Saturday, 15 June 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழு கூட்ட முடிவு குறித்து பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/06/blog-post_15.html


*_மாநில அமைப்பின் செய்தி அறிக்கை எண் : 11 நாள் : 15.06.2019_*


⚔🛡⚔

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலச் செயற்குழுக் கூட்டம் 15.06.2019 சனிக்கிழமை மதுரையில் சங்கத்தின் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ தலைமை வகித்தார். மதுரை மாவட்டச் செயலாளர் _தோழர்.க.ஒச்சுக்காளை_ வரைவேற்புரையாற்றினார்.*



⚔🛡⚔

*🌟கூட்டத்தில் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள், அரசுப்பள்ளிகளை மூடுவதால் ஏற்படும் பாதிப்புகள், மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் சாதக பாதகங்கள் குறித்து மாநில பொதுச்செயலாளர் _தோழர்.ச.மயில்_ விளக்கிப் பேசினார்.*



⚔🛡⚔

*🌟கூட்டத்தில் புதிய கல்வியாண்டு தொடங்கி பள்ளிகள் திறக்கப்பட்டு 2 வாரங்கள் ஆன நிலையிலும் தமிழகம் முழுவதும் பெரும்பாலான வகுப்புகளுக்கு பாடப்புத்தகங்கள் இதுவரை வழங்காதது மாணவர்களின் கல்வி நலனை வெகுவாக பாதித்துள்ளது. எனவே, விரைந்து புதிய பாடப்புத்தகங்கள் வழங்கிட தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்துகிறது.*



⚔🛡⚔

*🌟நடுநிலைப்பள்ளிகளுடன் இணைந்த அங்கன்வாடிகளில் தொடங்கப்பட்டுள்ள LKG, UKG வகுப்புகளில் நீதிமன்ற உத்தரவிற்கு மாறாக உபரியாக இல்லாத ஆசிரியர்களை நியமிப்பதாலும், மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி ஈராசிரியர் பள்ளிகளிலிருந்து ஒரு ஆசிரியரை அங்கன்வாடிக்கு நியமனம் செய்வதாலும், நூற்றுக்கணக்கில் இடைநிலை ஆசிரியர்கள் பணியிடம் காலியாக உள்ள ஒன்றியங்களிலும் அங்குள்ள இடைநிலை ஆசிரியர்களை  அங்கன்வாடிகளுக்கு நியமனம் செய்வதாலும் தொடக்கக்கல்வித்துறையில் 1 முதல் 5 வகுப்புகள் வரை மாணவர்களின் கல்விநலன் வெகுவாகப் பாதிக்கப்படும் என்பதால் அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தைக் கைவிட்டு அங்கு முன்பருவ ஆசிரியர் பயிற்சி பெற்ற ஆசிரியர்களை நியமித்திட வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟மாணவர்கள் எண்ணிக்கையைக் காரணம் காட்டி கிராமபுறங்களில் உள்ள அரசுப் பள்ளிகளை மூடுவது என்பது ஏழை, எளிய குழந்தைகளின் கல்வியைப் பெரிதும் பாதிக்கும் செயல் என்பதால், அந்நடவடிக்கையில் தமிழக அரசு உடன் நிறுத்துவதோடு, அப்பள்ளிகளின் தரத்தை உயர்த்தி மாணவர்கள் எண்ணிக்கையை உயர்த்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை மாநிலச் செயற்குழு வலியுறுத்தியது.*



⚔🛡⚔

*🌟மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் மீது கருத்துக்கூறுவதற்குரிய  காலக்கெடுவை  கூடுதலாக மூன்று மாதங்கள் நீட்டிக்க வேண்டும் என்றும், வரைவு அறிக்கையின் மொழியாக்கத்தை அனைத்து மாநில மொழிகளிலும் மத்திய அரசே வெளியிட வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெறாத 1500 இடைநிலை ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்விலிருந்து விலக்கு அளித்து அவர்களது குடும்ப நலனையும், அவர்களது எதிர்கால வாழ்வாதாரத்தையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.*



⚔🛡⚔

*🌟சங்கத்தின் வரவு - செலவு தொடர்பாக மாநிலப் பொருளாளர் _தோழர்.க.ஜோதிபாபு_ விளக்கிப் பேசினார். துணைப்பொதுச்செயலாளர் _தோழர்.தா.கணேசன்_ நன்றி கூறினார். கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.*



🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

மாநில பொதுச்செயலாளர்,

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*



🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: