Sunday, 23 June 2019

*ஆசிரியர்களின் பணிப்பதிவேட்டில் தவறான பதிவுகள் திருப்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலருக்கு கண்டனம் - தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச்செயற்குழு தீர்மானம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_23.html



*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சிவகங்கை மாவட்டச் செயற்குழு கூட்டம் மாவட்ட துணைத்தலைவர் _தோழர்.மாலா_ தலைமையில் நடந்தது.*


*⚡மாநிலத் துணைத்தலவர் _தோழர்.ஜோசப்ரோஸ்,_*

*_மாநில செயற்குழு உறுப்பினர் _தோழர்.புரட்சித்தம்பி_ முன்னிலை வகித்தனர்.*


*⚡மாவட்டச் செயலாளர் _தோழர்.முத்துப்பாண்டியன்_ தீர்மானங்களை முன்மொழிந்து பேசினார்.*


*⚡மாவட்டப் பொருளாளர் _தோழர்.குமரேசன்,_*


*⚡மாநிலப்பொதுக்குழு உறுப்பினர்கள் _தோழர்.ஞான அற்புதராஜ்,_ _தோழர்.சிங்கராயர்,_ _தோழர்.ஆரோக்கியராஜ்,_*


*⚡மாவட்ட துணை செயலாளர்கள் _தோழர்.ரவி,_ _தோழர்.ஜெயக்குமார்_ உள்ளிட்ட மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.*


*_கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன._*


*🌟எஸ்.புதூர் வட்டாரம் மேனாள் செயலாளர் _திரு.சுதர்சன்,_ கல்லல் வட்டாரப் பொருளாளர் _திரு.ஆரோக்கிய லூயிஸ் லெவே_ அவர்களின் தாயார் _திருமதி.சேசம்மாள்,_ தமிழ்நாடு ஆங்கில மொழியாசிரியர் கழகத்தின் சிவகங்கை மாவட்டச் செயலாளர் _திரு.சேசு லூயிஸ் ராஜ்_ ஆகியோரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்தல்,*


*🌟அங்கன்வாடிகளில் முன்பருவக்கல்விக்கு பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களில் தொடக்கக்கல்வி இயக்குனரின் செயல்முறைகளுக்கு முரணாக திருப்பத்தூர் மற்றும் தேவகோட்டை வட்டாரங்களில் பணியமர்த்தப்பட்ட ஆசிரியர்களின் மாற்றுப்பணி உத்தரவை திரும்பப்பெற வேண்டும்,*


*🌟அரசு ஊழியர்களின் அடிப்படை விதிகளுக்கு முரணாக பணிப்பதிவேடுகளில் தவறான பதிவுகளை மேற்கொண்டு வருவதோடு, உண்மைக்கு புறம்பான செய்திகளை கல்வித்துறைக்கு தெரிவித்து ஆசிரியர் விரோதப்போக்கை தொடர்ந்து கடைபிடித்து வரும் திருப்பத்தூர் வட்டாரக்கல்வி அலுவலர் அவர்களுக்கு கண்டனம் தெரிவிப்பதோடு, திருப்பத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர் அவர்கள் உடனடியாக தலையிட்டு உரிய வழிகாட்டுதல்களை வட்டாரக்கல்வி அலுவலருக்கு வழங்கிட வேண்டும்,*



*🌟26.11.2018 அன்று நடைபெற்ற அரசாணை எரிப்புப் போராட்டதில் காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையை சென்னை உயர்நீதி மன்றம் மதுரை கிளை ரத்து செய்துள்ளதால் அதனடிப்படையில் ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்ட 17(ஆ) குற்ற குறிப்பாணையை சம்பந்தப்பட்ட கல்வி அலுவலர்கள் மீட்டுக்கொள்ள வேண்டும்,*


*🌟ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்று தமிழக முதல்வரின் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் நலன் கருதி பணிக்கு திரும்பிய ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தமிழக அரசு விலக்கிக்கொள்வதோடு, பொது மாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும்,*


*🌟பள்ளிகள் திறந்து 3 வாரங்கள் ஆன நிலையிலும் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் வழங்காததால் மாணவர்களின் கல்வி நலன் வெகுவாக பாதித்துள்ளதை தமிழக அரசு உணர்ந்து விரைவாக பாடப்புதகங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்,*


*🌟மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் மீது கருத்துக்கூறுவதற்கு காலகெடுவை கூடுதலாக மூன்று மாதங்கள் நீட்டிப்பதோடு, இது குறித்து விரிவான கலந்துரையாடல்களை ஆசிரியர்கள், பொதுமக்கள், மாணவர்கள், கல்வியாளர்களிடம் கல்வித்துறை நடத்திட வேண்டும்,*


*🌟அரசு பள்ளியில் சிறப்பாக பணியாற்றியமைக்கும், அரசு நிதி சாராது பல உதவிகளை மாணவர்களுக்கு வழங்கியமைக்கும், பெண்களுக்கு எதிரான அநீதிகளை தடுத்து அவர்களது உரிமைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்து வந்தமைக்காகவும் இவ்வாண்டிற்கான சோழன் உலக சாதனைப்புத்தக விருது பெற்றுள்ள மாவட்ட துணைத்தலைவர் _திருமதி சி.மாலா_ அவர்களுக்கு பாராட்டு தெரிவிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.*




🤝தோழமையுடன்;


*_ஆ.முத்துப்பாண்டியன்_*

*மாவட்டச்செயலாளர்*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*சிவகங்கை மாவட்டம்*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: