Friday, 25 May 2018

*தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/blog-post_34.html


*🌟குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி உரிமைச் சட்டம் 2009 - ன் படி தொடக்கக்கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய/நகராட்சி/மாநகராட்சி அரசு நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் 31.05.2018 அன்றைய நிலவரப்படி ஆசிரியர் காலிப்பணியிட விபரங்கள் மற்றும் ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிட விபரங்கள் பள்ளி வாரியாக EMIS மாணவர் எண்ணிக்கையுடனும், ஆசிரியர் தன் விவரத்துடனும் (Teachers profile) துல்லியமாக ஒப்பிட்டு சரிபார்த்து, எவ்வித தவறுக்கும் இடமின்றி இத்துடன் இணைக்கப்பட்டுள்ள A முதல் H வரையுள்ள படிவங்களில் பூர்த்தி செய்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரின் ஒப்பத்துடன் 29.05.2018 பிற்பகல் 2.00 மணிக்குள் இவ்வியக்க மின்னஞ்சல் (deesections@gmail.com) வழியாக தவறாமல் அனுப்பி வைக்குமாறும் அவற்றில் கையொப்பமிட்ட பிரதியினை தனிநபர் மூலம் 30.05.2018 முற்பகல் இவ்வியக்க  "டி1" பிரிவில் ஒப்படைக்குமாறும் அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.*

*🌟மேலும் மேற்குறிப்பிட்டவாறு பூர்த்தி செய்து அனுப்பப்படும் விவரங்களுக்கு சார்ந்த மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரே முழுப் பொறுப்பாவார் என்பதையும், மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரால் அளிக்கப்படும் காலிப்பணியிடம் மற்றும் ஆசிரியரின்றி உபரி காலிப்பணியிட விபரங்களில் பின்னாளில் தவறு ஏதேனும் கண்டறியப்பட்டால் தொடர்புடைய அனைத்து அலுவலர்கள் மீதும் உரிய ஒழுங்கு நடவடிக்கை எடுக்க என்பதைக் கருத்தில் கொண்டு, இந்நேர்வில் கோரப்பட்ட விபரங்களை உரிய படிவங்களில் எவ்வித தவறுக்கும் இடமின்றி குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் அனுப்பி வைக்குமாறு அனைத்து மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுவதாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநர் செயல்முறைக் கடிதம் வெளியிட்டுள்ளார்.*   


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: