*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு, தமிழ் மாநிலக்குழு கூட்டமுடிவுகள்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_21.html
*🌟இந்திய பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு (STFI) தமிழ் மாநிலக்குழு கூட்டம் 21.07.2019 இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதுரை, காக்கா தோப்பு, மூட்டா அலுவலகத்தில் திரு.ச.மயில், அவர்கள் தலைமையில் நடைபெற்றது*
*கூட்டமுடிவுகள்*
*_தீர்மானம் எண் : 1_*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் சார்பில் 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு நாட்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற அகில இந்தியப் பெண்ணாசிரியர்கள் மாநாட்டின் வரவு – செலவு விவரங்கள் எழுத்துமூலமான அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டு இம்மாநிலக்குழுவால் ஏகமனதாக ஏற்பு செய்யப்பட்டது.*
*_தீர்மானம் எண் : 2_*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டின் வரவு- செலவு அறிக்கையின்படி, ஏற்கனவே நடைமுறையில் உள்ள விகிதாச்சாரப்படி நிதிப் பகிர்வு வழங்காத இணைப்புச் சங்கங்களும், கூடுதல் நிதிப் பகிர்வு செலுத்த வேண்டிய இணைப்புச் சங்கங்களும் நிதி நிலுவைகளை விரைந்து அளித்திட இம்மாநிலக்குழு ஏகமானதாகக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் எண் : 3_*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) இணைப்புச் சங்கங்மான தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் கழகத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் திரு.மா.ரவிச்சந்திரன் அவர்கள் தமிழக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையாக எவ்விதமான அடிப்படை முகாந்திரமுமின்றி தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதை இம்மாநிலக்குழு வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழக அரசு மேற்படி தற்காலிகப் பணிநீக்கத்தை உடனடியாக ரத்து செய்து திரு.மா.ரவிச்சந்திரன் அவர்களை மீண்டும் பணியில் அமர்த்தாவிட்டால், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) சார்பில் தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரிய அளவிலான போராட்ட நடவடிக்கைகளில் வெகுவிரைவில் ஈடுபட இம்மாநிலக்குழு ஏகமானதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் எண் : 4_*
*🌟இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின்(STFI) மத்திய செயற்குழு(CEC) தீர்மானித்தபடி, பெண் ஆசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பை 23.09.2019 மற்றும் 24.09.2019 ஆகிய இருநாட்கள் திண்டுக்கல்லில் நடத்துவதெனவும், பயிற்சி வகுப்பிற்கான செலவினங்களை நடைமுறையில் உள்ள விகிதாச்சாரப்படி இணைப்புச்சங்கங்கள் பகிர்வு செய்து கொள்வதெனவும், மத்திய செயற்குழு(CEC) தீர்மானித்தபடி பயிற்சி வகுப்பில் கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிலிருந்து 45 பெண் ஆசிரியப் பிரதிநிதிகளும், தமிழ்நாட்டின் சார்பில் 20 பெண் ஆசிரியப் பிரதிநிதிகளும் கலந்து கொள்வதெனவும் தீர்மானிப்பதோடு, அவசியம் கருதி தமிழ்நாட்டின் சார்பில் கூடுதலாக 14 பிரதிநிதிகளை (20+14=34) அனுமதிப்பதெனவும், தமிழ்நாட்டின் சார்பில் கலந்து கொள்ளும் 34 பிரதிநிதிகளை கீழ்க்கண்ட எண்ணிக்கையில் இணைப்புச் சங்கங்கள் அனுப்புவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.*
*⚡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி - 10*
*⚡தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் - 05*
*⚡தமிழ்நாடு உயர்நிலை,மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 05*
*⚡தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்கம் - 02*
*⚡தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு - 02*
*⚡தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்கம் - 02*
*⚡தமிழ்நாடு பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழாசிரியர் கழகம் - 02*
*⚡தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் - 02*
*⚡தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிலாசிரியர் கழகம் - 02*
*⚡தமிழ்நாடு ஆசிரியப் பயிற்றுநர் முன்னேற்றச் சங்கம் -02*
*_தீர்மானம் எண் : 5_*
*🌟தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு அறிக்கை தொடர்பாக இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்ட அமைப்புகளின் சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 10.08.2019 மற்றும் 11.08.2019 ஆகிய இரு தினங்களில் ஏதாவது ஒரு தினத்தன்று மாவட்ட அளவில் கருத்தரங்கம் நடத்துவதெனவும், இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் மாவட்டக்கிளைகள் கூடி அதற்குரிய ஏற்பாடுகளை மிகச் சிறப்பாக செய்திடவும் இம்மாநிலக்குழு கேட்டுக்கொள்கிறது. அதனைத் தொடர்ந்து இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலக்குழுவின் சார்பில் மாநில அளவிலான கருத்தரங்கை நடத்துவதெனவும் இம்மாநிலக்குழு தீர்மானிக்கிறது.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*(அமைப்பாளர்)*
*இந்தியப்பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பு(STFI)*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment