Sunday, 14 July 2019

*தேசிய கல்விக்கொள்கை 2019 வரைவு அறிக்கை மீது ஜூலை 25 வரை கருத்து தெரிவிக்கலாம் - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/2019-25.html


*🌟மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் மனிதவள மேம்பாட்டுத் துறை கடந்த மாதம் புதிய தேசிய கல்விக்கொள்கைக்கான வரைவு அறிக்கையை வெளியிட்டது.*


*🌟இது ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே வெளியிடப்பட்டிருந்த சூழலில், அதை தமிழாக்கம் செய்து, தமிழ், ஆங்கில வடிவில் www.tnscert.org என்ற இணையதளத்தில் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.*


*🌟இந்த வரைவு தேசியக் கல்விக் கொள்கை மீதான கருத்தரங்குகள் மாநிலக்  கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலம் மண்டல வாரியான  கருத்துக்கேட்புக் கூட்டங்கள் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ளது.*


*🌟ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள், கல்வியாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் புதிய தேசியக் கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை மீது வரும் 25ம் தேதிக்குள் கருத்துக்களை தெரிவிக்கலாம்.*


*🌟இ-மெயில் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் scert.nep2019@gmail.com என்ற இ-மெயில் முகவரியிலும், தபால் மூலம் கருத்து தெரிவிக்க விரும்புபவர்கள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், டி.பி.ஐ. வளாகம், கல்லூரிச் சாலை, நுங்கம்பாக்கம், சென்னை-6 என்னும் முகவரிக்கு தங்களது கருத்துக்களைஅனுப்பலாம்.*


*🌟கருத்து தெரிவிப்போர் தமிழ் அல்லது ஆங்கிலத்தில் தெளிவாகவும், சுருக்கமாகவும் எழுதி அத்துடன் எத்தனை பக்கங்கள், எத்தனை பத்திகள் என்பதை குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.*


*🌟தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கை தமிழ் பிரதியில் குறிப்பிட்டுள்ள கருத்து தொடர்பாக தெளிவு பெற விரும்புவோர் ஆங்கில பிரதியை பார்த்து தெளிவு பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: