*TNPTF - மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது. மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்: 03 நாள்: 06.05.2020*
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔*
*🛡கடந்த 04.05.2020 அன்று காணொளி வழியே நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவின் தீர்மானம் எண்: 5 ன் படி தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தொடக்கக்கல்வித் துறையில் ஏற்பட்டுள்ள நிர்வாக ரீதியிலான மாற்றம், கல்வி மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு, புதிய வருவாய் மாவட்டங்கள் தோற்றம் உள்ளிட்ட நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு இயக்கத்தின் கிளை அமைப்புகளில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் தொடர்பாகவும், எதிர்கால இயக்கச் செயல்பாடுகளைச் செம்மைப் படுத்தும் வகையிலும், இயக்கத்தின் அமைப்பு விதிகளில் மேற்கொள்ள வேண்டிய திருத்தங்கள் தொடர்பாக மாநில அமைப்புக்கு பரிந்துரை செய்வதற்காக மாநில துணைத்தலைவர் திரு.தோ.ஜாண்கிறிஸ்துராஜ் அவர்கள் தலைமையில் ஏழு பேர் கொண்ட 'இயக்க அமைப்பு விதி திருத்தக் குழு" அமைக்கப்பட்டுள்ளது.*
*⚔*
*🛡மாநில செயற்குழு தீர்மானத்தின்படி மேற்படி குழுவிற்கு இயக்கத்தின் கிளை அமைப்புக்கள் மற்றும் இயக்க உறுப்பினர்கள் தங்களது கருத்துக்களை 31.05.2020க்குள் கீழ்க்கண்ட குழுத்தலைவரின் முகவரிக்கு அஞ்சல் அல்லது மின்னஞ்சல் வழியே அனுப்ப வேண்டும். குறிப்பிட்ட தேதிக்குப் பின்பு வரும் கருத்துக்கள் பரிசீலிக்கப் பட மாட்டாது.*
*_முகவரி:_*
_திரு.த.ஜானி கிறிஸ்துராஜ்_ 17/287 - சி.புலிக்கல்மேடு, திருப்பூர் ரோடு,
காங்கேயம்,
திருப்பூர்-638701.
மின்னஞ்சல்- tnptfjohn@gmail.com
*⚔*
*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஜனநாயகப் பூர்வ இயக்கம். சாதி, மத இன பேதமற்ற, தனிமனித துதி பாடாத, தனிநபர் சாராத, பகுத்தறிவுச் சிந்தனை கொண்ட, முற்போக்கு இயக்கம். எனவே, இயக்கத்தின் எதிர்கால நலன், வளர்ச்சி, ஆசிரியர் நலன், மாணவர் நலன், கல்வி நலன், சமூக நலன் கருதி இயக்கத்தின் கிளை அமைப்புகள், இயக்க உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை நேரடியாக குழுத் தலைவருக்குத் தெரிவித்திட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*_'இயக்கத்தின் நோக்கங்களும், அமைப்பு விதிகளும்"_ புத்தகம் pdf வடிவில் இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.*
https://drive.google.com/file/d/1M6J51CCpMJpHEjgHZ5ld2EbeGLb6BrUK/view?usp=drivesdk
சென்னை
06.05.2020
_🤝தோழமையுடன்,_
*_ச. மயில்,_* _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment