வரித்துறை அலுவலர் தோழர்.பிரேம்குமார் அவர்கள் கலந்துகொண்டு வருமான வரி பிடித்தம் தொடர்பான சந்தேகங்களை விளக்கிப் பேசினார்.*

*📌அதன்பின்னர் ஒவ்வொரு ஆசிரியரும் ஆன்லைனில் தங்களுடைய வருமானவரி கணக்கினை இ-ஃபைலிங் முறையில் எவ்வாறு செய்வது என்பதை பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் மூலம் மேலூர் கல்வி மாவட்டச் செயலாளர் தோழர்.ஜேம்ஸ் ராஜா மற்றும் கரூர் மாவட்டச் செயலாளர் தோழர்.ஜெயராஜ் ஆகியோர் ஒருங்கிணைந்து சிறப்பாக விளக்கி கூறினார்கள்.*

*📌நிகழ்ச்சியின் இறுதியில் மாநிலச் செயற்குழு உறுப்பினர் தோழர்.சக்திவேல் நன்றியுரை  கூறினார். மேற்கண்ட பயிற்சியினை மதுரை மாவட்டச் செயலாளர் தோழர்.சீனிவாசன் ஒருங்கிணைத்தார்.*

🙏நன்றி🙏
*TNPTF விழுதுகள்*

Friday 27 August 2021

*தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 4 சங்கங்களுடன் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நடத்திய கலந்தாலோசனைக் கூட்டம் - பொதுச்செயலாளர் அறிவிக்கை*

🛡️தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர், மனிதவள மேலாண்மைத்துறைச் செயலாளர் ஆகியோர் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உள்ளிட்ட 4 சங்கங்களுடன் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து நடத்திய கலந்தாலோசனைக் கூட்டம். 

 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நாள்:27.08.2021 

 🛡️தமிழ்நாடு அரசின் மனிதவள மேலாண்மைத் துறையிடமிருந்து ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களின் கோரிக்கைகள் தொடர்பாக விவாதிப்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு ஆகிய நான்கு அமைப்புகளுக்கும் நேற்று(26.08.2021) மாலை அழைப்பு விடுக்கப்பட்டது. 
  
🛡️அதன்படி இன்று (27.08. 2021) நண்பகல் 12 மணியளவில் சென்னையில் தலைமைச் செயலகத்தில் 4 சங்கங்களின் தலைவர்களுடன் தமிழ்நாடு அரசின் நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மதிப்புமிகு.கிருஷ்ணன் இ.ஆ.ப, மனிதவள மேலாண்மை துறைச் செயலாளர் மதிப்புமிகு. மைதிலி K. ராஜேந்திரன், இ.ஆ.ப ஆகியோர் 90 நிமிடங்களுக்கும் மேலாக ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக விவாதித்தனர். 4 சங்கங்களின் சார்பிலும் தலா ஒருவர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநில பொதுச் செயலாளர் தோழர் ச.மயில் கலந்துகொண்டு ஆசிரியர் நலன் சார்ந்த, மாணவர் நலன் சார்ந்த, கல்வி நலன் சார்ந்த பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக விரிவாக எடுத்துரைத்தார்.

அப்போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் பின்வருமாறு
  
  📌(1) பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 
  
  📌(2) இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கிட வேண்டும். 

  📌(3) ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 11% அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு உடன் வழங்கிட வேண்டும்.ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு அனுமதிக்கப்பட வேண்டும். 

  📌(4) ஆசிரியர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு மீண்டும் வழங்கப்பட வேண்டும். 

  📌(5) ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உயர் கல்வி பயின்றதற்கான பின்னேற்பு அனுமதி வழங்கப்படாமல் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வித்துறையில் நிலுவையில் உள்ளது. பின்னேற்பு அனுமதி உடன் வழங்கிட வேண்டும். 

  📌(6) ஒளிவுமறைவற்ற ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வை உடனடியாக நடத்திட வேண்டும். 

  📌(7) ஜாக்டோ ஜியோ போராட்டக் காலத்தை பணிக்காலமாக அறிவித்திட வேண்டும். போராட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட பணி மாறுதல்களை ரத்து செய்திடவேண்டும். 

  📌(8) தொடக்கக்கல்வித்துறை தனி அலகாகச் செயல்படவேண்டும். 

  📌(9) தற்போது அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்துள்ளதைக் கணக்கில் கொண்டு கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கிட வேண்டும். 

  📌(10) 13,500க்கும் மேற்பட்ட பகுதி நேர சிறப்பு ஆசிரியர்களை முழுநேர ஆசிரியர்களாக்கி காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும். 

  📌(11) ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம், தாளவாடி,அந்தியூர் ஒன்றியங்களில் மலைப் பகுதிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு மலைப்படி வழங்கிட வேண்டும். 

  📌(12) அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமன ஒப்புதலின்றி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஊதியமின்றிப் பணியாற்றிக் கொண்டிருக்கும் ஆசிரியர்களுக்கு நியமன ஒப்புதல் வழங்கிட வேண்டும். 

  📌(13) மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்கு கட்டணமில்லா சிகிச்சையை உறுதிப்படுத்தவேண்டும். 

  📌(14) ஆசிரியர் நியமன வயது 40ஆகக் குறைக்கப்பட்டுள்ளதை ரத்து செய்து,முன்பு இருந்த நிலை தொடர வேண்டும் ஆகியன உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. 

  🛡️4 சங்கங்களின் தலைவர்களும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களின் பொதுவான கோரிக்கைகள் தொடர்பாக தங்களுடைய கருத்துக்களை மிகவும் அழுத்தமாகப் பதிவு செய்தனர்.4 சங்கத் தலைவர்களின் கோரிக்கைகளையும் மிகுந்த கவனமுடன் பொறுமையாகக் கேட்டு, இடையிடையே விவாதித்து அது தொடர்பாக கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களும்,செயலாளர் அவர்களும் குறிப்பெடுத்துக் கொண்டனர்.இறுதியில் கோரிக்கைகள் தொடர்பாக மாண்புமிகு. முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு செல்வதுடன்,அரசின் பரிசீலனைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கை மேற்கொள்வதாகத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசின் உயர் அலுவலர்கள் இருவருடனான இச்சந்திப்பு சிறந்ததோர் நிகழ்வாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமைந்திருந்தது. 
  
🤝தோழமையுடன் 

  ச.மயில் 
பொதுச் செயலாளர் 
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி

Sunday 22 August 2021

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 13-வது மாநிலத் தேர்தல் - புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 13-வது மாநிலத் தேர்தல் - புதிய பொறுப்பாளர்கள் பட்டியல்*

*🛡️02.08.1984-ல் தனிப்பெரும் உரிமைப் போராளிகளின் இயக்கமாக மாஸ்டர் வா.இராமுண்ணி வழியில் உருவெடுத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் அமைப்புத் தேர்தல்கள் மக்களாட்சி மாண்போடே மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெற்று வருகிறது.*

*🛡️அவ்வகையில், 13-வது அமைப்புத் தேர்தலுக்கான வட்டார, நகர & மாவட்டத் தேர்தல்கள் நிறைவுற்று அதன் இறுதி நிகழ்வாக மாநிலப் பொறுப்பாளர்களுக்கான தேர்தல் இன்று (22.08.2021) திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி ஸ்ரீ ராதாகிருஷ்ணா திருமண மண்டபத்தில் அரசின் பெருந்தொற்றுக் கால நிலையான வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடைபெற்றது.*

*⚡தேர்தல் ஆணையாளராக முன்னாள் பொதுச்செயலாளர் தோழர்.செ.பாலசந்தர் துணை ஆணையாளராக முன்னாள் மாநிலப் பொருளாளர்  தோழர்.ச.ஜீவானந்தம் ஆகியோர் பொறுப்பேற்று மொத்தம் 23 பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்திக் கொடுத்தனர்.*

அதன்படி,

*⚡மாநிலத் தலைவர் :*
தோழர் மூ.மணிமேகலை

*⚡பொதுச்செயலாளர் :*
தோழர் ச.மயில்

*⚡மாநிலப் பொருளாளர் :*
தோழர் ஜீ.மத்தேயு

*⚡துணைப் பொதுச்செயலாளர் :*
தோழர் தா.கணேசன்

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் :*
தோழர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ்

*துணைத்தலைவர்கள்*

⚡பெண் - பொது :
தோழர் அமுதவள்ளி

⚡தெற்கு மண்டலம் :
தோழர் எம்.சேவியர்

⚡தென்மத்திய மண்டலம் :
தோழர் மா.ஆரோக்கியராஜ்

⚡மத்திய மண்டலம் :
தோழர் எம்.கே.முருகன்

⚡கிழக்கு மண்டலம் :
தோழர் ப.ரவிச்சந்திரன்

⚡மேற்கு மண்டலம் :
தோழர் ஜே.அருள்சுந்தரரூபன்

⚡வடமத்திய மண்டலம் :
தோழர் அ.ரஹீம்

⚡வடமேற்கு மண்டலம் :
தோழர் எஸ்.ரஞ்சன் தயாளதாஸ்

⚡வடக்கு மண்டலம் :
தோழர் பெ.அலோசியஸ் துரைராஜ்

*மாநிலச்செயலாளர்கள் :*

⚡பெண் - பொது :
தோழர் சி.ஜி.பிரசன்னா

⚡தெற்கு மண்டலம் :
தோழர் மு.பிரமநாயகம்

⚡தென்மத்திய மண்டலம் :
தோழர் தே.முருகன்

⚡மத்திய மண்டலம் :
தோழர் த.சகிலா

⚡கிழக்கு மண்டலம் :
தோழர் கோ.வீரமணி

⚡மேற்கு மண்டலம் :
தோழர் எஸ்.சுனில்குமார்

⚡வடமத்திய மண்டலம் :
தோழர் ஜோ.கிறிஸ்டோபர்

⚡வடமேற்கு மண்டலம் :
தோழர் ச.டேவிட் ராஜன்

⚡வடக்கு மண்டலம் :
தோழர் எஸ்.கிருஷ்ணன்

*💐உள்ளிட்டோர் புதிய பொறுப்பாளர்களாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.*

*🤝நிகழ்விற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருவள்ளூர் மாவட்டக்கிளை சிறப்பான முறையில் செய்திருந்தது.*

💐🤝💐🤝💐🤝💐🤝💐🤝
*புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்*
💐🤝💐🤝💐🤝💐🤝💐🤝

Saturday 14 August 2021

*🛡️பழைய ஓய்வூதியத் திட்டம் & பஞ்சப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க TNPTF வலியுறுத்தல் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️பழைய ஓய்வூதியத் திட்டம் & பஞ்சப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க TNPTF வலியுறுத்தல்*

*🗞️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 14/2021 நாள்: 14.08.2021*

*⚔️*
*🛡தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 13.08.2021 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*

*⚔️*
*🛡அதில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் விலை குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியுள்ளதோடு அதன் ஊதியத்தையும் ரூ.273 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியுள்ளது, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.*

*⚔️*
*🛡மேலும், மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு நியமிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.*

*⚔️*
*🛡அதேபோன்று அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும், பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக்காலம் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கக் கூடியவைகளாகும்.*

*⚔️*
*🛡அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மிகவும் முக்கியமானது தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பதாகும். இந்த வாக்குறுதியின் மீது ஒரு வார்த்தை கூட இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡அதேபோன்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக்காலம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் தேதியில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி அகவிலைப்படியை முடக்கி வைத்த ஒன்றிய அரசு அதை 01.07.2021 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு 01.04.2022 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு ஒன்றிய அரசு போல் 01.07.2021 முதல் தனது ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், குறைந்த ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 13,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், கடந்த ஆட்சியில் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஊக்க ஊதியத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குதல் போன்ற அறிவிப்புக்களையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

இப்படிக்கு,

*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


Monday 9 August 2021

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும் சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய செய்தி துளிகள்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் மற்றும் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும்  சந்தித்து கோரிக்கை மனு வழங்கிய செய்தி துளிகள்*

*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் மூ. மணிமேகலை,*
 
*⚡பொதுச்செயலாளர் ச.மயில்,*

*⚡மாநிலப் பொருளாளர் க.ஜோதி பாபு,*

*⚡துணைப் பொதுச் செயலாளர் தா. கணேசன்,*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் ச.மோசஸ்,* 

*⚡ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத் தலைவர் L.மணி,*

*⚡மாவட்டச் செயலாளர் பெ.செ.அமர்நாத் ஆகியோர்,*

*🌟இன்று(09.08.2021) சென்னையில் மதிப்புமிகு. பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களையும்,* 

*🌟மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களையும்,* 

*⚡நேரில் சந்தித்து ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்து பேசினார்கள்.*

Sunday 1 August 2021

*விக்கிப்பீடியாவில் TNPTF*

*விக்கிப்பீடியாவில் TNPTF*

http://tnptfayan.blogspot.com/2021/08/tnptf.html

வணக்கம் தோழர்களே! *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 38-ஆம் இயக்க நாள்* வாழ்த்துகள் தோழர்களே!

இவ்வியக்க நாளை *நமக்கு ஈந்தளித்த தோழர்களுக்கும், நாளது தேதிவரை உயிர்ப்புடன் இயங்கச் செய்து கொண்டிருக்கும் தோழர்களுக்கும் செம்மார்ந்த வணக்கங்கள்.*

அகழாய்வுகள், நூல்கள் உள்ளிட்டவை தவிர்த்து அடுத்த தலைமுறைக்கான வரலாற்றை எடுத்தியம்பும் ஒப்பற்ற தளம் இணையம். இன்னும் சொல்லப்போனால் அகழாய்வு முடிவுகள் மற்றும் நூல்களையும்கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமும் இணையமே.

_இணைய வெளியின் வரலாற்றுத் தேடல்களை நிறைவு செய்யும் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றையும்_ இயன்றவரை தேடித் தொகுத்து விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டு கட்டுரையாகப் பதிவேற்றியுள்ளேன்.

இக்கட்டுரை நமது இயக்கப் பயணம் குறித்த பருந்துப் பார்வை போன்றதே. எனினும், தமிழ்நாட்டு ஆசிரிய இயக்கங்களுள் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள நீண்ட நெடிய பதிவு என்றால் அது நமது இயக்கத்தின் இப்பதிவு மட்டுமே.

கூகுள் தவிர்த்த உலகின் முதன்மைத் தேடு பொறிகளில் 'தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி' எனும் தேடலில் முதல் பதிலாக விக்கிப்பீடியாவின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. கூகுளிலும் முதலாவதாகத் தோன்ற அநேக பார்வையிடல்கள் தேவையாக இருக்கலாம். எனவே, _தோழர்கள் தவறாது கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி கூகுள் தேடுபொறியில் திறந்து பார்வையிடுங்கள்._

https://ta.wikipedia.org/s/4t4w

விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டு மேலும் மெருகூட்ட, இக்கட்டுரையில் திருத்தம் / சேர்க்கை குறித்த பின்னூட்டங்களையும் தவறாது தெரிவியுங்கள்.

'ஏனிந்த வேலையத்த வேல' என்றுகூட சிலருக்குத் தோன்றலாம்.

வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்களாகிய நமக்கான இயக்கத்தை உண்டாக்கிய இயக்கம் கண்ட நாயகன் மாஸ்டர்.வா.ராமுண்ணி குறித்த இணையத் தேடலில் ஒரு ஆசிரியனாக நானடைந்த பெருத்த ஏமாற்றமே முதலில் இயக்கம் குறித்து பதிய வேண்டும் என்ற இவ்வேலைக்கு உந்துவிசையாக மாறியது.

ஆம். மாஸ்டர் பெயரிலான இணையப் பதிவுகளைத் தொகுத்தால் மொத்தமாக நான்குவரிகூட தாண்டாது.

ச்சும்மா யோசிச்சுப் பாருங்களேன். . . மாஸ்டர் பிறந்த தேதி,  மனைவி / குடும்பம், பணிச்சூழல், இறுதிக்காலம், இறந்த தேதி. . . போன்ற ஆசிரியர் குறிப்பு (!) நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மூத்த தோழர்கள் நன்கு அறிந்திருப்பர். ஆனால் நமக்கு. . .? (என்னையும் சேர்த்துத்தான்). அவ்ளோதாங்க நம்மைப்பற்றிய நமது வரலாற்று அறிவு.

சரி. . . இயக்க வரலாற்றையோ இயக்கத்த கண்டவரோட வரலாற்றையோ தெரிஞ்சு என்னாகப்போவுது?

விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ அறியாதவன் நாட்டிற்கு முழுமையான குடிமகனாக இருக்கவே முடியாது என்பதால் தான் தொடக்கக் கல்வி முதலே கலைத்திட்டத்தில் வரலாறு இன்றளவும் இடம்பெற்றுள்ளது. அவ்வகையில் நாமும் நமது இயக்கம் சார்ந்த முழுமையான வரலாற்றைத் தேடிக் கண்டடைவோம். கண்டடைந்தவற்றைக் கொண்டு சேர்ப்போம்.

மேலும், இயக்கம் சார்ந்த முந்தைய நூல்கள், வெளியீடுகள், பதிவுகள், நிகழ்வுத் தொகுப்புகள் வைத்துள்ள தோழர்கள் தம்மால் இயன்றவழியில் இணையத்தில் பதிவேற்றி அதனை எதிர்வரும் காலங்களுக்கும் நிரந்தரமாக்கித் தாருங்கள்.

*✍️விக்கிப்பீடியாவில் TNPTF வரலாற்றை இயற்றியவர்:*

_செல்வ.ரஞ்சித் குமார்_

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
*_TNPTF அயன்_ சார்பாக தோழர் செல்வ.ரஞ்சித் குமார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

_இயக்க நாள் வாழ்த்துகளோடே,_
*_✍🏼அயன் சரவணன்_*

*🛡️தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*

*🛡️தமிழகத்தில் ஆரம்பப் பள்ளிகளை முதலில் திறக்க வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்.*
                                                         *⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்டம் (01.08.2021) இன்று மதுரை மாவட்ட அலுவலகத்தில் மாநிலத் தலைவர் மூ.மணிமேகலை தலைமையில் நடைபெற்றது.*

*⚡மதுரை மாவட்டச்செயலாளர் பெ.சீனிவாசகன் வரவேற்புரை ஆற்றினார்.*

*⚡மாநிலப் பொருளாளர் க.ஜோதிபாபு இயக்கத்தின் மூன்று ஆண்டுகளுக்கான வரவு-செலவு தணிக்கை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.*
                                                        _கூட்டப் பொருள்கள் மீதான விவாதத்தைத் தொடக்கி வைத்தும், இயக்கச் செயல்பாடுகள் குறித்தும் பொதுச்செயலாளர் ச.மயில் விளக்கவுரை ஆற்றினார்._

*🛡️இக்கூட்டத்தில், "கொரோனா பெருந்தொற்றுக் காரணமாக தமிழகத்தில் கடந்த 1½ ஆண்டுகாலமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களின் கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஆரம்பக்கல்வி பயிலும் மாணவர்களின் கல்வி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. தங்களிடம் பயிலும் மாணவர்களுக்கு விரைந்து கல்வி புகட்ட வேண்டும் என்பதில் தமிழகம் முழுவதும் ஆசிரியர்கள் பெரிதும் ஆர்வத்துடன் உள்ளனர். சமீபத்தில் அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) முதலில் ஆரம்பப்பள்ளிகளைத் திறக்க வேண்டும் எனக் கருத்துத் தெரிவித்துள்ளது. அதேபோன்று சென்னை உயர்நீதிமன்றமும் முதலில் ஆரம்பப் பள்ளிகளைத் திறப்பதைப் பற்றி அரசு பரிசீலிக்க வேண்டும் எனக் கருத்து தெரிவித்துள்ளது.*
                                                       *🛡️மேலும், கிராமப்புறங்களில் உள்ள ஆரம்பப்பள்ளிகளில் பெரும்பாலான பள்ளிகள் மாணவர்கள் நெருக்கடி குறைவாக உள்ள பள்ளிகள். எனவே, அப்பள்ளிகளைச் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றித் திறப்பதால் நோய்த்தொற்று அபாயம் ஏற்படாது. அதே நேரத்தில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ள பள்ளிகள் சுழற்சி முறையில் செயல்படவும் அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசைக் கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*
                                                   *🛡️மேலும், ராணிப்பேட்டை மாவட்டக் கல்வித் துறையில் தற்போது அசாதாரண சூழ்நிலை நிலவிவருகிறது. அம்மாவட்டக் கல்வித்துறையில் பணியாற்றும் முக்கிய அதிகாரிகள் சிலரின் முறைகேடுகள், விதிகளுக்குப் புறம்பான செயல்பாடுகள், சர்வாதிகாரப் போக்கு, ஆசிரியர்களுக்கிடையே பிரிவினையை ஏற்படுத்துதல் ஆகியவற்றை எதிர்த்து ஜனநாயக ரீதியில் சங்க நடவடிக்கையாக போராட்டம் நடத்திய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்டச் செயலாளர், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர் ஆகியோர் தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு  பழிவாங்கும் நடவடிக்கையாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் தூண்டுதலின்பேரில் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை மாநில செயற்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தற்காலிகப் பணிநீக்கம் உடனடியாக விலக்கிக் கொள்ளப்பட வேண்டும்.*
                                                   *🛡️தமிழக அரசுக்கும், பள்ளிக்கல்வித்துறைக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் விரோதப்போக்கில் செயல்பட்டு அதிகார துஷ்பிரயோகம் செய்து வரும் ராணிப்பேட்டை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர், அரக்கோணம் மாவட்டக்கல்வி அலுவலர், நெமிலி வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணை மேற்கொண்டு தமிழக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென மாநில செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*

*🛡️இது தொடர்பாக உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படாவிடில் தொடர் போராட்டங்கள் நடத்திடவும் முடிவு செய்யப்பட்டது.*
                                                 *⚡மத்திய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது போல் 01.01.2021 முதல் 11% அகவிலைப்படி உயர்வைத் தமிழக அரசும் உடனடியாக அறிவித்திட வேண்டும்.*

*⚡ஜாக்டோ-ஜியோ வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவித்து தமிழக அரசு உடனடியாக ஆணை வெளியிட வேண்டும்.*

*⚡ஜாக்டோ-ஜியோ போராட்ட கலத்தில் மேற்கொள்ளப்பட்ட பணியிட மாறுதல்கள் ரத்து செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

*🛡️இறுதியில் துணைப் பொதுச்செயலாளர் _தா.கணேசன்_ நன்றி கூறினார்.*

*🛡️கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ நிதிக்காப்பாளர் ச.மோசஸ் உட்பட மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.*
  

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*