Sunday 31 May 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் அழைப்பிதழ் (காணொளி வழி)*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில நிர்வாகிகள் கூட்டம் அழைப்பிதழ் (காணொளி வழி)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🌟மாநில நிர்வாகிகள் கூட்டம் (காணொளி வழி) நாள்: 01.06.2020 திங்கள் முற்பகல் சரியாக 11 மணி*

*🌟நிகழ்வு: காணொளி வழி*

*🌟தலைமை: _திருமதி. மு.மணிமேகலை, மாநிலத்தலைவர்_*

_கூட்டப்பொருள்:_

*⚡1) கொரோனா - ஊரடங்கு - மாநிலம் முழுவதும் இயக்கத்தின் உதவிப்பணிகள் - ஆய்வு.*

*⚡2) DA உயர்வு மற்றும் E.L ஊதிய ரத்து, GPF,CPS வட்டி விகிதம் குறைப்பு, ஓய்வு வயது உயர்வு ஆகிய அரசாணைகளை ரத்து செய்யக்கோரிகோரிக்கை மனு அனுப்பும் போராட்டம் - ஆய்வு.*

*⚡3) இயக்கத்தின் அமைப்பு விதித் திருத்தக்குழு - பணிகள் - ஆய்வு.*

*⚡4) அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோஜியோ போராட்டங்கள் - நிலுவையில் உள்ள 17(ஆ) நடவடிக்கைகள் - ஆய்வு.*

*⚡5) இயக்கத்தின் அமைப்புத் தேர்தல்கள்.*

*⚡6) கொரோனா ஊரடங்கு - பள்ளிக்கல்வி எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு - ஆய்வு,*

*⚡7) எதிர்கால இயக்கச் செயல்பாடுகள்.*

*⚡8) ஆசிரியர் பிரச்சனைகள்.*

*⚡9) பொதுச் செயலாளர் கொணர்வென*

*🌟கூட்டம் தொடங்குவதற்கு 15 நிமிடங்களுக்கு முன்பாகவே (சரியாக 10.45 மணி) தங்கள் இல்லத்தில் காணொளிக் கூட்டத்தில் கலந்து கொள்ள தயார் நிலையில் இருந்திட அன்புடன் வேண்டுகிறேன்.*

சென்னை
31.05.2020

_🤝தோழமையுடன்,_

*_ச. மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*மதிப்புமிகு பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

*பள்ளிக்கல்வி ஆணையர் அவர்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*✉️*
*🛡️பள்ளிக்கல்வி – கோவிட் 19 நோய்த்தொற்றால் பள்ளிக்கல்வியில் ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் - பாதிப்புக்களைச் சீர் செய்யத்தக்க ஆலோசனைகள் அளித்திட நிபுணர் குழு அமைப்பு - நிபுணர் குழுவில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் கல்வியாளர்களை இணைத்திட வேண்டுதல் சார்பு.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் அனைத்துவகைப் பள்ளிகளும் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. மேலும், 2020 - 2021 ஆம் கல்வியாண்டிலும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.*

*✉️*
*🛡️இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படுவதாலும் பள்ளிக்கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், வேலைநாட்கள் குறைப்பால் கற்றல் கற்பித்தல் செயல்பாடுகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பார்வை 1 ல் கண்ட அரசாணையின் மூலம் தங்கள் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவைத் தமிழக அரசு அமைத்தது. அக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான உயர் அலுவலர்களும், UNICEF, TNeGA சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.*

*✉️*
*🛡️இந்நிலையில் பார்வை 2 ல் கண்ட அரசாணையில் நிபுணர் குழுவில் CBSE பள்ளிகள் மற்றும் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட மேலும் நான்கு பேரைத் தங்கள் பரிந்துரையின் பேரில் தமிழக அரசு சேர்த்துள்ளது.*

*✉️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்பு அவர்களுக்கு உள்ளது.*

*✉️*
*🛡️ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தகவல் தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.*

*✉️*
*🛡️எனவே, கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை, இடர்பாடுகளை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.*

*✉️*
*🛡️மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அவ்வாறு இணைப்பது நிபுணர் குழுவின் பணிகளுக்கு மேலும் வலிமை சேர்ப்பதாகவும், நிபுணர் குழுவின் ஆலோசனைகள் முழுமை பெறுவதற்கும் உதவியாக அமையும். எனவே, எங்களது அமைப்பின் வேண்டுகோளை தாங்கள் அரசுக்கு பரிந்துரை செய்து நிறைவேற்றிட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் வேண்டுகிறோம்.*
                                             
_🤝இப்படிக்கு,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 30 May 2020

*கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் / கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட / தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு / குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

*கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் / கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட / தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு / குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் / தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண்: 08/2020  நாள்: 30.05.2020*

*🛡️கொரோனாவால் தொடர்ந்து பள்ளிகள் மூடல் கற்றல் - கற்பித்தல் தொடர்பாக ஆலோசனை வழங்கிட தமிழக அரசு நிபுணர் குழு அமைப்பு குழுவில் அரசுப்பள்ளி ஆசிரியர்களையும் இணைக்க வேண்டும் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கோரிக்கை.*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச்செயலாளர் ச.மயில் மாநில அமைப்பின் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்று காரணமாக தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகள் 16.03.2020 முதல் காலவரையின்றி மூடப்பட்டுள்ளன. இதனால் 2019 - 2020 ஆம் கல்வியாண்டில் வழக்கமான பள்ளி வேலை நாட்களில் 30 நாட்களுக்கு மேல் பள்ளிகள் இயங்காத நிலை ஏற்பட்டது. இதனால் 1 முதல் 12 வகுப்புக்கள் வரை பயிலும் மாணவர்களின் கல்விச் சூழல் வெகுவாகப் பாதிக்கப்பட்டது. மேலும் 1 முதல் 9 வகுப்புக்கள் வரை நடத்த வேண்டிய மூன்றாம் பருவத்தேர்வையும் நடத்த இயலாத நிலை ஏற்பட்டது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 2020 - 2021 ஆம் கல்வியாண்டு துவங்கவுள்ள நிலையிலும், கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் குறித்த காலத்தில் பள்ளிகளைத் திறக்க இயலாத சூழல் தற்போது நிலவிக் கொண்டிருக்கிறது.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் முன்கூட்டியே மூடப்பட்டதாலும், 2020 - 21 ஆம் கல்வியாண்டில் பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்படும் சூழல் உருவாகியுள்ளதாலும் ஏற்பட்டுள்ள நிலைமையைக் கருத்தில் கொண்டு, இன்றைய நிலையில் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், கற்றல் கற்பித்தல் செயல்முறைகளில் மேற்கொள்ள வேண்டிய யுக்திகள், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கான வழிவகைகள், அதற்காகப் பயன்படுத்த வேண்டிய தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட கூறுகளைப் பற்றி ஆய்வு செய்து தமிழக அரசுக்கு ஆலோசனை வழங்குவதற்காக பள்ளிக்கல்வித்துறை ஆணையர் தலைமையில் 12 பேர் கொண்ட நிபுணர் குழுவை 12.05.2020 ல் வெளியிட்ட அரசாணையின் மூலம் தமிழக அரசு அமைத்தது.*

*⚔️*
*🛡️இக்குழுவில் அலுவல் ரீதியாக கல்வித்துறையில் இயக்குநர்கள் மட்டத்திலான அலுவலர்களும், UNICEF, TNeGA சென்னை ஐ.ஐ.டி ஆகியவற்றின் பிரதிநிதிகளும் இடம்பெற்றுள்ளனர்.*

*⚔️*
*🛡️இந்நிலையில் 29.05.2020 ல் வெளியிட்டுள்ள அரசாணையில் நிபுணர் குழுவில் தனியார் சுயநிதிப் பள்ளிகளின் தலைவர்கள் உள்ளிட்ட நான்குபேரைக் கூடுதலாக தமிழக அரசு சேர்த்துள்ளது.*

*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் தமிழகம் முழுவதும் அனைத்து வகையான பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. இதில் தனியார் சுயநிதிப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தக் கூடிய அளவிற்கு வாய்ப்புள்ளவர்களாகவும், தாங்கள் பயிலும் பள்ளிகளிலும், தங்கள் வீடுகளிலும் பல்வேறு கற்றல் வாய்ப்புக்களைக் கொண்டவர்களாகவும் உள்ளனர். தற்போதைய கல்விச் சூழலை எதிர்கொள்ளக் கூடிய வாய்ப்புகள் அவர்களுக்கு உள்ளது.*

*⚔️*
*🛡️ஆனால், குக்கிராமங்களிலெல்லாம் செயல்பாட்டுக் கொண்டிருப்பவை அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் தான். அங்கு பயிலும் மாணவர்கள் கிராமப்புற, ஏழை எளிய, பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய, நவீன தொழில்நுட்ப வசதிகள் எதுவுமில்லாதவர்கள். கல்வியறிவு அதிகம் பெறாத பெற்றோர்களின் குழந்தைகள். தற்போதைய கல்விச் சூழலை எதிர் கொள்வதற்குரிய வாய்ப்பு வசதி இல்லாதவர்கள்.*

*⚔️*
*🛡️எனவே, கோவிட்-19 ஆல் தமிழகத்தின் கல்வி மற்றும் கற்றல், கற்பித்தல் ஆகியவற்றில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளைத் தீர்க்கும் ஆலோசனைகள் என்பது அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஏழை, எளிய மாணவர்களின் கல்வி சார்ந்த, கற்றல் கற்பித்தல் சார்ந்த பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதாக அமைய வேண்டும். எனவே, அதற்கேற்றவாறு தமிழகத்தில் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் பணியாற்றும் இன்றைய கல்விச் சூழலை, களச்சூழலை நன்கு உணர்ந்த தகுதி வாய்ந்த, சிறந்த ஆசிரியர்களையும் நிபுணர் குழுவில் இணைப்பது அவசியமாகும்.*

*⚔️*
*🛡️மேலும், தமிழகத்தில் இன்றைய கல்விச்சூழலை, கல்வியில் ஏற்பட்டுள்ள இடர்பாடுகளை நன்கு ஆய்ந்து தெளிந்த தலைசிறந்த கல்வியாளர்கள் பலர் உள்ளனர். அவர்களில் பொருத்தமான சிலரையும் நிபுணர் குழுவில் இணைக்க வேண்டும். அதுவே நிபுணர் குழுவின் ஆலோசனைகள் உண்மையான பலனைத் தருவதாகவும், தமிழகத்தின் இன்றைய பள்ளிக்கல்வி எதிர்நோக்கியுள்ள சவால்களை எதிர்கொள்வதற்குரிய செயல் திட்டங்களைத் தருவதாகவும், எதிர்கால கல்வி வளர்ச்சிக்கு ஏதுவாகவும் அமையும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
         

 _இப்படிக்கு,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட மாவட்டக் கிளைகள் விரைந்து செயலாற்றிட வேண்டும் - TNPTF பொதுச் செயலாளர் சுற்றிக்கை*

*நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட மாவட்டக் கிளைகள் விரைந்து செயலாற்றிட வேண்டும் - TNPTF பொதுச் செயலாளர் சுற்றிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

_பொதுச் செயலாளரின் சுற்றிக்கை எண்: 05/2020_

_நாள்: 30.05.2020_

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡 கொரோனா ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் சூழல் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கினாலும், நடைமுறையில் முழுமையான பணிகள் அங்கு நடைபெறுவதில் பெரும் பின்னடைவு உள்ளது.*

*⚔️*
*🛡 அதற்குக் கல்வித்துறை அலுவலகங்களும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாடு முழுவதும் கல்வித்துறை அலுவலங்களில் ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த, பணி சார்ந்த உத்தரவுகள் பெறுவதில் தேக்கநிலை உள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் இவற்றைச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.*

*⚔️*
*🛡 தமிழ்நாடு முழுவதும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகளும், குற்றவியல் நடவடிக்கைகளும் இன்றளவும் நிலுவையிலேயே இருப்பது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஆறாத ரணமாகவே இருந்து கொண்டிருக்கிறது.*

*⚔️*
*🛡 இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பும் பல்வேறு தனிச்சங்கங்களும் தங்கள் தங்கள் வழியில் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தும் தமிழக அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவேயில்லை.*

*⚔️*
*🛡 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாக நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1539 ஆசிரியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திடக்கோரி 26.04.2020 அன்று பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திட 22.02.2020 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*

*⚔️*
*🛡 யாரும் எதிர்பாராத விதமாக, உலக வரலாற்றிலே இல்லாத அளவிற்கு கொரோனா கொடுந்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கால் திட்டமிட்டபடி நாம் போராட்டத்தை நடத்த இயலவில்லை.*

*⚔️*
*🛡 அரசாணை எரிப்புப் போராட்டத்தைப் பொறுத்த அளவில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் பேரிலேயே 21 மாவட்டங்களில் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வாறு காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது.*

*⚔️*
*🛡 எனவே, நீதிமன்ற உத்தரவை மதித்து 21 மாவட்டங்களின் கல்வித்துறை அலுவலர்களும் சட்டப்படி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு என்றால் அதை மின்னல் வேகத்தில் அமல்படுத்தும் கல்வித்துறை அலுவலர்கள், 17(ஆ) கொடுக்கும்போது காட்டிய வேகத்தை 17(ஆ) வை ரத்து செய்வதில் காட்டவில்லை.*

*⚔️*
*🛡 ஒரே ஒரு ஆறுதலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பவானிசாகர் ஆகிய அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகள் முற்றிலுமாக நீதிமன்ற உத்தரவின்படி எவ்வித விசாரணையுமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡 ஒரு சில மாவட்டங்களில் 17(ஆ) வை ரத்து செய்வதற்கான நடைமுறைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில மாவட்டங்களில் அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.*

*⚔️*
*🛡 இதன் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ள சிலரது ஓய்வூதியக் கருத்துக்கள் கூட உரிய அலுவலகத்திற்கு அனுப்பாத நிலையும் ஒரு சில இடங்களில் உள்ளது. காலம் நம் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. களமிறங்கிப் போராடும் கள நிகழ்வை முன்னெடுக்க இயலாத சூழலை நமது பலவீனமாக அதிகாரிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.*

*⚔️*
*🛡 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3690/E1/2020 நாள்: 06.03.2020-ல் பணி ஓய்வு பெறுபவர்கள் மீதான நிலுவையில் உள்ள 17(ஆ) நடவடிக்கைகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவையும் மதிக்காமல் தன்னிச்சையாக, பழிவாங்கும் நோக்கோடு அல்லது அலுவலகத்தில் உள்ள சில 'மேதாவிகளின்" தவறான வழிகாட்டுதலில் செயல்படும் சில அலுவலர்களின் செயல்பாட்டினால் தான் 17(ஆ) நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் இன்று வரை நிலுவையில் உள்ளது.*

*⚔️*
*🛡 எனவே, 17(ஆ) நிலுவையில் உள்ள மாவட்டக்கிளைகளின் தோழர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, போதுமான ஆவணங்களை கல்வித்துறை அலுவலர்களுக்கு வழங்கி நிலுவையில் உள்ள அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட விரைந்து செயலாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*

சென்னை.
30.05.2020.

_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday 29 May 2020

*சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா*

*சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*😷சென்னையில் தேர்வுத்துறை இயக்குனரின் உதவியாளருக்கு கொரோனா- இயக்குனர் மற்றும் அதிகாரிகள் கடும் அதிர்ச்சி.*

*😷இயக்குனர் உஷாராணி உடனடியாக அலுவலகத்தை மாற்றினார்.*

*😷தேர்வுத்துறை வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு.*

*😷பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை நடத்துவதற்கு தேர்வுத்துறையினர் அச்சம் என தகவல்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday 27 May 2020

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொதுக்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தோழர் செ.கணேசன் மாவட்டத்தலைவர் தலைமையில் தோழர் ந.பெரியசாமி மாவட்டச்செயலாளர் வரவேற்புரையுடன் தோழர் அ.ரஹீம் மாநித்துணைத்தலைவர் மற்றும் தோழர் தோ.ஜான் கிறிஸ்துராஜ் மாநி துணைத்த லைவர் ஆகியோரின் வாழ்த்துரைகளுடன் மாவட்ட வட்டா பொறுப்பாளர்களின் ஆலோசனைகளுடனும் மாவட்டப்பபொருளாளர் நன்றியுரையுடன் மாவட்டப்பொதுக்குழு சிறப்பாக நடைபெற்றது. அனைவருக்கும் நன்றி.*

_27.05.2020 இன்று நடைபெற்ற சேலம்மாவட்ட பொதுக்குழு தீர்மானங்கள்:_

*🛡️1.இன்று காணொளி காட்சி வாயிலாக இணைந்த 20 பொதுக்குழு உறுப்பினர்கள்  மாநில துணைத்தலைவர்கள் தோழர் ஜான்கிறிஸ்துராஜ்,தோழர் அ.ரஹீம்,அலைபேசி வழி இணைந்த மேனாள் பொதுச்செயலாளர் தோழர் செ.நடேசன் ஆகியோருக்கு நன்றிதெரிவிக்கப்படுகிறது.*  

*🛡️2.கொரோனா பேரிடர் காலத்தில் நிவாரப்பணிகளில் ஈடுபட்ட கொளத்தூர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கிளை,தாரமங்கலம் ஆகிய வட்டாரக்கினைகளுக்கு பாராட்டும் வாழ்த்துகளும் தெரிவிக்கப்படுகிறது.*

*🛡️3.அமைப்பு விதிகள் திருத்தம் தொடர்பான அறுவர்க்குழுவிற்கு சில பரிந்துரைகளை அனுப்புவது.*

*🛡️4.முதலமைச்சர்,தலைமைச்செயலாளர் ஆகியோருக்கு கோரிக்கை மனு அனுப்பிய வட்டாரக்ளைகளுக்கு நன்றியும் பாராட்டுக்களும்.*

*🛡️5.தேர்வுநிலை சிறப்பு நிலை பெற்றுத்தர தொடர்முயற்சி மேற்கொள்வது என முடிவாற்றப்பட்டது.*

*🛡️6) 2018-2019&  2019 +2020 உறுப்பினர் பட்டியல் 3நகல்கள் மாவட்ட செயலாளர் முகவரிக்கு 15.06.2020க்குள் தபாலில் அனுப்பக்கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*🛡️7 ) 2019-2020 ஆம் நிதியினை மாவட்டப்பொருளாளர் வங்கிக் கணக்கில்15.06.2020க்குள் செலுத்தக்கேட்டுக்கொள்ளப்பட்டது.*

*🛡️8.30.06.2020க்குள் வட்டாரக்கிளைகள் தணிக்கையை முடித்து வட்டார தேர்தல் நடத்த மாவட்ட அமைப்பிடம் தேதியை இறுதி செய்தல்.*

*🛡️9. 31.07.2020க்குள் மாவட்ட தணிக்கை முடித்தல்.*

*🛡️10). ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நவத்துறைக்கென்று ஒரு பொறுப்பாளரை (மாநில ச்செயலாளர் நிலையில்) நியமிக்க மாநில அமைப்பிடம் வலியுறுத்தல்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 26 May 2020

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்ட (காணொளி வாயிலாக) அழைப்பிதழ்*

*🎥தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்ட (காணொளி வாயிலாக) அழைப்பிதழ்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சேலம் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நாளை (27.05.2020) புதன்கிழமை முற்பகல் 11.00 மணியளவில் காணொளி வாயிலாக (ZOOM APP) நடைபெற உள்ளது.*

*🎥*
*🛡️மாவட்ட பொதுக்குழு கூட்டமானது மாவட்ட தலைவர் தோழர்.செ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

*🎥*
*🛡️மாவட்ட செயலாளர் தோழர்.ந.பெரியசாமி அவர்கள் தொகுப்புரை ஆற்ற உள்ளார்.*

*🎥*
*🛡️மாநில பொறுப்பாளர்கள் மற்றும் மாநில துணை பொறுப்பாளர்கள் சிறப்புரை ஆற்ற உள்ளார்கள்.*

*🎥*
_கூட்டப்பொருள்:_

*🛡️08.03.2020 ஈரோடு மேற்கு மண்டல ஆய்வுக்கூட்டம் - மீளாய்வு*

*🛡️19.03.2020 டெல்லி பேரணி ரத்து - தகவல்கள்*

*🛡️கொரோனா COVID-19 - நோய்தடுப்பு - நிவாரணப் பணிகள் ஆய்வு*

*🛡️DA 18 மாதங்கள் முடக்கம் - TPF, GPF, CPS வட்டி குறைப்பு - SLS நிறுத்தம் - ஓய்வு வயது 59 - முதல்வர் கோரிக்கை மணு - ஆய்வு*

*🛡️அரசாணை எரிப்பு 17(B) - ஜாக்டோ ஜியோ 17(E)/ 17(B) - தொடர்நடவடிக்கைகள்.*

*🛡️இயக்க அமைப்புவிதி திருத்தக்குழு - 31.05.2010 க்குள் கருத்து தெரிவித்தல்.*

*🛡️ஆதிதிராவிடர் நலக்கிளை - மாநில தனிப்பொறுப்பாளர் நியமனம் - கோரிக்கை*

*🛡️2019-20 உறுப்பினர் பட்டியல் - 2020 டைரி நிதி*

*🛡️வட்டார தேர்தல் - மாவட்ட தேர்தல்*

*🛡️மாவட்ட வரவு செலவு*

*🎥*
*🛡️இறுதியாக மாவட்ட பொருளாளர் தோழர்.ர.ரமேஷ் அவர்கள் நன்றியுரை ஆற்ற உள்ளார்.*


*🎥* சேலம் மாவட்ட மைய ஆலோசனைக் கூட்டம் 26.05.2020 இன்று பிற்பகல் 1.00 மணிக்கு நடைபெற்றது.*


⏳www.тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Sunday 24 May 2020

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி காட்சி மூலம்) - செய்தி துளிகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் (காணொளி காட்சி மூலம்) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*🎥*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கடலூர் மாவட்ட கிளையின் செயற்குழு கூட்டம் காணொளி காட்சி மூலம் இன்று (24-05-2020) மாலை 3.30 மணி முதல் 6.15 மணி வரை நடைபெற்றது.*

*🎥*
*🛡️மாவட்ட தலைவர் தோழர் இரா.அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில்  மாநிலத் துணைத்தலைவர்  தோழர் அ.ரஹீம் மாவட்ட செயலாளர் தோழர் ஜோ.கிறிஸ்டோபர் ஆகியோர் மாநில செயற்குழு கூட்ட நிகழ்வுகள் பற்றி விரிவாக எடுத்துரைத்தனர்.*

*🎥*
*🛡️கடலூர் மாவட்டத்தில் நிலவக்கூடிய ஆசிரியர் பிரச்சனைகள்,  பணி ஓய்வு நீட்டிப்பு, ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு சரண் செய்தல் ரத்து, பிற்கால சேமிப்பு நிதிக்கான வட்டி குறைப்பு  போன்ற நடவடிக்கைகளை ரத்து செய்ய கோருதல், அமைப்பு விதிகள் திருத்தம் பற்றிய கருத்துக்களை தெரிவித்தல், கொரோணா நிவாரணம் வழங்கியது பற்றி விரிவாக விவாதித்து தீர்மாணங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட பொருளாளர் தோழர் ப.சீனிவாசன் வரவு-செலவு வாசித்ததை ஏற்பு அளிக்கப்பட்டது.*

*🎥*
*🛡️இந்நிகழ்வில்  வட்டார செயலாளர்கள், மாவட்ட துணை பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.

*🎥*
*🛡️காணொளி காட்சி வாயிலாக மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது வித்தியாசமான அனுபவமாக இருந்தது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday 21 May 2020

*🛡️*சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-கொரோணா பேரிடர் உதவிப்பணிகளில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கல் - பொதுச்செயலாளர் அறிக்கை*

*🛡️*சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி-கொரோணா பேரிடர் உதவிப்பணிகளில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் வழங்கல் - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பொதுச்செயலாளரின் அறிக்கை எண்: 04/2020 நாள்: 21.05.2020_*

*⚔️*
*🛡️இயக்க வரலாற்றில் இடம்பிடித்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  கொரோனா பேரிடர்கால உதவிப்பணிகள்.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு முழுவதும் 34 மாவட்டங்களில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப்பணிகள்.*
 
*_''உதித்தபோதே போராட்டத்தில் குதித்த இயக்கம்"_*
  *_''போராடுவதற்கென்றே பிறந்த இயக்கம்"_*
 
*_''பேருக்கு இயங்கும் இயக்கமல்ல; போருக்கு இயங்கும் இயக்கம்"_*
  *_''அநீதிக்கெதிராக ஆர்த்தெழும் இயக்கம்"_*

*_''எதிர்த்து நிற்பது எமனாக இருந்தாலும் நெஞ்சுறுதியோடு  இறுதிவரை போராடும் இயக்கம்"_*
 
*_''இயக்கச் செயல்பாடுகளில் ஈடு இணையற்ற இயக்கம்"_*
  *_''கூட்டுப்போராட்டங்களில் நம்பகத்தன்மை வாய்ந்த இயக்கம்"_*
 
*_''தனிச்சங்கப் போராட்டங்களில் தன்னிகரற்ற இயக்கம்"_*
 
*_''சாதி என்னும் சதிக்கு இரையாகாத இயக்கம்"_*

*_''எந்தக் கட்சி ஆட்சியில் இருந்தாலும், சமரசமின்றிப் போராடும் இயக்கம்"_*

  *_''எந்தத் தனி நபரின் செல்வாக்கிலும், சொல்வாக்கிலும் இயங்காத இயக்கம்"_*

*🛡️இவ்வாறு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்குப் பெருமை சேர்க்கும் புகழாரங்கள் ஏராளம் உண்டு. இவைகளெல்லாம் வெற்று வார்த்தைகள் அல்ல; தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கடந்தகால செயல்பாடுகளுக்குக் கட்டியங்கூறும் வைர வரிகள்.*

*⚔️*
*🛡️இப்படி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியைப் பற்றி நடுநிலையாளர்களும், மாற்றுச்சங்க நண்பர்களும் புகழ்ந்தாலும், அத்தனை பெருமைகளுக்கும் முத்தாய்ப்பாக கொரோனா பேரிடர் உதவிப்பணிகளில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற இயக்கச் செயல்பாடுகள் தனி முத்திரை பதித்துவிட்டன.*

_''போராடுவதற்கென்றே பிறந்த இயக்கம்"_ என்னும் வார்த்தைகள், கொரோனா பேரிடர்கால உதவிப்பணிகளுக்குப் பின்பு _''உதவி செய்வதற்கென்றே உருவான இயக்கம்"_ என்னும் பெருமையை இயக்கத்திற்குப் பெற்றுத்தந்து விட்டது.*

*⚔️*
*🛡️ _''கொரோனா நோய்த்தொற்றுத் தடுப்பு மற்றும் உதவிப்பணிகளில் மாநிலம் முழுவதும் ஈடுபடுங்கள்"_ என்று மாநில அமைப்பு அறைகூவல் விடுத்தவுடன், அதைச் சிரமேற்கொண்டு கண்துஞ்சாது, இமைப்பொழுதும் சோராது, இரவு பகலாக களத்திலே இறங்கிப் பணியாற்றிய பல்லாயிரக்கணக்கான இயக்கத் தோழர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.*

*⚔️*
*🛡️கடந்த 45 நாட்களாக தமிழ்நாடு முழுவதும் 34 வருவாய் மாவட்டங்களில், 300க்கும் மேற்பட்ட ஒன்றியங்களில், ஆயிரக்கணக்கான இடங்களில், லட்சக்கணக்கான மக்களுக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதவிக்கரங்கள் நீண்டுள்ளன.*

*⚔️*
*🛡️20.05.2020 வரை தமிழ்நாடு முழுவதும் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் இயக்கத்தின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் மூலம் வழங்கப்பட்டுள்ளன. இதுபோக இயக்க உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் தாங்கள் பணியாற்றும் ஊர்களில் வறிய மக்களுக்கு தனித்தனியே வழங்கியுள்ள உதவிப்பணிகள் ஏராளம். இன்னும் இயக்க கிளை அமைப்புக்களின் உதவிப்பணிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.*

*⚔️*
*🛡️ _''இதன் மூலம் தமிழ்நாட்டில் ஒரு பேரிடர் கால மீட்புப்பணியில் 2 கோடியே 8 லட்சம் ரூபாய் அளவிற்கு உதவிப்பணிகளில் ஈடுபட்ட முதல் ஆசிரியர் இயக்கம் என்ற பெருமையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ளது"_ என்பதை மாநில அமைப்பு பெருமையோடு தெரிவித்துக் கொள்கிறது. எவரிடமும் பாராட்டுப் பத்திரம் பெறுவதற்காக இச்செய்தி பதிவு செய்யப்படவில்லை. இச்செயல் மற்றவர்களுக்கு உந்து சக்தியாக விளங்கட்டும் என்பதற்காகவே பதிவு செய்யப்படுகிறது.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கொரோனா பேரிடர் உதவிப்பணிகளைத் துவக்கிய பின்புதான் அதன்பால் ஈர்க்கப்பட்டு ஒரு சில ஆசிரியர் அமைப்புக்களும், பல்வேறு ஊழியர் அமைப்புக்களும் உதவிப்பணிகளில் ஈடுபட்டன. மற்ற அமைப்புக்கள் உதவிப்பணிகளில் ஈடுபடுவதற்கே தூண்டுகோலாக இருந்த இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

*⚔️*
*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தாரக மந்திரமான _''ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமுதாய நலன்"_ என்பதில் சமுதாய நலனை உயர்த்திப் பிடிக்க வேண்டிய காலமிது. இக்கால கட்டத்தில் அச்செயலை இயக்கம் மிகச்சிறப்பாய்ச் செய்துள்ளது.*    

*⚔️*
*🛡️இயக்க வரலாற்றில் _''வீரஞ்செறிந்த இயக்கம்"_ என்று அடிக்கடி சுட்டிக்காட்டப்படும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி _''ஈரஞ்செறிந்த இயக்கம்"_ என்றும் தற்போது வரலாற்றில் பதிவாகியிருக்கிறது.*

_''இயக்கக் கடமைகளை இடையறாது தொடர்வோம்!"_

_"இயக்கச் செயல்பாடுகளுக்கு இலக்கணமாய்த் திகழ்வோம்"_
                                                  _🤝தோழமையுடன்,_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 17 May 2020

*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அறிவிப்பு - மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு.*

*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அறிவிப்பு - மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு.*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 07/2020  நாள்: 17.05.2020*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு அறிவிப்பு மாணவர்களின் நலன்களுக்கு எதிரானது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி எதிர்ப்பு.*

*⚔️*
*🛡️தமிழ்நாட்டில் ஜூன் 1 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ள பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை மாணவர்களின் நலன் கருதி தள்ளிவைக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசைக் கோருகிறது.*

_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை பின்வருமாறு:_

*⚔️*
*🛡️கொரோனா நோய்த்தொற்றால் கடந்த 53 நாட்களாக நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாத காலமாக தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡️இதனால் 2019 - 20 ஆம் கல்வியாண்டில் கடந்த ஏப்ரல் 1 ம் தேதி தொடங்கி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்த இயலாத நிலை ஏற்பட்டது. அதேபோன்று தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றின் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன.*

*⚔️*
*🛡️கொரோனா ஊரடங்கால் மக்கள் வேலையிழந்து, வருவாய் இழந்து, வாழ்வாதாரம் இழந்து அன்றாட வாழ்க்கையை நடத்துவதற்கே நாள்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர். லட்சக்கணக்கான மக்கள் வாழ வழியின்றி, தொழிலின்றி, வேறு வழியில்லாமல் குடியிருந்து வந்த இடத்திலிருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.*

*⚔️*
*🛡️இந்நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை வரும் ஜூன் 1 முதல் நடத்தப் போவதாக அறிவித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் கூட நிறுத்தி வைக்கப்பட்டுள்ள தேர்வுகளை நடத்துவது தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை. மத்திய அரசும் நிறுத்தி வைத்துள்ள இடைநிலைக் கல்வி வாரியத்தின் (CBSE) தேர்வுகள் தொடர்பாக இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடவில்லை.*

*⚔️*
*🛡️இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்றின் பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வரும் நிலையில் தமிழக அரசு பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது என்பது மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், கல்வியாளர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.*

*⚔️*
*🛡️தமிழகத்தில் ஊரடங்கு இன்னும் தொடரும் நிலையில், பொதுப்போக்குவரத்து இன்னும் தொடங்காத நிலையில், ஊரடங்கால் வெளியூர்களுக்குச் சென்ற மாணவர்கள் ஊர் திரும்ப இயலாத நிலையில், பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வை நடத்துவது என்பது முற்றிலும் பொருத்தமற்றதாகும். அதிலும் 144 தடை உத்தரவு நடைமுறையில் உள்ள நிலையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் ஒரே இடத்தில் கூடி தேர்வு எழுதுவது என்பதும் சரியானதல்ல. கொடிய நோய்த்தொற்றை விலைகொடுத்து வாங்குவதாகவும் அது அமைந்துவிடும்.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வு எழுதும் சுமார் 12 லட்சம் மாணவர்களில் 80% க்கும் மேற்பட்டோர் ஊரடங்கால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் பெற்றோர்களின் குழந்தைகள். வறுமையின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் அந்தக் குழந்தைகள் தற்போது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் மனநிலையில் இல்லாத நிலையில் அவர்கள் மீது திடீரென பொதுத்தேர்வைத் திணிப்பது என்பது எவ்விதத்திலும் ஏற்புடையதல்ல.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு என்பது ஒரு மாணவன் தனது வாழ்நாளில் சந்திக்கும் முதல் அரசு பொதுத்தேர்வாகும். பொதுவாக ஆண்டுதோறும் பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்கு முன்பு ஜனவரி மாதம் தொடங்கி மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வு, இரண்டாம் திருப்புதல் தேர்வு, இறுதித் திருப்புதல் தேர்வு எனப் பல கட்டத் தேர்வுகள் நடத்தி அவர்களை பொதுத் தேர்வை எதிர்கொள்ளும் மன நிலைக்கு கொண்டுவருவது வழக்கம்.*

*⚔️*
*🛡️ஆனால், தற்போது கொரோனாவின் பாதிப்பு ஒரு பக்கம், அதே நேரத்தில் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களைப் பார்த்தே இரண்டு மாதங்கள் ஆகிவிட்ட சூழல் ஒரு பக்கம், இத்தகு இக்கட்டான சூழலில் மாணவர்களது மனநிலை என்பது பொதுத்தேர்வை எதிர்கொள்ளும் நிலையில் இல்லை என்பதைத் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும்.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர்கள் கல்வியறிவு அதிகம் இல்லாதவர்கள். தங்கள் குழந்தைகள் தேர்வு எழுதுவதற்கு கல்வி ரீதியாக எவ்விதத்திலும் உதவ இயலாத நிலையில் உள்ளவர்கள். எனவே, பெரும்பாலான பத்தாம் வகுப்பு மாணவர்கள் தாங்கள் ஏற்கனவே படித்த பாடங்களை மீண்டும் நினைவூட்டுவதற்குக் கூட வாய்ப்பற்ற நிலையில் உள்ளனர்.*

*⚔️*
*🛡️எனவே, தமிழக அரசு ஊரடங்கு முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்பட்டு, பொதுப் போக்குவரத்து தொடங்கிய பின்பு, கொரோனா  நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு, மாணவர்கள் தங்கள் பள்ளிகளுக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களின் கட்டுப்பாட்டில் குறைந்தது 15 நாட்களாவது மீள் பயிற்சி பெற்ற பின்பே பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_மாநில பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday 14 May 2020

*பத்தாம்வகுப்பு தேர்வுகள் - உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது - TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன்*

*பத்தாம்வகுப்பு தேர்வுகள் - உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது - TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡பத்தாம்வகுப்பு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு உளவியல் அனுகுமுறையினை கையாண்டு தேர்வு நடத்துவது சிறந்தது என TNPTF மேனாள் பொதுச்செயலாளர் தோழர்.நடேசன் அவர்கள் தமிழக அரசுக்கு முகநூல் வாயிலாக கருத்தினை பதிவிட்டுள்ளார்*

**
*🛡ஜூன் 1 முதல் ஜூன் 12 முடிய 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவித்துள்ள பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அதற்கான பொதுத்தேர்வுஅட்ட வணை யையும் வெளியிட்டுள்ளார்.*

**
*🛡கொரோனா வைரஸ்தொற்று காரணமாக மார்ச் 24 முதல் இன்றுவரை ஊரடங்குச் இருந்துவந்த சூழ்நிலையில், மூன்றாம்கட்ட ஊரடங்கில் சில தளர்வுகளை அறிவித்தபின் சென்னை உள்ளிட்ட சில மாவட்டங்களில் கொரோனா தொற்று முன்பைவிட தீவிரமாக பரவிவரும் சூழலில் ஜூன் 1 முதல் பொதுத்தேர்வு என்பது பொருத்தமாக இல்லை.*

**
*🛡அது மட்டுமல்ல, கடந்த இருமாதங்களாக பள்ளிச்சூழலே இல்லாமல்  இருக்கும் மாணவர் களுக்கு பள்ளிச்சூழலை ஏற்படுத்தி இயல்பான நிலைக்குக்கொண்டு வந்து, அதன்பின் பொதுத்தேர்வு நடத்துவதே உளவியல் அணுகுமுறை.*

**
*🛡இதைக் கணக்கில்கொண்டு, கொரோனா பரவல் இல்லாத நிலை உருவானதும் இரண்டுவாரங்கள் பள்ளியை நடத்தி மாணவர்களை இயல்புநிலைக்குக் கொண்டுவந்து தேர்வுகளை தமிழக அரசு நடத்திட வேண்டும்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 12 May 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி விழுப்புரம் மாவட்ட செயற்குழு கூட்டம் (காணொளி வாயிலாக) இன்று 12.05.2020 சிறப்பாக நடைபெற்றது.*

**
*🛡இன்றைய செயற்குழு கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் _தோழர்.குணசேகரன்_ அவர்கள் தலைமையேற்று நடத்தினார்.*

**
*🛡மாநில துணைத்தலைவர் _தோழர்.ரஹும்_ அவர்களும்,*

*மாநில துணை செயலாளர் _தோழர்.சித்ரா_ அவர்களும் முன்னிலை வகித்து சிறப்புரை நிகழ்த்தினார்கள்.*

**
*🛡மாவட்ட செயலாளர் _தோழர்.சண்முகசாமி_ அவர்கள் வரப்புரை நிகழ்த்தினார்.*

*🛡கூட்டத்தில் மாவட்ட தலைவர் ஒப்புதலுடனும் செயற்குழு முடிவின் அடிப்படையில் பல தீர்மானங்கள் இயற்றப்பட்டது.*

**
*🛡கூட்டத்தில் மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் வட்டார பொறுப்பாளர்கள் கலந்துகொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துகொண்டார்கள்.*

**
*🛡இறுதியாக மாவட்ட பொருளாளர் _தோழர்.தண்டபாணி_ அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 9 May 2020

*🎥TNPTF - காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் - செய்தி துளிகள்*

*🎥TNPTF - காணொலி காட்சி வாயிலாக திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் - செய்தி துளிகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
_கூட்ட முடிவுகள்:_
*🎥 _தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் திருநெல்வேலி மாவட்ட செயற்குழு கூட்டம் காணொலி காட்சி வாயிலாக_ இன்று நடைபெற்றது.*
*⚡இக்கூட்டத்திற்கு _மாவட்ட தலைவர் பி.ராஜ்குமார்_ தலைமை வகித்தார்.*
*_மாநில செயலாளர் சோ.முருகேசன்_ மற்றும் _மாநில செயற்குழு உறுப்பினர் மு.பிரமநாயகம்_ ஆகியோர் முன்னிலை வகித்தனர்.*
*_மாநில தலைவர்_ மூ.மணிமேகலை மற்றும் _மாநில துணைத்தலைவர்_ கன்னியாகுமரி எ.அக்சீலியா மெர்லின் உஷா ஆகியோர் _மேலிட பார்வையாளராக_ கலந்து கொண்டார்.*
*_மாவட்ட செயலாளர்_  செ.பால்ராஜ் அனைவரையும் _வரவேற்றுப் பேசியதுடன் 04.05.2020 இல் காணொலி காட்சி மூலம் நடைபெற்ற மாநில செயற்குழு முடிவுகளையும்_ விளக்கிக் கூறினார்.*
*_மாவட்ட பொருளாளர்_ சங்கை. ஞா.பால்ராஜ் நிறைவாக _நன்றி_ கூறினார்.*
*⚡இக்கூட்டத்தில் _மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்,மாவட்ட துணைப் பொறுப்பாளர்கள் உள்ளீட்ட அனைத்து வட்டார செயலாளர்களும்_ கலந்து கொண்டனர்.*
_கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._
*🛡01.கொரோனா நோய் தொற்றின் காரணமாக கடந்த 25.03.2020 முதல் நடைமுறையில் உள்ள _ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் நலிவுற்ற_ கரகாட்ட கலைஞர்கள், தையல் கலைஞர்கள், மாற்றுதிறனாளிகள்,விதவைகள் மற்றும் ஏழை எளிய மக்களுக்கு நமது _திருநெல்வேலி மாவட்ட கிளை மாவட்ட ஆட்சியரிடம் உரிய அனுமதிபெற்று_ இரண்டு லட்சம் ரூபாய்க்கு உதவிப் பொருட்கள் வழங்கியுள்ளது.*
*⚡இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்த நகர, வட்டார கிளைகளையும் தனிநபர்களாக உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ள நமது பொறுப்பாளர்கள் மற்றும் உறுப்பினர்களையும் தனி வட்டாரமாக நின்று ஒன்றிய அளவில் உதவிப்பணிகளை செய்துள்ள அம்பாசமுத்திரம் மற்றும் சங்கரன்கோவிலில் நகர, வட்டாரக் கிளைகளையும் _இம்மாவட்ட செயற்குழு மனதாரப்பாராட்டுகிறது._*
*🛡02. கொரோனா ஊரடங்கை பயன்படுத்தி தமிழ்நாட்டில் _100 சதவீதம் முழுமையான மதுவிலக்கை அமுல்படுத்திட வேண்டும்_ என தமிழக அரசை  இம்மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.*
*🛡03.அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள அரசாணையானது _ஆசிரியர் பயிற்சி முடித்து தகுதி தேர்விலும் தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் லட்சக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் படித்து வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் வேலைவாய்ப்பை தட்டி பறிக்கும் நடவடிக்கை என்பதால்_ அந்த உத்தரவை உடனடியாக திரும்ப பெறவேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.*
*🛡04.கொரோனா நோய்த்தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையைக் காரணம் காட்டி _தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கு அகவிலைப்படி ரத்து, ஓராண்டிற்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து மற்றும் வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு இம்மாவட்ட செயற்குழு தனது கடுமையான கண்டனத்தை_ தெரிவித்துக் கொள்கிறது. மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக தமிழக அரசு கைவிட வேண்டும் என்றும் இல்லையென்றால் பேரிடர் சூழல் மாறிய பின்பு மாநில மைய வழிகாட்டுதலுடன் வலிமையான இயக்க நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்டம் மேற்கொள்வது எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.*
*🛡05. கொரோனா பேரிடரால் நாடு பேராபத்தில் இருக்கும் சூழலில் _மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதிகளை தாமதமின்றி வழங்கி நிவாரணப் பணிகளுக்கு உதவிட_ வேண்டுமாய் மத்திய அரசை இம்மாவட்ட செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*
*🛡06.வரும் ஜீன் மாதம் முதல் அமுல்படுத்துவதாக கூறும் _மாணவர் நலனை பாதிக்கின்ற, இடைநிற்றலை அதிகரிக்கக் கூடிய புதிய தேசிய கல்விக் கொள்கையை உடனடியாக திரும்பப்பெற_ வேண்டும்.*
*🛡08.கொரோனா பேரிடரால் ஊரடங்கு உள்ள நிலையில் வருவாய் இழந்து தவிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை காத்திடும் வகையில் _தமிழக அரசு ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஐந்தாயிரம் ரூபாய்  நிதி வழங்கிட வேண்டுமாய்_ தமிழக அரசை இம்மாவட்ட செயற்குழு கேட்டுக் கொள்கிறது.*
*🛡09.கடந்த ஊதியக் குழுவில் _தர ஊதியம் 2800 பெற்ற இடைநிலை ஆசியர்களுக்கு புதிய ஊதியக் குழுவில் ஊதியக்கட்டு 10 ல் வைத்து ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது._ அவர்களுக்கு வரும் வருடாந்திர ஊதியத்தோடு ( Increment ) _ஊதிய விகிதம் ரூ. 65,500/- முழுமையாக_ நிறைவடைகிறது.*
*⚡அதற்கு பின்பு _அடுத்த ஊதியக்குழு செயல்பாட்டிற்கு வரும்வரை_ அவர்களுக்கு _வருடாந்திர ஊதிய உயர்வு கிடையாது. Stagnation Period க்கு தள்ளப்படுகிறார்கள்._*
*⚡எனவே _தமிழகத்து இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியத்தை வழங்கிட வேண்டும்_ என இச்செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.*
*🛡10.தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் _அமைப்பு விதிகளை பின்பற்றி_ திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற ஜுன் மாதத்திற்குள்ளாக _நகர,வட்டார கிளைகளில் தணிக்கையை முடிப்பது_ எனவும் ஆகஸ்ட் மாத இறுதிக்குள் _வட்டார, நகர கிளைகளுக்கு தேர்தல் நடத்துவது_ எனவும் செப்டம்பர் மாதத்தில் _கல்வி மாவட்ட அளவில் தேர்தல் நடத்துவது_ எனவும் அக்டோபர் மாதத்தில் _திருநெல்வேலி மற்றும் தென்காசி வருவாய் மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்துவது_ எனவும் இச்செயற்குழு தீர்மானிக்கிறது.*
_🤝தோழமையுடன்;_
*_செ.பால்ராஜ்,_*
_மாவட்ட செயலாளர்_
*திருநெல்வேலி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து, ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு முடிவின்படி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் தமிழக அரசுக்கு 15.05.2020 க்குள் கோரிக்கை மனு அனுப்ப வேண்டி பொதுச்செ�

*தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து, ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு முடிவின்படி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் தமிழக அரசுக்கு 15.05.2020 க்குள் கோரிக்கை மனு அனுப்ப வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF மாநில பொதுச் செயலாளரின் முக்கிய அறிவிப்பு*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகளின் பொறுப்பாளர்களே!_ வணக்கம்*

*📩*
*🛡கடந்த (04.05.2020) அன்று காணொளி மூலம் நடைபெற்ற நம் பேரியக்க மாநில செயற்குழுவில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து, ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெறக் கோரி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் தமிழக அரசுக்கு 15.05.2020 க்குள் கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது*

*📩*
*🛡தற்போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலும், தற்போது பணியில் உள்ளவர்களின் பதவி உயர்வு வாய்ப்பைத் தடுக்கும் வகையிலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த 07.05.2020 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையையும் சமூக நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் மாநில செயற்குழு கோரிக்கையுடன் இணைத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்துள்ளது*

*📩*
*🛡அதன்படி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் அனுப்பவேண்டிய கோரிக்கை மனுவின் மாதிரி இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.*

*📩*
*🛡மேற்படி கோரிக்கை மனு மாநில அமைப்பின் சார்பில் இன்று (09.05.2020) பதிவு அஞ்சல் வழியே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. எனவே, மாவட்ட வட்டார நகரக் கிளை அமைப்புகள் மேற்படி கோரிக்கை மனுவை மாதிரியாகக் கொண்டு,  கிளை அமைப்புகள் அனுப்புவது போல் மனுவின் இறுதியில் மட்டும் சிறு மாறுதல் செய்து பதிவு அஞ்சலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மதிப்புமிகு தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு 15.05. 2020க்குள் அனுப்பிட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

*📩*
*🛡மேற்படி கோரிக்கை மனு விவரம் word file ஆக தேவைப்படுவோர் நமது மாநில அலுவலகச் செயலாளர் திரு.பாபு அவர்களை (cell.No:9840944504)  அலைபேசியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்*

*📩*
*🛡மேலும், அனுப்பப்பட்ட மனுவின் நகலை மாவட்ட, வட்டார,  நகரக்கிளைகள் மாநில அமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு (tnptfithal@gmail.com) தவறாது அனுப்பிட வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அனைத்துக் கிளைகளும் கோரிக்கை மனுவை அனுப்பிய விவரத்தை மாவட்டச் செயலாளர்கள் கண்காணித்து உறுதிப்படுத்தவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*📩*
*🛡கோரிக்கை மனு அனுப்பப்பட்ட விவரத்தை கிளை அமைப்புகள் தங்கள் பகுதியில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு செய்தியாக வழங்கிட வேண்டும்*

*📩*
*🛡மாவட்ட வாரியாக கோரிக்கை மனு அனுப்பிய கிளைகளின் விவரம் மாநில செயற் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதையும், மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது. எனவே, மிக மிக முக்கியமான இப்பணியை மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் சிரமேற்கொண்டு செய்து முடித்திட மாநில மையம் மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

*சென்னை*
*09.05.2020*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 4 அரசாணைகள் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்*

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 4 அரசாணைகள் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*பெறுநர்*

*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,*
*தலைமைச் செயலகம்*
*சென்னை 600 009.*

_மாண்புமிகு ஐயா,_

*பொருள்:*

*_அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களைப் பாதிக்கும் வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 4 அரசாணைகள் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டுதல் சார்பு._*

*பார்வை:*

_⚡(1) G.O(MS) No: 232 Finance (Allowance) Department dt: 27.04.2020_

_⚡(2) G.O(MS) No: 48 P&AR (FR - III) Department dt: 27.04.2020_

_⚡(3) G.O(MS) No: 231 Finance (Allowance) Department dt: 23.04.2020_

_⚡(4) G.O(MS) No: 51 P&AR (S) Department dt: 07.05.2020_

**
*🛡மனித குலத்திற்கே மாபெரும் துயரத்தைத் தந்து கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தங்கள் தலைமையிலான அரசு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக அரசில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.*

**
*🛡இந்த இக்கட்டான தருணத்தில் தமிழக அரசோடு பல தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊழியர் அமைப்புகளும், தனி நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர்.*

**
*🛡தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 45 ஆயிரம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எங்களது அமைப்பின் மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் மாநிலம் முழுவதும் கடந்த 35 நாட்களாக வறிய மக்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதுவரை எங்களது அமைப்பின் சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களாகவும் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.*

**
*🛡இந்நிலையில் பார்வை 1ல் கண்ட அரசாணையின்படி 01.01.2020 முதல் 30.06.2021 முடிய 18 மாதங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது உயரும் விலைவாசிக்கேற்ப, உயரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வே கிடையாது என்பது தமிழக அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடிய நடவடிக்கையாகும்.*

**
*🛡மேலும், பார்வை 2ல் கண்ட அரசாணையின்படி அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பை ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்களோ அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை 30 நாட்களோ ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் நடைமுறையும் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. காலங்காலமாக நடைமுறையில் இருந்த இச்சலுகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.*

**
*🛡மேலும், பார்வை 3ல் கண்ட அரசாணையின்படி 01.04.2020 முதல் 30.06.2020 முடிய மூன்று மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.9மூ லிருந்து 7.1மூ ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பு என்பது ஊழியர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.*

**
*🛡மேலும், பார்வை 4ல் கண்ட அரசாணையின்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லாத பல லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் அரசுப்பணி என்ற கனவு கானல் நீராகி விட்டது. இம்முடிவானது தற்போது பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைத் தடுத்துள்ளது. இவ்வாண்டில் 58 வயது நிறைவு பெற்று ஓய்வுக்காலப் பணப்பலன்கள் பெற்று குடும்பத் தேவைகளை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த அரசாணை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.*

**
*🛡எனவே, தாங்கள் மேலே கண்ட எங்களது அமைப்பின் வேண்டுகோளை ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட 4 அரசாணைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற்று உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*
                                        
சென்னை
09.05.2020


_🤝தோழமையுடன்;_
   
*_ச. மயில்_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Thursday 7 May 2020

*TNPTF கண்டனம் - ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF கண்டனம் - ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு - இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்!*

*🛡ஊடகச்செய்தி மாநில பொதுச் செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 06/2020 நாள்: 07.05.2020*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதைத் திடீரென 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள செயல் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கை என்பதால், அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡தமிழக அரசு இன்று (07.05.2020) வெளியிட்டுள்ள ஆணையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் படித்துவிட்டு அரசுப் பணியை எதிர்நோக்கி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கும் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி ஆகும்.*        

**
*🛡அதேபோன்று இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.*

**
*🛡மேலும், கடந்த 5, 6 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களில் புதிய ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசுப்பணிகளிலும் போதுமான அளவு நியமனங்கள் நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.*

**
*🛡தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது என்பது, இந்த ஆண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்கள் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது.*

**
*🛡நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவானது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், எந்த அரசு ஊழியரும் ஆசிரியரும் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்கவில்லை.*

**
*🛡எனவே, தமிழக அரசு முழுக்க முழுக்க தனது சுயநலத்திற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையே இது. இம்முடிவானது தற்போது பணியில் உள்ள பலரது பதவி உயர்வு வாய்ப்பையும் பாதிக்கும் செயலாகும்.*

**
*🛡எனவே, தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் நலன் கருதி இந்த முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.*

**
*🛡மேலும், மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையும், ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Wednesday 6 May 2020

*TNPTF - மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டி ப�

*TNPTF - மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 03 நாள்: 06.05.2020*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡கடந்த 04.05.2020 அன்று காணொளி வழியே நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவின் தீர்மானம் எண்: 5 ன் படி தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியிலான மாற்றம், கல்வி மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு, புதிய வருவாய் மாவட்டங்கள் தோற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இயக்கத்தின் கிளை அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தும் வகையிலும், இயக்கத்தின் அமைப்பு விதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக மாநில அமைப்புக்கு பரிந்துரை செய்வதற்காக மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.*

**
*🛡மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பின்பு வரும் கருத்துக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது.*

*_முகவரி:_*

_திரு.த.ஜானி கிறிஸ்துராஜ்_ 17/287 - சி.புலிக்கல்மேடு, திருப்பூர் ரோடு,
காங்கேயம்,
திருப்பூர்-638701.
மின்னஞ்சல்- tnptfjohn@gmail.com

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயகப் பூர்வ இயக்கம். சாதி,  மத இன பேதமற்ற, தனிமனித துதி பாடாத, தனிநபர் சாராத, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, முற்போக்கு இயக்கம். எனவே, இயக்கத்தின் எதிர்கால நலன், வளர்ச்சி, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் கருதி இயக்கத்தின் கிளை அமைப்புகள், இயக்க உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாக குழுத் தலைவருக்குத் தெரிவித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*

*_'இயக்கத்தின் நோக்கங்களும், அமைப்பு விதிகளும்"_ புத்தகம் pdf வடிவில் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.*       

https://drive.google.com/file/d/1M6J51CCpMJpHEjgHZ5ld2EbeGLb6BrUK/view?usp=drivesdk       

                                        
சென்னை    
06.05.2020

_🤝தோழமையுடன்,_

*_ச. மயில்,_*       _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*🎥மே.4-ல் காணொளிக் காட்சி வழி நடைபெற்ற TNPTF-ன் மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்*

*🎥மே.4-ல் காணொளிக் காட்சி வழி நடைபெற்ற TNPTF-ன் மாநிலச் செயற்குழுக் கூட்டத் தீர்மானங்கள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் திங்கள் கிழமை (04.05.2020) சரியாக முற்பகல் 11:00 மணிக்கு மாநிலத் தலைவர் தோழர்.மூ.மணிமேகலை தலைமையில் காணொளிக் காட்சி வழியாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*

**
*🛡தீர்மானம் எண் 1 :*

*2020 பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடைபெற்ற இயக்கத்தின் மண்டல அளவிலான ஆய்வுக் கூட்டங்களை நடத்துவதற்கு கூட்ட ஏற்பாடுகளை மிகச்சிறப்பாக செய்திருந்த திருநெல்வேலி (தெற்கு மண்டலம்), மதுரை (தென் மத்திய மண்டலம்), கரூர் (வட மத்திய மண்டலம்), ஈரோடு (மேற்கு மண்டலம்), வேலூர் (வடக்கு மண்டலம்), தஞ்சாவூர் (கிழக்கு மண்டலம்) ஆகிய மாவட்டக்கிளைகளுக்கு இம்மாநிலச் செயற்குழு பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 2 :*

*19.03.2020 அன்று புதுதில்லியில் நடைபெறுவதாக இருந்த இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் நாடாளுமன்றம் நோக்கிய பேரணி, கொரோனா பேரிடரால் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நமது இயக்கத்தின் சார்பில் பேரணிக்குச் செல்வதற்கு ரயில் மற்றும் விமானப் பயணச்சீட்டுக்கள் முன்பதிவு செய்திருந்த இயக்க உறுப்பினர்களுக்கு அதில் ஏற்பட்ட செலவு தொகை போக மீதிப் பணத்தை திருப்பி அளிப்பதென இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 3 :*

*கொரோனா நோய்த்தொற்றின் காரணமாக கடந்த 25.03.2020 முதல் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் தங்கள் வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் வறிய நிலையிலுள்ள மக்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர்கள் ஆகியோருக்கு மாநில மைய வழிகாட்டுதலின் பேரில் மாநிலம் முழுவதும் இன்று வரை 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்களை வழங்கியுள்ள மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும், தனி நபர்களாக உதவிப்பணிகளில் ஈடுபட்டுள்ள நம் இயக்க உறுப்பினர்களையும், கொரோனா நோய்த்தடுப்புப் பணிகளில் தன்னார்வலர்களாகச் செயல்படும் நம் இயக்க உறுப்பினர்களையும் இம்மாநிலச் செயற்குழு மனதாரப் பாராட்டுகிறது; வாழ்த்துகிறது. மேலும் கிளை அமைப்புகள் தொடர்ந்து உதவிப்பணிகளில் ஈடுபட்டு ஏழை, எளிய மக்களுக்கு உதவிட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக் கொள்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 4 :*

*கொரோனா நோய்த் தொற்றால் ஏற்பட்டுள்ள பொருளாதார நிலையைக் காரணம் காட்டி தமிழக அரசு தனது ஊழியர்களுக்கு 18 மாதங்களுக்கான அகவிலைப்படி ரத்து, ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதற்கு இம்மாநிலச் செயற்குழு தனது கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறது. மேலும், போராடிப் பெற்ற உரிமைகளைப் பறிக்கும் மேற்கண்ட நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிடக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக் கிளை அமைப்புகள் தமிழக அரசுக்கு 15.05.2020-க்குள் கோரிக்கை மனுக்களை அனுப்புவதெனவும், இன்றைக்கு தமிழகத்தில் நிலவும் பேரிடர் சூழல் மாறிய பின்பு இது தொடர்பாக அடுத்தகட்ட வலிமையான இயக்க நடவடிக்கைகளைத் திட்டமிடுவதெனவும் இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 5 :*

*தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியிலான மாற்றம், கல்வி மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு, புதிய வருவாய் மாவட்டங்கள் தோற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இயக்கத்தின் கிளை அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகளைச் செம்மைபடுத்தும் வகையிலும் இயக்கத்தின் அமைப்பு விதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக மாநில அமைப்பிற்குப் பரிந்துரை செய்வதற்காக கீழ்கண்ட ஏழு இயக்கப் பொறுப்பாளர்களைக் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" வை இம்மாநிலச் செயற்குழு நியமிக்கிறது.*

*குழுத் தலைவர் :*

*_திரு. தோ.ஜான் கிறிஸ்துராஜ், மாநில துணைத்தலைவர்_*

*உறுப்பினர்கள் :*

*_திரு.தே.முருகன், மாநிலச்செயலாளர்_*

*_திரு.ஆ.முத்துப்பாண்டியன், சிவகங்கை மாவட்டச்செயலாளர்_*

*_திரு.சு.செல்வராஜ், தூத்துக்குடி மாவட்டச்செயலாளர்_*

*_திரு.இரா.சண்முகசாமி, விழுப்புரம் மாவட்டச்செயலாளர்_*

*_திரு.பெ.சீனிவாசன், மாநிலச் செயற்குழு உறுப்பினர்_*

*_திரு.எஸ்.ரஞ்சன்தயாளதாஸ்,மாநிலச் செயற்குழு உறுப்பினர்._*

*மேற்கண்ட குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புகள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020-க்குள் எழுத்து மூலமாகத் தெரிவிக்கலாம் எனவும், குழுவானது தனது பரிந்துரைகளை 15.06.2020-க்குள் மாநில அமைப்பிற்கு அளிக்க வேண்டுமெனவும் இம்மாநிலச் செயற்குழு தீர்மானிக்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 6 :*

*26.11.2018 அன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டத் தலைநகரங்களில் நடத்திய அரசாணை நகல் எரிப்பு போராட்டம், 22.01.2019 முதல் 30.01.2019 முடிய நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ போராட்டம் ஆகியவற்றில் கலந்து கொண்டதற்காக ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது தமிழக அரசு மேற்கொண்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17 (ஆ) நடவடிக்கைகளையும், குற்றவியல் நடவடிக்கைகளையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்திட வேண்டுமென இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. அரசாணை நகல் எரிப்புப் போராட்டத்தில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகளை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளதால் அதன் அடிப்படையில் வழங்கப்பட்ட 17(ஆ) நடவடிக்கையை சம்பந்தப்பட்ட கல்வித் துறை அலுவலர்கள் சட்டப்படி ரத்து செய்திட வேண்டும் என இம்மாநிலச் செயற்குழு கேட்டுக் கொள்வதோடு இது தொடர்பாக மாவட்டக்கிளைகள் விரைந்து செயல்படவும் தீர்மானிக்கப்பட்டது.*

**
*🛡தீர்மானம் எண் 7 :*

*கொரோனா பேரிடரால் நாடு பேரபாயத்தில் இருக்கும் சூழலில் மத்திய அரசு தமிழக அரசுக்கு தர வேண்டிய நிதிகளைத் தாமதமின்றி வழங்கி நிவாரணப் பணிகளுக்கு உதவிட வேண்டுமாய் மத்திய அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*

**
*🛡தீர்மானம் எண் 8 :*

*கொரோனா பேரிடரால் நடைமுறையில் உள்ள ஊரடங்கால் மக்கள் வருவாய் இழந்துள்ள சூழலில் தமிழக மக்களின் வாழ்வாதாரம் காத்திட குடும்ப அட்டைக்கு ஐந்தாயிரம் ரூபாய் வீதம் நிதி வழங்கி பாதிக்கப்பட்ட மக்கள் துயர் துடைத்திட வேண்டுமாய் தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Monday 4 May 2020

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் (காணொளி வழி) - செய்தி துளிகள்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் (காணொளி வழி) - செய்தி துளிகள்*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுக் கூட்டம் இன்று (04.05.2020) முற்பகல் சரியாக 11 மணிக்குத் தொடங்கி பிற்பகல் 2 மணி வரை காணொளி வழியே நடைபெற்றது*

**
*🛡இன்றைய இக்கட்டான சூழலில், பேரிடர் காலத்தில், கடந்த 40 நாட்களாக ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சூழலில், நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நடைபெற்ற இச்செயற்குழுக் கூட்டத்தில் 98% மாநில செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றது மிகவும் பாராட்டுக்குரியது*

**
*🛡இந்த கூட்டத்தின் மூலம் தமிழகத்திலேயே முதன் முதலாக காணொளி வழியே மாநில செயற்குழுக் கூட்டத்தை நடத்திய ஒரு ஆசிரியர் இயக்கம் என்ற பெருமையை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பெற்றுள்ளது*

**
*🛡பொதுவாக தமிழ்நாட்டில் எந்தவொரு உரிமை மீட்புக்கான போராட்டக் களமாக இருந்தாலும் சரி அல்லது பொது நல நோக்கம் கொண்ட செயல்பாடாக இருந்தாலும் சரி மற்ற ஆசிரியர் இயக்கங்களுக்கு முன்னோடியாகத் திகழ்ந்து கொண்டிருப்பது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தான். அந்த வகையில் இந்தக் காணொளி வழி மாநில செயற்குழுவும் அமைந்துள்ளது*

**
*🛡மூன்று மணி நேரம் நடைபெற்ற இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்றுள்ள கொரோனா உதவிப் பணிகள், இன்னும் நடைபெற உள்ள உதவிப் பணிகள் தொடர்பாக மாநில செயற்குழு உறுப்பினர்கள் எடுத்துக் கூறியது மிகவும் சிறப்புக்குரியது*

**
*🛡இத்தகு சூழலிலும், எத்தகு இடர்மிகு நிலையிலும் நம் பேரியக்கம் தனது இயக்கத்தை எப்போதும் நிறுத்தாது என்பதற்கு இன்றைய கூட்டம் ஒரு சான்றாக அமைந்து*

**
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட, வட்டார, நகரக்கிளைகளும் மாநில செயற்குழுவைப் பின்பற்றி காணொளி வழியே தங்கள் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டங்களை நடத்தி இயக்கச் செயல்பாடுகளை உயிரோட்டமாய்,  உணர்வு பூர்வமாய் முன்னெடுக்க வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*

_🤝தோழமையுடன்_

*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм