*🌟பள்ளிக்கல்வித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து வகையான அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவியருக்கு மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடும் பணிக்காக மாணவ, மாணவியரின் விபரங்களை EMIS - ன் மூலம் பெற்று வழங்கப்பட்டு வருகிறது. சில மாணவ, மாணவியரின் புகைப்படம் உட்பட சில விபரங்கள் முழுமையாக உள்ளீடு செய்யப்படாதது கண்டறியப்பட்டுள்ளது. இதனால் மேம்படுத்தப்பட்ட திறன் அட்டைகள் அச்சிடும் பணிகள் தொடர்ந்து நடைபெறுவதில் காலதாமதம் ஏற்படுகிறது.*
*🌟எனவே இதன்மீது தனிகவனம் செலுத்தி விடுபட்ட மாணவ, மாணவியரின் புகைப்படம் உட்பட அனைத்து விபரங்களையும், 1,6,9,11 ஆம் வகுப்பில் பயிலும் அனைத்து மாணவ, மாணவியர்களின் புகைப்படம் உட்பட அனைத்து விபரங்களையும் 31/07/2019 க்குள் EMIS ல் முழுமையாக உள்ளீடு செய்யுமாறு பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment