*பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அழைப்பின் பேரில் JACTTO-GEO மாநில ஒருங்கிணைப்பாளர்கள் நேரில் சந்திப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/06/jactto-geo.html
*🌟மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தனர்.*
*🌟இச்சந்திப்பின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.*
*🌟தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.*
*🌟மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.*
*🌟இக்கோரிக்கைகள் குறித்து இயக்குநரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.*
சென்னை.
26.06.2019
🤝தோழமையுடன்
*_ச.மோசஸ்_*
*நிதிக்காப்பாளர்,*
*ஜாக்டோ-ஜியோ*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment