Wednesday 1 November 2023

*EMIS பதிவேற்றப் பணி!* *டிட்டோஜாக் தீர்மானத்தைச் செயல்படுத்துவோம்! -TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்*
 *நாள்: 01.11.2023*
***********************
 *EMIS பதிவேற்றப் பணி!*

*டிட்டோஜாக் தீர்மானத்தைச் செயல்படுத்துவோம்!*

*ஜாக்டோஜியோ ஆர்ப்பாட்டத்த வெற்றிகரமாக்குவோம்!*


 *📢தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு(டிட்டோஜாக்) 30அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 13.10.2023ல் மாநில அளவிலான கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவித்ததைத் தொடர்ந்து 12.10.2023 அன்று மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில், மதிப்புமிகு. பள்ளிக்கல்வி இயக்குநர் மற்றும் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 12 கோரிக்கைகள் ஏற்பு செய்யப்பட்டது.*

 *📢ஏற்பு செய்யப்பட்ட அக்கோரிக்கைகளில் முதல் கோரிக்கை "EMIS பதிவேற்றம் செய்யும் பணிகளிலிருந்து இன்று(01.11.2023) முதல் ஆசிரியர்களை விடுவிப்பது என்பதாகும். ஆனால்,இன்று வரை கல்வித்துறை இது தொடர்பாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை. எனவே,27.10.2023 அன்று நடைபெற்ற டிட்டோ ஜாக்கின் காணொளி வழி மாநில உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், பேச்சுவார்த்தையில் மாண்புமிகு. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களும், மதிப்புமிகு. இயக்குநர் பெருமக்களும் ஏற்றுக்கொண்டவாறு "01.11.2023 முதல் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் EMISல் ஆசிரியர் வருகைப் பதிவு மற்றும் மாணவர் வருகைப் பதிவு தவிர ஆசிரியர்களின் கற்பித்தல் நேரத்தை முழுமையாகப் பாதிக்கக்கூடிய, மாணவர்களின் கல்வி நலனைப் பாதிக்கக் கூடிய எவ்விதமான புள்ளி விவரங்களையும் பதிவேற்றம் செய்வதில்லை" என்ற முடிவை எடுத்துள்ளது. அத்தீர்மான நகல் மற்றும் உயர் அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. டிட்டோஜாக்கின் இணைப்புச் சங்கமாகிய தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உறுப்பினர்கள் அனைவரும் டிட்டோஜாக்கின் முடிவை நெஞ்சுறுதியோடும், நேர்மைத் திறத்தோடும் செயல்படுத்துமாறு தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் தோழமையுடன் கேட்டுக்கொள்கிறது.*

*📢அதேபோல் இன்று(01.11.2023) நடைபெறும் ஜாக்டோஜியோவின் மாவட்டத் தலைநகர் ஆர்ப்பாட்டத்தில் நம் பேரியக்கத் தோழர்கள் முதற்படையாய், முன்னணிப் படையாய் களத்தில் நின்று போர்ப்பதாகையை உயர்த்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் எழுச்சிமிகு நம் இயக்கத் தோழர்கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது.*
***********************
 *புரட்சிகர வாழ்த்துக்களுடன்* *ச.மயில்*
*பொதுச் செயலாளர்* *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Friday 29 September 2023

30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்திசென்னையில் கோட்டை நோக்கிப் பேரணிதமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்தியதுஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்பு! ஊடகச் செய்திமாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 13/2023 நாள்: 29.09.2023


🛡️30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் கோட்டை நோக்கிப் பேரணி நடைபெற்றதுஇதில் மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்பேரணியின் முடிவில் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.

 

🛡️சென்னையில் எழும்பூர் லாங்ஸ் கார்டன் ரோடு ரவுண்டனாவிலிருந்து தொடங்கிய பேரணிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத்தலைவர் மூ.மணிமேகலை தலைமை வகித்தார்மாநிலப் பொருளாளர் ஜீ.மத்தேயு முன்னிலை வகித்தார்துணைப் பொதுச்செயலாளர் தா.கணேசன் வரவேற்புரையாற்றினார்பேரணியை சிஐடியு மாநிலத்தலைவரும்முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமாகிய அ.சவுந்தரராசன் தொடக்கி வைத்து சிறப்புரையாற்றினார்.

 

🛡️பேரணி எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் சென்றடைந்ததுஅங்கு நடைபெற்ற கோரிக்கை விளக்கக் கூட்டத்தின் போது மாநில பொதுச்செயலாளர் ச.மயில் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவதுதமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் கடந்த சில நாட்களுக்கு முன்பு தேர்தல் வாக்குறுதியில் 99 சதவீதத்தை நிறைவேற்றி விட்டதாகத் தெரிவித்துள்ளார்ஆனால்தமிழ்நாட்டில் ஆசிரியர்கள்அரசு ஊழியர்களுக்கு கொடுத்த எந்த வாக்குறுதியையும் தி.மு.க அரசு நிறைவேற்றவில்லைஎனவேதி.மு.க அரசு தனது தேர்தல் அறிக்கையில் எழுத்து மூலமாகக் கொடுத்த வாக்குறுதிகளின்படி அரசு ஊழியர்கள்ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். 01.06.2009க்குப் பின்பு நியமனம் பெற்ற இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாடு களைய அமைக்கப்பட்டுள்ள மூவர் குழுவின் அறிக்கையை விரைவாகப் பெற்று ஊதிய முரண்பாடு களைந்திட வேண்டும். 01.06.2009க்கு முன்பு சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துநிர்வாகக் காரணங்களால் 01.06.2009க்குப் பின்பு நியமன ஆணை வழங்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய இழப்பு உடனடியாகச் சரி செய்யப்பட வேண்டும்மத்திய அரசின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியத்தை தமிழ்நாட்டின் அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வழங்கிட வேண்டும்அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுக்கும்அரசுப் பள்ளிகளில் பயிலும் 6, 7, 8 வகுப்பு மாணவர்களுக்கும் காலைச் சிற்றுண்டித் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும்அரசுப்பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்படும் அனைத்து நலத்திட்ட உதவிகளும்சலுகைகளும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கும் வழங்கப்பட வேண்டும்

 

🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பதவி உயர்வு பெற தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு உடனடியாக மேல்முறையீடு செய்வதோடுபதவி உயர்வுக்குத் தகுதித் தேர்வு தேவையில்லை என்பதைக் கொள்கை முடிவாக அறிவிக்க வேண்டும்தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை மாணவர்களின் கல்வி நலன் கருதி காலமுறை ஊதியத்தில் நிரப்பிட வேண்டும்மாநிலக் கல்விக் கொள்கையை உருவாக்க அமைக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கையை விரைந்து பெற்று புதிய மாநிலக் கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும்.

 

🛡️1 முதல் 5 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கல்வி நலன் கருதி எண்ணும் எழுத்தும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும்ஆசிரியர்களின் கற்பித்தல் பணியைப் பெருமளவில் பாதிக்கும் எமிஸ் பணிகளிலிருந்து ஆசிரியர்களை விடுவிக்க வேண்டும்ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு உரிமைஉயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட ஆசிரியர் நலன்மாணவர் நலன்கல்வி நலன்சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் இன்று (29.09.2023) சென்னையில் நடைபெற்ற கோட்டை நோக்கிப் பேரணியின் முடிவில் முதலமைச்சர் அவர்களுக்கு எங்களின் கோரிக்கை மனுவைச் சமர்ப்பித்துள்ளோம்.

 

🛡️எங்களின் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு தேர்தல் அறிக்கையில் கூறியவாறு நிறைவேற்ற வேண்டும்அவ்வாறு நிறைவேற்றாவிட்டால் எங்களது அமைப்பு தொடர் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடும்இவ்வாறு அவர் கூறினார்.

 

🛡️இக்கூட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ஆ.செல்வம், STFI அகில இந்தியச் செயலாளரும்தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான அ.சங்கர்தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச்செயலாளர் சே.பிரபாகரன்தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் நிறுவனத் தலைவர் அ.மாயவன், Ex.MLC, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் P.பேட்ரிக்ரெய்மாண்ட்தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழகத்தின் மாநிலத் தலைவர் மா.ரவிச்சந்திரன்தமிழ்நாடு அரசு உதவிபெறும் தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் கூட்டமைப்பின் மாநில கௌரவத் தலைவர் மா.கணபதிபதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகத்தின் மாநிலத்தலைவர் த.உதயசூரியன்தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழகத்தின் மாநிலத் தலைவர் செ.நா.ஜனார்த்தனன் ஆகியோர் பங்கேற்று வாழ்த்திப் பேசினார்கள்இறுதியில் STFI அகில இந்தியப் பொதுக்குழு உறுப்பினர் தோ.ஜாண்கிறிஸ்துராஜ் நன்றி கூறினார்.


இப்படிக்கு,

.மயில்

பொதுச்செயலாளர்

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி 

Wednesday 1 June 2022

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறையில் எண்ணும் எழுத்தும் பயிற்சி - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு!*

*🛡️கோடை விடுமுறையில் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடத்துவதாக அறிவிக்கப்பட்டுள்ள "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை கேட்டுக்கொண்டுள்ளது.*

*_இதுகுறித்து சங்கத்தின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_*

*🛡️கடந்த 21.05.2022 முதல் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்குக் கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. வரும் ஜூன் 13ம் தேதி கோடை விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. இதன்படி 23 நாட்கள் மட்டுமே கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான கோடை விடுமுறை அளவைவிட குறைவான நாட்களாகும். 2021-22 ம் கல்வியாண்டில் கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மாணவர்கள் தாமதமாகப் பள்ளிகளுக்கு வருகை புரிந்தாலும், ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகை புரிந்த நாட்கள் 220 நாட்களைத் தாண்டியுள்ளது. இது வழக்கமான ஆண்டின் வேலை நாட்களை விடக் கூடுதலாகும்.*

*🛡️இத்தகு சூழலில் 2021-22ம் கல்வியாண்டில் அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களிலும் 01.06.2022 மற்றும் 02.06.2022 ஆகிய இரு நாட்கள் "எண்ணும் எழுத்தும்" பயிற்சிக்கான கருத்தாளர் பயிற்சியும், 1 முதல் 3 ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 06.06.2022 முதல் 10.06.2022 முடிய "எண்ணும் எழுத்தும்" பயிற்சியும் தமிழ்நாடு முழுவதும் வழங்கிட பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.*

*🛡️இவ்வாறு கோடை விடுமுறையில் அளிக்கப்படும் பயிற்சி மாநிலம் முழுவதும் உள்ள தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. கோடைவிடுமுறையில் இதுபோன்ற பயிற்சிகள் இதற்கு முன்பு வழங்கப்பட்டதில்லை. மேலும், பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையைத் துய்க்கும் பிரிவினராவர். இதனாலேயே அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் ஆசிரியர்களுக்கு ஆண்டுக்கு 30 நாட்கள் ஈட்டிய விடுப்பு அனுமதிக்கப்படுவதில்லை. 15 நாட்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறது.*

*🛡️எனவே, இக்கல்வியாண்டில் ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள குறைவான கோடை விடுமுறை நாட்களையும் இல்லாமல் செய்யும் நடவடிக்கையாக "எண்ணம் எழுத்தும்" பயிற்சி அமைந்துள்ளது. கோடைவிடுமுறையில் இப்பயிற்சி நடத்துவதை எதிர்த்து 28.05.2022 அன்று திருச்சியில் நடைபெற்ற எங்கள் சங்கத்தின் மாநிலச் செயற்குழு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.*

*🛡️எனவே, பள்ளிக்கல்வித்துறை கோடை விடுமுறையில் நடத்தும் "எண்ணும் எழுத்தும்" பயிற்சியை உடனடியாக நிறுத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிக்கல்வித்துறையை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

இப்படிக்கு,

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

Monday 9 May 2022

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவாறு பழைய ஓய்வூதியத்திட்டத்தைக் கொண்டுவரக் கோரி மாநிலம் முழுவதும் மே 10ல் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி போராட்டம்!*

_மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 09/2022  நாள்: 09.05.2022_

*🗣️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:*

*🛡️தமிழ்நாடு சட்டப்பேரவையில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த இயலாது என்று கூறியுள்ள நிதியமைச்சரின் அறிவிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு செய்துள்ளது.*

*🛡️கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது இன்றைய ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் தனது தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளில் வரிசை எண்: 309ல் கொடுத்துள்ள மிக முக்கியமான வாக்குறுதி "புதிய ஓய்வூதியத் திட்டம் கைவிடப்பட்டு பழைய ஓய்வூதியத் திட்டம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரப்படும்" என்பதாகும். தேர்தல் அறிக்கையில் கூறியது மட்டுமல்லாது இன்றைய முதலமைச்சர் அவர்கள் தனது தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களிலும் "நாங்கள் ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்" என்று கூறினார்கள். அதுமட்டுமல்லாது தேர்தல் பிரச்சாரக் காணொளிகளிலும் கூட பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் வாக்குறுதி அழுத்தந்திருத்தமாக வெளியிடப்பட்டது.*

*🛡️இத்தகு சூழலில் ஆட்சிப் பொறுப்பேற்று ஓராண்டு நிறைவு பெற்ற நிலையிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக தமிழக அரசு எதுவும் அறிவிக்காத நிலையில், 07.05.2022 அன்று சட்டப்பேரவையில் நிதியமைச்சர் அவர்கள் தமிழக அரசு ஊழியர்களுக்கு "பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வர இயலாது" என்று தெரிவித்திருப்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும், கொந்தளிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.*

*🛡️சட்டப்பேரவையில் நிதியமைச்சர் பேசிய பேச்சு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஒன்றும் தெரியாத அப்பாவிகளாக நினைத்துக்கொண்டு பேசியதைப் போல் உள்ளது. ராஜஸ்தான் மாநில அரசு தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தின்படி தேசிய ஓய்வூதிய ஒழுங்குமுறை ஆணையத்தில் (PFRDA) செலுத்திய தொகையை PFRDA தர மறுத்து விட்டதாக நிதியமைச்சர் கூறுகிறார்.*

*🛡️தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இணைந்து PFRDA உடன் ஒப்பந்தம் செய்துள்ள ராஜஸ்தான் மாநிலத்தோடு, தேசிய ஓய்வூதியத் திட்டத்திலேயே இதுவரை இணையாமல் PFRDA உடன் எவ்வித ஒப்பந்தமும் செய்து கொள்ளாமல் ஊழியர்களிடமிருந்து தன்பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்திற்காகப் பிடித்தம் செய்த தொகையை 17 ஆண்டுகளாக தனது கைவசமே வைத்துள்ள தமிழ்நாட்டை ஒப்பிட்டுப் பேசுவது அரசு ஊழியர்களை ஏமாற்றும் செயலாகும். ராஜஸ்தான் மாநில அரசு PFRDAல் செலுத்திய நிதியை தன்வசம் கேட்கிறது. ஆனால், தமிழ்நாட்டில் அந்நிதி ஏற்கனவே தமிழ்நாடு அரசிடம் தான் உள்ளது. எனவே, யாரிடமும் நிதியைக் கேட்க வேண்டிய அவசியமில்லை. இதில் சட்டச்சிக்கல் வருவதற்கு வாய்ப்பே இல்லை.*

*🛡️ஒருவேளை நிதியமைச்சர் அவர்கள் கூறியதைப் போல சட்டச்சிக்கல் ஏற்பட்டாலும் எத்தனையோ சட்டத் திருத்தங்களை மேற்கொள்ளும் தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களுக்காக அதற்கான திருத்தத்தை மேற்கொள்வதுதான் சரியாக இருக்கும். தான் பதவியேற்றது முதல் அரசு ஊழியர்களுக்கு எதிரான கருத்துக்களை பல இடங்களில் பலமுறை வெளிப்படுத்தியுள்ள நிதியமைச்சர் அவர்கள் மீண்டும் ஒருமுறை சட்டமன்றத்தில் வெளிப்படுத்தியுள்ள இக்கருத்து எவ்விதத்திலும் ஏற்கத்தக்கதல்ல.*

*🛡️தேர்தல் அறிக்கையில் கூறியவற்றில் 75% வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாகக் கூறும் இன்றைய தமிழக அரசு ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்காகக் கொடுத்த வாக்குறுதிகளில் ஒரு வாக்குறுதியைக் கூட இதுவரை நிறைவேற்றவில்லை என்பதே உண்மையாகும். ஆனால், அரசு ஊழியர்கள் ஆசிரியர்களிடமிருந்து ஏற்கனவே பெற்று வந்த உரிமைகள் தான் பறிக்கப்பட்டுள்ளன.*

*🛡️இந்தியா முழுவதும் பல மாநில அரசுகள் தனது ஊழியர்களின் நலன் கருதி பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் தமிழக நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு தமிழக அரசு தனது ஊழியர்களின் நலன்களைக் கருத்தில் கொள்ளவில்லை என்பதையே வெளிப்படுத்துகிறது.*

*🛡️ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம், ஓய்வூதியம் ஆகியவற்றை செலவு கணக்காகப் பார்க்கும் நிதியமைச்சர் அவர்கள், அவற்றை மக்கள் நலப் பணிகளுக்கான செலவாகப் பார்க்க வேண்டும். மிகப்பெரிய பொருளாதார நிபுணரான நிதியமைச்சர் அவர்கள் தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப் படுத்துவோம்" என்று வாக்குறுதி அளித்த போதே "இது நடைமுறைச் சாத்தியமற்றது" என்று அப்போதே ஏன் தெரிவிக்கவில்லை என்ற கேள்வி அனைவரது உள்ளத்திலும் தற்போது எழுந்துள்ளது.*

*🛡️தமிழ்நாடு நிதியமைச்சரின் கருத்தினால் அரசு ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ள அதிருப்தியைப் போக்கும் வகையில் முதலமைச்சர் அவர்கள் உரிய விளக்கத்தை அளித்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைக்குக் கொண்டுவரும் அறிவிப்பை உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இக்கோரிக்கையை வலியுறுத்தி மாநிலம் முழுவதும் நாளை (10.05.2022) வட்டாரத்தலைநகரங்களில் ஆர்ப்பாட்டங்களை நடத்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவெடுத்துள்ளது.*


Friday 24 December 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் அழைப்பிதழ்*


*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழுக் கூட்டம் (30.12.2021) வியாழக்கிழமை காலை 10 மணிக்கு மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.*

*🛡️மாநில செயற்குழு கூட்டமானது மாநிலத்தலைவர் திருமதி. மூ.மணிமேகலை அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

கூட்டப்பொருள்:

*🚩1) அஞ்சலி*

*🚩2) வேலை அறிக்கை*

*🚩3) 01.11.2021 முதல் பள்ளிகள் திறப்பு - இன்றைய கல்விச்சுழல்.*

*🚩4) 03.10.2021 STFI அகில இந்திய செயற்குழு மற்றும் 16.12.2021 STFI அகில இந்தியப் பொதுக்குழு முடிவுகள்.*

*🚩5) பொதுமாறுதல் கலந்தாய்வு.*

*🚩6) இல்லம் தேடிக்கல்வி.*

*🚩7) "ஆசிரியர் கேடயம்" இயக்க இதழ் சந்தா சேர்ப்பு மற்றும் "இயக்க இதழ் புரவலர்" சேர்ப்பு.*

*🚩8) 2021-22 உறுப்பினர் பட்டியல் மற்றும் அடிக்கட்டைகள் ஒப்படைத்தல்.*

*🚩9) இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்கள் - நடுவர் தீர்ப்பாய அறிக்கை.*

*🚩10) ஆசிரியர் பிரச்சனைகள் (எழுத்துப் பூர்வமாக)*

*🚩11) பொதுச்செயலாளர் கொணர்வன*

*⚡மாநிலச் செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கூட்டத்தில் பங்கேற்க வேண்டுகிறேன்.*

🤝தோழமையுடன்,

*_ச.மயில்_*
மாநில பொதுச்செயலாளர்,
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Monday 22 November 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு நிகழ்வு*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பின் சார்பாக ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று (22.11.2021) சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை சந்தித்து பேசினார்கள்.*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*மாநில மையம்* *நாள்:22.11.2021*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்*

*⚡மாநிலத் தலைவர் _தோழர் மூ. மணிமேகலை,_*

*⚡பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்,_*

*⚡மாநிலப் பொருளாளர் _தோழர்.J.மத்தேயு,_*

*துணைப் பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்,_*

*⚡STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.தோ.ஜாண் கிறிஸ்துராஜ்,_*

*⚡மாநிலச் செயலாளர் _தோழர். கிருஷ்ணன்_*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருவள்ளூர் மாவட்டப் பொறுப்பாளர்கள்.*

*ஆகியோர் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக இன்று(22.11. 2021)சென்னையில் தொடக்கக்கல்வி இயக்குனரைச் சந்தித்துப் பேசினர்.*

*🤝தோழமையுடன்*

*ச.மயில்*
*பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

Sunday 21 November 2021

TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*

 *🚩TNPTF-கோவையில் பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்று மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தியதோடு, தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் - TNPTF கோரிக்கை*


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி* *மாநில மையம்*
*நாள்:21.11.2021*

*🚩இன்று (21.11.2021), கோவையில் தான் பயின்ற சின்மயா வித்யாலயா பள்ளி ஆசிரியரின் பாலியல் துன்புறுத்தல் காரணமாக, மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட 12ம் வகுப்பு மாணவியின் இல்லத்திற்கு நேரில் சென்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர்  தோழர் மூ.மணிமேகலை, மாநிலச் செயலாளர் தோழர் த.சகிலா மற்றும் கோவை மாவட்டப் பொறுப்பாளர்கள், மாணவியின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி,மாணவியின் பெற்றோரிடம்  சம்பவம் குறித்துக்  கேட்டறிந்து,தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் ஆழ்ந்த இரங்கலையும், துயரத்தையும், ஆறுதலையும் தெரிவித்தனர்*

*🚩மிகவும் வறிய நிலையில் உள்ள அம்மாணவியின் அப்பாவியான பெற்றோரின் நிலை கண்டு நமது இயக்கப் பொறுப்பாளர்கள் மிகவும் மனம் வருந்தினார். எப்போதும் படிப்பில் முதல் மாணவியாகத் திகழ்ந்த அம்மாணவியின் அகாலமரணம் மிகப்பெரிய இழப்பாகும். தங்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களை தாங்கள் பெற்ற பிள்ளைகளைப் போல் கருதும் மிகப்பெரும்பாலான ஆசிரியர்களுக்கு மத்தியில்,இது போன்ற கயவர்கள் ஒரு சிலரின் கீழ்த்தரமான செயல்கள் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் இழுக்கை ஏற்படுத்தியுள்ளது.*

 *🚩தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டுக் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

🤝தோழமையுடன்

 *ச.மயில்*
*பொதுச்செயலாளர்* 
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*




Wednesday 10 November 2021

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை / பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!.*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 20/2021  நாள்: 10.11.2021_*

*🛡️3, 5, 8 வகுப்புக்களுக்குத் தேசிய அடைவுத் தேர்வு நடத்துவதை  பள்ளிக்கல்வித்துறை கைவிட வேண்டும்! தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*🛡️கொரோனா பெருந்தொற்றுச் சூழலில் 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப்பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் 3, 5, 8 வகுப்புக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேசிய அடைவுத்தேர்வை (NAS) பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*🛡️பெருந்தொற்றுக் காரணமாக 19 மாதங்கள் கழித்து ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பெருந்தொற்றின் தாக்கம் சற்றுத் தணிந்துள்ள நிலையில் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்றி நவம்பர் 1 முதல் சுழற்சிமுறையில் வகுப்புக்கள் நடைபெற்று வருகின்றன.*

*🛡️மாணவர்களின் பாதுகாப்பு, மாணவர்களின் கற்றல் இழப்பை ஈடுகட்டுதல், கற்றல் இடைவெளியைப் போக்குதல் ஆகிய பணிகளை மையப்படுத்தி ஆசிரியர்கள் தங்கள் கடமையை ஆர்வத்துடன் ஆற்றி வருகின்றனர். வரலாறு காணாத அளவிற்கு நீண்ட காலம் பள்ளிக்கு வருகை தர இயலாத நிலையில் இருந்த ஆரம்ப வகுப்புக்களின் மாணவச் செல்வங்களை பள்ளிச் சூழலுக்கு, கற்றல் சூழலுக்குக் கொண்டு வருவது என்பது கடினமான பணியாகும்.*

*🛡️மாண்புமிகு. முதலமைச்சர் அவர்கள் கூட தனது செய்தி வெளியீட்டில் "முதலிரு வாரங்களுக்கு மாணவர்களுக்கு உற்சாகமும் நம்பிக்கையும் ஊட்டும் வகையிலான கதை, பாடல், விளையாட்டு, வண்ணம் தீட்டுதல், நினைவாற்றலை வளர்ப்பதற்கான உத்திகள் போன்றவற்றை வகுப்பறைகளில் வழங்குங்கள்" என்று ஆசிரியர்களைக் கேட்டுக்கொண்டார். பள்ளிக் கல்வித்துறையும் அவ்வாறே உத்தரவிட்டுள்ளது.*

*🛡️இத்தகு சூழ்நிலையில் ஆரம்ப, நடுநிலைப் பள்ளிகள் திறந்து ஒரு வாரமே ஆகியுள்ள சூழலில் 3, 5, 8 வகுப்பு மாணவர்களுக்கு இம்மாதத்தில் தேசிய அடைவுத்தேர்வு (NAS) நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது என்பது முற்றிலும் பொருத்தமற்றதாக உள்ளது. 2019-20 ஆம் கல்வியாண்டில் முதல் வகுப்பில் சேர்ந்து அந்த வகுப்பிலேயே முழுமையாகப் படிக்கும் வாய்ப்புக் கிடைக்காமல், 2020-21 ஆம் கல்வியாண்டில் பள்ளிக்கே செல்வதற்கு வாய்ப்புக் கிடைக்காமல், 2021-22 ஆம் கல்வியாண்டில் 5 மாதங்கள் பள்ளிக்கு வர இயலாமல் தற்போது நேரடியாக மூன்றாம் வகுப்பிற்கு வந்துள்ள மாணவனுக்கும், இதேபோன்று தற்போது 5, 8 வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கும் தேசிய அளவிலான அடைவுத் தேர்வு என்பது முற்றிலும் உளவியல் அணுகுமுறைக்கு மாறானதாகும்.*

*🛡️தேசிய அடைவுத் தேர்வு என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளிகளில் மட்டுமே நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டாலும், அப்பள்ளிகளின் மாணவர்களும், மற்ற பள்ளிகளின்  மாணவர்களைப் போலவே பெருந்தொற்றுக் காலத்தில் கற்றல் வாய்ப்பை இழந்தவர்கள் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே, 3, 5, 8 வகுப்புக்கான தேசிய அடைவுத் தேர்வை மாணவர்கள் நலன் கருதி பள்ளிக் கல்வித்துறை கைவிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
   
🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
*பொதுச்செயலாளர்* 

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

                                                                     

Friday 5 November 2021

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி! - முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*🛡️உயர் கல்வித்தகுதி பெறும் மாநில அரசு ஊழியர்களுக்கு /ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி /தமிழக அரசு வெளியிட்ட அரசாணை /ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்பட்ட மாபெரும் அநீதி!/ முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கிட வேண்டும்!/ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தல்!*

*_ஊடகச் செய்தி மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 19/2021  நாள்: 03.11.2021_*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️மாநில அரசு ஊழியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஒன்றிய அரசைப் பின்பற்றி 10.03.2020 முதல் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று 01.11.2021ல் தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் பேரதிர்ச்சியையும், பெருத்த ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. 10.03.2020க்கு முன்பு வழங்கப்பட்டது போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பெறும் உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதிய உயர்வு வழங்கிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் ஆசிரியர்கள் பெறும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு பேரறிஞர் அண்ணா அவர்களின் ஆட்சிக்காலத்தில் 1969ல் நடைமுறைப்படுத்தப்பட்டது. எரிகின்ற மெழுகுவர்த்தி தான் மற்றொரு மெழுகுவர்த்தியை சுடர்விட்டுப் பிரகாசிக்க வைக்க முடியும் என்ற கோட்பாட்டின் அடிப்படையில் ஆசிரியர்கள் எப்போதும் கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற அடிப்படையில், ஆசிரியர்கள் உயர் கல்வி பெறுவதை ஊக்குவிக்கும் பொருட்டு அறிவாசான் அண்ணா அவர்களால் ஊக்க ஊதியம் அனுமதிக்கப்பட்டது. இதனால் தமிழ்நாட்டில் பல நிலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்கள் கல்வித் தகுதியை உயர்த்திக் கொள்வதில் பேரார்வம் காட்டி வந்தனர். அவ்வாறு ஆசிரியர்கள் பெற்ற உயர்கல்வி அவர்களிடம் பயிலும் மாணவச் செல்வங்களின் அறிவு வளர்ச்சிக்கும், தமிழ்நாட்டின் கல்வி வளர்ச்சிக்கும் பேருதவியாய் அமைந்தது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் 50 ஆண்டுகளாக வழங்கிவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் எவ்விதக் காரணமுமின்றி 10.03.2020 முதல் ரத்து செய்து ஆணை வெளியிடப்பட்டது. இச்செயல் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் கல்வியாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விமர்சனத்திற்கு உள்ளானது. இச்செயல் அ.தி.மு.க ஆட்சியின் மீது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய அதிருப்தியை ஏற்படுத்தியது. மீண்டும் ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் மிக முக்கியக் கோரிக்கையாக முன்வைக்கப்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் "ரத்து செய்யப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கப்படும்" என்று தெரிவித்தது. எனவே, தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் பறிக்கப்பட்ட ஊக்க ஊதிய உயர்வுகள் கிடைத்துவிடும் என்ற பெரும் நம்பிக்கையில் அனைத்து நிலை ஆசிரியர்களும் இருந்தார்கள். அந்த நம்பிக்கையை வெடிவைத்துத் தகர்த்ததைப்போல உயர் கல்வித்தகுதிக்கு ஊக்க ஊதியம் வழங்காமல் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்கி தமிழக அரசு வெளியிட்ட அரசாணை அமைந்துவிட்டது.*

*⚔️*
*🛡️50 ஆண்டு காலமாக தமிழகத்தில் ஆசிரியர்கள் பெற்றுவந்த உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது ஒருவரது பணிக்காலம் முழுவதும் பணப்பலனைத் தரக்கூடியது. ஓய்வுக்காலப் பலன்களுக்கும் பொருந்தக்கூடியது. அப்படிப்பட்ட பயனைப் பறித்துவிட்டு, தமிழக அரசு அறிவித்துள்ள ஊக்கத்தொகை என்பது உயர்கல்வி பயின்றவர்கள் செலுத்திய கல்விக் கட்டணத்திற்குக் கூட ஈடாகாது என்பது தான் உண்மை.*

*⚔️*
*🛡️மேலும், ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு வழங்கும் பல்வேறு சலுகைகளை தனது ஊழியர்களுக்கு வழங்க மறுக்கும் தமிழக அரசு உயர்கல்விக்கான ஊக்கத் தொகை வழங்குவதில் மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றுவது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டு இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்காத மாநில அரசு, ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அளவிற்கு வீட்டு வாடகைப்படி, நகர ஈட்டுப்படி, கல்விப்படி, குழந்தைப் பராமரிப்பு விடுப்பு, மருத்துவப்படி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளைத் தனது ஊழியர்களுக்கு வழங்காத தமிழக அரசு உயர் கல்வித்தகுதிக்கு மட்டும் ஒன்றிய அரசைப் பின்பற்றி ஊக்கத்தொகை வழங்குவது என்பது ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கு இழைக்கப்படும் மாபெரும் அநீதியாகும்.*

*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள உயர்கல்விக்கு ஊக்கத் தொகை வழங்கும் அரசாணையை ரத்து செய்து விட்டு முன்புபோல் ஊக்க ஊதியம் வழங்கும் வகையில் அரசாணையை வெளியிட வேண்டுமென தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

🤝இப்படிக்கு,

*_ச. மயில்_*
பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*