Tuesday 30 June 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நேற்று எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஜூன் மாத ஊதியம் வழங்கும் பணி துவங்கியது.*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நேற்று எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஜூன் மாத ஊதியம் வழங்கும் பணி துவங்கியது.*

*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி இடைநிலை மற்றும்  பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் தூத்துக்குடி மாவட்டக்கல்வித்துறை தொடங்கியது.*

*⚔️*
*🛡️முதற்கட்டமாக கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன்மாத ஊதியம் வழங்கப்படவில்லை .இடைநிலையாசிரியர்களுக்கு ஜூலை முதல் ஊதியம் நிறுத்தம் செய்திட நோட்டீஸ் வழங்கப்பட்டது.*

*⚔️*
*🛡️தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்திலையில் நமது மாநில அமைப்பு நேற்று எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக இன்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஜூன் மாத ஊதியம் வழங்கும் பணி இன்று  நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.*

*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 400 ஆசிரியர்களின் வாழ்வாதரப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட மாநில அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்டக்கக்கிளையின் சார்பாக நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.*

_🙏தோழமையுடன்;_

*_சு.செல்வராஜ்,_* _மாவட்டச்செயலாளர்,_
*தூத்துக்குடி மாவட்டம்.*

Monday 29 June 2020

*🛡️உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை முடிவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு.*

*🛡️உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை முடிவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு.*

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 10/2020 நாள்: 29.06.2020*

*🛡️உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை முடிவு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடும் எதிர்ப்பு.*

*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் உபரி ஆசிரியர்களுக்கு ஜூன்-2020 முதல் ஊதியத்தை நிறுத்தப்போவதாக மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*⚔️*
*🛡️இது ஆசிரியர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் பள்ளிக்கல்வித்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியுள்ளதாவது._

*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அரசு உதவி பெறும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் 2019-20 ஆம் ஆண்டு பணியாளர் நிர்ணயத்தின்படி உபரியாகக் கண்டறியப்பட்ட ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் மாறுதல் செய்யவில்லையென்றால் உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்களுக்குஜூன்-2020 முதல் ஊதியம் நிறுத்தப்படும் என தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை அறிவித்துள்ளது.*

*⚔️*
*🛡️அரசாணை எண்: 525 பள்ளிக்கல்வித்துறை நாள்: 29.12.1997 ன் படி தமிழ்நாட்டில் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1:20 லிருந்து 1:40 ஆக உயர்த்தப்பட்டது.*

*⚔️*
*🛡️அரசாணை எண்: 231 பள்ளிக்கல்வித்துறை நாள் 11.08.2010ல் கல்வி உரிமைச்சட்டம் - 2009 ன் படி ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரம் 1 முதல் 5 வகுப்புகளுக்கு 1:30 எனவும், 6 முதல் 8 வகுப்புகளுக்கு 1:35 எனவும், 9, 10 வகுப்புகளுக்கு 1:40 எனவும் மாற்றியமைக்கப்பட்டது. ஆசிரியர் மாணவர் விகிதாச்சாரம் உயர்வு மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளின் பெருக்கம், ஆங்கில வழிக் கல்வி மோகம் ஆகியவை காரணமாக தமிழ்நாடு முழுவதும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் கடந்த சில ஆண்டுகளாக உபரிப் பணியிடங்கள் ஏற்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡️உபரியாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றுபவர்கள். 25 ஆண்டுகள் வரை பணி அனுபவம் கொண்டவர்கள். தொடர்ந்து ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர்கள். உபரியாக உள்ள ஆசிரியர்களுக்குத் தகுதியான பணியிடத்தில் பணிமாறுதல் வழங்குவது என்பது அந்தந்தப் பள்ளி நிர்வாகம் மற்றும் கல்வித்துறையின் பணியாகும்.*

*⚔️*
*🛡️உபரி ஆசிரியர்கள் தங்களுக்குரிய தகுதியான பணியிடத்தைத் தாங்களே தேடிக்கொள்வது என்பது இயலாத ஒன்று. எனவே, உபரி ஆசிரியர்கள் விஷயத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது எவ்விதத்தவறும் இல்லை. அவர்கள் தொடர்ந்து தாங்கள் பணியாற்றும் பள்ளிகளில் கற்பித்தல் பணியை ஆற்றிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.*

*⚔️*
*🛡️எனவே, உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது என்பது எவ்விதத்திலும் நியாயமான செயல் அல்ல. மேலும், தமிழ்நாடு முழுவதும் இப்பிரச்சினை உள்ள நிலையில் தூத்துக்குடி மாவட்டக்கல்வித் துறை மட்டும் கொரோனா பேரிடரால் மூன்று மாதங்களுக்கும் மேலாகப் பள்ளிகள் மூடப்பட்டுள்ள இக்கட்டான இன்றைய சூழலில், மக்கள் அனைவரும் கொரோனா அச்சத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய நிலையில் ஆசிரியர்களின் வயிற்றில் அடிக்கும் இச்செயலில் ஈடுபட்டிருப்பது மனிதாபிமானமற்ற நடவடிக்கையாகும்.*

*⚔️*
*🛡️அரசாணை எண்: 525 ல் பள்ளி நிர்வாகமோ அல்லது கல்வித்துறையோ உபரி ஆசிரியர்களுக்குப் பணி மாறுதல் வழங்க இயலாத நிலையில் ஓய்வு பெறும் வரை பணியாற்றும் பள்ளியிலேயே அவர்கள் தொடர வேண்டும் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡️மேலும், உபரி ஆசிரியர்களின் பணி நிரவல் தொடர்பான எந்தவொரு அரசாணையிலோ, சட்ட விதிகளிலோ அல்லது நீதிமன்றத் தீர்ப்பாணைகளிலோ உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்த வேண்டும் என்று எந்த இடத்திலும் கூறப்படவில்லை.*

*⚔️*
*🛡️மேலும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரப்படி, உபரி ஆசிரியர்களாகக் கணக்கிடப்பட்டாலும், அவர்கள் நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள். சட்டப்படி அவர்களுக்குப் பணிப்பாதுகாப்பு உள்ளது. நிரந்தரப் பணியிடத்தில் பணியாற்றும் எந்தவொரு ஆசிரியருக்கும் பணி வழங்காமல் இருப்பதோ அல்லது ஊதியம் வழங்காமல் இருப்பதோ சட்டப்படி தவறாகும். அவர்களுக்குப் பணி பாதுகாப்பும், ஊதியப் பாதுகாப்பும் அளிக்க வேண்டியது கல்வித்துறையின் கடமையாகும்.*

*⚔️*
*🛡️எனவே, தூத்துக்குடி மாவட்டத்தில் உபரி ஆசிரியர்களாகக் கணக்கிடப்பட்ட ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்துவது என்பது விதிகளின்படி தவறானதாகும். கொரோனா நோய்த்தொற்றால் தமிழகத்தில் கடந்த 16.03.2020 முதல் அனைத்துவகைப் பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. மீண்டும் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதற்கு யாராலும் விடை கூற முடியாத அளவிற்கு தற்போதைய நிலைமை உள்ளது. இதனால் 10, 11 வகுப்புப் பொதுத்தேர்வுகள் கூட ரத்து செய்யப்பட்டுள்ளன. இதுவரை தமிழகம் காணாத நிலையாக தற்போதைய நிலை உள்ளது.*

*⚔️*
*🛡️இப்படிப்பட்ட அசாதாரண சூழலில் தூத்துக்குடி மாவட்டக் கல்வித்துறை ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையிலும், ஆசிரியர்களை அச்சுறுத்தும் வகையிலும் மேற்கொண்டுள்ள உபரி ஆசிரியர்களின் ஊதியத்தை நிறுத்தும் நடவடிக்கைகளைத் தாங்கள் தடுத்து நிறுத்திடவும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் வாழ்வாதாரத்தை, பணிப்பாதுகாப்பை உறுதிப்படுத்திடவும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட வேண்டுகிறோம். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.*

சென்னை
29.06.2020

_✍️இப்படிக்கு,_

*_ச. மயில்_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

*_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கல்வித்துறை ஆணையர் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கை கடிதம் - pdf வடிவில்_*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1260RH7KtZJcN_XfyTC0etX9mrmqsoWYj/view?usp=drivesdk


Sunday 21 June 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி வடிவில்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி வடிவில்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் நேற்று சனிக்கிழமை (20-06-2020) மாலை 3.00 முதல் 5.45 வரை நடைபெற்றது.*

*🛡️மாவட்டத் தலைவர் தோழர் இரா.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்,*

*🛡️மாவட்டத் துணைத் தலைவர் தோழர் கு.கி.இரவிச்சந்திரன் வரவேற்புரையாற்றினார்.*

*🛡️மாவட்ட செயலாளர் தோழர் ஜோ.கிறிஸ்டோபர்  கடலூர் மாவட்டத்தில் நிலவக்கூடிய ஆசிரியர் பிரச்சனைகள், 17ஆ ரத்து செய்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.*

*🛡️மாநிலத் துணைத்தலைவர்  தோழர் அ.ரஹீம் சிறப்புரையாற்றினார்.*

_கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:_

*🛡️17ஆ ரத்து செய்வது தொடர்பாக நியமிக்கப்பட்டுள்ள விசாரணை அலுவலரின் விசாரணையில் பங்கேற்கக் கூடிய ஆசிரியர்களுக்கு வட்டார, மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதுணையாக செயலாற்றுவது என தீர்மானிக்கப்பட்டது.*

*🛡️ஆசிரியர்களின் SSLC, HSC, D.Ted சான்றிதழ்களின் உண்மை தன்மையை  காலதாமதம் இன்றி வழங்கிட கடலூர் மாவட்ட தேர்வுத்துறையினரை கேட்டுக் கொள்வதென இச்செயற்குழு கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.*

*🛡️வட்டார, நகர கிளைகள் ஜூலை 15ஆம் தேதிக்குள் உறுப்பினர் பட்டியலுடன் தணிக்கை முடிப்பது எனவும், ஜூலை மாதம் 30ஆம் தேதிக்குள் வட்டார நகர தேர்தல்களை நடத்திடுவது எனவும் தீர்மானிக்கப்படுகிறது.*

*🛡️இந்நிகழ்வில்  வட்டார செயலாளர்கள், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.*

*🛡️முடிவில் மாவட்ட பொருளாளர் தோழர் ப.சீனிவாசன் நன்றி கூறினார்.*

🔰 *TNPTF-கொளத்தூர் கிளை..... NHIS-ல் அசாத்திய சாதனை - செய்தி துளிகள்*🔰

🔰 *TNPTF-கொளத்தூர் கிளை..... NHIS-ல் அசாத்திய சாதனை - செய்தி துளிகள்*🔰

*💥பயனாளர் பெயர் :சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியம், வைதீஸ்வரா நிதிஉதவி பெறும் துவக்கப் பள்ளியின் இடைநிலைஆசிரியர் திருமதி. அனிதா, அவர்களின் மகன்*

*💥மருத்துவச் சிகிச்சை :* 

 *குடலிறக்க அறுவை சிகிச்சை* 

*💥மருத்துவமனை :*

*சேலம்- SKS*

*💥மொத்த மருத்துவச் செலவு :* 

*₹.59,232 /-*

*💥NHIS-ல் ஒதுக்கப்பட்டது :*
     *₹.16,000/-*

*💥TNPTF-ன் தொடர் முயற்சியின் பயனாக இறுதியாக கூடுதலாக அனுமதிக்க வைக்கப்பட்ட தொகை :*
*=₹,26,018.  மொத்தம்-42,018*
    
*💥கொளத்தூர் TNPTF-வட்டாரக் கிளையின் கோரிக்கையை  மனித நேயத்துடன்  உற்ற நேரத்தில் உறுதுணையாக இருந்து மருத்துவக் காப்பீடு பயனை பெற்றுத்தந்த,*

*💥TNPTF-ன் மாநில NHIS- ஒருங்கிணைப்பாளர் ,தோழர். செல்வகணேஷ் அவர்களுக்கும்,*

*💥தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சேலம் மாவட்டச் செயலாளர். தோழர்.ந. பெரியசாமி  அவர்களுக்கும்*

*💥கொளத்தூர் வட்டாரக் கிளையின் சார்பாக நன்றியும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*

_தோழமையுடன்,_
*பொ.கண்ணன்_தலைவர்_*
*மா.செல்வராஜ்_செயலாளர்_*
*கு.சீனிவாசன்_பொருளாளர்_*

*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*கொளத்தூர், வட்டாரக்கிளை.*

*TNPTF-திருவிடைமருதூர் கிளை... NHIS-ல் அசாத்திய சாதனை - செய்தி துளிகள்*

*TNPTF-திருவிடைமருதூர் கிளை... NHIS-ல் அசாத்திய சாதனை - செய்தி துளிகள்*

*🚑பயனாளர்:*
_தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் ஒன்றியம்... துகிலி உதவி பெறும் பள்ளியின் ஆசிரியை திருமதி T.S.சசிகலா அவர்களின் கணவர்_
*(எஸ்.புதூர் பள்ளித் தலைமையாசிரியர் திரு T.S.திருமேனி சுந்தரம் அவர்களின் சகோதரியின் கணவர்)*

*🚑மருத்துவச் சிகிச்சை :* _முதுகுத்தண்டு அறுவைச் சிகிச்சை._

*🚑மருத்துவமனை :
_தஞ்சை மீனாட்சி மருத்துவமனை_

*🚑மொத்த மருத்துவச் செலவு :*
      
_ரூ.1,85,880_

*🚑முதலில் NHIS-ல் ஒதுக்கப்பட்டது :*    
_₹.40,000/-*மட்டும்_

*🚑TNPTF-திருவிடைமருதூர் கிளையின் வேண்டுகோளை ஏற்று  தஞ்சை மாவட்ட மையத்தின் தொடர் முயற்சியின் பயனாக இறுதியாக  அனுமதிக்க வைக்கப்பட்ட தொகை :*

_1,17,169 மற்றும் 20,000_
_ஆக கூடுதல் 1,37,169_
   
*🚑திருவிடைமருதூர்  TNPTF-வட்டாரக் கிளையின் கோரிக்கையை  மனித நேயத்துடன்  உற்ற நேரத்தில் உறுதுணையாக இருந்து மருத்துவக் காப்பீடு பயனை பெற்றுத்தந்த,*

*🚑TNPTF-ன் மாநில NHIS- ஒருங்கிணைப்பாளர் ,தோழர். செல்வகணேஷ் அவர்களுக்கும்,*

*🚑தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தஞ்சை  மாவட்டத் தலைவர் தோழர் மா.கலைச்செல்வன், மாவட்டச்  செயலாளர் தோழர் இரா.அழகர் அவர்களின்  வழிகாட்டலின்படி  மருத்துவமனையில் தொடர்புகொண்டு தொகை பெற்றுத்தந்த  மாவட்டப் பொருளாளர் தோழர் க.மதியழகன்  அவர்களுக்கும்*

*🚑இயக்கம் பாராமல் இப்பிரச்சனையை முன்னெடுத்துச் சென்ற திருவிடைமருதூர்  வட்டாரக் கிளையின் தலைவர் தோழர்  ம.கோவிந்தராஜன் அவர்களுக்கும் TNPTF திருவிடைமருதூர் கிளையின் சார்பாக நன்றியும், வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
      
_🤝தோழமையுடன்,_

*ஆசிரியர் நலனில்*
*திருவிடைமருதூர் பொறுப்பாளர்கள்*

*ஊக்க ஊதியம் மறுப்பு: கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு*

*ஊக்க ஊதியம் மறுப்பு: கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு*

*⚔️*
*🛡️தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனுமதிக்க மறுக்கும் கருவூலத் துறையைக் கண்டித்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ச.மயில், மாநில கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_

*⚔️*
*🛡️தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் தகுதிக்காக அவர்களது பணிக் காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது.*

*⚔️*
*🛡️ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் கடந்த மார்ச் 10-ஆம் தேதியிட்ட அரசாணையை (எண் 37) காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.*

*⚔️*
*🛡️துறையின் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்று தகுதிவாய்ந்த துறை அலுவலர்களால் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சார்நிலை அலுவலர்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும். மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இந்தப் பிரச்னையால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡️எனவே தாங்கள் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.*

*⚔️*
*🛡️இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சார்பில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறியுள்ளார்.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Saturday 20 June 2020

பள்ளிக்கல்வித்துறை - தகுதி வாய்ந்த துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான பணப்பலன்களை வழங்கிட மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மறுப்பு - அரசாணைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்கிட வேண்டுதல் - இப்பிரச்சனைக்கு உரிய உடனடித் தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்துதல் சார்பாக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.

*🔰பள்ளிக்கல்வித்துறை - தகுதி வாய்ந்த துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான பணப்பலன்களை வழங்கிட மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மறுப்பு - அரசாணைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்கிட வேண்டுதல் - இப்பிரச்சனைக்கு உரிய உடனடித் தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்துதல் சார்பாக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.*


(1) G.O (MS) No:37 P&AR (FR-IV) Dept dt: 10.03.2020
       (2) G.O (MS) No:42 (Edn dept) dt: 10.01.1969
       (3) G.O (MS) No:746 (Edn dept) dt: 30.06.1989
       (4) G.O (MS) No:1024 (Edn dept) dt: 09.12.1993
       (5) G.O (MS) No:324 (Edn dept) dt: 25.04.1995
       (6) G.O (MS) No:112 (Edn dept) dt: 28.07.2012
       (7) G.O (MS) No:18 (Edn dept) dt: 18.01.2013



                       *🔰தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பார்வை 2 முதல் 7 வரை கண்டுள்ள அரசாணைகளின்படி உயர்கல்வித்தகுதிக்காக அவர்களது பணிக்காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentive increment) அனுமதிக்கப்பட்டு வருகிறது.*

  *🔰ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் பார்வை 1ல் கண்ட அரசாணையைக் காரணம் காட்டி பள்ளிக்கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை (Incentive increment) ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.* 

  *🔰கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது பார்வை 2 முதல் 7 வரை கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி வழங்கப்பட்டு வருவதாகும். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் சார்ந்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் சார்பில் இதுவரை எந்தவொரு அரசாணையும் வெளியிடப்பட்டதில்லை.*

  *🔰பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையால் வெளியிடப்பட்டுள்ள பார்வை 1ல் கண்ட அரசாணை என்பது அரசுத்துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Advance increment தொடர்பானதாகும். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உயர்கல்வித்தகுதிக்காக வழங்கப்படுவது Incentive increment ஆகும்.*
 
                        *🔰மேலும், பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையில் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எந்தவொரு அரசாணையும் சுட்டிக்காட்டப்படவில்லை. அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 10 அரசாணைகளும் அரசு ஊழியர்களின் முன் ஊதிய உயர்வு (Advance increment) தொடர்பானதாகும். எனவே, பார்வை 1ல் கண்ட அரசாணை ஆசிரியர்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.*

  *🔰மேலும், துறை அனுமதி பெற்று, உயர்கல்வி பயின்று, தகுதி வாய்ந்த துறை அலுவலர்களால் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சார்நிலை அலுவலர்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும்.*

  *🔰மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இப்பிரச்சினையால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்கி உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*

  *🔰இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சார்பில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் எங்களது மாநில அமைப்பின் சார்பில் தங்களுக்குக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*

_🔰தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

Friday 12 June 2020

*அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான 3மாத காலமாக பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையினை மாற்றா விட்டால் களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாக்க வேண்டிவரும் என TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

*அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான 3மாத காலமாக பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையினை மாற்றா விட்டால் களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாக்க வேண்டிவரும் என TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*TNPTF ஆசிரியர் முழக்கம் _ஜுன்-2020_ பொதுச் செயலாளர் மடல்*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றுக் கொரோனாவின் கோரத் தாக்குதலால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் மரணமடைந்த செய்தி தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியையும், பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உடல் உபாதைகளுடன் மக்கள் பணியாற்றி வந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், தனது உடல்நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் காலமான செய்தி, நோய்த்தொற்றின் பெருங்கேட்டை நமக்கு உணர்த்துவதோடு, எதிர்கால அபாயத்தையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மறைந்த மக்கள் பிரதிநிதிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பதைக்கூட யாராலும் கணித்துக் கூற இயலவில்லை.இது எவ்வாறு முடிவுக்கு வரும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெருந்தொற்றின் பரவலையும், அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த மரணங்களையும் ஊடகங்கள் வழியே நாள்தோறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அத்தகு நிலையைத் தற்போது நாமே நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ள செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

*⚔️*
*🛡️இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நாடு மிகப் பெரிய இந்த மக்கள் சமுத்திரத்தில் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்தால், அது சமூகப் பரவலாக மாறினால் அடுத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை மிகுந்த கவலையோடு நாம் நோக்க வேண்டியுள்ளது. எனவே, நோய் தொற்றிலிருந்து நம்மை, நம் குடும்பத்தாரை, உற்றார் உறவினர்களை, அக்கம்பக்கத்தாரை, நண்பர்களை, பொதுமக்களை,நம் இயக்கத் தோழர்களைப் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பும், கடமையும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காக நம்மால் இயன்ற விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.*

*⚔️*
*🛡️15.06.2020 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வையும், நடைபெறாத பாடங்களுக்கான பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு கடந்த 09.06.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. கொடுந்தொற்றால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்திட வேண்டும் அல்லது நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வை நடத்திட வேண்டும், தேர்வு நடத்துவதற்கு முன்பாக குறைந்தது 15 நாட்களாவது மாணவர்கள் தங்கள் பள்ளிக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களிடம் மீள் பயிற்சி பெற வேண்டும், அதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாம் 18 லட்சம் மாணவச் செல்வங்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. ஒட்டுமொத்த தமிழகமும் இதைத்தான் கூறியது. ஆனால், இறுதிவரை தேர்வு நடத்துவது என்பதில் விடாப்பிடியாக இருந்த தமிழக அரசு மக்களின் மனநிலையை உணர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டது.*

*⚔️*
*🛡️தற்போது 10,11 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குக் கொடுந் தொற்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முதன்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡️சமீபகாலமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பான அறிவிப்புகளுக்குப் பஞ்சமில்லை. அவ்வப்போது நடைமுறை சாத்தியமற்ற பரபரப்பான அறிவிப்புக்களை வெளியிடுவதும், பின்பு அதைத் திரும்பப் பெறுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் முதல் பருவத் தேர்வு முடிந்த பின்பு 5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்போவதாக உளவியல் நெறிமுறைகளுக்கு மாறான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டது. தேர்வுகளை நடத்துவதில் இறுதிவரை உறுதியாக இருந்த தமிழக அரசு மக்களின் கடுங் கோபத்தை அறிந்து தனது முடிவை மாற்றிக்கொண்டது. 5,8 வகுப்புகளுக்கே பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்று நினைத்த தமிழக அரசு தற்போது 10,11 ஆம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதைக் "காலம் செய்த கோலம்; கொரோனா செய்த மாயம்" என்றுதான் சொல்ல வேண்டும்.*

*⚔️*
*🛡️10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்தது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்தும் அதுவாகவே இருந்தது. இவ்வாறு பல அமைப்புகள் குரல் கொடுத்தாலும் கூட, இப்பிரச்சனையை துணிச்சலாக உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று, அங்கே ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தி, அதன் மூலம் நீதிமன்றத்தை நியாயமான கருத்துக்களை தெரிவிக்க வைத்து, இதைத் தமிழகம் தழுவிய மிக முக்கியப் பிரச்சனையாக மாற்றி, தமிழக அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்த ஆசிரியர்  இயக்கம் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) அங்கம் வகிக்கும் நம் தோழமை அமைப்பாகிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்காக அந்த அமைப்பிற்கு நமது தோழமை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதற்கு மின்னல் வேகத்தில் பணியாற்றிய பள்ளிக்கல்வித்துறை ஜுன்-8 முதலே அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.01.06. 2020 முதல் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கிராமப்புறங்களில் பேருந்துகளின் இயக்கம் இன்று வரை இல்லாத சூழலில் பெண் ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். மண்டலம்  விட்டு மண்டலம் செல்வதற்கு வாடகைக்கு தனி வாகனம் பிடித்து அதற்காக இருபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தேவைப்பட்டால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பயன்படுத்தும் சூழலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தேவையில்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி,திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அலைக்கழித்தனர்.*

*⚔️*
*🛡️கொரோனா பெருந்தொற்றால் எழுந்துள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் சில மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளை இந்த ஊரடங்கு காலத்திலும் மேற்கொண்டுள்ளனர். மக்களின் கவனம் நோய்த்தொற்றின் மீது இருக்கும் சூழலில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில், ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகாது என அரசுகள் கருதுகின்றன.அந்த வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அரசுத்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்குத் தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 248 ஆகும். நோய்த்தொற்றுக் காரணமாகத் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் அரசுத் துறைகளில் புதிதாக நியமனங்களை மேற்கொள்ளாமல் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதும், அரசுத் துறைகளை நீர்த்துப்போகச் செய்து அவற்றைத் தனியார் மயமாக்குவது என்பதும்தான்.*

*⚔️*
*🛡️ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 248 நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கே பயன்படும். தமிழகம் முழுவதும் படித்துவிட்டு வேலையின்றி தவிக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் பிரச்சனைதான் இது.*

*⚔️
*🛡️"வேலை கேட்டு அனுப்பி வைத்த விண்ணப்பத்தாள்களை அடுக்கி வைத்தால் இந்தியாவில் இன்னொரு இமய மலையையே உருவாக்கிவிடலாம்" என்ற கவிதை வரிகள்தான் தற்போது நினைவுக்கு வருகின்றன.*

*⚔️*
*🛡️கடந்த 3 மாதகாலமாக அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. காலச் சூழலைப் பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்தால் நாம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருப்பதை நாம் கைகட்டி, வாய் பொத்தி, மொளனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.*

*_"பொறுமை ஒரு நாள் புலியாகும்; அதற்குப் பொய்யும், புரட்டும் பலியாகும்!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_* _பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday 6 June 2020

*☠️கொரோனா கொடுந்தொற்றின் தாக்குதல் அச்சமூட்டிக் கொண்டிருக்கின்ற சூழலில், தேர்வை விட உயிர் முக்கியமானது என்பதைத் தமிழக அரசு உணர மறுத்து விட்டது. 10 ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க TNPTF கோரிக்கை*

*☠️கொரோனா கொடுந்தொற்றின் தாக்குதல் அச்சமூட்டிக்  கொண்டிருக்கின்ற சூழலில், தேர்வை விட உயிர் முக்கியமானது என்பதைத் தமிழக அரசு உணர மறுத்து விட்டது. 10 ம் வகுப்பு பொதுத்தேர்வினை ஒத்திவைக்க TNPTF  கோரிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*TNPTF மாநில பொதுச் செயலாளரின் கடிதம், நாள்:06.06.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*☠️*
*🛡️கொரோணா நோய்த்தொற்று குவலயத்தையே குலை நடுங்கச் செய்து கொண்டிருக்கிறது. நோய்த்தொற்றின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே உள்ளது. நோய்த்தொற்றின் தாக்கத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது இடத்தில் தமிழகம் இருப்பது மிகப் பெரிய கவலையை ஏற்படுத்தியுள்ளது. மாநிலத் தலைநகர் சென்னையில் கொடுந்தொற்றின் தாக்குதல் அச்சமூட்டிக்  கொண்டிருக்கிறது.*

*💰*
*🛡️ஐந்தாவது முறையாக சில தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு 30.06.2020 வரை நடைமுறையில் உள்ளது. வாழ்வாதாரத்தை இழந்த மக்கள் சில தளர்வுகள் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாகத் தங்கள் பணிக்குச் செல்லத் தொடங்கியுள்ளனர். ஊரடங்கு உதவிப் பணிகளில் மாநிலம் முழுவதும் நம் இயக்கத் தோழர்கள் ஆற்றிய உதவிப் பணிகள் மகத்தானவை. தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகள் மாநிலம் முழுவதும் செய்த உதவிப் பணிகளின் மொத்த மதிப்பு 2 கோடியே 20 லட்சம் ரூபாயைத் தாண்டியுள்ளது. ஆசிரியர் இயக்க வரலாற்றில் இது ஒரு தன்னிகரற்ற சாதனை என்றே கூறவேண்டும்.*

*💰*
*🛡️மேற்கண்ட உதவிப் பணிகள் தொடர்பாக அனைத்து மாவட்டச் செயலாளர்களும் தங்கள் மாவட்டத்தில் உதவிப் பணிகள் நடைபெற்ற விவரம், உதவிப் பணிகளில் ஈடுபட்ட வட்டார,நகரக் கிளைகளின் விவரம், தங்கள் மாவட்டத்தில் உதவிப் பணிகளுக்கு செலவிடப்பட்ட தொகை, உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட பகுதிகள், வழங்கப்பட்ட உதவிப் பொருட்கள் விவரம், உதவிப் பொருட்கள் வழங்கப்பட்ட விதம், உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் விவரம், உதவிப் பொருட்கள் பெற்றவர்களின் விவரம்,உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்வுகள் தொடர்பான புகைப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அறிக்கையொன்றை மாநில மையத்திற்கு 20. 06.2020 க்குள் அளித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*✍️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை 15.06. 2020 முதல் நடத்திட தமிழக அரசு தீவிர ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கிறது. பதினோராம் வகுப்புப் பொதுத் தேர்வும் தொடர்ந்து நடைபெற உள்ளது. இரண்டு பொதுத் தேர்வுகளிலும் சுமார் 19 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுத உள்ளனர். பொதுத்தேர்வுப் பணியில் 3 லட்சம் ஆசிரியர்கள் ஈடுபட உள்ளனர். 22 லட்சம் பேரின் உயிர்ப் பாதுகாப்பு என்பது மிக மிக முக்கியமானது. பொதுத்தேர்வை தள்ளிவைக்க வேண்டும் அல்லது ரத்து செய்ய வேண்டும் என கல்வியாளர்கள், ஆசிரியர் சங்கங்கள் பெற்றோர்கள், மாணவர்கள் பொதுமக்கள் எனப் பல தரப்பினரும் வைத்த கோரிக்கையைத் தமிழக அரசு புறந்தள்ளிவிட்டது. தேர்வை விட உயிர் முக்கியமானது என்பதைத் தமிழக அரசு உணர மறுத்து விட்டது.*

*👎*
*🛡️கடந்த ஜூன் 1-ஆம் தேதி பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட போது அதை எதிர்த்துத் தொடரப்பட்ட பொதுநல வழக்கில் உயர்நீதிமன்றம்,  "மாணவர்களின் பெற்றோர் அல்லது ஆசிரியர்கள் ஏன் வழக்குத் தொடுக்கவில்லை?" என்று கேள்வி எழுப்பி வழக்கைத் தள்ளுபடி செய்தது. ஆனால், இந்த முறை ஒரு மாணவரின் தந்தை தொடுத்த வழக்கைத் தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் "இது அரசின் கொள்கை முடிவு" என்று தெரிவித்துள்ளது.*

*😷*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுப் பணிகளில் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்னும் பொதுப் போக்குவரத்து முழுமையாக நடைபெறவில்லை. மண்டலம் விட்டு மண்டலம் செல்ல முடியாது. ஊரடங்கு விடுமுறையில் தங்கள் சொந்த ஊர்களுக்குச் சென்ற ஆசிரியர்கள் e-Pass க்கு விண்ணப்பித்து வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கூறுகிறது.  விண்ணப்பிக்கும்போது பயணம் செய்யும் வாகனத்தின் எண்ணைக் குறிப்பிட வேண்டும். அப்படி என்றால் தனி வாகனம் ஒன்றை வாடகைக்கு எடுத்துத்தான் வரவேண்டும்.  நாகர்கோவிலில் இருந்து கிருஷ்ணகிரி செல்வதென்றால் வாகன வாடகை மட்டும் 20 ஆயிரம் ரூபாய் செலவாகும். இதே போன்று புலம்பெயர் தொழிலாளர்களின் குழந்தைகள் தங்கள் சொந்த  ஊருக்கு சென்றிருந்தால், மேற்கண்ட இடர்பாட்டை அவர்களும் சந்தித்தே ஆக வேண்டும். இதுபோன்ற நடைமுறைச் சிக்கல்களைப் பற்றியெல்லாம் பள்ளிக்கல்வித்துறை சிந்திக்கவே இல்லை. எனவே,பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வுகளை நடத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கோருகிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில்,  இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நடத்திய, தனி முத்திரை பதித்த, வரலாற்றுச் சிறப்புமிக்க அரசாணை எரிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு 17(ஆ) நடவடிக்கைக்கு உள்ளான நம் இயக்கத் தோழர்கள் மீதான 17(ஆ) நடவடிக்கை சில மாவட்டங்களில் ரத்து செய்யப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.  உயர் நீதிமன்றத் தீர்ப்பின்படி 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்து உத்தரவிட்ட, ஈரோடு மாவட்டத்தில் கோபிசெட்டிபாளையம் கல்வி மாவட்டம், சத்தியமங்கலம் கல்வி மாவட்டம், பவானிசாகர் கல்வி மாவட்டம், ஈரோடு கல்வி மாவட்டம், மதுரை மாவட்டத்தில் உசிலம்பட்டி கல்வி மாவட்டம்,  திருநெல்வேலி மாவட்டத்தில் வள்ளியூர் கல்வி மாவட்டம் ஆகிய கல்வி மாவட்டங்களின் மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது.மேற்கண்ட மாவட்டங்களில் 17(ஆ)வை ரத்து செய்வதற்காகத் தொடர் முயற்சிகளை மேற்கொண்ட  அந்தந்த மாவட்டக் கிளைகளுக்கு மாநில மையம் தனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.*

*⚔️*
*🛡️அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கையை ரத்து செய்திட மற்ற மாவட்டங்களிலும் அந்தந்தக் கிளைத் தோழர்கள் தொடர் முயற்சிகளை மேற்கொள்ள மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️17(ஆ)நடவடிக்கையை மேற்கொண்டவர் மாவட்டக்கல்வி அலுவலர் என்றால் அவர் மூலமாகவும், வட்டாரக் கல்வி அலுவலர் என்றால் அவர் மூலமாகவும் விரைந்து ரத்து செய்திட விடாமுயற்சியுடன் செயல்பட வேண்டும். அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கை என்பது தமிழகம் முழுவதும் ஒரே விதமான குற்றச்சாட்டின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை ஆகும். காவல் துறையின் முதல் தகவல் அறிக்கையின் பேரிலான நடவடிக்கை ஆகும். 21 மாவட்டங்களில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையை உயர் நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. எனவே, அனைத்து மாவட்டங்களிலும் சட்டப்படி 17(ஆ) ரத்து செய்யப்பட வேண்டும். அதிலும் சில கல்வி மாவட்டங்களில் 17(ஆ) ரத்து செய்யப்பட்ட பிறகு மற்ற மாவட்டங்களில்  அதை நிலுவையில் வைத்திருப்பது என்பதும் சட்டப்படி தவறாகும். ஒரே மாதிரியான குற்றச்சாட்டிற்கு வெவ்வேறு விதமான நடவடிக்கைகளை கல்வித்துறை மேற்கொள்ள முடியாது.*

*⚔️*
*🛡️எனவே, மாநிலம் முழுவதும் அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகள் நிலுவையிலுள்ள மாவட்டக் கிளைகளின் நிர்வாகிகள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு 17(ஆ) வழங்கிய அலுவலர்களை நேரில் சந்தித்து மற்ற மாவட்டங்களில் 17(ஆ)ரத்து செய்யப்பட்டதற்கான ஆதாரங்களைக் கொடுத்து தங்கள் மாவட்டத்திலும் ரத்து செய்து ஆணை பெற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday 3 June 2020

*தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா!*

*தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா!*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*😷தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் மேலும் ஒரு பெண் ஊழியருக்கு கொரோனா!*

*😷ஏற்கனவே தேர்வுத்துறை உதவி இயக்குனர் ஒருவருக்கு கொரோனா தொற்று கண்டுபிடிப்பு!*

*😷தேர்வுத்துறை ஊழியர்கள் அனைவருக்கும் பரிசோதனை நடத்த கோரிக்கை!*

*😷தேர்வுத்துறை அதிகாரிகள், ஊழியர்கள் மத்தியில் அச்சம்!*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм