Monday 30 September 2019

*கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்கத்தை செயல்படுத்திக்காட்டிய இயக்க தோழர்களுக்கு நன்றிகள்! - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் அறிக்கை*


⚔⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧⚔
  🛡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭🛡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_30.html

*TNPTF பொதுச்செயலாளரின்,*
*சுற்றறிக்கை எண்: 29*
*நாள்: 29.09.2019*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_*
*வணக்கம்.*

**
*🛡நம் இயக்க வரலாற்றில் இணையற்ற அத்தியாயமாக 25.09.2019 முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் மாநிலம் முழுவதும் 6 முனைகளிலிருந்து தொடங்கி எழுச்சியுடன் நடைபெற்ற பள்ளிக்கல்வி பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரம் அமைந்துவிட்டது. அதன் முத்தாய்ப்பாக நேற்று (29.09.2019) கரூரில் நடைபெற்ற பிரச்சாரப் பயண நிறைவுக் கூட்டம் அமைந்தது.*

**
*🛡மாநிலம் முழுவதுமிருந்து வருகை தந்திருந்த ஆசிரியப் பெருமக்களால், குறிப்பாக பெண்ணாசிரிய சகோதரிகளால் கரூர் மாநகரம் குலுங்கியது என்றே கூறலாம். கூட்டம் நடைபெற்ற 80 அடி சாலை நிரம்பி வழிந்தது.*

**
*🛡மேடையிலிருந்து பார்த்தபோது கண்ணுக்கெட்டிய தூரம் வரை ஆசிரியர்களின் கூட்டம் ஆர்ப்பரித்து நின்ற காட்சி நம் இயக்கத்தின் பெருவலிமைக்கும் சான்றாக அமைந்தது.*

**
*🛡குறுகிய கால அவகாசத்தில் இப்படியொரு கூட்டத்தை அணிதிரட்ட விடுமுறை நாட்களில் நம் இயக்கப் பொறுப்பாளர்கள் மேற்கொண்ட உழைப்பு ஈடு இணையற்றது. மாநிலம் முழுவதுமிருந்து கூட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்களின் உணர்வுபூர்வமான பங்கேற்பு புதிய உத்வேகத்தையும், ஊக்கத்தையும் தருவதாக அமைந்திருந்தது.*

**
*🛡ஐந்து நாட்கள் மாநிலம் முழுவதும் நாம் நடத்திய பிரச்சார இயக்கத்தின் மூலம் 400-க்கும் மேற்பட்ட பிரச்சாரக் கூட்டங்களின் மூலமாக பல லட்சக்கணக்கான மக்களிடம் நம் கருத்துக்களைக் கொண்டு சேர்த்துள்ளோம்.*

**
*🛡தேசியக்கல்விக் கொள்கை வரைவு அறிக்கை - 2019 தொடர்பாக சாதாரண மக்களிடம், ஆசிரியர்களிடம், படித்தவர்களிடம், பாமரர்களிடம் கூட நம் பிரச்சார இயக்கம் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றால் அது மிகையாகாது.*

**
*🛡இது போன்றதொரு பிரச்சார இயக்கத்தை தமிழகத்தில் மட்டுமல்ல இந்தியாவிலேயே எந்த ஒரு அமைப்பும் நடத்தவில்லை. மற்ற அமைப்புகளுக்கு வழிகாட்டியாக நம் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.*

**
*🛡கிட்டத்தட்ட மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலும், அனைத்து வட்டார, நகரக் கிளைகளிலும் நம் பிரச்சார இயக்கத்தை நடத்தியுள்ளோம். ஒரு தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பொதுப் பிரச்சனையில் நம் இயக்கம் நடத்திய இந்நிகழ்வு என்றென்றும் இயக்க வரலாற்றில் நிலைத்து நிற்கும்.*

**
*🛡பிரச்சாரக் கூட்டங்களுக்குச் சென்றபோது ஆங்காங்கே நம் இயக்கத் தோழர்கள், குறிப்பாக ஆசிரிய சகோதரிகள் எல்லையிலிருந்து இயக்கக் கொடி பட்டொளி வீசிப் பறக்க இருசக்கர வாகனப் பேரணி நடத்தி பிரச்சாரக் குழுவை வரவேற்று அழைத்துச் சென்ற நிகழ்வு என்றென்றும் மறக்க இயலாதது. அது மட்டுமல்ல பிரச்சாரக் குழுவிற்கு ஆங்காங்கே உணவு, தங்குமிட ஏற்பாடு உள்ளிட்டவற்றை ஏற்பாடு செய்து உபசரித்ததும் நெகிழ வைத்த நிகழ்வுகளாகும்.*

**
*🛡தேசத்தின் எதிர்காலக் கல்வி நலனுக்கான ஒரு கள நிகழ்வை மிகவும் வெற்றிகரமாக்கிட அரும்பாடுபட்ட நம் பேரியக்கத்தின் மாநில, மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளின் பெருமைக்குரிய நிர்வாகிகளுக்கும், நம் இயக்கத்தின் நாடி நரம்புகளாகவும், ரத்த நாளங்களாகவும் விளங்கிக் கொண்டிருக்கும் இயக்கத்தின் இணையற்ற உறுப்பினர்களுக்கும், பிரச்சாரம் செய்த அனைத்து இடங்களிலும் நமக்குப் பேராதரவு தந்த பொதுமக்கள், ஊடக நண்பர்கள் மற்றும் காவல் துறையினருக்கும் மாநில மையம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளை உரித்தாக்குகிறது.*

**
*🛡அதே போன்று கரூர் நிறைவுப் பிரச்சாரக் கூட்டத்தை வெற்றிகரமாக்கிட கரூர் மாவட்ட இயக்கத் தோழர்களின் உழைப்பு மகத்தானது. மறக்கவே முடியாதது. இமைப்பொழுதும் சோராமல் எடுத்த முடிவை செயல்படுத்த கரூர் மாவட்டத் தோழர்கள் மேற்கொண்ட தன்னிகரற்ற உழைப்பு இயக்க வரலாற்றில் என்றென்றும் நிலைத்து நிற்கும். கரூர் மாவட்ட இயக்கத் தோழர்களுக்கு மாநில மையம் புரட்சிகரமான வாழ்த்துக்களையும், வணக்கத்தையும் தெரிவித்து மகிழ்கிறது.*

_'அக்கினிக் குஞ்சொன்று கண்டேன் - அதை_
_ஆங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்!_
_வெந்து தணிந்தது காடு"_

**
*🛡என்ற மகாகவியின் பாடல் வரிகளுக்கு வடிவமாக தேசியக் கல்விக் கொள்கை தொடர்பாக, அரசுப் பள்ளிகளைப் பாதுகாப்பது தொடர்பாக TNPTF என்ற அக்கினிக் குஞ்சு பற்ற வைத்த நெருப்பு பற்றிப் பரவட்டும்.*

சென்னை.
29.09.2019

_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
*பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் - மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் - செய்தி துளிகள், காணொளிகள் மற்றும் புகைப்படத் தொகுப்புகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/2019_30.html

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.*

*🎙தேசியக் கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள்: 100, 101, 145, 164 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் 25.09.2019; முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம்  (29.09.2019) ஞாயிற்றுக்கிழமை கரூரில் 80 அடி சாலையில் நடைபெற்றது.*

*🥳 _புதுகை பூபாளம் கலைக்குழுவினரின்_ புதியதேசிய கல்விக்கொள்கை வரைவு அறிக்கையினை திரும்பப்பெற வலியுறுத்தியும், அரசுப் பள்ளிகளைக் காக்க வலியுறுத்தி நையாண்டி நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது🥳*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2534794256582404&id=100001555646626

*💓அதனைத்தொடர்ந்து திருப்பூர் - முத்தூர், தமிழாலயம் கலைக்குழுவின் (அரசுப்பள்ளி மாணவர்களின்) அசத்தலான *_கொக்கலிக்கட்டை ஆட்டம்_ நிகழ்ச்சி நடைபெற்றது.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/lsM-mqO3siM
*🎙கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை தலைமை ஏற்று நடத்தி தலைமையுரை நிகழ்த்தினார்.*

*🎙STFI பொதுக்குழு உறுப்பினர் _தோழர்.ச. மோசஸ்_ முன்னிலை வகித்து எழுச்சியுரை ஆற்றினார்*

*🎙துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா. கணேசன்_ அவர்கள் சிறப்பானதொரு வரவேற்புரையாற்றினர்.*

*🎙பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் _தோழர்.ச. மயில்_ அவர்கள் விளக்கவுரை ஆற்றினார்.*
👇👇👇👇👇👇👇👇
*_'யார் போராளி?' போராளி யாரெனக் காண கரூருக்கு வந்து பாரு. . .!_*
https://m.facebook.com/story.php?story_fbid=2535097503218746&id=100001555646626

*🎙கூட்டத்தில் கல்வியாளர்கள் பேராசிரியர் _தோழர்.அருணன்_ மற்றும் _தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு_ ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.*

*🎙 _தோழர்.அருணன்_ அவர்களின் சிறப்புரை காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535061723222324&id=100001555646626

*🎙 _தோழர்.பிரின்ஸ் கஜேந்திரபாபு_ அவர்களின் சிறப்புரை காணொளி*
👇👇👇👇👇👇👇👇
https://m.facebook.com/story.php?story_fbid=2535124653216031&id=100001555646626

*🎙மேலும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் _தோழர்.K.P.O. சுரேஷ்,_ தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் _தோழர்.எஸ். பக்தவச்சலம்,_ தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் _தோழர்.அ. சங்கர்,_ தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்  _தோழர்.P.பேட்ரிக் ரெய்மாண்ட்,_ தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் _தோழர்.சிவஸ்ரீரமேஷ்,_ தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் _தோழர்.மா. ரவிச்சந்திரன்,_ தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் _தோழர்.செ. நா. ஜனார்த்தனன்_ ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.*

*🌹சிறப்பு அழைப்பாளர்கள், மாநில நிர்வாகிகள், தோழமைச் சங்க நிர்வாகிகள் மற்றும் கரூர் மாவட்ட தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.*

*🎁கரூர் மாவட்ட அமைப்பின் சார்பாக சிறப்பு அழைப்பாளர்களுக்கும், மாநில நிர்வாகிகளுக்கும் நினைவு பரிசனை வழங்கினார்கள்.*

*🎙நிரைவாக மாநிலப் பொருளாளர் _தோழர்.க. ஜோதிபாபு_ நன்றி கூறினார்.*

🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
*🎙பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டச் செயலாளர் _ஜ. ஜெயராஜ்,_ மாவட்டத்தலைவர் _பெ.காளிதாஸ்,_ மாவட்டப் பொருளாளர் _வீ. மோகன்_ மற்றும் மாவட்ட நிர்வாகிகள் _து. சின்னச்சாமி,_ _த. சகிலா,_ _த. செந்தில்குமார்._ _வெ. காமராஜ்,_ _ஆ. தமிழரசி,_ _க. ஜான்சன்_ உள்ளிட்டோருக்கு மனமார்ந்த நன்றியினை _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝
*கூட்டத்திற்கு  மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் திரட்டி வந்த மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகள் மற்றும் இயக்க தூண்களாக விளங்கும் உறுப்பினர்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏🤝🙏🤝🙏🤝🙏🤝

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм








 































*தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் - மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/2019.html

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.*

*🎙தேசியக் கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள்: 100, 101, 145, 164 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் 25.09.2019; முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் இன்று (29.09.2019) கரூரில் 80 அடி சாலையில் நடைபெற்றது.*

*🎙கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை தலைமை தாங்கினார். ளுவுகுஐ பொதுக்குழு உறுப்பினர் ச. மோசஸ் முன்னிலை வகித்தார், துணைப்பொதுச்செயலாளர் தா. கணேசன் வரவேற்புரையாற்றினர். பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் ச. மயில் பேசினார்.*

*🎙கூட்டத்தில் கல்வியாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.*

*🎙மேலும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் K.P.O. சுரேஷ், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்  P. பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவஸ்ரீரமேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் மா. ரவிச்சந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ. நா. ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.*

*🎙கூட்டத்தில் பேசியவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை - 2019 ல் தெரிவிக்கப்பட்டுள்ள 3, 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு 9, 10, 11, 12 வகுப்புகளுக்குப் பருவத்தேர்வு என்பது நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைத் தடுப்பதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவரும் நிலையில் அதுபற்றி தேசியக் கல்விக் கொள்கையில் எதுவும் இல்லாதது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிகக்கடுமையாகப் பாதிக்கும்.*

*🎙மும்மொழிக் கொள்கை குழந்தைகளின் கல்விச்சுமையை அதிகரிக்கும், 3 வயதில் முறையான கல்வி என்பது குழந்தைப் பருவத்தைப் பறிக்கும் செயல். ஒவ்வொரு நிலையிலும் நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு, பொதுத்தேர்வு, பருவத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும், 20 மாணவர்களுக்குக் கீழுள்ள பள்ளிகளை மூடப்படும் என்பது ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கும், பள்ளிக்கல்வி உயர்கல்வி ஆராய்ச்சிக்கல்வி என அனைத்து நிலைக் கல்வியும் தனியார் மயமாக்கப்படுவதன் மூலம் கல்வி வணிகமயமாக்கப்படும் ஆகிய கருத்துக்களை வலியுறுத்திப் பேசியதோடு மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். நிரைவாக மாநிலப் பொருளாளர் க. ஜோதிபாபு நன்றி கூறினார்.*

*🎙பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டச் செயலாளர் ஜ. ஜெயராஜ், மாவட்டத்தலைவர் பெ.காளிதாஸ், மாவட்டப் பொருளாளர் வீ. மோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் து. சின்னச்சாமி, த. சகிலா, த. செந்தில்குமார். வெ. காமராஜ், ஆ. தமிழரசி, க. ஜான்சன் உள்ளிட்டோர் செய்திருந்தினர். கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.*
     
🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday 29 September 2019

*TNPTF - கரூர் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம் (GOOGLE LOCATION)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


See my real-time location on Maps: https://maps.app.goo.gl/GpdRjx7fiW4Qr9Sp8


*📲தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்றுவரும் பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சார நிறைவு பொதுக்கூட்டம்  (கரூர் 80 அடிசாலை) நடைபெறும் இடம்.*


*📲மேற்கண்ட link ஐ கிளிக் செய்து பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தினை தெரிந்துகொள்ளலாம்.*


*📲Link ஐ கிளிக் செய்த பின் அந்த பக்கத்தில் Direction என்று இருக்கும், அதனை கிளிக் செய்தால் நீங்கள் இருக்கும் இடத்திலிருந்து இந்த இடத்திற்கு செல்ல வழி காண்பிக்கும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*கரூர் பொதுக்கூட்ட இடத்திற்கு பயண வழி...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_29.html

*🚌பேருந்தில் வருபவர்கள் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 500 மீ தொலைவில் உள்ளது.*

*🚃இரயில் மூலம் வருபவர்கள் கரூர் ஜங்சன்க்கு வெளியே வந்தால் வரக்கூடிய அனைத்து பேருந்துகளும் (டவுன்பஸ், மினி பஸ்) கரூர் பேருந்து நிலையம் வரும். அதில் ஏறி பேருந்து நிலையம் வந்துவிடவும்.*

*_🚗வாகனம் மூலம் வருபவர்கள் கவனத்திற்கு..._*

*🚗பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தில் இறக்கிவிட்டு _தங்களது வாகனங்களை கரூர் to வேலூர் மெயின் ரோட்டில், சர்ச் கார்னர் அருகில் உள்ள CSI பள்ளி மைதானத்தில் நிறுத்திக் கொள்ளவும்._ இந்த இடம் கரூர் பேருந்து நிலையத்தில் இருந்து 1 கி.மீ. தொலைவில் உள்ளது.*

📱மேலும் தொடர்புக்கு...

*தோழர்.ஜெயராஜ்*- மாவட்ட செயலாளர்- 9791888455

*தோழர்.டேனியல்ராஜா*- கரூர் வட்டார செயலாளர்-9994631013,

*தோழர்.அருள்குழந்தை*- கரூர் வட்டார தலைவர்-8012251985,

*தோழர்.சீனிவாசன்*- கரூர் வட்டார பொருளாளர்-9791410572,

*தோழர்.சின்னுசாமி*- மாவட்ட துணைத்தலைவர்-9344742050.

*தோழர்.மோகன்*- மாவட்ட பொருளாளர்-8825655855.

🤝தோழமையுடன்,

*_ஜ.ஜெயராஜ்,_*
*மாவட்ட செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*
*கரூர் மாவட்டம்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 28 September 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்று வரும் பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - செய்தி துளிகள் & YOUTUBE VIDEO LINKS*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/youtube-video-links.html

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்று வரும் பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் நான்காம் நாளை சிறப்பாகவும் வெற்றிகரமாகவும் நிறைவு செய்துள்ளது.*

*🚌இறுதி கட்ட பிரச்சாரம் மற்றும் மாபெரும் நிறைவு பிரச்சாரம் நாளை நடைபெற உள்ளது.*

*🚌நாளை (29.09.2019) நடைபெற உள்ள மாபெரும் நிறைவு பொதுக்கூட்டத்தினை சிறப்படையச் செய்வது ஒவ்வொரு இயக்க தோழர்களின் கடமை எனவே விரைந்து அணிதிரள்வோம் கரூர் நகரை நோக்கி...*

*_இன்றைய நிகழ்ச்சிகள் ஒரு பார்வை_*

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - ஊத்துக்குளி வட்டாரத்தில் மேனாள் பொதுச்செயலாளர் _தோழர்.நடேசன்_ அவர்கள் பிரச்சார சிறப்புரை நிகழ்த்தினார்*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/UsAC8LgEDHw

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - சாத்தூர் பஸ் நிலையத்தில் கல்வியாளர் _பிரின்ஸ் கஜேந்திர பாபு_ அவர்களின் சிறப்புரை*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/wqp5UdjDRuw

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் -  பிரச்சார பனத்தின் செய்தி தொகுப்பு தமிழன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்டது.*
👇👇👇👇👇👇👇👇
https://youtu.be/4abiSBDWNVg

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகனப் பிரச்சாரம் - திருவிடைமருதூரில் நடைப்பெற்ற பிரச்சார பயன வாகனத்தினை வரவேற்ற நிகழ்வு பிரம்மிப்படையச் செய்தது - வரவேற்பு நிகழ்ச்சி காணொளி வடிவில்.*
https://youtu.be/sFLtl6l2c-E

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*_TNPTF அயனின்_ பிறந்தநாள் வாழ்த்து செய்தி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/tnptf_28.html

*🚌தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த தமிழகத்தின் 6 முனைகளிலிருந்து கிளம்பிய பள்ளிப் பாதுகாப்பு விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் நான்காம் நாளான இன்று வெற்றிகரமாக துவங்கியுள்ளது.*

*🚌கிழக்கு மண்டலத்தில் பிரச்சாரம் செய்ய மாநில தலைவர் _தோழர்.மணிமேகலை_ அவர்களும், மாநில செயலாளர் _தோழர்.சித்ரா_ அவர்களும் எழுச்சியுரையாற்றி வருகிறார்கள்.*

*🚌கிழக்கு மண்டலத்தில்  விழுப்புரம் மாவட்டம் சின்னசேலத்தில் துவங்கிய முதல் நாள் பிரச்சாரத்திலிருந்து இந்த ஐந்து நாள் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள விழுப்புரம் மாவட்ட செயலாளர் _தோழர்.சண்முகசாமி_ அவர்கள் பிரச்சார வாகனத்தில் சென்றுள்ளார்.*

*🎂பிரச்சாரத்தின் நான்காம் நாளான இன்று (28.09.2019) சனிக்கிழமை தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தாருடன் கொண்டாடாமல் மாணவர் நலன், சமுதாய நலன், ஆசிரியர் நலனே முக்கியம் என்று திருவாரூர் மாவட்டம் திருத்துரைப்பூண்டியில் தற்பொழுது பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.*

🎂💐🎂💐🎂💐🎂💐
*நீண்ட ஆயுளுடனும், என்றும் மனம் நிறைந்த மகிழ்ச்சியுடனும், பிரச்சார பயனம் சிறக்கட்டும் என்று கூறி _TNPTF அயன்_ சார்பாக பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறோம்.*
🎂💐🎂💐🎂💐🎂💐

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм