Sunday 30 June 2019

*SMC இதுவரை 4 நிலைகளில் (மாநிலம், மாவட்டம், வட்டாரம், பள்ளி) இயங்கி வந்தது இனி 3 நிலைகளில் மட்டுமே. பள்ளி SMC உறுப்பினர்களை புதுப்பித்து சிறப்பாக செயல்பட உத்திரவு.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/smc-4-3-smc.html


*🌟ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மூன்று அடுக்கு நிலை குழுக்கள் (மாநில, மாவட்ட மற்றும் பள்ளி மேலாண்மைக்குழு) திட்டமிடல், செயல்படுத்துதல் மற்றும் மேற்பார்வை செய்வது தொடர்பாக ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


👇👇👇👇👇👇👇👇


https://drive.google.com/file/d/10QkTawXzKyKtRB5n2WKSQuVUK2rCNT_6/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday 29 June 2019

*நெல்லையில் 230 உறுப்பினர்களுடன் TNPTF அம்பாசமுத்திரம் வட்டாரக்கிளை உதயம் & பொறுப்பாளர்கள் பதவியேற்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/230-tnptf.html


💪🆕💪

*🌟திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் ஒன்றியத்தில் தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் புதிய கிளை துவக்கவிழா அம்பாசமுத்திரம் ஹோட்டல் கெளரி சங்கரில் உள்ள ராம் மண்டபத்தில்  வைத்து நடைபெற்றது.*



💪🆕💪

*🌟இக்கூட்டத்திற்கு சிறியமலர் ஆரம்பப் பள்ளியின் தலைமை ஆசிரியர்  மைக்கில் ஜார்ஜ் கமலேஷ் தலைமை தாங்கினார். ஆசிரியர்கள் அழகிய மணவாளன், மகாதேவன்,புஷ்பா ஆகியோர்  முன்னிலை வகித்தார்.*



💪🆕💪

*🌟புனித மேரி ஆரம்பப் பள்ளி தலைமை ஆசிரியர் _ஜான் தாமஸ் அந்தோணி_ அனைவரையும் வரவேற்றுப் பேசினார்.*



💪🆕💪

*🌟பின்னர் புதிய பொறுப்பாளர்கள் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்று பின்வரும் பொறுப்பாளர்கள் பதவியேற்றுக் கொண்டனர்.*



*⚡வட்டாரத் தலைவர் :*

*_திரு.ஜான் தாமஸ் அந்தோணி_*


*⚡துணைத் தலைவர்கள் :*

*_திரு. அழகிய மணவாளன்_*

*_திரு. உஷா மாலதி_*



*⚡வட்டாரச் செயலாளர் :*

*_திரு.மகாதேவன்_*



*⚡துணைச் செயலாளர்கள் :*

*_திரு.ஆபேல் ஷேக்_*

*_திருமதி.புஷ்பா_*



*⚡வட்டாரப் பொருளாளர் :*

*_திரு.சூசை ராஜ்_*



*⚡மாவட்டப் பொதுக்குழு உறுப்பினர்கள்:*

*திரு.மைக்கில் ஜார்ஜ் கமலேஷ்*

*திரு.பிலிப்*

*திரு.முருக பெருமாள்*



💪🆕💪

*🌟புதிய பொறுப்பாளர்ளை வாழ்த்தி திருநெல்வேலி மாவட்டச் செயலாளர் _தோழர்.செ.பால்ராஜ்,_ தலைவர் _தோழர்.பி.ராஜ்குமார்,_ பொருளாளர் சங்கை _தோழர்.ஞா.பால்ராஜ்,_ மாநிலச் செயற்குழு உறுப்பினர் _தோழர்.பிரமநாயகம்_ ஆகியோர் பேசினர்.*



💪🆕💪

*🌟தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை,_ பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்,_ தெற்கு மண்டல மாநிலச் செயலாளர் _தோழர்.சோ.முருகேசன்_ ஆகியோர் சிறப்புரை வழங்கினர்.*



💪🆕💪

*🌟இத்துவக்க விழாவிற்கு பல்வேறு வட்டாரச் செயலாளர்களான _பாப்பாக்குடி_ சேவியர், பவுல், ராஜேஷ், சபரி, _சேரன்மகாதேவி_ காமராஜ், பவுல், அமுதா, ஜெயக்குமார், நம்பிராஜன், _ஆலங்குளம்_ சிவக்குமார், _பாளை_ வின்செண்ட், _கீழப்பாவூர்_ ரமேஷ், சுதர்சன், _மானூர்_ அண்ணாத்துரை, அந்தோணி, குமார், சீனிவாசன், சண்முக ராஜா,மந்திரம் உள்பட பலரும் கலந்து கொண்டனர்.*



💪🆕💪

*🌟அம்பை வட்டடாரத்தில் இருந்து 150 பெண்ணாசிரியர் உள்பட 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.*



💪🆕💪

*🌟நிறைவாக வட்டார பொருளாளர் சூசைராஜ் நன்றி கூறினார்.*


🤝தோழமையுடன்;


*_பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*திருநெல்வேலி மாவட்டம்.*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

புதிய கிளை தோற்றுவிக்க அயராது உழைத்த மாநில,மாவட்ட மையத்திற்கும், வட்டார மையத்திற்கும் மற்றும் களப்பணி ஆற்றிய தோழர்களுக்கும் நன்றி கலந்த வணக்கத்துடன் புதிய கிளைக்கு வாழ்த்துகளையும் _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





*"செயல்வழிக் கற்றல்" - கவிதை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_86.html


*🌟கவிஞர்.நா.டில்லிபாபு, இடைநிலை ஆசிரியர் அவர்கள் இயற்றிய "செயல்வழிக் கற்றல்" கவிதை*


*கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

*👇👇👇👇👇👇👇*


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_86.html

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*"இனிது! இனிது! முதுமை இனிது!" - கவிதை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_99.html


*கவிஞர்.நா.டில்லிபாபு, இடைநிலை ஆசிரியர் அவர்கள் இயற்றிய "இனிது! இனிது! முதுமை இனிது!" கவிதை*


*கீழே உள்ள link ஐ கிளிக் செய்து கண்டுகளியுங்கள் தோழர்களே!*

*👇👇👇👇👇👇👇*

https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_88.html



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளர் நியமனம் செய்து அரசாணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_14.html


*🌟தமிழகத்தின் புதிய தலைமைச் செயலாளராக திரு.க.சண்முகம் அவர்கள் நியமனம் இவர் ஏற்கனவே தமிழகத்தின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆகவும் நிதி செயலாளராகவும் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழகத்தில் மூன்று கல்வித்துறை இயக்குநர்கள் பணி இடமாற்றம்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_78.html




*⚡மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநராக _முனைவர்.மு.பழனிச்சாமி_ நியமனம்.*


*⚡தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வி பணிகள் இயக்குநராக _திருமதி.என்.லதா_ நியமனம்.*


*⚡அரசு தேர்வுகள் இயக்கக இயக்குநராக _திருமதி.சி.உஷாராணி_ நியமனம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் யார் யார் இருக்க வேண்டும்?எத்தனை பேர் இருக்க வேண்டும்/ அவற்றில் பெண் உறுப்பினர்கள் எத்தனை பேர் இருக்க வேண்டும்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_60.html


*_பள்ளி மேலாண்மைக்குழு  உறுப்பினர்கள் - செய்தி துளிகள்_*


*🌟பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மொத்தம் 20 பேர் இருக்க வேண்டும்.*


*🌟மொத்த உறுப்பினர்களில் 50 சதவீதம் பெண்கள் கட்டாயமாக இருக்க வேண்டும் (10 பேர் பெண்களாக இருக்க வேண்டும்).*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*G.O Ms -41 7வது ஊதியக்குழு நிர்ணயத்திற்கு பிறகு அரசு ஊழியர்களில் Group A, B, C, D ஊழியர்கள் யார்? யார்? - அரசாணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/go-ms-41-7-group-b-c-d.html


*FUNDAMENTAL RULES -  Amendment to Rule 9-A of the Fundamental Rules Classification of Government servants Notation issued*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*தனியார் பெயரில் இயங்கக்கூடிய அரசு உதவி பெறும் பள்ளி பெயர்ப்பலகையில், "அரசு உதவி பெறும் பள்ளி" என பெயரை பொறிக்க, தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_77.html


*🌟பெயர் பலகையில், ஆங்கிலம் மற்றும் தமிழில், "அரசு உதவி பெறும் பள்ளி" என பொறிக்க வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.*


*🌟முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளில் ஆய்வு மேற்கொள்ளும்போது, பெயர் பலகையில் "அரசு உதவி பெறும் பள்ளி" என குறிப்பிடப்பட்டுள்ளதா? என ஆய்வு செய்ய வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*இரு ஆசிரியர்கள் ஒரே நாளில் ஒரே நேரத்தில் பணியில் சேர்ந்தால் இளையவர் யார்? தர்மபுரி முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_79.html


*🌟தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி அரசு/ நகராட்சி உயர்/ மேல்நிலைப் பள்ளிகளில் 01.08.2018 ல் உள்ளபடி மாணவர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயம் செய்தல் ஆசிரியர் விபரங்கள் சரிபார்த்தல் குறித்து தர்மபுரி முதன்மைக்கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*வட்டாரக் கல்வி அலுவலர்கள் விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவியிறக்கம் செய்து ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_29.html


*🌟தொடக்கக்கல்வி சார்நிலைப்பணி வட்டாரக் கல்வி அலுவலர்கள் அன்னாரது விருப்பத்தின் பேரில் மீளவும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவியிறக்கம் செய்து ஆணை வழங்க கோரும் விண்ணப்பம் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டி தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளகயிட்டுள்ளார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*பள்ளிக்கல்வி அலுவலக பணியாளர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல் கலந்தாய்வு திருத்தம் மற்றும் தேதி மாற்றம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/3.html


*பள்ளிக்கல்வி தமிழ்நாடு பொதுப்பணி/ அமைச்சுப்பணி அனைத்துவகை பணியாளர்களுக்கான மாறுதல் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே பணியிடத்தில் பணிபுரிபவர்களுக்கு மாறுதல்  30.06.2019  அன்றைய தேதியில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் பணிபுரிபவர்களுக்கு  29.07.2019 அன்றுு மாாவட்ட அளவில் விருப்ப கலந்தாய்வு நடத்தி மாறுதல் வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அவர்களின் செயல்முறை வெளியீடு.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Friday 28 June 2019

*பள்ளிக்கல்வித்துறை கல்வி மான்யக்கோரிக்கை 02.07.2019 அன்று நடைபெற உள்ளது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/02072019.html


*🌟02.07.2019 அன்று பள்ளிக்கல்வி துறை கல்வி மான்யக் கோரிக்கை நடைபெற உள்ளதால், கல்வி மான்யக் கோரிக்கை தொடர்பான புள்ளிவிவரங்கள் அரசிடமிருந்து கோரப்பட்டு வருவதால் உடனுக்குடன் பதில் அளிக்கும் வகையில் 29.06.2019, 30.06.2019 மற்றும் 01.07.2019 ஆகிய மூன்று நாட்களிலும் முதன்மைக்கல்வி அலுவலர், மாவட்ட கல்வி அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும். அனைத்து பணியாளர்களும் விடுப்பில் செல்லாமல் முழுமையாக அலுவலகத்தில் இருந்து இவ்வியக்கத்திலிருந்து கோரப்படும் விவரங்களை உடனுக்குடன் அனுப்ப வேண்டும்.*


*🌟01.07.2019 அன்று மாலை பள்ளிக்கல்வி இணை இயக்குநர் (பணியாளர் தொகுதி) அனுமதி அளிக்கும் வரையில் முதன்மைக்கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட கல்வி அலுவலகம் முழுமையாக செயல்பட வேண்டும் என்று தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்டம் அம்பை வட்டாரத்தில் புதிய கிளை துவக்க விழா - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_28.html


*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*


💪🆕💪

*🌟வீரம் செரிந்த நெல்லை சீமையில் அம்பை வட்டாரத்தில் இன்று 28.06.2019 தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் எழுச்சிமிகு கிளையாக துவக்க விழாவின் போதே 230 க்கும் மேற்பட்ட உறுப்பினர்களோடு பெரும் ஆரவாரத்துடன் ஆரம்பிக்கப்பட்டது.*



💪🆕💪

*🌟புதியதாக உதயமான அம்பை கிளையில் நமது பேரமைப்பின் பொதுச் செயலாளர் _தோழர்.ச.மயில்_ சிறப்புரை ஆற்றினார்*



💪🆕💪

*🌟இத்துவக்க விழாவில் 150 க்கும் மேற்பட்ட பெண்ணாசிரியர் உள்பட 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டார்கள், கூட்ட அரங்கமே நிரம்பி வழிகிறது.*



💪🆕💪

*🌟TNPTF என்ற பேரமைப்பின் பதாகையின் கீழ் அம்பை கிளை துவக்கப்பட்டதன் மூலம் ....*



💪🆕💪

*🌟நெல்லை மாவட்டத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி இல்லாத வட்டாரங்களே இல்லை என்ற பெருமையை பெற்றுள்ளது.*



💪🆕💪

*🌟தமிழகத்தில் உள்ள ஆசிரியர் சங்க வரலாற்றில் கிளைகளே இல்லாத வட்டாரங்கள் இல்லை அனைத்து வட்டாரங்களிலும் கிளைகளைக் கொண்ட மாவட்டம் என்ற பெருமையை நெல்லை மாவட்டம் பெற்றுள்ளது, என்று பொதுச்செயலாளர் தோழர்.மயில் அவர்கள் தனது வீரம் செறிந்த உரையில் எழுச்சி உரையாற்றினார்.*



🤝தோழமையுடன்....


*_செ.பால்ராஜ்_*

*மாவட்ட செயலாளர்*

*திருநெல்வேலி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*உபரிப்பணியிட மாறுதல்-அரசாணைகளில் முரண்பாடு-திருத்தம் செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/2019-20.html


*2019-20 ஆசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் உத்தரவின் அடிப்படையில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் வழிகாட்டுதலில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் _மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும்,_ _மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்_ அவர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது*

*பார்வை:*

*_அரசாணை (1டி) எண் : 270 பள்ளிக்கல்வித் (வ.செ :2) துறை  நாள் : 10.07.2012_*


*_2.ஆரசாணை (1டி) எண் :217 பள்ளிக்கல்வி [ப.க:5(1)]த்துறை : நாள் : 20.06.2019_*


******************


🌀🔄📩

*🌟பார்வை 2-ல் கண்ட அரசாணை பக்கம் 4-ல் பத்தி(ii)-ல் ஒன்றியத்திற்குள் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் கூடுதல் தேவை ஆகியவற்றின் மொத்தத்திற்கு கூடுதலாக உபரி ஆசிரியர்கள் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணிநிரவல் செய்தவர்கள் போக எஞ்சியுள்ள இளைய உபரி ஆசிரியர்களை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு/வேறு அலகுகளுக்கு மாவட்டத்திற்குள் பணிநிரவல் செய்ய வேண்டும். அவ்வாறு உபரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு/வேறு அலகுகளுக்கு பணிநிரவல் செய்யப்படும்போது  பள்ளியில் சேர்ந்த தேதியின்படி இளையவரை பணிநிரவல் ஆசிரியராக நிர்ணயத்தல் வேண்டும் என்றும், பத்தி(ii)-ல் ஒன்றியத்திற்குள் பணிநிரவல் செய்யப்பட்ட பின்னரும் உபரி இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி பணிநிரவல் செய்திட வேண்டும்*


🌀🔄📩

*🌟அவ்வாறு பணிநிரவல் காரணமாக உபரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாற்றப்படும்போது சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் ஒட்டுமொத்த முன்னுரிமைப்பட்டியலில் மிகவும் இளையவர்களாக உள்ளவர்களைத்தான் பணிநிரவல் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.*


🌀🔄📩

*🌟பார்வை 2-ல் கண்ட அரசாணைப்படி ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் செய்தால் ஒன்றியத்தில் முன்னுரிமைப்பட்டியலில் மூத்த ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லவேண்டிய நிலை ஏற்படும். பார்வை 1-ல் கண்ட அரசாணைப்படி ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் செய்தால் ஒன்றியத்தில் முன்னுரிமைப்பட்டியலில் மிகவும் இளையவர்களாக உள்ளவர்கள் உபரி ஆசிரியர் பணி மாறுதலில்  செல்வர்.*


🌀🔄📩

*🌟எனவே, பார்வை 2-ல் கண்ட அரசாணையின் பார்வை 5-ல், பார்வை 1-ல் கண்ட அரசாணையை குறிப்பிட்டுள்ளதால், அரசாணை(1டி) எண் 217 பள்ளிக்கல்வி [ப.க:5(1)] த்துறை நாள் : 20.06.2019 -ல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவலுக்கு வழங்கப்பட்ட நெறிமுறைகளை, அரசாணை(1டி) எண் : 270 பள்ளிக்கல்வித் (வ.செ:2) துறை நாள்: 10.07.2012க்கு ஏற்ப ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் வழிகாட்டுதலில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடுமாறு மாநில அமைப்பின் சார்பில் தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.*


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Thursday 27 June 2019

*பணி நிரவல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் (27.06.2019)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/27062019.html


*☀️பொதுமாறுதல் 2019-20 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ மாநகராட்சி/ அரசு ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் நாளது தேதியில் மாணாக்கரின் எண்ணிக்கையின் அடிப்படையில் உபரி ஆசிரியர்கள் கண்டறியப்பட்டு கூடுதல் தேவையுள்ள பள்ளிகளுக்கு பணிநிரவல் செய்தல் மற்றும் அறிவுரை வழங்குதல் சார்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Wednesday 26 June 2019

*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/jactto-geo.html


*🌟மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தனர்.*



*🌟இச்சந்திப்பின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.*


*🌟தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.*


*🌟மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.*



*🌟இக்கோரிக்கைகள் குறித்து இயக்குநரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.*


சென்னை.

26.06.2019



🤝தோழமையுடன்


*_ச.மோசஸ்_*

*நிதிக்காப்பாளர்,*

*ஜாக்டோ-ஜியோ*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Tuesday 25 June 2019

*அங்கன்வாடிகளில் LKG, UKG நியமனம், பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு நிகழ்வு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/lkg-ukg.html


*⚡அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - மாநிலம் முழுவதும் பல்வேறு நடைமுறைகள் விதிமீறல்கள் நடந்துள்ளது, அவை ஒரே சீரான  நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியும்,*


*⚡அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவண செய்திட வேண்டியும்,*

*⚡அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் உருவாகும்போது மீண்டும் பணிமாறுதல் வழங்க வேண்டியும்,*

*⚡2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள்  ஆசிரியர்களின் நலன் கருதி திருத்தியமைத்திட வேண்டியும்,*

*⚡மேலும் ஆசிரியர்கள்  பிரச்சினைகள் தொடர்பாகவும்,*


*⚡இன்று (25/06/2019) மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை,*


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பாக,*


*🛡மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்களும்,*

*🛡மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்களும்,*

*🛡மாநில பொருளாளர் _தோழர். ஜோதிபாபு_ அவர்களும்,*

*🛡மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர். கணேசன்_ அவர்களும்,*


*⚡சந்தித்து கோரிக்கைமனு அளித்து கோரிக்கையின் சாரம்சத்தை எடுத்துக்கூறினார்கள்.*


*_கோரிக்கையின் முழு விபரம்:_*

🛡⚔🛡

*🌟அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - மாநிலம் முழுவதும் பல்வேறு நடைமுறைகள் விதிமீறல்கள் - ஒரே சீரான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுதல்:*



*⚡தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில்  தகுதிவாய்ந்த முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது எங்களது இயக்கத்தின் கோரிக்கையாகும்.  ஆனால் நடைமுறையில் தமிழ்நாடு முழுவதும் மேற்படி அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.*


*⚡அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் எவ்விதமான விதிமுறைகளுக்கும் உட்படாமலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பிற்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.*


*⚡இவ்விஷயத்தில் பல மாவட்டங்களில் கல்வித்துறையின் சார்நிலை அலுவலர்கள் விருப்பு வெறுப்போடும் தன்னிச்சையாகவும் ஆதாயம் பெற்றுக்கொண்டும் செயல்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு முறையிலும் ஒரே மாவட்டத்திற்குள் வெவ்வேறு ஒன்றியங்களில் வெவ்வேறு முறையிலும் கல்வித்துறை அலுவலர்கள் செயல்பட்டுள்ளனர்.*



*⚡மாநிலம் முழுவதும் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறபோது மாநிலம் முழுவதும் ஒரே சீரான விதிமுறைகளைக் கடைபிடிப்பது என்பதுதான் சரியானதாக இருக்கும். கடந்த காலங்களில் அவ்வாறுதான் நடைபெற்றுள்ளது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.* 


*⚡அங்கன்வாடி  LKG, UKG வகுப்புகளில்  இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பின்வருமாறு:-*


*👉1. உபரிப் பணியிடத்தில் பணியாற்றுபவர் (அவர் ஒன்றியத்தில் மிக மூத்தவராக இருந்தாலும்)*


*👉2. உபரிப் பணியிடத்தில் பணியாற்றுபவர்களில் இளையவர்*

*👉3. சார்ந்த பள்ளியில் (LKG UKGதுவக்கப்படும் பள்ளி) இளையவர்* 

*👉4. ஒன்றியத்தில் இளையவர்*

*👉5. பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றுபவர்*



*👉6.பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பல ஈராசிரியர் பள்ளிகள் இருந்தால் அந்தப்பள்ளிகளில் பணியாற்றுபவர்களில் பணியில் இளையவர்*



*👉7. ஏற்கனவே நூற்றுக்கணக்கில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியத்தில் பணியாற்றும் உபரியற்ற இடைநிலை ஆசிரியர்*



*👉8. நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் (பல நிதியுதவிப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால் கல்வித்துறை அலுவலர்களின் விருப்பப்படி)*


*👉9.நேரடி மானியம் பெறும் உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்கள் (கல்வித்துறை அலுவலர்கள் விருப்பப்படி)*


*👉10. ஒரே அங்கன்வாடிக்கு 3 இடைநிலை ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் நியமனம் (மாதம் ஒருவர் சென்றுவர வேண்டும்)*



*👉11. உபரி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்ட பள்ளிகளில் இவ்வாண்டு   (2019-20) மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததாலோ அல்லது அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் பணிநிறைவு பெற்றதாலோ ஏற்பட்ட நிலைமை கணக்கில் கொள்ளப்படாமல் உபரி ஆசிரியர்கள் என்று கூறி அங்கன்வாடிகளில் நியமனம்*


*👉12. ஒன்றியப் பள்ளிகளில் உபரிப்பணியிடம் இருந்தும் உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நியமனம்*


*⚡மேற்கண்டவாறு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழப்பநிலையும் விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் ஒரேசீரான விதிமுறைகளை வெளியிட்டு அங்கன் LKG UKG வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமித்திடவும் தவறான விதிமுறைகளைப் பின்பற்றி LKG UKG  வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அதிலிருந்து விடுவித்து அவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பிடவும் பணிநிலையில் மூத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடவும் மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*

🛡⚔🛡

*🌟அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவண செய்திட வேண்டுதல்:*



*⚡தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள LKG UKG  வகுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உபரியாக இல்லாத இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதலில் செல்ல வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக 2019-20 ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பார்வையில் கண்ட அரசாணையில் எதுவும் தெரிவிக்கப்படாதது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்படி ஆசிரியர்கள் தாங்கள் முன்பு பணியாற்றிய பள்ளியின் முதுநிலையின்  அடிப்படையில் 2019-20 பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் தாங்கள் சார்நிலை அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்கி உதவிட மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் வேண்டுகிறோம்.*



🛡⚔🛡

*🌟அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் உருவாகும்போது மீண்டும் பணிமாறுதல் வழங்க வேண்டுதல்:*



*⚡2019-20 ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணையின் பத்தி 5(III)-ல் “2018-19 ஆம் கல்வியாண்டில், தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம்விட்டு ஒன்றியத்திற்கு பணிநிரவல் செய்யப்பட்டவர்கள், தாய் ஒன்றியத்தில் உள்ள  காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் பெற ஏதுவாக இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*


*⚡இதேபோன்று அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டே (2019-20) அவர்களுடைய சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் அல்லது தேவைப்பணியிடம் உருவாகும் நிலையில் பார்வையில் கண்ட அரசாணையின்படி அவர்களுக்கு அப்பணியிடத்தில் பணிமாறுதல் அளித்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


🛡⚔🛡

*🌟 2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் - ஆசிரியர்களின் நலன் கருதி திருத்தியமைத்திட வேண்டுதல்:*



*⚡அரசாணை (1டி) எண் : 218 பள்ளிக்கல்வி (ப.க 5(1)த்துறை நாள் : 20.06.2019 ன் படி அரசாணையில் 2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்களின் நலன் கருதி கீழ்கண்டவாறு திருத்தங்களை வெளியிட்டு உதவிட அரசுக்கு பரிந்துரைத்திட தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


*⚡அரசாணையின் பத்தி 9(i)-ல்  2019-20 பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2019 நிலவரப்படி 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆசிரியர்களின் நலன்களைப் பாதிப்பதாக உள்ளது.  காரணம் இவ்வாண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் 2015-2016 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கலந்து கொண்டு மாறுதல் பெற்றவர்கள் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  ஏனெனில்  கடந்த 2016-2017 ம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2016 ஆகஸ்டு மாதம்தான் நடைபெற்றுள்ளது.*



*⚡மேலும், கடந்த ஆண்டு(2018-19) பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை (டி1) எண் : 403 பள்ளிக்கல்வித் (ப.க.5(1) துறை நாள் : 29.05.2018-ல் 2018-19-ம் ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் பெறுபவர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முந்தைய 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரம் அந்தந்த ஆண்டுகளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணைகளில் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.*


*⚡இந்நிலையில் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் பணிமாறுதல் பெற்றவர்கள் இவ்வாண்டு பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருப்பது ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்படி 3 ஆண்டுகள்  என்ற நிபந்தனையை ஆசிரியர்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்திட அரசுக்கு தாங்கள் பரிந்துரைத்திட மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் வேண்டுகிறோம்.*



*⚡கடந்த ஆண்டு (2018-19) மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் பணிநிரவலில் சென்றவர்கள், பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மற்றும் புகார்களின் பேரில் நிர்வாகக் காரணம் கூறி பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் தவிர பிற நிர்வாகக்காரணங்களால் பணிமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் என்ற நிபந்தனையைத் தளர்த்தி இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கி உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*



*⚡அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய வாரியாக அனைத்து வகை ஆசிரியர் பணிநிலையிலும் 01.06.2019 அன்றுவரை காலிப்பணியிடங்களின் விவரப்பட்டியலை முழுமையாக இணையதளத்தில் வெளியிட்டு உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 23 June 2019

*ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் தவறான பதிவுகள் திருப்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலருக்கு கண்டனம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயற்குழு தீர்மானம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_23.html



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் _தோழர்.மாலா_ தலைமையில் நடந்தது.*


*⚡மாநிலத் துணைத்தலவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*

*_மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர்.*


*⚡மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.*


*⚡மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_*


*⚡மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஞான அற்புதராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஆரோக்கியராஜ்,_*


*⚡மாவட்ட துணை செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்_ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*


*_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._*


*🌟எஸ்.புதூர் வட்டாரம் மேனாள் செயலாளர் _திரு.சுதர்சன்,_ கல்லல் வட்டாரப் பொருளாளர் _திரு.ஆரோக்கிய லூயிஸ் லெவே_ அவர்களின் தாயார் _திருமதி.சேசம்மாள்,_ தமிழ்நாடு ஆங்கில மொழியாசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் _திரு.சேசு லூயிஸ் ராஜ்_ ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தல்,*


*🌟அங்கன்வாடிகளில் முன்பருவக்கல்விக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளுக்கு முரணாக திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை வட்டாரங்களில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் மாற்றுப்பணி உத்தரவை திரும்பப்பெற வேண்டும்,*


*🌟அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளுக்கு முரணாக பணிப்பதிவேடுகளில் தவறான பதிவுகளை மேற்கொண்டு வருவதோடு, உண்மைக்கு புறம்பான செய்திகளை கல்வித்துறைக்கு தெரிவித்து ஆசிரியர் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் திருப்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய வழிகாட்டுதல்களை வட்டாரக்கல்வி அலுவலருக்கு வழங்கிட வேண்டும்,*



*🌟26.11.2018 அன்று நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டதில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்துள்ளதால் அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 17(ஆ) குற்ற குறிப்பாணையை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்,*


*🌟ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு விலக்கிக்கொள்வதோடு, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,*


*🌟பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்காததால் மாணவர்களின் கல்வி நலன் வெகுவாக பாதித்துள்ளதை தமிழக அரசு உணர்ந்து விரைவாக பாடப்புதகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,*


*🌟மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் மீது கருத்துக்கூறுவதற்கு காலகெடுவை கூடுதலாக மூன்று மாதங்கள் நீட்டிப்பதோடு, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கல்வித்துறை நடத்திட வேண்டும்,*


*🌟அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசு நிதி சாராது பல உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியமைக்கும், பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுத்து அவர்களது உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமைக்காகவும் இவ்வாண்டிற்கான சோழன் உலக சாதனைப்புத்தக விருது பெற்றுள்ள மாவட்ட துணைத்தலைவர் _திருமதி சி.மாலா_ அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*




🤝தோழமையுடன்;


*_ஆ.முத்துப்பாண்டியன்_*

*மாவட்டச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*சிவகங்கை மாவட்டம்*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday 20 June 2019

*தேர்வு நிலை/சிறப்பு நிலை பெறுவதற்கு உண்மைத்தன்மை தேவையில்லை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_20.html


*🌟தேர்வு நிலை/சிறப்பு நிலை பெறுவதற்கு 10-12ம் வகுப்புகளுக்கான உண்மைத்தன்மை பெறப்பட வில்லை என்றாலும் தேர்வு நிலை/ சிறப்பு நிலை வழங்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறை முதன்மை செயலாளர் உத்தரவுப்படி விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆணை....*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Saturday 15 June 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்ட முடிவு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_15.html


*_மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண் : 11 நாள் : 15.06.2019_*


⚔🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 15.06.2019 சனிக்கிழமை மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரைவேற்புரையாற்றினார்.*



⚔🛡⚔

*🌟கூட்டத்தில் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அரசுப்பள்ளிகளை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகள், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் சாதக பாதகங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கிப் பேசினார்.*



⚔🛡⚔

*🌟கூட்டத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆன நிலையிலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்காதது மாணவர்களின் கல்வி நலனை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, விரைந்து புதிய பாடப்புத்தகங்கள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறது.*



⚔🛡⚔

*🌟நடுநிலைப்பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உபரியாக இல்லாத ஆசிரியர்களை நியமிப்பதாலும், மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஈராசிரியர் பள்ளிகளிலிருந்து ஒரு ஆசிரியரை அங்கன்வாடிக்கு நியமனம் செய்வதாலும், நூற்றுக்கணக்கில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ள ஒன்றியங்களிலும் அங்குள்ள இடைநிலை ஆசிரியர்களை  அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்வதாலும் தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகள் வரை மாணவர்களின் கல்விநலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தைக் கைவிட்டு அங்கு முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி கிராமபுறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவது என்பது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும் செயல் என்பதால், அந்நடவடிக்கையில் தமிழக அரசு உடன் நிறுத்துவதோடு, அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை மாநிலச் செயற்குழு வலியுறுத்தியது.*



⚔🛡⚔

*🌟மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் மீது கருத்துக்கூறுவதற்குரிய  காலக்கெடுவை  கூடுதலாக மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும், வரைவு அறிக்கையின் மொழியாக்கத்தை அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசே வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து அவர்களது குடும்ப நலனையும், அவர்களது எதிர்கால வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟சங்கத்தின் வரவு - செலவு தொடர்பாக மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ விளக்கிப் பேசினார். துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

மாநில பொதுச்செயலாளர்,

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 14 June 2019

*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் (13.06.2019)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/13062019.html


*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் (13.06.2019) வியாழக்கிழமை அன்று சென்னையில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தில் நடைபெற்றது.* 


*🌟இக்கூட்டத்திற்கு திரு.சி.சேகர், திரு.கு.வெங்கடேசன், திரு.அ.மாயவன் ஆகியோர் கூட்டுத்தலைமை ஏற்றனர்.*


*_கூட்டத் தீர்மானங்கள்:_*


*⚡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என சுமார் 5400 பேர்களுக்கு 17பி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களை பணியிட மாறுதல் பாதிப்புக்கு உள்ளாகப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் 17பி  மற்றும் FIR ஆகியவற்றை ரத்து செய்து, பதவி உயர்வு வழங்குவதற்கும், பணியிட மாறுதல் செய்யப்பட்டோரை மீண்டும் முன்னர் பணியாற்றிய இடத்திலேயே மீளப் பணியமர்த்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.*


* ⚡ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.மு.சுப்பிரமணியன் அவர்களை அவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளான 31.05.2019 அன்று தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதை ஜாக்டோ ஜியோ வன்மையாக கண்டிக்கிறது. அரசுப்பணியில் 32 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற சேவையினை மேற்கொண்ட திரு.மு.சுப்பிரமணியன் அவர்களை ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார் என்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அவருக்கு தற்காலிக பணிநீக்கத்தினை அளித்துள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்களும் இந்த விஷயத்தில் தலையிட்டு, திரு.மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்து செய்து அன்னாருக்கு முழுமையான ஓய்வூதியப் பலன்களை வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் என ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*⚡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் தருமபுரி மண்டல மீன்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மீன்வள மேற்பார்வையாளராக (தரம் II) ஆக பணியாற்றும் திரு.கா.சின்னசாமி அவர்கள் கடந்த 28.01.2019 அன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, இதுநாள் வரை அவரது தற்காலிக பணிநீக்கம் இரத்து செய்யப்படாமல் உள்ளது. மாண்புமிகு பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் மீன்வள துறை அமைச்சர் அவர்கள் திரு.க.சின்னசாமி அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்துசெய்யுமாறு ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ இரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பதம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.*


*⚡13.06.2019 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இல்லாததால் 19.06.2019 அன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் பழிவாங்கும் நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது, இட மாறுதல்களை இரத்து செய்வது, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர்களையும், அரசுத்துறை செயலாளர்களையும் சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.*


*⚡19.062019 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடத்துவதற்கான தேதி இறுதிசெய்யப்படும். ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்.*


🤝தோழமையுடன்;


*_மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,_*

*ஜாக்டோ ஜியோ.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм