Wednesday 30 May 2018

*பிளஸ் 1 பொதுத்தேர்வு முடிவு இன்று வெளியீடு: தோல்வி அடைந்தாலும் பிளஸ் 2 படிக்கலாம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/1-2.html



*🌟கடந்த 2017 -ஆம் ஆண்டு வரை பிளஸ் 1 தேர்வு, பள்ளி அளவிலான ஆண்டுத் தேர்வாகவே நடத்தப்பட்டது.*

*🌟இந்த ஆண்டிலிருந்துதான் முதல்முறையாக பொதுத் தேர்வாக நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு வெளியான பிறகு அனைவருக்கும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். இத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்களும் பிளஸ் 2 வகுப்புக்கு செல்லலாம்*

*🌟தேர்ச்சிபெறாத பாடங்களை சிறப்பு துணைத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுவிடலாம்*


*🌟அடுத்த ஆண்டு பிளஸ் 2 தேர்வை முடிக்கும்போது, இரு பொதுத்தேர்வுகளின் (பிளஸ் 1, பிளஸ் 2) மதிப்பெண்கள் அடங்கிய தொகுப்பு மதிப்பெண் பட்டியல்  அவர்களுக்கு வழங்கப்படும்*


*_ரேங்க் பட்டியல் இல்லை_*

*🌟பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத்தேர்வுகளில் 'ரேங்க்' பட்டியல் வெளியிடும் முறை கடந்த ஆண்டு கைவிடப்பட்டது*

*🌟அதன்படி, கடந்த 16 -ஆம் தேதி வெளியான பிளஸ் 2 தேர்வு முடிவின்போதும், 23 -ஆம் தேதி வெளியான எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவின்போதும் 'ரேங்க்' பட்டியல் வெளியிடப்படவில்லை. அதேபோன்று புதன்கிழமை வெளியாக உள்ள பிளஸ் 1 தேர்வு முடிவிலும் ரேங்க் பட்டியல் வெளியிடப்படாது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*நிதி ஒதுக்கீடு செய்த பிறகும்கூட அரசு பள்ளிகளை மூட நினைப்பதா?கமல்ஹாசன் அரசுக்கு கண்டனம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_82.html


*🌟நிதி ஒதுக்கீடு செய்த பிறகும் அரசுப் பள்ளிகளை மூட நினைப்பதா என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்*


*_மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன், தனது கட்சி சார்பில் நேற்று வௌியிட்ட அறிக்கை:_*


*🌟அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்பட்டால், மாணவர்களின் சேர்க்கை அதிகரிக்கும் என்பது இயல்பு*


*🌟ஆனால், தனியார் பள்ளிகளைவிட அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பிறகும்கூட, அரசு பள்ளிகளின் தரம் உயர்த்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்படாமல், மாணவர் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது என்ற காரணத்துடன், அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் பள்ளிக் கல்வித்துறையின் நடவடிக்கை மிகவும் மோசமான முன்னுதாரணம் ஆகும்*


*🌟அனைத்தையும் ஆராய்ந்து பெருவாரியான சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றைப் பரிசீலிக்க, அனைத்துக் கட்சிகளை உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா?*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_30.html


*_மக்கள் நீதி மய்யம் கேள்வி_*


*🌟சட்டசபையில் இன்று பள்ளி மற்றும் உயர் கல்வித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற உள்ளதையொட்டி அரசு பள்ளிகளின் தரத்தை கண்காணிக்க ஆணையம் அமைக்கப்படுமா? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது*




*_🌟சட்டசபையில் 30-ந்தேதி (இன்று) பள்ளி கல்வித்துறை மற்றும் உயர் கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் குறித்து மக்கள் நீதி மய்யத்தின் கேள்விகள் வருமாறு_*




*🌟அரசு பள்ளிகளின் தர நிர்ணயத்தை ஆய்வு செய்து அவற்றை கண்காணிக்கக்கூடிய தன்னிச்சையான ஆணையம் அமைப்பதற்கு அரசு முயற்சி எடுக்குமா?*




*🌟2017-18 பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டிருந்த கணினி வழிக்கல்வி மையங்கள் தொடங்கப்பட்டிருக்கின்றனவா?*


*🌟மாணவர்கள் பொது அறிவு மற்றும் மொழித்திறனை வளர்த்துக்கொள்ள உதவும் வகையில் 31 ஆயிரத்து 322 பள்ளிகளுக்கு ரூ.4.83 கோடி மதிப்பிலான சிறுவர் நாளிதழ்கள், இதழ்கள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின் தற்போதைய நிலை என்ன?*



*🌟குழந்தைகளுக்கான வகுப்புகளை அரசு பள்ளிகளில் உடனடியாக தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை குறித்து பள்ளி கல்வித்துறை எப்போது முடிவு எடுத்து நடைமுறைப்படுத்தும்?*


*_சட்ட திருத்தம்_*


*🌟துணை வேந்தர்களின் மீதான தொடர் ஊழல் குற்றச்சாட்டுகள் கல்வித்துறையின் மீதான நம்பிக்கையை குறைத்துக்கொண்டிருக்கிறது*


*🌟இந்த சூழ்நிலையில் துணை வேந்தர்களை தேர்ந்தெடுப்பதற்கு தன்னிச்சையான அமைப்புகளை உருவாக்குவதற்கான சட்ட திருத்தத்தை கொண்டுவருமா?*


*🌟பட்டதாரி மாணவ-மாணவிகள் வேலை வாய்ப்பு இன்றி கிடைக்கின்ற வேலை செய்யும் நிலையை போக்குவதற்கு, திறன் மேம்பாடு கல்வி திட்டத்துக்கு என்ன வகையான முன்னெடுப்புகளை அரசு மேற்கொண்டுள்ளது?*



*🌟இவை அனைத்தையும் ஆராய்ந்து சட்டங்கள், மசோதாக்கள், மானியக் கோரிக்கைகள் போன்றவற்றை பரிசீலிக்க அனைத்து கட்சிகளையும் உள்ளடக்கிய சட்டமன்ற நிலைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*DIKSHA APPLICATION & QR CODE பற்றிய சிறப்பு VIDEO*


*TNPTF அயன் YouTube Channel*

https://youtu.be/-USLDeDCnck


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/diksha-application-qr-code-video.html


*DIKSHA - NATIONAL DIGITAL PLATFORM FOR TEACHERS*


*🌟DIKSHA APPLICATION பற்றியும் QR Code பற்றிய முழு விபரம் அறிய கீழ்க்கண்ட Link கிளிக் செய்து YouTube Video வை கண்டுகளித்து பயன்பெறுங்கள் தோழர்களே.*

https://youtu.be/-USLDeDCnck


🌟TNPTF அயன் YouTube Channel ஐ தொடர்ந்து பார்த்து பயனடையுங்கள் தோழர்களே....

🌟தொடர்ந்து எங்கள் YouTube Channel ல் பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் பிடித்திருந்தால்  Subscribe & Like செய்யுங்கள்....

🌟தொடர்ந்து பதிவேற்றம் செய்யப்படும் வீடியோக்கள் உங்களுக்கு தெரிய வேண்டும் என்றால் Bell பட்டனை கிளிக் செய்யுங்கள், நன்றி!.

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*இரண்டாம் வகுப்பு முதல்பருவ தமிழ் பாடபுத்தகத்தில் QR Code கொடுக்கப்பட்ட்டுள்ள மாதிரி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://drive.google.com/file/d/1mQfMn26lgZ_EBjh2QXQKRmq0t_vgBf_4/view?usp=drivesdk


https://tnptfayan.blogspot.com/2018/05/qr-code_30.html


*🌟2nd STD TAMIL (1st Term) BOOKS WITH QR CODE FOR PRACTICE TO TEACHERS*


*🌟பாடநூலில் உள்ள QR CODE வேலை செய்யும் விதத்தினை சோதிக்க 2  ஆம் வகுப்புகளுக்கான சமச்சீர் தமிழ்  முதல் பருவ பாடத்திட்டத்தில்  கொடுக்கப்பட்டுள்ளது.*

*🌟கீழே உள்ள Link ஐ Click செய்து பதிவிறக்கம் செய்து செய்து பயன்படுத்தவும்*

👇👇👇👇👇👇

https://drive.google.com/file/d/1mQfMn26lgZ_EBjh2QXQKRmq0t_vgBf_4/view?usp=drivesdk



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Tuesday 29 May 2018

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_63.html


*_கண்காணிப்போம்!_*

*_கல்வி காப்போம்!_*

 *ஆசிரியர் சந்திப்பு*


*லயோலா கல்லூரி,          சென்னை*


*⚡03.06.2018, ஞாயிறு*     


*🌟நிகழ்ச்சி நிரல்*



9.00-9.50

*பங்கேற்பாளர் பதிவு*



9.50-10.00

*வரவேற்புரை*  

ரெ.சிவா



10-10.30

*தொடக்க உரை*

Dr.SS. ராஜகோபாலன்.



10.30-10.45

*கலந்துரையாடல்*



10.45-11.15

*மக்கள் கையில் அதிகாரம்*

Dr.வே.வசந்தி தேவி


11.15-11.30

*கலந்துரையாடல்*



11.30-11.45

தேநீர் இடைவேளை



11.45-12.15

*பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் ஏன்? எதற்கு?*

ஜெ.கிருஷ்ணமூர்த்தி


12.15-12.30

*கலந்துரையாடல்*



12.30-01.00

*வாழ்த்துரை*

பாரதி கிருஷ்ணகுமார்



01.00-02.00

உணவு இடைவேளை



02.00-02.20

*வகுப்பறை அனுபவங்கள்*

S.உமாமகேஸ்வரி


02.20-02.30

*கலந்துரையாடல்*



02.30-02.50

*கல்வி உரிமைச் சட்டம் & SMC*

சு.மூர்த்தி


02.50-03.00

*கலந்துரையாடல்*



03.00-03.20

*கிராம சபைக் கூட்டம்-தீர்மானம்*

S.C.நடராஜ்


03.20-03.30

*கலந்துரையாடல்*



03.30-03.45

தேநீர் இடைவேளை



03.45-04.15

*வாழ்த்துரை*

பேரா.ஆர்.காளீஸ்வரன்


0415-0445

*தொகுப்புரை*

பேரா.ச.மாடசாமி

04151-05.00

*கலந்துரையாடல்*


05.00-05.10

*நன்றியுரை*

R.உதயலட்சுமி


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*Lesson Plan 5th STD*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/t-n-p-t-f-httpstnptfayan_29.html


*🌟5th STD Tamil Lesson Plan:*

*Lesson 1:*

https://drive.google.com/file/d/1DYCJgzuQlx_-tekRRNSTOnC3dCWMF7q8/view?usp=drivesdk


*🌟5th STD English Lesson Plan:*

*Lesson 1:*

https://drive.google.com/file/d/1IEtg0XzhxTGQtFHcw8LPTQiBR1FB6nIW/view?usp=drivesdk


*🌟5th STD Maths Lesson Plan:*

*Lesson 1:*

https://drive.google.com/file/d/1seTHAQMMZdWe5k0Sf5pOvtKPLeete01t/view?usp=drivesdk


*🌟5th STD Science Lesson Plan:*

*Lesson 1:*

https://drive.google.com/file/d/1LRNwg2HC9JfIDc2a1_PQbWWyMs8LY9-Q/view?usp=drivesdk


*🌟5th STD Social Science Lesson Plan:*

*Lesson 1:*

https://drive.google.com/file/d/1fW9oESay_mYVoS4so3r1U4KvKzXnTmpW/view?usp=drivesdk


*🌟5th STD FA(b) Questions - All Subject - 1st Term:*

https://drive.google.com/file/d/1pRxghxlOpXxLsCWh-59Ji1xIily8zB87/view?usp=drivesdk

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் சார்பான வாழ்த்துக்கள் - செய்தித் துளிகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_67.html


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டாரக்கிளையின் புதிய அலுவலகக் கட்டிடத் திறப்பு விழா நிகழ்விற்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.*

🏬🏩🏬🏩🏬🏩🏬🏩🏬🏩🏬🏩🏬🏩🏬🏩

*🌟இயக்கப் பாசறை எழுச்சியுடன் இயங்கிட வீரஞ்செறிந்த வாழ்த்துக்கள்*


*⚡தோழமையுடன்*

*_தோழர்.ச.மயில்_*

*பொதுச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*


💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

*கோவில்பட்டி வட்டாரக்கிளைக்கும், தூத்துக்குடி மாவட்ட மையத்திற்கும் நெஞ்சார்ந்த வணக்கத்தையும், பாராட்டுகளையும் _TNPTF அயன்_ சார்பாக தெரிவித்துக்கொள்கிறோம்.*

🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல உயர்நீதிமன்றம் தடை!!*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/12.html


*🌟மெட்ரிக்குலேஷன், சிபிஎஸ்இ 1,2 வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.*


*🌟மேலும் பள்ளி ஆசிரியர்கள் என்.சி.இ.ஆர்.டி பாடப்புததகங்களை வைத்து மட்டுமே பாட எடுக்க வேண்டும் என்றும் தடையை  மீறும் பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட அரசாணை வெளியிட்டது தமிழக அரசு.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_91.html


💐💐💐💐💐💐💐💐😢😢😢😢😢😢😢😢

*13 உயிர்களின் தியாகத்தால் ஸ்டெர்லைட் ஆலை மூடும் அரசாணை*

🖋🖋🖋🖋🖋🖋🖋🖋🗞🗞🗞🗞🗞🗞🗞🗞

*களத்தில் இறங்கிய இலட்சம் போராளிகளுக்கும்,*

🕺👫👭👬🕴🕺👫👭👬🕴🕺👫👭👬🕴🕺

*குண்டாந் தடிகள் தாக்கிய போதும் குண்டுகள் நெஞ்சைத் துளைத்த போதும் நீதி கேட்க அஞ்சிடாத போராளிகளுக்கும்*

🛡🥢🛡🥢🛡🥢🛡🥢🛡🥢🛡🥢🛡🥢🛡

*செவ்வணக்கம்!*

😡🙏😡🙏😡🙏😡🙏😡🙏😡🙏😡🙏😡🙏


*படுகொலை செய்யப்பட்ட 13 போராளிகளுக்கும்*

💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏💪🙏

*வீரவணக்கம்!*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




Monday 28 May 2018

*புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் அனுமதித்து ஆணை வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_80.html


*🌟பள்ளிக்கல்வித்துறையின் கீழுள்ள மாவட்டக் கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்கள் மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள் என பெயர் மாற்றம் செய்யப்பட்டு புதிய மாவட்டக் கல்வி அலுவலகங்கள் செயல்பட அனுமதித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது.*


*🌟பள்ளிக் கல்வி [ப.க4(1)] துறை அரசாணை (நிலை) எண் : 108, நாள் : 28.05.2018.*

 *🌟அரசாணை pdf வடிவில் கீழே உள்ள Link ஐ கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் தோழர்களே.*

https://drive.google.com/file/d/1buv3bUF6-_PiQsmLHq3Ke2YXJIVDCikw/view?usp=drivesdk


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*புதிய பாடநூலில் கொடுக்கப்பட்டுள்ள QR code அமைப்பு பற்றிய முழு விபரங்கள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/qr-code_28.html


*🌟உங்கள் ஆண்ட்ராய்ட் play store ல் cam scanner எனும் app ஐ install செய்துக்கொள்ளவும். அதில் open செய்து camera ஐ உபயோகித்து Docs என்பதிலிருந்து QR code என்பதற்கு மாறி பாடநூலில் உள்ள QR code களை scan செய்யவும். பிறகு கிடைக்கும் URL ஐ open செய்யவும்.*



*🌟பொருளடக்க பக்கம் ( content page ) ல் உள்ள இணைய வளங்கள் (Digi links ) கான QR மற்றும் இணைய செயல்பாடுகள் (ICT corner ) பக்கங்களில் உள்ள QR அனைத்தும் QR code management இணைய வலைபக்கத்தில் சென்று சேரும். அதில் பாட நூலில் உள்ள பக்கங்களின் எண் மற்றும் அதற்கான இணைய உலவு பகுதிகளுக்கான உரலிகளின் இணைப்புகள் ( URL links ) நீல வண்ணத்தில் இருக்கும்.*



*🌟சிவப்பு வண்ணத்தில் அந்த உரலிகள் எந்த வகையானவை என்பது குறிக்கப்பட்டிருக்கும். திறன் பேசி எனில் அவற்றை தொடுவதன் மூலமோ, கணினி எனில் அதை சுட்டி மூலம் சொடுக்குவதன் மூலமோ குறிப்பிட்ட அந்த இணைய பக்கத்திற்கு தங்களை அழைத்துச்செல்லும்.*



*🌟இந்த இணைய பக்கங்கள் அனைத்தும் பாடநூல் குழுவால் பாடநூலில் வைக்கப்பட்டுள்ள இணைய இணைப்புகளின் தொகுப்பே.*



*🌟இவை அன்றி ஆறு இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவையாக (எ.கா X3VU5G ) என்பது போன்று QR code களானது DIKSHA ( Digital Infrastructure for Knowledge sharing ) எனும் இந்திய அளவிலான கல்விசார் வளங்களை ஒருங்கிணைக்க உருவாக்கப்பட்ட ஓர் வலைபக்கத்தின் (Portal ) QR code களாகும்.*



*🌟இவற்றில் நம் ஆசிரியர்கள் தயாரித்து அளிக்கும் கல்வி சார்ந்த வீடியோக்கள் மற்றும் மதிப்பீட்டு செயல்பாடுகள் இருக்கும். இவை அனைத்தும் நம் தமிழக ஆசிரியர்கள் தயாரித்து இந்த portal ல் உள்ளிடும் வளங்கள்.*



*🌟இவற்றை DIKSHA எனப்படும் ஓர் ஆண்ட்ராய்ட் செயலி மூலம் உபயோகிக்க முடியும். சாதாரண QR code reader app ( e.g cam scanner ) உபயோகிக்கும் போது இவற்றிற்கு online தேவைப்படும்.*



*🌟மாறாக DIKSHA app மூலமாக scan செய்யும் போது முதலில் Guest ஆக உள் நுழைந்து நாம் content களை QR code scan செய்து download செய்துக்கொள்ளலாம்.*



*🌟ஒரு குறிப்பிட்ட content ஐ download செய்ய பாடபுத்தகத்தின் குறிப்பிட்ட தலைப்பில் வைக்கப்பட்டுள்ள QR code ஐ scan செய்ய வேண்டும். பிறகு download content என்பதை அளித்து ஒரு முறை download செய்துக்கொண்டால் மறு உபயோகத்திற்கு இணைய இணைப்பு இல்லாமல் இந்த content ஐ பயன்படுத்திக்கொள்ள முடியும்.* 



*🌟மேலும் அந்த குறிப்பிட்ட content ஐ பிற திறன்பேசிகளுக்கும் பகிர்ந்து (share) கொள்ள முடியும். இதற்கு wifi direct வகையிலான share it போன்ற மென்பொருட்களை பயன்படுத்திக்கொள்ளலாம்.*




*🌟ஒரு பாடநூலுக்கான அனைத்து content களையும் பதிவிறக்கம் செய்ய பாடநூலின் பொருளக்கப்பக்கத்தில் வைக்கப்பட்டுள்ள மின்னூல் QR ஐ scan செய்து download all என்பதை அளிக்கவும். சுமார் 1 GB ( ஒவ்வொரு பாடநூலிலும் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ள content களின் எண்ணிக்கைக்கு ஏற்ப அளவு மாறு படலாம் ) அளவிலான content மொத்தமாக download ஆகி விடும்.* 



*🌟இவற்றை வட்டார அளவிலான வட்டார வள மையத்தில் இருந்து share it மூலம் ஆசிரியர்கள் தங்களுக்குள் பாடநூல் அடிப்படையில் offline லேயே பகிர்ந்துக்கொள்ள முடியும். ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் பெற்றோருக்கும் இந்த Ecar file களை பள்ளி அளவிலும் வகுப்பு அளவிலும் பகிர்ந்து அளிக்க முடியும்.*



*🌟இதனால் இணையம் இன்றி அனைத்து E content களையும் அனைவருக்கும் பகிர்ந்து பயன்படுத்த முடியும்.*



*🌟ஒவ்வொரு QR code ம் ஒரு folder ஆக செயல்படும் இதனால் ஒரு QR code ல் ஒன்றிற்கு மேற்பட்ட மின் ஊடக பதிப்புகளை (econtents ) அளிக்க முடியும். மேலும் தமிழகம் முழுவதிலும் உள்ள ஆசிரியர்கள் பாடநூலில் உள்ள QR code களுக்கு தங்களின் சொந்த படைப்புகளை தயாரித்து அனுப்பலாம்.* 



*🌟இவற்றை தங்கள் Youtube channel ல் பதிவேற்றம் செய்து அந்த வீடியோவிற்கு குறிப்பிட்ட அந்த பாடம் அல்லது பாட உட்தலைப்பனை அளிக்கலாம்.* 



*🌟அதன் Description ல் அந்த மின் ஊடக வீடியோ எந்த வகையிலானது என்ற குறிப்பினை அளிக்கலாம்.* 



*🌟இதற்கு நீங்கள் குறிப்பிட்ட QR code ஐ scan செய்யும் போது கிடைக்கும் description ஐ அதில் அளித்தலால் போதுமானது.* 



*🌟இதற்கென ஒவ்வாரு பாடநூலுக்கும் ஓர் குறிப்பிட்ட எண்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.* 



*🌟உதாரணமாக முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி என்ற புத்தகத்திற்கு B104 என்ற புத்தக எண் குறியீடு ஒதுக்கப்பட்டுள்ளது.*



*🌟அடுத்ததாக அலகு எண் இதற்கு Unit என்ற ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான U என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.*



*🌟உதாரணமாக B104U1 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 என்பதை குறிக்ககும்.*



*🌟அடுத்ததாக பக்க எண் இதற்கு Page என்பதன் ஆங்கில எழுத்தின் முதல் எழுத்தான P என்பது எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.*



*🌟உதாரணமாக B104U1P45 என்பது முதல் வகுப்பு – முதல் பருவம் – சூழ்நிலையியல் – தமிழ் வழி – புத்தக்கத்தில் உள்ள அலகு 1 – பக்க எண் 45 ல் உள்ள QR code உடன் இணைக்க பரிந்துரைக்கப்படும் வீடீயோ என்பது பொருள்.*




*🌟அடுத்ததாக கடைசியாக உள்ள CH, HS, AS என்பன முறையே chapter, Hard spot, Assessment என்ற பதங்களை குறிப்பதாகும்.*



*🌟நீங்கள் உங்கள் youtube ல் பதிவேற்றம் செய்ய Description ஆக இந்த QR code ஐ scan செய்தால் வரக்கூடிய அந்த B104U1P45CH என்ற குறியீட்டினை உள்ளிட்டு அதற்கான key word ஆக இந்த description code மற்றும் QR code ன் கீழ் வழங்கப்பட்டள்ள 6 இலக்க எண் மற்றும் ஆங்கில எழுத்துகளின் கலவை குறியீட்டினையும் அந்த பாடம் மற்றும் பாடப்பகுதி சார்ந்த பிற key word களையும் அளித்து youtube ல் பதிவேற்றம் செய்து அந்த link ஐ அளிக்கப்பட்டுள்ள Google sheet ல் share செய்யலாம்.* 



*🌟Youtube இல்லாவிட்டாலும் நீங்கள் google drive ல் upload செய்து அந்த link ஐயும் கொடுக்கப்பட்ட Google form ல் பகிரலாம்.*



*தங்களின் வீடியோக்கள் பாடநூல் குழுவினரால் பரிசீலனை செய்யப்பட்டு QR code ல் இணைக்கப்படும் தங்களின் விவரங்களும் அந்த வீடியோவில் பின் இணைப்பாக வெளியிடப்படும். இவ்வாறாக தமிழகம் முழுவதிலும் உள்ள மாணவர்களுக்கு தங்களால் தயாரிக்கப்பட்ட வீடியோக்கள் சென்று சேரும்.*



*🙏நன்றி🙏* 

*_திரு. ஜெகநாதன்_* 

*TNText book QR code co ordinator*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/1-6-9.html




*🌟1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது*



*🌟புதிய பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன*


*🌟1, 6, 9 வகுப்புகளுக்கான பாட புத்தக விற்பனை கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 11-ஆம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை, ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு தொடங்கப்பட உள்ளது*


*🌟இந்த நிலையில், புதிய பாட புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு*


*🌟1-ஆம் வகுப்பு முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது*



*🌟இதே போன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-இல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-இல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது*


*🌟9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்கு புத்தகம் ரூ.100, தொகுதி 3-இல் (அறிவியல் ) ரூ.130, தொகுதி 4-இல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது*



*🌟11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்போது அறிவிக்கவில்லை*


*🌟இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_81.html



*🌟தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.*


*_இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:_*


*🌟பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழு அமைத்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.*


*🌟இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநரை தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.*


*_உளவியல் பொறுப்பாசிரியர்:_*


*🌟ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.*


*🌟இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.*


*🌟மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.*


*🌟ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.*


*_அனைத்து வகை பள்ளிகளிலும்...:_*


*🌟இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்.*


*🌟பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*ஜூன் 1 முதல் மாணவர்கள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் - பள்ளிக்கல்வி துறை உத்தரவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/1.html




*🌟ஜூன் 1 முதல் நடைமுறைப்படுத்த உத்தரவு*


*🌟ஜூன் 1ம் தேதி முதல் அரசு பள்ளியில் படிக்கும் 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவ, மாணவிகள் புதிய நிற சீருடையில் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.*


*🌟தமிழகத்தில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரே வகையான வகுப்புகளுக்கு ஏற்றவாறு புதிய நிறத்தில் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.* 


*🌟2018-19ம் கல்வியாண்டு முதல் 9ம் மற்றும் 10ம் வகுப்புகளில் படிக்கும் மாணவர்களுக்கு சாம்பல் நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், இளஞ்சிவப்பு நிற கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன்மேல் சாம்பல் நிற கோட்டும் அணிய வேண்டும்.* 


*🌟11ம் மற்றும் 12ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கருநீல நிற வண்ணத்தில் முழு கை சட்டையும், கருநீலநிறக் கோடிட்ட மேல் சட்டையும், மாணவிகளுக்கு கூடுதலாக இதன் மேல் கருநீலநிறக் கோட்டும் அணிய வேண்டும்.*


*🌟இந்த சீருடைகள் வரும் 1ம் தேதி பள்ளி திறக்கும் நாள் அன்று அனைத்து மாணவ, மாணவிகளும் அணிந்து வர வேண்டும் என்று பள்ளிக்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.*


*_இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:_* 


*🌟பள்ளிக்கல்வி துறை சார்பில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள சீருடை மாதிரிகள் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.* 


*🌟1 முதல் 8ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசு சார்பில் இலவச சீருடைகள் இரண்டு செட் பள்ளி திறக்கும் நாளில் வழங்கப்படும். பள்ளி சீருடைகளை பொறுத்தவரை அரசு தெரிவித்தப்படிதான் சீருடை இருக்க வேண்டும். இவ்வாறு கூறினர்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*செயல்திறனுக்கு ஏற்ப இனி அரசு பள்ளிகளுக்குநிதி ஒதுக்கீடு.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_28.html




*🌟நாடு முழுவதிலும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன்பிரதேசங்களில் இயங்கும் அரசுப் பள்ளிகளின் செயல்திறனுக்கு ஏற்ப இனி மத்திய அரசு நிதி கிடைக்க உள்ளது.*


*🌟நடப்பு 2018-19-ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் அரசுப் பள்ளிகளுக்கு ரூ.33,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.*


*🌟இதிலிருந்து, ஒவ்வொரு ஆண்டும் மாநில அரசுகள் தங்கள்தேவைக்கு ஏற்ப கேட்கும் போது பிரித்து வழங்கப்படும். இந்த நிதியுடன் ‘சமக்ரா சிக் ஷா’ திட்டத்தின் கீழ் கூடுதலாக ரூ.3 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.*


*🌟ஏற்கெனவே அமலில் இருந்த சர்வ சிக் ஷா அபியான், ராஷ்ட்ரிய மாத்யமிக் சிக் ஷா அபியான் மற்றும் ஆசிரியர்கள் கல்வி திட்டம் ஆகிய மூன்றையும் ஒன்றாக இணைத்து இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.


*🌟இந்த புதிய திட்டத்தின்படி, அரசுப் பள்ளிகளின் மாணவர், ஆசிரியர் சதவிதம், மாணவர் தேர்ச்சி உள்ளிட்ட பள்ளியின் வளர்ச்சிக்காக எடுக்கப்படும் பல்வேறு வகைசெயல்திறன்களின் அடிப்படையில் இந்தத் தொகை பிரித்துவழங்கப்பட உள்ளது.*


*🌟குறிப்பாக கிராமப்புற பள்ளிகள் இந்த திட்டத்தால் அதிகம் பலன்பெறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.*


*🌟இதுகுறித்து மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சக அதிகாரிகள்  கூறும்போது, “இதுபோன்ற புதிய திட்டங்களை அமல்படுத்துவதற்கு முன்பு, நாடு முழுவதிலும் உள்ள மாநில, யூனியன் பிரதேசஅரசுகளுடன் ஆலோசனை நடத்துவது வழக்கம்.*


*🌟ஆனால், இந்தத் திட்டத்துக்கு ஆலோசனை எதுவும் நடத்தவில்லை. சிறந்த நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டஇந்த திட்டத்தால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினருக்கு அதிக பலன் கிடைக்கும்” என்றார்.*


*🌟புதிய திட்டத்தின்படி எந்த செயல்திறனுக்கு எவ்வளவுதொகை ஒதுக்கப்படும் என்ற விவரம் மத்திய கல்வி அமைச்சகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட உள்ளது.*


*🌟உதாரணமாக நூலக வளர்ச்சிக்கு மாதம் ரூ.5000 முதல் ரூ.20,000, விளையாட்டுப் பயிற்சிக்கு ரூ.5,000 முதல் ரூ.25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மாநில அரசுகளுக்கு அனுப்பப்பட உள்ள இந்த விவரங்களை கண்டறிந்து அரசுப் பள்ளிகள் தங்கள் செயல்திறனை அதிகரிக்கலாம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Saturday 26 May 2018

*CRC & BRC Level Training for Primary & Upper Primary Teachers (2018-19) - Tentative Training Schedule Published.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/crc-brc-level-training-for-primary.html


📚📚📚📚📚📚📚📚

*IN-SERVICE TEACHER TRAINING :2018 - 19*

📚📚📚📚📚📚📚📚


*🌟வரும் கல்வி ஆண்டில் 2018-19 தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு CRC பயிற்சி 10 நாட்கள் BRC பயிற்சி  5 நாட்கள் ஆக மொத்தம் 15 நாட்கள் பயிற்சி நாட்கள்.*


*🌟நடுநிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு CRC  பயிற்சி 10 நாட்கள் BRC  பயிற்சி 10 நாட்கள் ஆக மொத்தம் 20 நாட்கள் பயிற்சி நாட்கள்.               *பள்ளி மொத்த வேலை நாட்கள் 225 நாட்கள்*


*_BRC Level Training for Primary Teachers: (All Primary Teachers)_*


*🌟BRC Level Training for Primary Teachers - 5Days*


*⚡Effectiveness of tamil teaching in Enchancing Reading skills using supplementary readers*


*⚡Communicative English and Phonemic Training in English*


*⚡Developing Arithmetic skills using SLM kit and Mental maths*


*⚡Science in Daily life*


*⚡Enriching Mapping skills*



*_BRC level training for upper primary Teachers (subject handling Teachers)_*


*🌟BRC level training for upper primary Teachers -10 days*


*⚡Developing comprehensive reading and writing skills - 2 days*


*⚡Functional Grammar and classroom communication -2 days*



*⚡content Enrichment Training in maths and usage of Maths kit - 2 days*



*⚡content Enrichment Training in science and usage of science kit -3 days*


*_CRC Level Training for primary Teachers : (All Primary Teachers)_*


*🌟CRC level training for primary Teachers - 10 days*


*⚡Reinforcement Training on learning outcomes - 1day*



*⚡Orientation Training on New Pedagogy - 2days*


*⚡Preparation of Assessment Tools - 1 day*


*⚡Disscusion on children Achievement - 1day*


*⚡Training on digital Assessment - 1 day*


*⚡Awareness on health and hygiene and environmental education -1day*


*⚡Remedial Teaching for late Bloomers - 1day*


*⚡TLM preparation in all subjects - 1day*


*_CRC Level Training for upper primary teachers (All upper primary Teachers)_*


*🌟CRC level training for upper primary teachers - 10 days:*


*⚡Reinforcement training on learning outcomes - 1day*


*⚡Reinforcement training on activity learning methodology - 1 day*


*⚡Preparation of Assessment tools - 1 day*


*⚡Discussion on children achievement - 1day*


*⚡Training on digital Assessment - 1day*


*⚡Awareness on Health and hygiene and environmental education - 1day*


*⚡Remedial teaching for late bloomers - 1day*


*⚡Understanding of child psychology and managing preadolescent children - 1day*


*⚡Preparation for competitive Examinations - 1day*


*⚡Usage of ICT and Multimedia in classroom - 1day*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



*பிறந்தநாள் வாழ்த்துகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_44.html


🎂🎂🎂🎂🎂🎂🎂🎂💐💐💐💐💐💐💐💐


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி திருப்பூர் மாவட்ட செயலாளர் _தோழர். கனகராஜா_ அவர்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்...*

🍹🍹🍹🍹🍹🍹🍹🍹✨✨✨✨✨✨✨✨


*தீராத மகிழ்ச்சியும், தித்திக்கும் வாழ்க்கையும் உம்மை என்றும் வந்து சேர்ந்திட வாழ்த்துகிறேன். இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களுடன்.*

🍧🍧🍧🍧🍧🍧🍧🍧👏👏👏👏👏👏👏👏



இவண்

*_TNPTF அயன்_*

*வாழ்க வளமுடன்*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*தொடக்கநிலை ஆசிரியர்களுக்கு ஜுலை மாதத்தில் பயிற்சி*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_96.html



*🌟தொடக்க நிலை ஆசிரியர்களுக்கு 5 நாட்கள் பயிற்சி.*

⚡1 st batch *10-07-2018 to 14-07-2018* 50% Trs

⚡2 nd batch *24-07-2018 to 28-07-2018.* 50% Trs

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*1, 6, 9, 11 வகுப்புகளுக்குப் புதிய பாடத்திட்டத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடக்கம்,*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/1-6-9-11.html



*🌟தமிழகப் பள்ளிக் கல்வித்துறை 1, 6, 9ஆம் வகுப்புகளுக்குப் புதிய பாடத்தின்படி வெளியிட்டுள்ள புத்தகங்களின் விற்பனை தொடங்கியுள்ளது.*


*🌟1 முதல் 12ஆம் வகுப்பு வரை புதிய பாடத்திட்டங்களை உருவாக்கத் திட்டமிட்ட தமிழக அரசு, முதற்கட்டமாக 1, 6, 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கான புதிய பாடநூல்களை வெளியிட்டுள்ளது.*


*🌟QR code போன்ற சிறப்பு அம்சங்களுடன் 80 ஜி.எஸ்.எம். தாளில் 4 வண்ணங்களில் பாடநூல்கள் அச்சிடப்பட்டுள்ளன.*


*🌟விலையில்லாப் பாடநூல்கள், பள்ளி திறக்கும் அன்றே மாணவ-மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. 1, 6, 9ஆம் வகுப்புகளுக்கான பாடநூல்கள் விற்பனை இன்று தொடங்கியுள்ளது.*


*🌟11ஆம் வகுப்புக்கான பாடநூல்கள் விற்பனை ஜூன் இரண்டாவது வாரத்தில் தொடங்கும். 1, 6, 9ஆம் வகுப்பு பாடநூல்களை*

www.textbookonline.tn.nic.in


*என்கிற இணையதளம் மூலமும் வாங்கலாம். நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்திலும், கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும் புதிய பாடப்புத்தகங்கள் கிடைக்கும்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு குறித்து 28ம் தேதி பேச்சுவார்த்தை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2018/05/28.html         


*🌟அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஊதிய முரண்பாடு தொடர்பாக வருகிற 28ம் தேதி பேச்சுவார்த்தைக்கு வரும்படி அழைக்கப்பட்டுள்ளனர்.*



*🌟ஊதிய முரண்பாடுகளை களைய நிதித்துறையில் அரசு செயலாளராக உள்ள (செலவினம்) எம்.ஏ.சித்திக் தலைமையில் தமிழக அரசினால் ஒரு நபர் குழு மே முதல் வாரம் அமைக்கப்பட்டது.*

*🌟இதை தொடர்ந்து அரசு ஊழியர் சங்கம் மற்றும் ஆசிரியர்கள் சங்கம், ஓய்வூதியதாரர்கள் சங்கம் சார்பில் இந்த குழுவிடம் மனு அளித்துள்ளனர்.*



*🌟மனுவை பெற்றுக் கொண்ட குழுவினர், மே 28ம் தேதி (நாளை மறுதினம்) காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் சந்திக்க வரும்படி அனைத்து சங்கங்களுக்கும் தனித்தனியாக பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளனர்.*



*🌟அப்படி, வரும்போது சங்கம் சார்பில் 5 பேர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*நீட்' விடைக்குறிப்பு வெளியீடு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡      



https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_26.html



*🌟நீட்' தேர்வுக்கான விடைக்குறிப்பு மற்றும் மாணவர்களின் விடைத்தாள்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.*



*🌟பிளஸ் 2 முடித்த மாணவர்கள் அலோபதி, இயற்கை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளில் சேர நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். நீட் தேர்வு தரவரிசையின் அடிப்படையில் மட்டுமே மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.வரும் கல்வி ஆண்டில் மருத்துவ படிப்புக்கான நீட் தேர்வு மே 6ல் நடந்தது.*



*🌟இதில் 13 லட்சம் பேர் பங்கேற்றனர். இந்த தேர்வுக்கான விடைக்குறிப்புகள் நேற்று சி.பி.எஸ்.இ.,யின் நீட் இணையதளத்தில் வெளியிடப்பட்டன.*



*🌟மாணவர்கள் தங்கள் வினாத்தாள் வகைக்கான விடைக்குறிப்பு மற்றும் விடைத்தாள்களில் அளித்த பதில்களின் நகலை*

 https://cbseneet.nic.in 

*என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.*



*🌟இந்த விடைக்குறிப்பை பயன்படுத்தி மாணவர்கள் தங்கள் மதிப்பெண்ணை தாங்களே கணக்கிட்டு கொள்ளலாம்.*



*🌟விடைகள் தவறாக இருந்தால் சரியான பதிலுக்கான ஆதாரங்களுடன் சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது*



*🌟விடைக்குறிப்புகளையும், விடைத்தாள்களையும் நாளை மாலை 5:00 மணி வரை மட்டுமே ஆன்லைனில் பார்க்க முடியும்; அதன்பின் தேர்வர்களால் பார்க்க முடியாது என சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

Friday 25 May 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_34.html


*🌟குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 - ன் படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 31.05.2018 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் மற்றும் ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிட விபரங்கள் பள்ளி வாரியாக EMIS மாணவர் எண்ணிக்கையுடனும், ஆசிரியர் தன் விவரத்துடனும் (Teachers profile) துல்லியமாக ஒப்பிட்டு சரிபார்த்து, எவ்வித தவறுக்கும் இடமின்றி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள A முதல் H வரையுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் 29.05.2018 பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வியக்க மின்னஞ்சல் (deesections@gmail.com) வழியாக தவறாமல் அனுப்பி வைக்குமாறும் அவற்றில் கையொப்பமிட்ட பிரதியினை தனிநபர் மூலம் 30.05.2018 முற்பகல் இவ்வியக்க  "டி1" பிரிவில் ஒப்படைக்குமாறும் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟மேலும் மேற்குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து அனுப்பப்படும் விவரங்களுக்கு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார் என்பதையும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் அளிக்கப்படும் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிட விபரங்களில் பின்னாளில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க என்பதைக் கருத்தில் கொண்டு, இந்நேர்வில் கோரப்பட்ட விபரங்களை உரிய படிவங்களில் எவ்வித தவறுக்கும் இடமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*   


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*26, 27.5.18 ( சனி ஞாயிறு) கல்வித்துறை அலுவலகங்கள் முழுமையாக செயல்பட வேண்டும் - பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/26-27518.html


*🌟பள்ளிக்கல்வித் துறை சார்பான மானிய கோரிக்கை (30.05.2018) புதன்கிழமை அன்று சட்டமன்றத்தில் மாண்புமிகு  பள்ளிக்கல்வி அமைச்சர் அவர்களால் தாக்கல் செய்யப்பட உள்ளது.*


*🌟இதன் காரணமாக வருகின்ற சனி மற்றும் ஞாயிறு விடுமுறை நாட்களில் (26.05.2018 & 27.05.2018) அனைத்து அலுவலகங்களும் தவறாமல் இயங்க வேண்டும் என்பதால், இவ்விரு நாட்களும் முழு பணி நாட்களாக செயல்பட அறிவுறுத்தப்படுகிறது.*


*🌟சட்டமன்ற வினா மற்றும் மானியக் கோரிக்கை சார்பான விபரங்கள் கோரப்படின் அதனை உடனுக்குடன் முதன்மைக்கல்வி அலுவலர்கள் அனுப்பி வைத்தல் வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.*


 *🌟இதில் எந்தவொரு சுணக்கமுமின்றி, எந்தவொரு புகாருக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தம்பட்டுள்ளது.*  


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


*NAS-NCERT Android App*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/nas-ncert-android-app.html



*🌟தேசிய அடைவுத்தேர்வு NAS அனைத்து விபரங்களையும் அறிய NCERT ஆல் வெளியிடப்பட்டுள்ள Android App*


*Android Play Store Application Link👇👇👇*

https://play.google.com/store/apps/details?id=com.ncert.nas

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

*இனி 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் ஆசிரியர் பாடம் நடத்த முடியாது*



🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_39.html




*🌟புதிய பாடத்திட்டத்தில் 'குயிக் ரெஸ்பான்ஸ் கோடு' (க்யூ.ஆர்., கோடு) என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டதால், இனி ஆசிரியர்கள் 'ஸ்மார்ட் போன்' இல்லாமல் பாடம் நடத்த முடியாது.*


*🌟சமீபத்தில் 1, 6, 9 மற்றும் பிளஸ் 1 வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியிடப்பட்டது.*


*🌟மேலும் அந்த புத்தகங்களில் 'க்யூ.ஆர்., கோடு' என்ற தொழில்நுட்பம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அதனை 'ஸ்மார்ட்போன்' மூலம் 'ஸ்கேன்' செய்தால் அந்த புத்தகத்தை மின் நுாலாக படிக்கலாம்.*


*🌟அனைத்து பாடங்களுக்கும் உரிய மதிப்பீடு, கேள்விகள், பாடம் சார்ந்த கூடுதல் தகவல், அதற்குரிய இணையதளங்கள் இடம் பெற்றிருக்கும். பாடல்கள் ஆடியோ, வீடியோ வடிவிலும், கணிதத்திற்கு செயல்விளக்கமும் கொடுக்கப்பட்டிருக்கும்.*


*🌟'க்யூ.ஆர்.,கோடு' பயன்படுத்துவது குறித்து மாணவர்களுக்கு விளக்க ஆசிரியர்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால் அவர்கள் பாடம் நடத்தும் போது கண்டிப்பாக 'ஸ்மார்ட்போன்' வைத்திருக்க வேண்டும்.*


*🌟கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பள்ளி திறந்ததும் 'க்யூ.ஆர்., கோடு' பயன்படுத்துவது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். அனைவருக்கும் 'ஸ்மார்ட்போன்' பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்,' என்றார்.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм