*விக்கிப்பீடியாவில் TNPTF*
http://tnptfayan.blogspot.com/2021/08/tnptf.html
வணக்கம் தோழர்களே! *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் 38-ஆம் இயக்க நாள்* வாழ்த்துகள் தோழர்களே!
இவ்வியக்க நாளை *நமக்கு ஈந்தளித்த தோழர்களுக்கும், நாளது தேதிவரை உயிர்ப்புடன் இயங்கச் செய்து கொண்டிருக்கும் தோழர்களுக்கும் செம்மார்ந்த வணக்கங்கள்.*
அகழாய்வுகள், நூல்கள் உள்ளிட்டவை தவிர்த்து அடுத்த தலைமுறைக்கான வரலாற்றை எடுத்தியம்பும் ஒப்பற்ற தளம் இணையம். இன்னும் சொல்லப்போனால் அகழாய்வு முடிவுகள் மற்றும் நூல்களையும்கூட அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஊடகமும் இணையமே.
_இணைய வெளியின் வரலாற்றுத் தேடல்களை நிறைவு செய்யும் கட்டற்ற கலைக் களஞ்சியமான விக்கிபீடியாவில் நமது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வரலாற்றையும்_ இயன்றவரை தேடித் தொகுத்து விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டு கட்டுரையாகப் பதிவேற்றியுள்ளேன்.
இக்கட்டுரை நமது இயக்கப் பயணம் குறித்த பருந்துப் பார்வை போன்றதே. எனினும், தமிழ்நாட்டு ஆசிரிய இயக்கங்களுள் விக்கிபீடியாவில் இடம்பெற்றுள்ள நீண்ட நெடிய பதிவு என்றால் அது நமது இயக்கத்தின் இப்பதிவு மட்டுமே.
கூகுள் தவிர்த்த உலகின் முதன்மைத் தேடு பொறிகளில் 'தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி' எனும் தேடலில் முதல் பதிலாக விக்கிப்பீடியாவின் இக்கட்டுரை இடம் பெற்றுள்ளது. கூகுளிலும் முதலாவதாகத் தோன்ற அநேக பார்வையிடல்கள் தேவையாக இருக்கலாம். எனவே, _தோழர்கள் தவறாது கீழ்க்காணும் இணைப்பை அழுத்தி கூகுள் தேடுபொறியில் திறந்து பார்வையிடுங்கள்._
https://ta.wikipedia.org/s/4t4w
விக்கிப்பீடியா விதிகளுக்கு உட்பட்டு மேலும் மெருகூட்ட, இக்கட்டுரையில் திருத்தம் / சேர்க்கை குறித்த பின்னூட்டங்களையும் தவறாது தெரிவியுங்கள்.
'ஏனிந்த வேலையத்த வேல' என்றுகூட சிலருக்குத் தோன்றலாம்.
வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் ஆசிரியர்களாகிய நமக்கான இயக்கத்தை உண்டாக்கிய இயக்கம் கண்ட நாயகன் மாஸ்டர்.வா.ராமுண்ணி குறித்த இணையத் தேடலில் ஒரு ஆசிரியனாக நானடைந்த பெருத்த ஏமாற்றமே முதலில் இயக்கம் குறித்து பதிய வேண்டும் என்ற இவ்வேலைக்கு உந்துவிசையாக மாறியது.
ஆம். மாஸ்டர் பெயரிலான இணையப் பதிவுகளைத் தொகுத்தால் மொத்தமாக நான்குவரிகூட தாண்டாது.
ச்சும்மா யோசிச்சுப் பாருங்களேன். . . மாஸ்டர் பிறந்த தேதி, மனைவி / குடும்பம், பணிச்சூழல், இறுதிக்காலம், இறந்த தேதி. . . போன்ற ஆசிரியர் குறிப்பு (!) நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? மூத்த தோழர்கள் நன்கு அறிந்திருப்பர். ஆனால் நமக்கு. . .? (என்னையும் சேர்த்துத்தான்). அவ்ளோதாங்க நம்மைப்பற்றிய நமது வரலாற்று அறிவு.
சரி. . . இயக்க வரலாற்றையோ இயக்கத்த கண்டவரோட வரலாற்றையோ தெரிஞ்சு என்னாகப்போவுது?
விடுதலைப் போராட்ட வீரர்கள் பற்றியோ விடுதலைப் போராட்டம் பற்றியோ அறியாதவன் நாட்டிற்கு முழுமையான குடிமகனாக இருக்கவே முடியாது என்பதால் தான் தொடக்கக் கல்வி முதலே கலைத்திட்டத்தில் வரலாறு இன்றளவும் இடம்பெற்றுள்ளது. அவ்வகையில் நாமும் நமது இயக்கம் சார்ந்த முழுமையான வரலாற்றைத் தேடிக் கண்டடைவோம். கண்டடைந்தவற்றைக் கொண்டு சேர்ப்போம்.
மேலும், இயக்கம் சார்ந்த முந்தைய நூல்கள், வெளியீடுகள், பதிவுகள், நிகழ்வுத் தொகுப்புகள் வைத்துள்ள தோழர்கள் தம்மால் இயன்றவழியில் இணையத்தில் பதிவேற்றி அதனை எதிர்வரும் காலங்களுக்கும் நிரந்தரமாக்கித் தாருங்கள்.
*✍️விக்கிப்பீடியாவில் TNPTF வரலாற்றை இயற்றியவர்:*
_செல்வ.ரஞ்சித் குமார்_
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
*_TNPTF அயன்_ சார்பாக தோழர் செல்வ.ரஞ்சித் குமார் அவர்களுக்கு நன்றியினை தெரிவித்துக்கொள்கிறோம்.*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏
_இயக்க நாள் வாழ்த்துகளோடே,_
*_✍🏼அயன் சரவணன்_*
No comments:
Post a Comment