Saturday, 20 June 2020

பள்ளிக்கல்வித்துறை - தகுதி வாய்ந்த துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான பணப்பலன்களை வழங்கிட மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மறுப்பு - அரசாணைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்கிட வேண்டுதல் - இப்பிரச்சனைக்கு உரிய உடனடித் தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்துதல் சார்பாக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.

*🔰பள்ளிக்கல்வித்துறை - தகுதி வாய்ந்த துறை அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்வித் தகுதிக்கான ஊக்க ஊதிய உயர்வுக்கான பணப்பலன்களை வழங்கிட மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் மறுப்பு - அரசாணைகளுக்குப் புறம்பாகச் செயல்படும் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு உரிய தெளிவுரை வழங்கிட வேண்டுதல் - இப்பிரச்சனைக்கு உரிய உடனடித் தீர்வு கிடைக்காவிடில் மாநிலம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்துதல் சார்பாக கருவூல கணக்குத் துறை முதன்மைச் செயலாளர் / ஆணையாளர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடிதம்.*


(1) G.O (MS) No:37 P&AR (FR-IV) Dept dt: 10.03.2020
       (2) G.O (MS) No:42 (Edn dept) dt: 10.01.1969
       (3) G.O (MS) No:746 (Edn dept) dt: 30.06.1989
       (4) G.O (MS) No:1024 (Edn dept) dt: 09.12.1993
       (5) G.O (MS) No:324 (Edn dept) dt: 25.04.1995
       (6) G.O (MS) No:112 (Edn dept) dt: 28.07.2012
       (7) G.O (MS) No:18 (Edn dept) dt: 18.01.2013



                       *🔰தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பார்வை 2 முதல் 7 வரை கண்டுள்ள அரசாணைகளின்படி உயர்கல்வித்தகுதிக்காக அவர்களது பணிக்காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் (Incentive increment) அனுமதிக்கப்பட்டு வருகிறது.*

  *🔰ஆனால், தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் பார்வை 1ல் கண்ட அரசாணையைக் காரணம் காட்டி பள்ளிக்கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலர்கள் ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை (Incentive increment) ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.* 

  *🔰கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் என்பது பார்வை 2 முதல் 7 வரை கண்டுள்ள பள்ளிக்கல்வித்துறையால் வெளியிடப்பட்ட அரசாணைகளின்படி வழங்கப்பட்டு வருவதாகும். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் ஊக்க ஊதியம் சார்ந்து பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையின் சார்பில் இதுவரை எந்தவொரு அரசாணையும் வெளியிடப்பட்டதில்லை.*

  *🔰பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத்துறையால் வெளியிடப்பட்டுள்ள பார்வை 1ல் கண்ட அரசாணை என்பது அரசுத்துறைகளில் பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வந்த Advance increment தொடர்பானதாகும். பள்ளிக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு உயர்கல்வித்தகுதிக்காக வழங்கப்படுவது Incentive increment ஆகும்.*
 
                        *🔰மேலும், பார்வை 1ல் கண்டுள்ள அரசாணையில் ஆசிரியர்களின் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக இதுவரை பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள எந்தவொரு அரசாணையும் சுட்டிக்காட்டப்படவில்லை. அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 10 அரசாணைகளும் அரசு ஊழியர்களின் முன் ஊதிய உயர்வு (Advance increment) தொடர்பானதாகும். எனவே, பார்வை 1ல் கண்ட அரசாணை ஆசிரியர்களுக்கு முற்றிலும் பொருந்தாது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்குக் கொண்டு வருகிறேன்.*

  *🔰மேலும், துறை அனுமதி பெற்று, உயர்கல்வி பயின்று, தகுதி வாய்ந்த துறை அலுவலர்களால் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சார்நிலை அலுவலர்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும்.*

  *🔰மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இப்பிரச்சினையால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது. எனவே, தாங்கள் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில் தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்கி உதவிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*

  *🔰இப்பிரச்சனைக்கு விரைந்து தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சார்பில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்பதையும் எங்களது மாநில அமைப்பின் சார்பில் தங்களுக்குக் கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.*

_🔰தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

No comments: