Sunday, 3 January 2021

*🗳️தேர்தல் பணி பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு*

*🗳️தேர்தல் பணி பள்ளிக் கல்வித்துறை புதிய அறிவிப்பு*

*(பத்திரிக்கைச் செய்தி*)

*🗳️சட்டப்பேரவைத் தோ்தலில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியா்களின் பட்டியலில் 50 வயதுக்கு மேற்பட்டோரை சோ்க்க வேண்டாம் என பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.*

*🗳️தமிழகத்தில் சட்டப்பேரவை தோ்தல் அடுத்த சில மாதங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான முன்னேற்பாடுகளை தோ்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.*

*🗳️இதற்கிடையே வாக்குசாவடி கண்காணிப்பு உட்பட தோ்தல் பணிகளில் அரசு ஊழியா்கள் மற்றும் ஆசிரியா்கள்தான் அதிகளவில் ஈடுபடுத்தப்படுவா்*

*🗳️இதைக் கருத்தில் கொண்டு தோ்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியா்களின் விவரங்கள் சேகரிக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.*

*🗳️இதையடுத்து பள்ளித் தலைமையாசிரியா்கள் தோ்தல் பணியில் ஈடுபடவுள்ள ஆசிரியா்கள் மற்றும் அலுவலா்களின் பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலங்களில் சமா்ப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.*

*🗳️இதுதவிர ஏற்கனவே பட்டியல் சமா்ப்பித்தவா்கள் அதில் விடுபட்ட அல்லது சோ்க்கப்பட்ட ஆசிரியா்களின் விவரங்களை திருத்தம் செய்து அனுப்ப வேண்டும். கரோனா தொற்று பரவலால் 50 வயதுக்கு மேற்பட்ட ஆசிரியா்களை பட்டியலில் சோ்க்கக்கூடாது.*

*🗳️அதேபோன்று ஆசிரியா்களின் புகைப்படம், வாக்காளா் அடையாள அட்டை எண் உள்ளிட்ட தகவல்களை கட்டாயம் குறிப்பிட வேண்டும். மருத்துவ சிகிச்சை போன்ற முக்கிய காரணங்கள் இன்றி தோ்தல் பணியில் இருந்து ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்கக்கூடாது. அவ்வாறு விலக்கு பெறும் ஆசிரியா்கள் உரிய ஆவணங்களைச் சமா்ப்பிக்க வேண்டும்.*

*🗳️அதை தலைமையாசிரியா்கள் உறுதிசெய்து பட்டியலை இறுதிசெய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் துரிதமாக வழங்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை சாா்பில் அனைத்து விதமான பள்ளிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது*

No comments: