Friday, 28 June 2019

*உபரிப்பணியிட மாறுதல்-அரசாணைகளில் முரண்பாடு-திருத்தம் செய்திட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி (TNPTF) கோரிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/2019-20.html


*2019-20 ஆசிரியர்கள் கலந்தாய்வு மாறுதல் உத்தரவின் அடிப்படையில் ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் வழிகாட்டுதலில் திருத்தம் செய்து அரசாணை வெளியிட வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில மையம் _மதிப்புமிகு. பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கும்,_ _மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குநர்_ அவர்களுக்கும் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது*

*பார்வை:*

*_அரசாணை (1டி) எண் : 270 பள்ளிக்கல்வித் (வ.செ :2) துறை  நாள் : 10.07.2012_*


*_2.ஆரசாணை (1டி) எண் :217 பள்ளிக்கல்வி [ப.க:5(1)]த்துறை : நாள் : 20.06.2019_*


******************


🌀🔄📩

*🌟பார்வை 2-ல் கண்ட அரசாணை பக்கம் 4-ல் பத்தி(ii)-ல் ஒன்றியத்திற்குள் காலிப்பணியிட எண்ணிக்கை மற்றும் கூடுதல் தேவை ஆகியவற்றின் மொத்தத்திற்கு கூடுதலாக உபரி ஆசிரியர்கள் இருப்பின் ஒன்றியத்திற்குள் பணிநிரவல் செய்தவர்கள் போக எஞ்சியுள்ள இளைய உபரி ஆசிரியர்களை ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு/வேறு அலகுகளுக்கு மாவட்டத்திற்குள் பணிநிரவல் செய்ய வேண்டும். அவ்வாறு உபரி ஆசிரியர்கள் ஒன்றியத்திற்குள்,ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு/வேறு அலகுகளுக்கு பணிநிரவல் செய்யப்படும்போது  பள்ளியில் சேர்ந்த தேதியின்படி இளையவரை பணிநிரவல் ஆசிரியராக நிர்ணயத்தல் வேண்டும் என்றும், பத்தி(ii)-ல் ஒன்றியத்திற்குள் பணிநிரவல் செய்யப்பட்ட பின்னரும் உபரி இடைநிலை ஆசிரியர்/பட்டதாரி ஆசிரியர்கள் இருப்பின் அவர்களை அருகில் உள்ள வேறு ஒன்றியத்தில் தேவைப்படும் பள்ளிகளுக்கு மாற்றி பணிநிரவல் செய்திட வேண்டும்*


🌀🔄📩

*🌟அவ்வாறு பணிநிரவல் காரணமாக உபரி ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியத்திற்கு மாற்றப்படும்போது சம்பந்தப்பட்ட ஒன்றியத்தின் ஒட்டுமொத்த முன்னுரிமைப்பட்டியலில் மிகவும் இளையவர்களாக உள்ளவர்களைத்தான் பணிநிரவல் செய்தல் வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.*


🌀🔄📩

*🌟பார்வை 2-ல் கண்ட அரசாணைப்படி ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் செய்தால் ஒன்றியத்தில் முன்னுரிமைப்பட்டியலில் மூத்த ஆசிரியர்கள் ஒன்றியம் விட்டு ஒன்றியம் செல்லவேண்டிய நிலை ஏற்படும். பார்வை 1-ல் கண்ட அரசாணைப்படி ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் செய்தால் ஒன்றியத்தில் முன்னுரிமைப்பட்டியலில் மிகவும் இளையவர்களாக உள்ளவர்கள் உபரி ஆசிரியர் பணி மாறுதலில்  செல்வர்.*


🌀🔄📩

*🌟எனவே, பார்வை 2-ல் கண்ட அரசாணையின் பார்வை 5-ல், பார்வை 1-ல் கண்ட அரசாணையை குறிப்பிட்டுள்ளதால், அரசாணை(1டி) எண் 217 பள்ளிக்கல்வி [ப.க:5(1)] த்துறை நாள் : 20.06.2019 -ல் ஒன்றியம் விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவலுக்கு வழங்கப்பட்ட நெறிமுறைகளை, அரசாணை(1டி) எண் : 270 பள்ளிக்கல்வித் (வ.செ:2) துறை நாள்: 10.07.2012க்கு ஏற்ப ஒன்றியம்விட்டு ஒன்றியம் உபரி ஆசிரியர் பணிநிரவல் மாறுதல் வழிகாட்டுதலில் திருத்தம் செய்து அரசாணை வெளியிடுமாறு மாநில அமைப்பின் சார்பில் தங்களை கனிவுடன் வேண்டுகிறோம்.*


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: