Saturday 27 July 2019

*தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேசியக் கல்விக்கொள்கையின்மீது தேசநலனில் அக்கறை கொண்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணிக்கு கூடுதல் அக்கறையும், பொறுப்புணர்வும் உண்டு - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_27.html


*பொதுச்செயலாளரின் சுற்றறிக்கை எண்  : 20  நாள்  : 27.07.2019*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்.*



*🌟இன்றைய நிலையில் இந்தியா முழுவதும் மிகப்பெரிய விவாதத்தை ஏற்படுத்தியிருப்பது தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கை தொடர்பானதுதான். டாக்டர்.கஸ்தூரி ரங்கன் அவர்கள் தலைமையிலான குழுவின் 484 பக்கங்கள் கொண்ட வரைவு அறிக்கையின் மீது கருத்துக்களைத் தெரிவிக்க 6 மாதகால அவகாசம் கோரி பல்வேறு அரசியல் கட்சிகளும், நம்மைப் போன்ற கல்வி நலனில் அக்கறை கொண்ட சமூக நல அமைப்புகளும் விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து கூடுதலாக ஒரு மாதகால அவகாசத்தை மட்டுமே நீட்டித்துள்ளது.*


*🌟30 கோடி மாணவர்களின் கல்வி தொடர்பான பிரச்சனையில் அவசர கோலத்தில் முடிவுகள் எடுப்பது என்பதும், தேசத்தின் மிக மிக முக்கியமான கொள்கையின்மீது குறுகிய கால அவகாசத்தில் முடிவுகள் எடுப்பது என்பதும் ஏற்புடையதல்ல.  1985க்குப் பின்பு 34 ஆண்டுகள் கழித்து தேசத்தின் கல்விக்கொள்கை தொடர்பான இந்நிகழ்வில் மத்திய அரசு அவசரம் காட்டுவதை விடுத்து இன்னும் கூடுதலாக 6 மாதகாலம் அவகாசம் கொடுப்பதே சரியானது என்பதே நமது  அமைப்பின் கருத்தாகும். தேசியக் கல்விக்கொள்கை – 2019 ன் வரைவு அறிக்கை தேசத்தின் பன்முகத்தன்மைக்கு ஊறு விளைவிக்கக் கூடிய, கல்வியை வணிகமயமாக்கக்கூடிய, ஏழை எளிய  குழந்தைகளின் கல்வி நலனுக்கு உதவாத, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி நலனைப் பாதிக்கக்கூடிய, இலவசக்கல்வி என்பது எதிர்காலத்தில் எட்டாக்கனியாக மாறக்கூடிய, ஒரு சார்புத் தன்மை கொண்டதாக, இடைவிடாத தேர்வுகளின் மூலம் மாணவர்களின் தொடர்க்கல்விக்கும், உயர்கல்விக்கும் தடை ஏற்படுத்தக்கூடியதாக, இந்தியா என்ற பரந்துவிரிந்த தேசத்தின் மதச்சார்பற்ற தன்மைக்கு பங்கம் ஏற்படுத்தக் கூடியதாக, இது போன்ற இன்னும் பங்கம் ஏற்படுத்தக்கூடிய  பல்வேறு கூறுகளைக் கொண்டதாக அமைந்துள்ளது.*


*🌟தேசத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கக்கூடிய தேசியக் கல்விக்கொள்கையின்மீது தேசநலனில் அக்கறை கொண்ட நம்மைப்போன்ற  ஆசிரியர் இயக்கங்களுக்கு கூடுதல் அக்கறையும், பொறுப்புணர்வும் உண்டு.  1985-ல் திரு.ராஜீவ்காந்தி அவர்கள் தலைமையிலான மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய கல்விக்கொள்கை தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில்  அமைக்கப்பட்ட குழு அதை ஆய்வு செய்து சமூக அக்கறையோடு வெளியிட்ட கருத்துக்கள் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியாரின் “விடுதலை” பத்திரிகையில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  பார்வையில் புதிய கல்வி என்ற தலைப்பில்*


*⚡1. புதிய கல்விக் கொள்கை சித்தரிக்கும் அவலம்*

*⚡2. கட்டாய இலவசக்கல்விக்கு மூடுவிழா*

*⚡3. தொழிலாளர்களைச் சுரண்டவிடும் அநியாயம்*

*⚡4. பதினெட்டாம் நூற்றாண்டுக்குப் - பின்னோக்கிய உப  தலைப்புகளில் 4 வாரங்கள் வெளிவந்த நிகழ்வு என்பதும், அதைத் தொடர்ந்து திருச்சியில் “ தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பார்வையில் புதிய கல்விக்கொள்கை” என்ற பெயரில் மாநில அளவில் மாபெரும் கருத்தரங்கம் நடத்திய நிகழ்வு என்பதும் வரலாற்றுப் பதிவுகள் ஆகும்.  தேச முக்கியத்துவம் வாய்ந்த இதுபோன்ற பிரச்சனைகளில் தனது நுணுக்கமான சமூக அக்கறையை வெளிப்படுத்துவதில் இணையற்ற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


*🌟இன்றைய தேசியக்கல்விக்கொள்கை-2019 வரைவு அறிக்கை தொடர்பாகவும் நமது பேரியக்கத்தின் மாநில செயற்குழு முடிவின்படி 7 பேர் கொண்ட குழுவை அமைத்து, அதன் அறிக்கை இறுதிப்படுத்தப்பட்டு உரிய கால அவகாசத்திற்குள் மத்திய, மாநில அரசுகளுக்கு நமது இயக்கக் கருத்துக்கள் உரிய  முறையில் அனுப்பப்படும் நடவடிக்கைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன.*


*🌟21.07.2019 அன்று மதுரையில் நடைபெற்ற இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்  (STFI) தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டத்தில் தேசியக்கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கை  தொடர்பாக மாவட்டங்களில் கருத்தரங்குகளை நடத்தக் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  அதன்படி நம் பேரியக்கத்தின் மாவட்டச் செயலாளர்கள்  STFI-ன் இணைப்புச் சங்கங்களான நம் தோழமைச்சங்கங்களின் மாவட்ட நிர்வாகிகளை அணுகி, உரியமுறையில் மாவட்ட அளவிலான இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் (STFI) கூட்டங்களைக் கூட்டி, தோழமைச்சங்க நிர்வாகிகளுடன்  தோளோடு தோள் நின்று STFI சார்பில்  மாவட்ட அளவிலான கருத்தரங்குகளை நடத்திட முனைப்புடன் களப்பணியாற்றிட தோழமையுடன் கேட்டுக்கொள்கிறோம்.*


*🌟மேலும், தமிழ்நாட்டு ஆசிரியர்களின் நம்பிக்கை நட்சத்திரமாக ஒளிவீசிக்கொண்டிருக்கும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி உருவான ஆகஸ்டு-2ஆம் நாளை தமிழகம் முழுவதும் 02.08.2019 அன்று எழுச்சியுடன் கொண்டாட அனைத்து மாவட்ட, வட்டார, நகரக் கிளைகளையும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.* 


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 26 July 2019

*ஈரோடு வட்டாரக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநரிடம் முறையீடு...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_26.html


*☀️ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் திரு.கோபால் அவர்கள் ஆசிரியர்களின் வருமானவரி கணக்கு தொடர்பாக 24Q படிவம் தாக்கல் செய்வதற்கு என்று கூறி ஒவ்வொரு ஆசிரியரிடமும் தலா ரூ.200/ வீதம் வெளிப்படையாக வசூல் செய்து வருகிறார். தனிநபர் வருமானவரி தாக்கல் (E-FILING செய்தல் பணிக்காக சுற்றறிக்கை மூலம் அறிவித்து தொகை நிர்ணயம் செய்து ஆசிரியர்களிடம் பணம் வசூலித்து வருகிறார்.*


*☀️இது தொடர்பாக எங்களது இயக்க பொறுப்பாளர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.கோபால் அவர்களிடம் நேரில் முறையிட்டபோது அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று அவமரியாதையாக பேசியுள்ளார்.*


*☀️மேற்படி வட்டாரக் கல்வி அலுவலரின் இதுபோன்ற விதிகளுக்கு புறம்பான செயல்கள் கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் என்பதால் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு தக்க நடவடிக்கை மேற்கொண்டு உதவிட கனிவுடன் வேண்டுகிறேன்.*


🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday 25 July 2019

*உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தற்காலிக சான்றிதழ் (Provisional Certificate) போதுமானது - CM CELL தகவல்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/provisional-certificate-cm-cell.html


*🌟உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெற தற்காலிக சான்றிதழ் (Provisional Certificate) போதுமானது, மேலும் படிப்பு முடிந்த இரண்டாண்டு காலத்திற்குள் பட்டயச்சான்று பெற்று சமர்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்படுகிறது.*


*⚡ _முதன்மைக்கல்வி அலுவலர், ஈரோடு. ந.க.எண்-720/சி1/2019, நாள்:   .07.2019._*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*EMIS இணையதளத்தில் மாணவர்களின் புகைப்படம் ஜூலை 31 ந் தேதிக்குள் பதிவேற்ற வேண்டும் - பள்ளிக்கல்வி இயக்குநர்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/emis-31.html


*🌟பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடும் பணிக்காக மாணவ, மாணவியரின் விபரங்களை EMIS - ன் மூலம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவ, மாணவியரின் புகைப்படம் உட்பட சில விபரங்கள் முழுமையாக உள்ளீடு செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.*


*🌟எனவே இதன்மீது தனிகவனம் செலுத்தி விடுபட்ட மாணவ, மாணவியரின் புகைப்படம் உட்பட அனைத்து விபரங்களையும், 1,6,9,11 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களின் புகைப்படம் உட்பட அனைத்து விபரங்களையும் 31/07/2019 க்குள் EMIS ல் முழுமையாக உள்ளீடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார். 



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 21 July 2019

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ் மாநிலக்குழு கூட்டமுடிவுகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_21.html


*🌟இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) தமிழ் மாநிலக்குழு  கூட்டம் 21.07.2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, காக்கா தோப்பு, மூட்டா அலுவலகத்தில் திரு.ச.மயில், அவர்கள் தலைமையில் நடைபெற்றது*


*கூட்டமுடிவுகள்*



*_தீர்மானம் எண் : 1_*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற அகில இந்தியப் பெண்ணாசிரியர்கள் மாநாட்டின் வரவு – செலவு விவரங்கள் எழுத்துமூலமான அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டு இம்மாநிலக்குழுவால் ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*



*_தீர்மானம் எண் : 2_*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டின்  வரவு- செலவு அறிக்கையின்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள விகிதாச்சாரப்படி நிதிப் பகிர்வு வழங்காத இணைப்புச் சங்கங்களும், கூடுதல் நிதிப் பகிர்வு செலுத்த வேண்டிய இணைப்புச் சங்கங்களும் நிதி நிலுவைகளை விரைந்து அளித்திட இம்மாநிலக்குழு ஏகமானதாகக் கேட்டுக்கொள்கிறது.*



*_தீர்மானம் எண் : 3_*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) இணைப்புச் சங்கங்மான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.ரவிச்சந்திரன் அவர்கள் தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக எவ்விதமான அடிப்படை முகாந்திரமுமின்றி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு மேற்படி தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்து திரு.மா.ரவிச்சந்திரன் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) சார்பில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்ட நடவடிக்கைகளில் வெகுவிரைவில்  ஈடுபட இம்மாநிலக்குழு ஏகமானதாகத் தீர்மானிக்கிறது.*



*_தீர்மானம் எண் : 4_*


*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) மத்திய செயற்குழு(CEC) தீர்மானித்தபடி, பெண் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பை 23.09.2019 மற்றும் 24.09.2019 ஆகிய இருநாட்கள் திண்டுக்கல்லில் நடத்துவதெனவும், பயிற்சி வகுப்பிற்கான செலவினங்களை நடைமுறையில் உள்ள விகிதாச்சாரப்படி இணைப்புச்சங்கங்கள் பகிர்வு செய்து கொள்வதெனவும், மத்திய செயற்குழு(CEC) தீர்மானித்தபடி பயிற்சி வகுப்பில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 45 பெண் ஆசிரியப் பிரதிநிதிகளும், தமிழ்நாட்டின் சார்பில் 20 பெண் ஆசிரியப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதெனவும் தீர்மானிப்பதோடு, அவசியம் கருதி தமிழ்நாட்டின் சார்பில் கூடுதலாக 14 பிரதிநிதிகளை (20+14=34) அனுமதிப்பதெனவும், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் 34 பிரதிநிதிகளை கீழ்க்கண்ட எண்ணிக்கையில் இணைப்புச் சங்கங்கள் அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*

*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 10*

*⚡தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் - 05*

*⚡தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 05*

*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் - 02*

*⚡தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - 02*

*⚡தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் - 02*

*⚡தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் - 02*

*⚡தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 02*

*⚡தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிலாசிரியர் கழகம் - 02*

*⚡தமிழ்நாடு ஆசிரியப் பயிற்றுநர் முன்னேற்றச் சங்கம் -02*



*_தீர்மானம் எண் : 5_*


*🌟தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை தொடர்பாக இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 10.08.2019 மற்றும் 11.08.2019 ஆகிய இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தன்று மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவதெனவும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டக்கிளைகள் கூடி அதற்குரிய ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திடவும் இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது.  அதனைத் தொடர்ந்து இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கை நடத்துவதெனவும் இம்மாநிலக்குழு தீர்மானிக்கிறது.*



🤝தோழமையுடன்;



*_ச.மயில்,_*    


*(அமைப்பாளர்)*

*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI)*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






Tuesday 16 July 2019

*ஜாக்டோ ஜியோ நிர்வாகிகளை பேச்சுவார்த்தைக்கு காவல்துறையினர் மூலம் தலைமைச்செயலகத்திற்கு அழைப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_16.html


*🌟ஜாக்டோ ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நடத்திய உண்ணாவிரதத்தில் எடுக்கப்பட்ட  முடிவுகளின் அடிப்படையில் இன்று முதல்வர் அவர்களை சந்தித்து முறையிடுவதற்காக ஜாக்டோ ஜியோ உயர்மட்டக்குழு திட்டமிட்டுக் கொண்டிருக்கும் பொழுது காவல்துறையினர்,*


*🌟 _அரசு மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை சீர்திருத்தச் செயலாளர்_   அவர்களை சந்திக்குமாறு மாநில ஒருங்கிணைப்பாளர்களை தலைமைச் செயலகத்திற்கு  அழைத்துச் சென்றுள்ளார்கள்.* 


*⚡ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர் _திரு.மோசஸ்_ அவர்களையும்,*


*⚡மாநில ஒருங்கிணைப்பாளர்களான _திரு.அ.மாயவன்_ அவர்களையும்,*

 

*⚡_திரு.வெங்கடேசன்_ அவர்களையும்,*

 

*உள்ளிட்டோரை  தலைமைச் செயலகம்  அழைத்துச் சென்றுள்ளனர்,*



*🌟தலைமை செயலகத்தில் அரசு மற்றும் பணியாளர் நிர்வாகத்துறை சீர் திருத்தச் செயலாளர் அவர்களை ஜாக் டோஜியோ தலைவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியதை அடுத்து,*


*🌟தோழர் மோசஸ், திரு.மாயவன்,  திரு.வெங்கடேசன் உள்ளிட்ட நிர்வாகிகளை காவல்துறையினர் _Inspector General (IG)_ அவர்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர்.*



*🌟ஜாக்டோ ஜியோ டி.ஜி.பி. சந்திப்பில் கடந்த இரண்டு வாரங்களாக ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் மற்றும் பொறுப்பாளர்களின் கடந்த இரண்டு ஆண்டு கால விடுப்புகள் பற்றி உளவுத்துறை விசாரித்ததன் காரணம் கேட்கப்பட்டது.*


*🌟டி.ஜி.பி அவர்கள் அது முற்றிலும் நிறுத்தப்பட்டு விட்டது என பதில் கூறியுள்ளார்.*


*🌟ஜாக்டோ ஜியோ வேலை நிறுத்தப் போராட்டத்தின்போது ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் மீது பொய்யான காரணங்களைக் கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்பட்டது. அதன்மீது உரிய விசாரணை செய்து நடவடிக்கை மேற்கொண்டு சரிசெய்வதாக டி.ஜி.பி கூறியுள்ளார்.*


🤝தோழமையுடன்;


*_ச.மோசஸ்,_*

*நிதிகாப்பாளர்,*

*ஜாக்டோ ஜியோ.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*_TNTP (TAMILNADU TEACHERS PLATFORM) login for HMs:_*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/tntp-tamilnadu-teachers-platform-login.html


*🌟தலைமை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே வழங்கப்பட்ட login ஐ பயன்படுத்தி TNTP - ல் login செய்துகொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது.*


*⚡(User name : HM's 17 digit id, Password : HM's mobile number)*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Monday 15 July 2019

*நெல்லை மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி CEO உடனான சந்திப்பு - செய்தி துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/ceo.html


*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நெல்லை மாவட்ட கிளையின் சார்பில் இன்று 15.07.2019 திங்கட்கிழமை  மாலை 05.15 மணிக்கு*

  

*⚡01.அங்கன்வாடி மையங்களில் LKG,UKG வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்களை ஒதுக்கீடு செய்வதில் மாவட்டம் முழுவதும் அரசாணை:89 மற்றும் தொ.க.இயக்குநர் ஆணையை கவனத்தில் கொண்டு  ஒரே நடைமுறையை பின்பற்றிட வழியுறுத்தியும்*


*⚡02.வள்ளியூர் வட்டார பிரச்சனை குறித்தும் கோரிக்கை மனு அளித்து  மரியாதைக்குரிய*


*🌟 _திருநெல்வேலி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் (CEO)_ அவர்களை சந்தித்து பேசப்பட்டது*


*🌟இதில் மாநில, மாவட்ட, வட்டார பொறுப்பாளர்கள் மற்றும் ஒரு _பெண் பொறுப்பாளர் சேரன்மகாதேவி தோழர்.அமுதா_ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.*



*🌟CEO சந்திப்பில் கலந்து கொண்ட அனைவருக்கும் மாவட்ட கிளையின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.*


🤝தோழமையுடன்...


*_செ.பால்ராஜ்_*

*மாவட்ட செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*திருநெல்வேலி*.



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм






*HOW TO LOGIN TAMILNADU TEACHERS PLATFORM (TNTP)*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/how-to-login-tamilnadu-teachers.html


*_TNPTF அயன் YouTube Channel_*


*_YouTube Demo Video Link:_*

👇👇👇👇👇👇👇👇

https://youtu.be/01OKMU-nVrM


*EMIS & TNTP login opened for all Teachers & BRTEs*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*EMIS Students Photo Edit Step by Step PDF Files*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/emis-students-photo-edit-step-by-step.html



*EMIS Students Photo Edit Step by Step PDF Files கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தில் மாணவர்களின் புகைப்படத்தை பதிவேற்றம் செய்வது எப்படி? PDF Files*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/10bzWyiEacgVBCHzzGqzH_tpa_1IawYx6/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*அனைத்துவகை ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் கல்வித்துறையால் ஏற்படுத்தப்பட்டுள்ள TNTP (Tamilnadu Teachers Platform) இணையதளத்தைப் பயன்படுத்துதல் தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/tntp-tamilnadu-teachers-platform.html



*தொடக்கக்கல்வி துறை ஊராட்சி ஒன்றிய/ நகராட்சி/ தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்குப் பயன்படும் வகையில் TNTP (Tamilnadu Teachers Platform) இணையதளத்தைப் பயன்படுத்துதல் தொடர்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியீடு*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Sunday 14 July 2019

*IFHRMS இல் ஏன் Bill கள் போட வேண்டும்???*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/ifhrms-bill.html


*_IFHRMS இல் Bill கள் போடுவதற்கான காரணங்கள்:_*


*⚡1. இனி சம்பளம் பில் , Contegency bill, Ta bill போட்டுட்டு இருக்னேனு அதிக நாட்கள் எடுக்க முடியாது. எல்லாம் சிறிது நேரத்திலேயே முடிந்து விடும்.*                              


*⚡2. IFHRMS  ல் பில் போட்ட உடனே Token no , ECS நம்பர்  வந்து விடும்.*


*⚡3. இனி Token போடுவதற்கு ம் ECS ஆயிருச்சா என்று பார்ப்பதற்கும் treasury அடிக்கடி செல்ல வேண்டிய அவசியம் இல்லை.* 


*⚡4. Treasury காரங்க நம்மள அலைக்கடிக்க முடியாது.*


*⚡5. நமக்கு சேர வேண்டிய பணம் உடனே கிடைக்கும்.*


*⚡6. Treasury க்கு பணம் கொடுத்து Bill Pass பண்ண வேண்டிய அவசியம் இருக்காது.*


*⚡7.  தேவையில்லாமல் treasury இல் Bill நிறுத்தி வைக்க முடியாது.*


*⚡8. Audit போட வேண்டும் என்றால் உடனே போட வேண்டும் அதுவும் நமது அலுவலகத்தில் இருந்தே IFHRMS இல் பார்த்துக் கொள்ளலாம்.*


*_உண்மையில் IFHRMS ஆல் அரசு பணியாளர்களுக்கு மிகுந்த நண்மையே._*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*INCOME TAX E-FILING ENTRY STEP BY STEP EASY GUIDE*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/income-tax-e-filing-entry-step-by-step.html


*🌟Income tax e-filing File ITR-I Online Entry Step by Step Easy Guide*


*Full Details PDF file:*

👇👇👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/10_lqySUOmmyda7SmG6lxJapoUMZzzlsb/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் ( Smart Cards) வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் தலைமை ஆசிரியர்களுக்கு விநியோகம் செய்தல் குறித்து பள்ளிக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/smart-cards.html


*பள்ளிக்கல்வித்துறை அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் வழங்குதல், மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடப்பட்டு சார்ந்த வட்டாரக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட உள்ளது குறித்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.* 


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*புதிய புத்தகங்கள் சார்ந்து தொடக்க/நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இரண்டு நாள் பயிற்சி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_52.html


*🌟Block level training for Primary Teacher's*

*Primary (2,3,4,5) New Book Training Schedule*



*🌟Block Level Training For Upper Primary Teacher's*

*UPPER Primary (7,8) New Book Training Schedule*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*DSE Proceedings: dated:10.07.2019 - Biometric முறையிலான வருகைப் பதிவு மேற்கொள்ளாத அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் அலுவலர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவு!!!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/dse-proceedings-dated10072019-biometric.html


*🌟அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் எண் இணைந்த தொட்டுணர் கருவி முறையிலான வருகைப் பதிவேடு முறைமை (AEBAS - Aadhaar Enabled Biometric Attendance System) நடைமுறைப்படுத்தப்பட்டது. வருகைப்பதிவு மேற்கொள்ளாமல் உள்ள அலுவலகங்கள்/ பள்ளிகளுக்கு துறைரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தமிழ்நாடு பள்ளிக்கல்வி இணை இயக்குநர்(தொழிற்கல்வி) அவர்கள் செயல்முறை வெளியிட்டுள்ளார்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*உலக இளைஞர் திறன் நாள் ஜூலை 15**


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/15.html


*உலக இளைஞர் திறன் நாள் :*


*_கல்வியும் பயிற்சியுமே இன்றைய இளைஞரின் வெற்றியைத் தீர்மானிக்கின்றன,_*



*ஜூலை 15 உலக இளைஞர் திறன் நாள் கொண்டாட வழிகாட்டுதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாநில திட்ட இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி நாளாக அறிவித்தது 2019 ஆம் ஆண்டிற்கான கல்வி வளர்ச்சி நாள் கொண்டாடுதல் சார்ந்து தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/07/2019.html


*🌟பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்தநாளான ஜூலை திங்கள் 15 ம் நாளை கல்வி வளர்ச்சி நாளாக அரசால் அறிவிக்கப்பட்டு ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.*


*🌟அவ்வகையில் இவ்வாண்டிற்கான கல்வி வளர்ச்சி நாளிலும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு மாணவர்கள் புத்தாடை அணிந்து காமராஜர் அவர்களின் திருவுருவப்படத்தை அளங்கரித்து விழா எடுத்து கொண்டாட ஏற்பாடுகளும், அது சார்ந்து மாணவர்களிடையே பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு காமராஜர் அவர்களின் அரும்பணிகள் குறித்து விளக்கப்பட்டு சிறப்பாக கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கை மீது ஜூலை 25 வரை கருத்து தெரிவிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/2019-25.html


*🌟மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மாதம் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.*


*🌟இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்த சூழலில், அதை தமிழாக்கம் செய்து, தமிழ், ஆங்கில வடிவில் www.tnscert.org என்ற இணையதளத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.*


*🌟இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக்  கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான  கருத்துக்கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.*


*🌟ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் புதிய தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை மீது வரும் 25ம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.*


*🌟இ-மெயில் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் scert.nep2019@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், தபால் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6 என்னும் முகவரிக்கு தங்களது கருத்துக்களைஅனுப்பலாம்.*


*🌟கருத்து தெரிவிப்போர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதி அத்துடன் எத்தனை பக்கங்கள், எத்தனை பத்திகள் என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.*


*🌟தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை தமிழ் பிரதியில் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெளிவு பெற விரும்புவோர் ஆங்கில பிரதியை பார்த்து தெளிவு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தன்னை நேசிக்கும் தமிழ் மக்களுக்காக பொதுவெளியில் தைரியமாக அறைக்கூவல் விடுத்திருக்கும் Actor surya sivakumar !*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/actor-surya-sivakumar.html


*🌟அரசுப்பள்ளி மாண வர்கள் 1 லட்சம்பேரில் ஒரேயொரு மாணவர்தான் நீட்டில் தேர்வாகிறார். பின்னர் அரசு தனியாரிலிருந்து 18பேர் இந்த ஆண்டில் தேர்வெழுதியவர்கள் கடந்த ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து, தனியாரில் பயிற்சி பெற்று, 60 விழுக்காட்டினர் தேர்ச்சி பெறுகிறார்கள். இது சமுகத்தின் சமநிலையை பாதிக்கச் செய்கிறது.*


*🌟அரசுப்பள்ளிகளிலிருந்து 60 விழுக்காடு மாணவர்கள் வருகிறார்கள். அனைவருமே கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள். அவர்களின் ஆரம்பப்பள்ளி என்பதே ஒரு கேள்விக்குறியாக மாறும்.*


*🌟3 வயதிலேயே 3 மொழி திணிக்கப்படுகிறது. பயிற்று மொழிக்கல்வி என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. அமைதியாக இருந்தால் 3 மொழி திணிக்கப்படும். வளர்ந்த நாடுகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகளே இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் 95 விழுக்காடு என்றால், 10ஆம் வகுப்பு,11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்து வருபவர்கள் கிட்டத்தட்ட 55 விழுக்காடாக மாறிவிடுகிறது. 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்குப் போவதில்லை. 40 விழுக்காடு இடைநிற்றல் ஆகிறது. அகரம் அறக் கட்டளை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். 30 விழுக்காடு மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்துக் கொண்டிருக் கிறார்கள். ஆசிரியர்களே இல்லாமல் 12ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களை எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்வீர்கள்?*


*🌟எப்படி 6 செமஸ்டர் எழுதச் சொல்வீர்கள்? ஆசிரியர்களே இல்லாமல் எப்படி எட்டு செமஸ்டர்கள் கொடுப்பீர்கள்?*


*🌟கற்பித்தல் இல்லை, கற்பித்தல் மாதிரி பயிற்சி மய்யங்களாக மாறப்போகிறது. இதுபோன்ற பயிற்சி மய்யங்களின் வருமானம் 5ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள்.*


*🌟இந்தியா முழுக்க 80லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு ஆசிரியர் அமைப்பு மட்டுமே பிரதிநிதியாக இருந்திருக்கிறது. அதேமாதிரி ஒரேயொரு மாணவர் அமைப்பிடம் மட்டுமே கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தயவு செய்து எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும்.*


*🌟கிராமப்புறப்பள்ளிகள், மாணவர்களுக்கான கல்வியாளர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் பெற் றோர், ஆசிரியர்கள் எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும். உரக்க சொல்லவில்லை என்றால் மாற்றங்கள் ஏற்படாது, நம் உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. ஜூலை 30 கடைசி தேதியாக சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை குறித்து அனைவரும் கருத்துகளை பதிவிட வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டும்.*


*⚡#தேசியகல்விக்கொள்கை*

*⚡#புதியகல்விக்கொள்கை*


*❓ஏனையவர்கள் என்ன செய்யப் போகிறோம்?*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அங்கன்வாடியில் ஆசிரியராக பணியாற்றுவது கவுரவ குறைச்சலா?: சென்னை ஐகோர்ட் கேள்வி?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_14.html



*🌟அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு கேள்வி எழுப்பிய உயர் நீதிமன்றம், சமீபகாலமாக அரசின் முடிவுகளை  எதிர்த்து  வழக்கு தொடர்வதை ஆசிரியர்கள் வாடிக்கையாக கொண்டிருப்பதாக வேதனை தெரிவித்துள்ளது. தமிழகம் முழுவதும் அரசு நடுநிலை பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள 2,381 அங்கன்வாடி மையங்களில் பயிலும் 52 ஆயிரத்து 933 குழந்தைகளுக்கு மழலையர் (எல்.கே.ஜி, யு.கே.ஜி) வகுப்புகள் நடத்த ஏதுவாக அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில் உபரியாக உள்ள  5 ஆயிரத்து 934 இடைநிலை ஆசிரியர்களையும், உள்ளாட்சி அமைப்புகளின் கீழ் உள்ள பள்ளிகளில் உள்ள ஆயிரத்து 979 ஆசிரியர்களையும், அங்கன்வாடி மையங்களில்  எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகள் நடத்துவதற்காக  நியமித்து தொடக்கக் கல்வி இயக்குனர் உத்தரவு பிறப்பித்தார்.*



*🌟இந்த அரசாணையை எதிர்த்து, தமிழக தொடக்க பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து, விழுப்புரம், ரிஷிவந்தியம் பஞ்சாயத்து யூனியன் பள்ளியில் இடைநிலை ஆசிரியராக பணியாற்றிய தன்னை அதே பள்ளியில் அமைந்துள்ள அங்கான்வாடி மையத்தில் மழலையர் வகுப்பெடுப்பதற்காக நியமித்த விழுப்புரம் சிஇஓ உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென கோரி சுமதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இதேபோல, பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 10க்கும் மேற்பட்ட இடைநிலை ஆசிரியர்களும் வழக்கு தொடர்ந்துள்ளனர்.*



*🌟அவர்கள் தாக்கல் செய்த மனுவில், அரசுப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள அங்கன்வாடி மையங்களில் பணியாற்ற  உபரி ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,   தாங்கள் பணியாற்றும் பள்ளியில்  உபரி ஆசிரியர்கள் இல்லாத நிலையில், அங்கன்வாடி மையத்துக்கு மாற்றியுள்ளதாக ஆசிரியர்கள் தங்கள் மனுவில் குற்றம் சாட்டியுள்ளனர்.*



*🌟இந்த வழக்கு  நீதிபதி வி.பார்த்திபன் முன்பு விசாரணைக்கு வந்த போது, தமிழகம் முழுவதும் 7,000 இடைநிலை ஆசிரியர்கள் உபரியாக உள்ளதாகவும், அவர்களை மாற்றம் செய்து நியமிக்க கால அவகாசம் ஆகும் என்பதால் தற்காலிகமாக சம்பந்தப்பட்ட  பள்ளி ஆசிரியர்களை  நியமித்துள்ளதாகவும், விரைவில் உபரி ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் பணியிடம் உள்ளிட்ட விவரங்கள் இறுதி செய்யப்பட்டு நியமிக்கப்படுவர் எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது.*



*🌟மேலும்,  தற்போது மழலையர் வகுப்பு எடுக்க நியமிக்கப்படும் இடைநிலை ஆசிரியர்களின் சம்பள விகிதங்கள் உள்ளிட்ட மற்ற பயன்களில் எந்த மாற்றமும் இருக்காது எனவும் அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தை ஏற்றுக்கொண்ட நீதிபதி, அங்கான்வாடி மையங்களில் தற்காலிகமாக தற்போது பணியமர்த்தப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள்  பணியாற்ற வேண்டுமென உத்தரவிட்டார்.*



*🌟மேலும், தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளில் ஏழை எளிய பெற்றோர் சேர்க்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே, அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கபட்டுள்ளது.*



*🌟இடைநிலை ஆசிரியராக பணியாற்றி விட்டு அங்கன்வாடி மையங்களில் பணியாற்றுவது கவுரவ குறைச்சலா என்று  கேள்வி எழுப்பினார்.இட மாறுதல் தொடங்கி அரசின் ஒவ்வொரு முடிவையும் எதிர்த்து  வழக்கு தொடர்வதை சமீபகாலமாக ஆசிரியர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். எனவே, அங்கன்வாடி மையங்களில் நியமிக்கப்பட உள்ள உபரி ஆசிரியர்களின் விவரங்களை அரசு அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டு  விசாரணையை ஜூலை 23ம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.*


*🌟தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்தி தங்கள் குழந்தைகளை எல்.கே.ஜி, யு.கே.ஜில் ஏழை எளிய பெற்றோர் சேர்க்க முடியாது என்பதை கருத்தில் கொண்டே, அரசு சார்பில் அங்கன்வாடி மையங்களில் எல்.கே. ஜி, யு.கே.ஜி வகுப்புகள் தொடங்கபட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Friday 12 July 2019

*2019-20 ஆம் கல்வியாண்டு ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு சென்னை உயர்நீதிமன்ற வழக்கு டபிள்யு.பி.எண்:20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019 வழக்குகளில் அரசாணை (1டி) எண்: 218, பள்ளிக்கல்வித் (பக5(1)த் துறை, நாள்: 20.06.2019 - ன்படி நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டது. அதனடிப்படையில் பொதுமாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வை நிறுத்தி வைத்தல் குறித்து தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைக் கடிதம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/2019-20-20090-19946-20180-20277-20278.html


*🌟 அரசாணை (1டி) எண். 218, பள்ளிக் கல்வித் (பக5(1)) துறை நாள்.20.06.2019-ன்படி அனுமதி வழங்கப்பட்டன.*



*🌟அரசு சிறப்பு வழக்கறிஞர் (கல்வி) அவர்களின் 11.07.2019 நாளிட்ட கடிதத்தில், சென்னை உயர்நீதிமன்றத்தில் திரு.சிவாஜிகணேசன் மற்றும் பெயரால் தொடரப்பட்ட வழக்குகள் டபிள்யு.பி எண். 20090, 19946, 20180, 20277, 20278 மற்றும் 20281/2019 -ல் அரசாணை (டி) எண் 218, பள்ளிக் கல்வித் (பக்ரீத் துறை, நாள் 20.06.2019 ஐ நிறுத்தம் செய்து ஆணை வழங்கப்பட்டுள்ளது, அனைத்து வகை ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் நிறுத்தம் செய்யப்படுகின்றன. இந் நீதிமன்றம் ஆணையின் மீது உடன் நடவடிக்கை எடுக்க அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


Thursday 11 July 2019

*ஆசிரியர் பணி மாறுதல் கலந்தாய்வு தடை குறித்த விபரம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_11.html


*🌟தமிழக அரசு அண்மையில் பிறப்பித்த பணி மாறுதல் கலந்தாய்வில் மூன்றாண்டுகளுக்கு  பணி மாறுதல் கிடையாது,முன்னர் பணிநிரவல் சென்றிருந்த ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கிடையாது இது போன்று அதிகப்படியான முரண்பாடுகள் இருப்பதால் பாதிக்கப்பட்ட பல்வேறு  ஆசிரியர்கள் தினமும் பல்வேறு வழக்குகள் தொடர்ந்த வண்ணம் இருந்தனர்.



*🌟அதிகப்படியான வழக்குகள் தொடர்ந்து வந்த காரணத்தினால் இன்று 11.07.2019 பணி மாறுதல் கலந்தாய்விற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது ஆகவே இன்று 11.07.2019 நடக்கும் கலந்தாய்விற்கு பின்னர் நாளை முதல் கலந்தாய்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.* 



*🌟ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த 2 ஒன்றியங்களில் இருந்து கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்க வேண்டும் என வழக்கு தொடுக்கப்பட்டு இருந்தது மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து அங்கன்வாடி மையங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்த 10 ஆசிரியர்கள் சார்பாக வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது இன்று விசாரணை வந்த பின்பு நாளையும் 12.07.2019 மீண்டும் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதற்குமுன் நடைபெற்ற பணி மாறுதல் பதவியுர்வு பெற்றவர்களுக்கு எந்தவித  தடை இல்லை இனி எந்த ஒரு கலந்தாய்வும் நடைபெற தற்போதைக்கு வாய்ப்பு இல்லை.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



Wednesday 10 July 2019

*EMIS Flash News : EMIS - Teachers Login are now available!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/emis-flash-news-emis-teachers-login-are.html



*🌟EMIS - TNTP websites Teachers Logins are now available in every school EMIS  login. It can be found in Staff Details menu's Teacher Login Details option.... Initially  the logins are generated for all government school teachers, further we will provide logins for Aided school teachers, BRTEs and DIET fAculties.*


🗝Тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




*17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் குளறுபடிகள் TNPTF பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/17-tnptf.html


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_* *வணக்கம்!*


*🌟2019-2020 ஆம் கல்வியாண்டிற்குரிய தொடக்கக்கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு நடவடிக்கைகள் 09.07.2019 முதல் தொடங்கியிருக்கின்றது.  ஆசிரியர்களுக்கு பலவகைகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாறுதல் நெறிமுறைகளை உள்ளடக்கிய அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளைக் கொண்டு கலந்தாய்வு நிகழ்வுகள் தொடங்கியிருக்கின்றன.*


*🌟அரசாணைகள் மற்றும் செயல்முறை ஆணைகளில் உள்ள குழப்பமான அல்லது தெளிவற்ற விவரங்களைக் கணக்கிலெடுத்துக் கொண்டு அவற்றை ஆசிரியர்களுக்கு பாதகமாக்கும் நிகழ்வுகள் 09.07.2019 கலந்தாய்விலேயே  சில மாவட்டங்களில் அரங்கேறியுள்ளன. 17பி பெற்றவர்கள் பொதுமாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்வதில் எவ்விதத் தடையும் இல்லை என்று மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்கள் தெரிவித்தபின்பும் கூட, கடலூர் மாவட்டத்தில் 17 பி பெற்றவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்திருப்பது அந்த மாவட்டக்கல்வித்துறை அலுவலர்களின் உச்சபட்ச எதேச்சதிகாரத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது. மாநிலம் முழுவதும் ஒரு நிலை. கடலூரில் ஒரு நிலையா? என்ற கேள்வி எழுகிறது.*


*🌟ஆசிரியர்களைப் பாதிக்கின்ற நீதிமன்ற உத்தரவுகள் என்றால் அவற்றை அமல்படுத்துவதில் மின்னல் வேகத்தில் செயல்படும் கல்வித்துறை அலுவலர்கள், ஆசிரியர்களுக்குச் சாதகமான உத்தரவுகளை எத்தனை முறை நீதிமன்றங்கள்  கொடுத்தாலும் அதைப் பொருட்படுத்துவதே இல்லை.  நீதிமன்ற உத்தரவுகளை அவமதிப்பதில் கல்வித்துறை அலுவலர்களுக்கு நிகராக எவரையும் கூறி முடியாது.*


*🌟நேற்று (09.07.2019) நடைபெற்ற கலந்தாய்வில் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி ஒன்றியத்தில் தனது நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுத்து ஆசிரியை ஒருவர் பெற்ற இரண்டு நீதிமன்றத் தீர்ப்பாணைகளை தூத்துக்குடி மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலரும், கோவில்பட்டி மாவட்டக்கல்வி அலுவலரும் உதாசீனப்படுத்திய நிகழ்வு இதற்கு உதாரணமாகும்.*


*🌟சில மாவட்டங்களில் கல்வித்துறை அதிகாரிகள் செய்ய முயற்சித்த விதிமீறல்களை நம் இயக்கத் தோழர்கள் களப்போராட்டங்கள் மூலமே தடுத்து நிறுத்திய நிகழ்வுகளும் நடைபெற்றுள்ளன.*


*🌟2019-2020 பொதுமாறுதல் கலந்தாய்வு ஆசிரியர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தையும்,வருத்தத்தையும், உள்ளக்குமுறலையும் ஏற்படுத்தியுள்ளது என்பதே நிதர்சனமான உண்மையாகும். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியத்தை மீட்டெடுப்பதற்கான களப்பேரில் வரலாற்று நிகழ்வான அரசாணை எரிப்புப் போராட்டத்தை நடத்தி, அப்போராட்டத்தில் மாநிலம் முழுவதும் 15000 ஆசிரியர்களைப் பங்கேற்கச் செய்து  சாதனைச் சரித்திரம் படைத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் இணையற்ற களப்போராளிகள் 1539 பேருக்கு வழங்கப்பட்ட 17 பி மார்பில் தைத்த குத்தீட்டியாய் இன்னமும் அப்படியே உள்ளது. அவர்களில் பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் இடம்பெற வேண்டிய தோழர்கள் 17பி ஆல் பட்டியலில் வைக்கப்படாத நிலையில் , அவர்களுக்கு அடுத்த நிலையில் முன்னுரிமையில் உள்ள ஆசிரியர்கள் முண்டியடித்துக் கொண்டு பதவி உயர்வைப் பறித்துக்கொள்ளுகிற நிகழ்வுகள் முதுகில் குத்தப்பட்ட முனை முழுங்கிய குத்தீட்டியாய் தொங்கிக் கொண்டிருக்கின்றன.*


*🌟அரசாணை எரிப்புப் போரில் நம் தோழர்கள் 5000 பேர் மீதான காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட அனைத்து மாவட்டங்களிலும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுவிட்ட நிலையிலும், அந்த முதல் தகவல் அறிக்கையின் பேரில் நம் தோழர்களுக்கு வழங்கப்பட்ட 17பி ஐ ரத்து செய்ய தொடக்கக்கக்கல்வித்துறை இன்றளவும் மறுத்து வருகிறது. அதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றம் சென்றால் நீதிமன்றத்தின் படிக்கட்டுகள் மிகவும் நெடியதாகத் தெரிகிறது.*


*🌟ஜாக்டோ ஜியோ போராட்டக்களத்தில் வேறெந்த இயக்கத்தையும் விட அதிகமான இயக்கத் தோழர்களைச் சிறைக்கு அனுப்பிய இயக்கம், மிக அதிகமான தோழர்கள் பணியிடைநீக்கம் செய்யப்பட்ட இயக்கம், மிக அதிகமான தோழர்கள் 17பி பெற்ற இயக்கம் மிக அதிகமான தோழர்கள் வேலை நிறுத்தத்தின் இறுதிநாள் வரை போராட்டக்களத்தில் உறுதியோடு இருந்த இயக்கம் என்று பல்வேறு பெருமைகளைப் பெற்ற இயக்கம் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி. இக்களப்போரில் 17(பி) பெற்ற நம் இயக்கத் தோழர்கள் உட்பட பல்லாயிரக்கணக்கானோர் பதவி உயர்வுப் பட்டியலில் இடம்பெறாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். இதிலும் நம் இயக்கத் தோழர்கனின் பாதிப்பே மிக அதிகம்.*


*🌟தியாகத்தின் திருவுருவங்களாய் காட்சிதரும் தியாகம் தோய்ந்த நம் இயக்க தோழர்களே! ஏற்பட்டுள்ள பாதிப்புக்கள் நிரந்தரமானவை அல்ல. அவை தற்காலிகமானவை என்பதை உள்ளத்தில் நிலைநிறுத்துங்கள். எவ்வகையிலேனும் நம் பாதிப்புக்கள் அகற்றப்படும்; நம் உரிமை காக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொள்ளுங்கள். உங்கள் தியாகம், உங்கள் உறுதி, உங்கள் லட்சியம் ஆகியவற்றை எதிர்கால இயக்க வரலாறு இயம்பும். நம் பாதிப்புகள் களையப்படும் நாள் வெகுதூரத்தில் இல்லை. கலந்தாய்வு முடிந்துவிட்டால், பதவி உயர்வு வழங்கிவிட்டால் எல்லாம் முடிந்துவிட்டது என்று பொருளல்ல, அதன் தொடர்ச்சி நீதி நிலைநாட்டப்படும் வரை தொடரும்! தொடர்வோம்!*


*_"நான் ஒருபோதும் தோற்கமாட்டேன் - ஏனெனில் என்னை வீழ்த்தி விடலாம் என எதிரிகளுக்கு இருக்கும் நம்பிக்கையைவிட, வீழ்ந்தாலும் எழுந்துவிடலாம் என எனக்கிருக்கும் நம்பிக்கை அதிகம்!"_*

*- பிடல் காஸ்டிரோ*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм