Monday 28 May 2018

*பள்ளிகளில் உளவியல் ஆலோசனை வழங்க ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாளர்களாக நியமிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_81.html



*🌟தமிழகத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகைப் பள்ளிகளிலும் மாணவர், மாணவிகளின் உளவியல் ரீதியான பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வகையில் பணி மூப்பு ஆசிரியர், ஆசிரியைகளை பொறுப்பாசிரியர்களாக நியமிக்க வேண்டுமென கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.*


*_இது தொடர்பாக தமிழ்நாடு பள்ளிக் கல்வி இயக்குநர், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:_*


*🌟பள்ளிகளில் மாணவர்கள் எதிர்கொள்ளும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து அவற்றுக்குத் தீர்வு காணும் வகையில் மாநில அளவில் குழு அமைத்து செயல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.*


*🌟இதன்படி, பள்ளிக் கல்வி இயக்குநரை தலைவராகவும், நாட்டு நலப்பணித் திட்ட இணை இயக்குநரை உறுப்பினர்-செயலராகவும், முதன்மைக் கல்வி அலுவலர்களை உறுப்பினர்களாகவும் கொண்டு மாநில அளவிலான குழு அரசால் அமைக்கப்பட்டுள்ளது. இதில் உளவியல் மருத்துவர்கள், கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.*


*_உளவியல் பொறுப்பாசிரியர்:_*


*🌟ஒவ்வொரு மாவட்டத்திலும் முதன்மைக் கல்வி அலுவலர் தலைமையில் குழு அமைத்து அதன் மூலம் பள்ளி மாணவர்களுக்கு ஏற்படும் உளவியல் ரீதியான பிரச்னைகளை கண்டறிந்து நடவடிக்கை மேற்கொள்ள அரசு அறிவுறுத்தியுள்ளது.*


*🌟இன்றைய சூழலில் பள்ளி மாணவர்கள் சிலர் தேர்வு பயம், வளர் இளம் பருவ பிரச்னைகள், மன அழுத்தம் உள்ளிட்ட உளவியல் பிரச்னைகளால் எளிதில் பாதிக்கப்பட்டு எதிர்மறையான செயல்களில் ஈடுபடுகின்றனர்.*


*🌟மாணவர்களின் எதிர்காலம் மற்றும் அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு ஒவ்வொரு பள்ளியிலும் பணிமூப்பு மற்றும் தகுதி, திறமை வாய்ந்த ஓர் ஆண் ஆசிரியர், ஒரு பெண் ஆசிரியர் உளவியல் ஆலோசனை வழங்க பொறுப்பாசிரியர்களாக நியமிக்கப்பட வேண்டும்.*


*🌟ஆண் ஆசிரியர்கள் மாணவர்களுக்கும், பெண் ஆசிரியர்கள் மாணவிகளுக்கும் தேவையின் அடிப்படையில் உளவியல் ஆலோசனை வழங்க வேண்டும். இந்த பொறுப்பாசிரியர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்குவது சார்ந்த பயிற்சிகளை வழங்க வேண்டும்.*


*_அனைத்து வகை பள்ளிகளிலும்...:_*


*🌟இந்த உளவியல் பொறுப்பாசிரியர்கள் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, ஐபி உள்ளிட்ட அனைத்து வகை பள்ளிகளிலும் நியமிக்கப்பட வேண்டும்.*


*🌟பள்ளிகளில் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ள விவரங்களை ஆய்வு அலுவலர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இதற்கென பள்ளிகளில் தனியாக பதிவேடு பராமரிக்க வேண்டும் என சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: