Tuesday, 25 June 2019

*அங்கன்வாடிகளில் LKG, UKG நியமனம், பொதுமாறுதல் கலந்தாய்வு குறித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் உடனான சந்திப்பு நிகழ்வு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/lkg-ukg.html


*⚡அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - மாநிலம் முழுவதும் பல்வேறு நடைமுறைகள் விதிமீறல்கள் நடந்துள்ளது, அவை ஒரே சீரான  நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டியும்,*


*⚡அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவண செய்திட வேண்டியும்,*

*⚡அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் உருவாகும்போது மீண்டும் பணிமாறுதல் வழங்க வேண்டியும்,*

*⚡2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள்  ஆசிரியர்களின் நலன் கருதி திருத்தியமைத்திட வேண்டியும்,*

*⚡மேலும் ஆசிரியர்கள்  பிரச்சினைகள் தொடர்பாகவும்,*


*⚡இன்று (25/06/2019) மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களை,*


*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பாக,*


*🛡மாநில தலைவர் _தோழர். மூ.மணிமேகலை_ அவர்களும்,*

*🛡மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ அவர்களும்,*

*🛡மாநில பொருளாளர் _தோழர். ஜோதிபாபு_ அவர்களும்,*

*🛡மாநில துணை பொதுச்செயலாளர் _தோழர். கணேசன்_ அவர்களும்,*


*⚡சந்தித்து கோரிக்கைமனு அளித்து கோரிக்கையின் சாரம்சத்தை எடுத்துக்கூறினார்கள்.*


*_கோரிக்கையின் முழு விபரம்:_*

🛡⚔🛡

*🌟அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் - மாநிலம் முழுவதும் பல்வேறு நடைமுறைகள் விதிமீறல்கள் - ஒரே சீரான நடைமுறையைக் கடைப்பிடிக்க வேண்டுதல்:*



*⚡தமிழகம் முழுவதும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்டுள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் துவக்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில்  தகுதிவாய்ந்த முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை பணிநியமனம் செய்ய வேண்டும் என்பது எங்களது இயக்கத்தின் கோரிக்கையாகும்.  ஆனால் நடைமுறையில் தமிழ்நாடு முழுவதும் மேற்படி அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.*


*⚡அவ்வாறு நியமிக்கப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் எவ்விதமான விதிமுறைகளுக்கும் உட்படாமலும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையின் தீர்ப்பிற்கு முரணாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.*


*⚡இவ்விஷயத்தில் பல மாவட்டங்களில் கல்வித்துறையின் சார்நிலை அலுவலர்கள் விருப்பு வெறுப்போடும் தன்னிச்சையாகவும் ஆதாயம் பெற்றுக்கொண்டும் செயல்பட்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு முறையிலும் ஒரே மாவட்டத்திற்குள் வெவ்வேறு ஒன்றியங்களில் வெவ்வேறு முறையிலும் கல்வித்துறை அலுவலர்கள் செயல்பட்டுள்ளனர்.*



*⚡மாநிலம் முழுவதும் ஒரு திட்டத்தை அமல்படுத்துகிறபோது மாநிலம் முழுவதும் ஒரே சீரான விதிமுறைகளைக் கடைபிடிப்பது என்பதுதான் சரியானதாக இருக்கும். கடந்த காலங்களில் அவ்வாறுதான் நடைபெற்றுள்ளது என்பதைத் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.* 


*⚡அங்கன்வாடி  LKG, UKG வகுப்புகளில்  இடைநிலை ஆசிரியர் நியமனத்தில் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கடைபிடிக்கப்பட்டுள்ள நடைமுறைகள் பின்வருமாறு:-*


*👉1. உபரிப் பணியிடத்தில் பணியாற்றுபவர் (அவர் ஒன்றியத்தில் மிக மூத்தவராக இருந்தாலும்)*


*👉2. உபரிப் பணியிடத்தில் பணியாற்றுபவர்களில் இளையவர்*

*👉3. சார்ந்த பள்ளியில் (LKG UKGதுவக்கப்படும் பள்ளி) இளையவர்* 

*👉4. ஒன்றியத்தில் இளையவர்*

*👉5. பத்து மாணவர்களுக்கும் குறைவாக உள்ள ஈராசிரியர் பள்ளியில் பணியாற்றுபவர்*



*👉6.பத்துக்கும் குறைவான மாணவர்கள் எண்ணிக்கை கொண்ட பல ஈராசிரியர் பள்ளிகள் இருந்தால் அந்தப்பள்ளிகளில் பணியாற்றுபவர்களில் பணியில் இளையவர்*



*👉7. ஏற்கனவே நூற்றுக்கணக்கில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடம் உள்ள ஒன்றியத்தில் பணியாற்றும் உபரியற்ற இடைநிலை ஆசிரியர்*



*👉8. நிதியுதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் (பல நிதியுதவிப் பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் இருந்தால் கல்வித்துறை அலுவலர்களின் விருப்பப்படி)*


*👉9.நேரடி மானியம் பெறும் உதவிபெறும் பள்ளிகளின் உபரி ஆசிரியர்கள் (கல்வித்துறை அலுவலர்கள் விருப்பப்படி)*


*👉10. ஒரே அங்கன்வாடிக்கு 3 இடைநிலை ஆசிரியர்கள் சுழற்சிமுறையில் நியமனம் (மாதம் ஒருவர் சென்றுவர வேண்டும்)*



*👉11. உபரி இடைநிலை ஆசிரியர்கள் உள்ளதாகக் கணக்கிடப்பட்ட பள்ளிகளில் இவ்வாண்டு   (2019-20) மாணவர் எண்ணிக்கை உயர்ந்ததாலோ அல்லது அப்பள்ளியில் இடைநிலை ஆசிரியர்கள் பணிநிறைவு பெற்றதாலோ ஏற்பட்ட நிலைமை கணக்கில் கொள்ளப்படாமல் உபரி ஆசிரியர்கள் என்று கூறி அங்கன்வாடிகளில் நியமனம்*


*👉12. ஒன்றியப் பள்ளிகளில் உபரிப்பணியிடம் இருந்தும் உதவிபெறும் பள்ளிகளிலிருந்து நியமனம்*


*⚡மேற்கண்டவாறு பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்பட்டதால் மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் குழப்பநிலையும் விதிமீறல்களும் நடைபெற்றுள்ளன. இதனால் நூற்றுக்கணக்கான இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றி மாநிலம் முழுவதும் ஒரேசீரான விதிமுறைகளை வெளியிட்டு அங்கன் LKG UKG வகுப்புகளுக்கு ஆசிரியர்களை நியமித்திடவும் தவறான விதிமுறைகளைப் பின்பற்றி LKG UKG  வகுப்புகளுக்கு நியமனம் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர்களை அதிலிருந்து விடுவித்து அவர்கள் முன்பு பணியாற்றிய பள்ளிகளுக்கு அனுப்பிடவும் பணிநிலையில் மூத்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நீக்கிடவும் மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*

🛡⚔🛡

*🌟அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள ஆவண செய்திட வேண்டுதல்:*



*⚡தமிழகம் முழுவதும் நடுநிலைப்பள்ளிகளுடன் இணைக்கப்பட்ட 2381 அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள LKG UKG  வகுப்புகளில் நியமனம் செய்யப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் உபரியாக இல்லாத இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதலில் செல்ல வாய்ப்பளிக்கப்பட வேண்டும். இது தொடர்பாக 2019-20 ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான பார்வையில் கண்ட அரசாணையில் எதுவும் தெரிவிக்கப்படாதது, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மத்தியில் அச்சத்தையும், வேதனையையும் ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்படி ஆசிரியர்கள் தாங்கள் முன்பு பணியாற்றிய பள்ளியின் முதுநிலையின்  அடிப்படையில் 2019-20 பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் வகையில் தாங்கள் சார்நிலை அலுவலர்களுக்கு தெளிவுரை வழங்கி உதவிட மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் வேண்டுகிறோம்.*



🛡⚔🛡

*🌟அங்கன்வாடி LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் உருவாகும்போது மீண்டும் பணிமாறுதல் வழங்க வேண்டுதல்:*



*⚡2019-20 ஆசிரியர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணையின் பத்தி 5(III)-ல் “2018-19 ஆம் கல்வியாண்டில், தொடக்கக்கல்வித்துறையில் ஒன்றியம்விட்டு ஒன்றியத்திற்கு பணிநிரவல் செய்யப்பட்டவர்கள், தாய் ஒன்றியத்தில் உள்ள  காலிப்பணியிடங்களுக்கு மாறுதல் பெற ஏதுவாக இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி வழங்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.*


*⚡இதேபோன்று அங்கன்வாடிகளில் LKG, UKG வகுப்புகளில் நியமிக்கப்பட்டுள்ள உபரி இடைநிலை ஆசிரியர்கள் இவ்வாண்டே (2019-20) அவர்களுடைய சொந்த ஒன்றியத்தில் காலிப்பணியிடம் அல்லது தேவைப்பணியிடம் உருவாகும் நிலையில் பார்வையில் கண்ட அரசாணையின்படி அவர்களுக்கு அப்பணியிடத்தில் பணிமாறுதல் அளித்திட தாங்கள் உரிய நடவடிக்கை மேற்கொண்டு உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


🛡⚔🛡

*🌟 2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் - ஆசிரியர்களின் நலன் கருதி திருத்தியமைத்திட வேண்டுதல்:*



*⚡அரசாணை (1டி) எண் : 218 பள்ளிக்கல்வி (ப.க 5(1)த்துறை நாள் : 20.06.2019 ன் படி அரசாணையில் 2019-20 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளன. அதில் ஆசிரியர்களின் நலன் கருதி கீழ்கண்டவாறு திருத்தங்களை வெளியிட்டு உதவிட அரசுக்கு பரிந்துரைத்திட தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


*⚡அரசாணையின் பத்தி 9(i)-ல்  2019-20 பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள தற்போது பணிபுரியும் பள்ளியில் 01.06.2019 நிலவரப்படி 3 ஆண்டுகள் பணிபுரிந்திருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆசிரியர்களின் நலன்களைப் பாதிப்பதாக உள்ளது.  காரணம் இவ்வாண்டு கலந்தாய்வில் கலந்துகொள்ள வேண்டுமென்றால் 2015-2016 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் கலந்து கொண்டு மாறுதல் பெற்றவர்கள் மட்டுமே முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  ஏனெனில்  கடந்த 2016-2017 ம் ஆண்டுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு 2016 ஆகஸ்டு மாதம்தான் நடைபெற்றுள்ளது.*



*⚡மேலும், கடந்த ஆண்டு(2018-19) பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணை (டி1) எண் : 403 பள்ளிக்கல்வித் (ப.க.5(1) துறை நாள் : 29.05.2018-ல் 2018-19-ம் ஆண்டில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொண்டு மாறுதல் பெறுபவர்கள் அடுத்த மூன்றாண்டுகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதற்கு முந்தைய 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொண்டு மாறுதல் ஆணை பெற்றவர்களுக்கு அடுத்த மூன்றாண்டுகளுக்கு பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள இயலாது என்ற விவரம் அந்தந்த ஆண்டுகளுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பான அரசாணைகளில் தெரிவிக்கப்படவில்லை. அவ்வாறு தெரிவிக்கப்பட்டிருந்தால் அதற்கேற்ப கலந்தாய்வில் இடங்களைத் தேர்வு செய்யும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கும்.*


*⚡இந்நிலையில் 2016-17, 2017-18 ஆகிய ஆண்டுகளில் பணிமாறுதல் பெற்றவர்கள் இவ்வாண்டு பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள இயலாது என தெரிவிக்கப்பட்டிருப்பது ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே, மேற்படி 3 ஆண்டுகள்  என்ற நிபந்தனையை ஆசிரியர்கள் நலன் கருதி மறுபரிசீலனை செய்திட அரசுக்கு தாங்கள் பரிந்துரைத்திட மாநில அமைப்பின் சார்பில் கனிவுடன் வேண்டுகிறோம்.*



*⚡கடந்த ஆண்டு (2018-19) மற்றும் அதற்கு முந்தைய ஆண்டுகளில் பொதுமாறுதல் கலந்தாய்வில் பதவி உயர்வு பெற்றவர்கள் மற்றும் பணிநிரவலில் சென்றவர்கள், பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டதால் நிர்வாக மாறுதல் செய்யப்பட்டவர்கள் மற்றும் புகார்களின் பேரில் நிர்வாகக் காரணம் கூறி பணிமாறுதல் செய்யப்பட்டவர்கள் தவிர பிற நிர்வாகக்காரணங்களால் பணிமாறுதல் செய்யப்பட்டவர்களுக்கு 3 ஆண்டுகள் என்ற நிபந்தனையைத் தளர்த்தி இவ்வாண்டு (2019-20) பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கி உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*



*⚡அனைத்து மாவட்டங்களிலும் ஒன்றிய வாரியாக அனைத்து வகை ஆசிரியர் பணிநிலையிலும் 01.06.2019 அன்றுவரை காலிப்பணியிடங்களின் விவரப்பட்டியலை முழுமையாக இணையதளத்தில் வெளியிட்டு உதவிட மாநில அமைப்பின் சார்பில் தங்களைக் கனிவுடன் வேண்டுகிறோம்.*


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: