Thursday, 7 May 2020

*TNPTF கண்டனம் - ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு - பொதுச்செயலாளர் அறிக்கை*

*TNPTF கண்டனம் - ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதற்கு எதிர்ப்பு - பொதுச்செயலாளர் அறிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது உயர்வு - இளைஞர்களின் வேலைவாய்ப்பை பறிக்கும் செயல் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கண்டனம்!*

*🛡ஊடகச்செய்தி மாநில பொதுச் செயலாளரின் செய்தி அறிக்கை எண்: 06/2020 நாள்: 07.05.2020*

_தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச்செயலாளர் ச.மயில் வெளியிட்டுள்ள அறிக்கை:_

**
*🛡அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதைத் திடீரென 58 லிருந்து 59 ஆக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ள செயல் இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் நடவடிக்கை என்பதால், அந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

**
*🛡தமிழக அரசு இன்று (07.05.2020) வெளியிட்டுள்ள ஆணையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஏற்கனவே தமிழகத்தில் படித்துவிட்டு அரசுப் பணியை எதிர்நோக்கி வேலை வாய்ப்பகங்களில் பதிவு செய்திருக்கும் வேலையில்லாத இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எண்ணிக்கை சுமார் 1 கோடி ஆகும்.*        

**
*🛡அதேபோன்று இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணிக்குத் தகுதி பெற்று, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று லட்சக்கணக்கானோர் ஆசிரியர் பணியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கின்றனர்.*

**
*🛡மேலும், கடந்த 5, 6 ஆண்டுகளாக ஆசிரியர் காலிப் பணியிடங்களில் புதிய ஆசிரியர் நியமனங்கள் எதுவும் நடைபெறவில்லை. அரசுப்பணிகளிலும் போதுமான அளவு நியமனங்கள் நடைபெறவில்லை. மாநிலம் முழுவதும் அரசுத் துறைகளில் லட்சக்கணக்கான பணியிடங்கள் காலியாக உள்ளன. ஆயிரக்கணக்கான ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால் வேலையில்லாத இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது.*

**
*🛡தற்போது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளது என்பது, இந்த ஆண்டு 58 வயது முடிந்து பணி ஓய்வு பெறுபவர்களுக்கு ஓய்வுக்காலப் பணப்பலன்கள் கொடுப்பதைத் தவிர்ப்பதற்கான நடவடிக்கையாகவே தெரிகிறது.*

**
*🛡நிதி நெருக்கடியைத் தவிர்ப்பதற்காக தமிழக அரசு எடுத்துள்ள இந்த முடிவானது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும். மேலும், எந்த அரசு ஊழியரும் ஆசிரியரும் ஓய்வுபெறும் வயதை உயர்த்த வேண்டும் என்று தமிழக அரசிடம் கேட்கவில்லை.*

**
*🛡எனவே, தமிழக அரசு முழுக்க முழுக்க தனது சுயநலத்திற்காக மேற்கொண்டுள்ள நடவடிக்கையே இது. இம்முடிவானது தற்போது பணியில் உள்ள பலரது பதவி உயர்வு வாய்ப்பையும் பாதிக்கும் செயலாகும்.*

**
*🛡எனவே, தமிழக இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் நலன் கருதி இந்த முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்.*

**
*🛡மேலும், மாநிலம் முழுவதும் அரசு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களையும், ஆசிரியர் காலிப் பணியிடங்களையும் உடனடியாக நிரப்பி லட்சக்கணக்கான இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களின் எதிர்கால வாழ்க்கைக்கு வழிகாட்ட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: