Monday, 28 May 2018

*1, 6, 9 வகுப்புகளுக்கு புதிய பாட புத்தகத்தின் விலை அறிவிப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/1-6-9.html




*🌟1, 6, 9-ஆம் வகுப்புகளுக்கு உரிய புதிய பாட புத்தகத்தின் விலையை தமிழ்நாடு பாட நூல் நிறுவனம் அறிவித்துள்ளது*



*🌟புதிய பாடத் திட்டத்தின்படி தயார் செய்யப்பட்டுள்ள 1, 6, 9, 11-ஆம் வகுப்புகளுக்குரிய விலையில்லா பாட புத்தகங்கள் பள்ளி திறக்கும் அன்றே மாணவர்களுக்கு வழங்க ஏதுவாக அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன*


*🌟1, 6, 9 வகுப்புகளுக்கான பாட புத்தக விற்பனை கடந்த 24-ஆம் தேதி முதல் தொடங்கியது. 11-ஆம் வகுப்புகளுக்கான பாட புத்தகங்களின் விற்பனை, ஜூன் 2-ஆவது வாரத்தில் பள்ளிகள் தொடங்கும் முன்பு தொடங்கப்பட உள்ளது*


*🌟இந்த நிலையில், புதிய பாட புத்தகங்களுக்கான விலையை தமிழ்நாடு பாட நூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள விலை விவரம் வருமாறு*


*🌟1-ஆம் வகுப்பு முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.80, முதல் பருவம் தொகுதி 2 (கணக்கு, சுற்றுச்சூழல் அறிவியல்) ரூ.70, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.100 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது*



*🌟இதே போன்று 6-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்), தொகுதி 2-இல் கணக்கு ஆகிய புத்தகங்கள் தலா ரூ.90, தொகுதி 3-இல் (அறிவியல், சமூக அறிவியல்) ரூ.120, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.120 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது*


*🌟9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல் பருவத்துக்கான தொகுதி 1(தமிழ், ஆங்கிலம்) ரூ.120, தொகுதி 2 கணக்கு புத்தகம் ரூ.100, தொகுதி 3-இல் (அறிவியல் ) ரூ.130, தொகுதி 4-இல் சமூக அறிவியல் புத்தகம் ரூ.150, சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான தமிழ் புத்தகம் ரூ.150 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது*



*🌟11-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பாட புத்தகத்தின் தலைப்புகள் இறுதியாக முடிவு எடுக்கப்படாததால் விலையை தற்போது அறிவிக்கவில்லை*


*🌟இதற்கான விலை விரைவில் அறிவிக்கப்படும். 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு மட்டும் புதிய பாட புத்தகத்தின் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: