Friday, 26 July 2019

*ஈரோடு வட்டாரக்கல்வி அலுவலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநரிடம் முறையீடு...*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/07/blog-post_26.html


*☀️ஈரோடு மாவட்டம், ஈரோடு வட்டாரக் கல்வி அலுவலராக பணிபுரிந்து வரும் திரு.கோபால் அவர்கள் ஆசிரியர்களின் வருமானவரி கணக்கு தொடர்பாக 24Q படிவம் தாக்கல் செய்வதற்கு என்று கூறி ஒவ்வொரு ஆசிரியரிடமும் தலா ரூ.200/ வீதம் வெளிப்படையாக வசூல் செய்து வருகிறார். தனிநபர் வருமானவரி தாக்கல் (E-FILING செய்தல் பணிக்காக சுற்றறிக்கை மூலம் அறிவித்து தொகை நிர்ணயம் செய்து ஆசிரியர்களிடம் பணம் வசூலித்து வருகிறார்.*


*☀️இது தொடர்பாக எங்களது இயக்க பொறுப்பாளர்கள் வட்டாரக் கல்வி அலுவலர் திரு.கோபால் அவர்களிடம் நேரில் முறையிட்டபோது அலுவலகத்தை விட்டு வெளியே செல்லுங்கள் என்று அவமரியாதையாக பேசியுள்ளார்.*


*☀️மேற்படி வட்டாரக் கல்வி அலுவலரின் இதுபோன்ற விதிகளுக்கு புறம்பான செயல்கள் கல்வித்துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் செயல்கள் என்பதால் இது தொடர்பாக தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு உரிய விசாரணைக்கு உத்தரவிட்டு தக்க நடவடிக்கை மேற்கொண்டு உதவிட கனிவுடன் வேண்டுகிறேன்.*


🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: