Sunday, 14 July 2019

*தன்னை நேசிக்கும் தமிழ் மக்களுக்காக பொதுவெளியில் தைரியமாக அறைக்கூவல் விடுத்திருக்கும் Actor surya sivakumar !*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/actor-surya-sivakumar.html


*🌟அரசுப்பள்ளி மாண வர்கள் 1 லட்சம்பேரில் ஒரேயொரு மாணவர்தான் நீட்டில் தேர்வாகிறார். பின்னர் அரசு தனியாரிலிருந்து 18பேர் இந்த ஆண்டில் தேர்வெழுதியவர்கள் கடந்த ஆண்டில் 12ஆம் வகுப்பு படித்து, தனியாரில் பயிற்சி பெற்று, 60 விழுக்காட்டினர் தேர்ச்சி பெறுகிறார்கள். இது சமுகத்தின் சமநிலையை பாதிக்கச் செய்கிறது.*


*🌟அரசுப்பள்ளிகளிலிருந்து 60 விழுக்காடு மாணவர்கள் வருகிறார்கள். அனைவருமே கிராமங்களிலிருந்து வரும் மாணவர்கள். அவர்களின் ஆரம்பப்பள்ளி என்பதே ஒரு கேள்விக்குறியாக மாறும்.*


*🌟3 வயதிலேயே 3 மொழி திணிக்கப்படுகிறது. பயிற்று மொழிக்கல்வி என்பதில் தெளிவில்லாமல் இருக்கிறது. அமைதியாக இருந்தால் 3 மொழி திணிக்கப்படும். வளர்ந்த நாடுகளில் எட்டாம் வகுப்புவரை தேர்வுகளே இல்லை. ஆரம்பப் பள்ளிகளில் சேரும் மாணவர்கள் 95 விழுக்காடு என்றால், 10ஆம் வகுப்பு,11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு முடித்து வருபவர்கள் கிட்டத்தட்ட 55 விழுக்காடாக மாறிவிடுகிறது. 6.5 கோடி மாணவர்கள் பள்ளிக்குப் போவதில்லை. 40 விழுக்காடு இடைநிற்றல் ஆகிறது. அகரம் அறக் கட்டளை கடந்த 10 ஆண்டுகளாக பார்த்துக் கொண்டிருக்கிறோம். 30 விழுக்காடு மாணவர்கள் ஆசிரியர்களே இல்லாமல் படித்துக் கொண்டிருக் கிறார்கள். ஆசிரியர்களே இல்லாமல் 12ஆம் வகுப்பு படிக்கின்ற மாணவர்களை எப்படி நீட் தேர்வு எழுதச் சொல்வீர்கள்?*


*🌟எப்படி 6 செமஸ்டர் எழுதச் சொல்வீர்கள்? ஆசிரியர்களே இல்லாமல் எப்படி எட்டு செமஸ்டர்கள் கொடுப்பீர்கள்?*


*🌟கற்பித்தல் இல்லை, கற்பித்தல் மாதிரி பயிற்சி மய்யங்களாக மாறப்போகிறது. இதுபோன்ற பயிற்சி மய்யங்களின் வருமானம் 5ஆயிரம் கோடி ரூபாய் என்கிறார்கள்.*


*🌟இந்தியா முழுக்க 80லட்சம் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஒரேயொரு ஆசிரியர் அமைப்பு மட்டுமே பிரதிநிதியாக இருந்திருக்கிறது. அதேமாதிரி ஒரேயொரு மாணவர் அமைப்பிடம் மட்டுமே கருத்து கேட்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது. தயவு செய்து எல்லோரும் விழிப்பாக இருக்க வேண்டும்.*


*🌟கிராமப்புறப்பள்ளிகள், மாணவர்களுக்கான கல்வியாளர்கள், அறிஞர்கள், ஊடகங்கள் பெற் றோர், ஆசிரியர்கள் எல்லாரும் குரல் கொடுக்க வேண்டும். உரக்க சொல்லவில்லை என்றால் மாற்றங்கள் ஏற்படாது, நம் உரிமைகள் கிடைக்கப் போவதில்லை. ஜூலை 30 கடைசி தேதியாக சொல்கிறார்கள். புதிய கல்விக் கொள்கை குறித்து அனைவரும் கருத்துகளை பதிவிட வேண்டும். விழிப்போடு இருக்க வேண்டும்.*


*⚡#தேசியகல்விக்கொள்கை*

*⚡#புதியகல்விக்கொள்கை*


*❓ஏனையவர்கள் என்ன செய்யப் போகிறோம்?*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: