Friday, 14 June 2019

*ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள் (13.06.2019)*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2019/06/13062019.html


*🌟ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் (13.06.2019) வியாழக்கிழமை அன்று சென்னையில் தமிழ்நாடு அரசுக் கல்லூரி ஆசிரியர் கழகத்தில் நடைபெற்றது.* 


*🌟இக்கூட்டத்திற்கு திரு.சி.சேகர், திரு.கு.வெங்கடேசன், திரு.அ.மாயவன் ஆகியோர் கூட்டுத்தலைமை ஏற்றனர்.*


*_கூட்டத் தீர்மானங்கள்:_*


*⚡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள் என சுமார் 5400 பேர்களுக்கு 17பி வழங்கப்பட்டுள்ளது. அதன் மூலமாக பதவி உயர்வு பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி ஆசிரியர்கள், கல்லூரி பேராசிரியர்களை பணியிட மாறுதல் பாதிப்புக்கு உள்ளாகப்பட்டுள்ளனர். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், கல்லூரி பேராசிரியர்கள் ஆகியோரின் 17பி  மற்றும் FIR ஆகியவற்றை ரத்து செய்து, பதவி உயர்வு வழங்குவதற்கும், பணியிட மாறுதல் செய்யப்பட்டோரை மீண்டும் முன்னர் பணியாற்றிய இடத்திலேயே மீளப் பணியமர்த்துவதற்கு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுகிறோம்.*


* ⚡ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவருமான திரு.மு.சுப்பிரமணியன் அவர்களை அவர் அரசு பணியிலிருந்து ஓய்வு பெறும் நாளான 31.05.2019 அன்று தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டதை ஜாக்டோ ஜியோ வன்மையாக கண்டிக்கிறது. அரசுப்பணியில் 32 ஆண்டுகாலம் அப்பழுக்கற்ற சேவையினை மேற்கொண்ட திரு.மு.சுப்பிரமணியன் அவர்களை ஜாக்டோ ஜியோ போராட்டத்தினை தலைமையேற்று நடத்தினார் என்ற உள்நோக்கத்தோடு தமிழக அரசு அவருக்கு தற்காலிக பணிநீக்கத்தினை அளித்துள்ளது. மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களும், மாண்புமிகு தமிழக உள்ளாட்சி துறை அமைச்சர் அவர்களும் இந்த விஷயத்தில் தலையிட்டு, திரு.மு.சுப்பிரமணியன் அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்து செய்து அன்னாருக்கு முழுமையான ஓய்வூதியப் பலன்களை வழங்கிட வழிவகை செய்திட வேண்டும் என ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*⚡ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டதால் தருமபுரி மண்டல மீன்துறை துணை இயக்குநர் அலுவலகத்தில் மீன்வள மேற்பார்வையாளராக (தரம் II) ஆக பணியாற்றும் திரு.கா.சின்னசாமி அவர்கள் கடந்த 28.01.2019 அன்று தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு, இதுநாள் வரை அவரது தற்காலிக பணிநீக்கம் இரத்து செய்யப்படாமல் உள்ளது. மாண்புமிகு பணியாளர் (ம) நிர்வாக சீர்திருத்த துறை மற்றும் மீன்வள துறை அமைச்சர் அவர்கள் திரு.க.சின்னசாமி அவர்களின் தற்காலிக பணிநீக்கத்தினை இரத்துசெய்யுமாறு ஜாக்டோ ஜியோ கேட்டுக்கொள்கிறது.*


*⚡ஆசிரியர்கள், அரசு ஊழியர்களின் வாழ்வாதார கோரிக்கையான CPS ஐ இரத்து செய்திட வேண்டும் உள்ளிட்ட ஒன்பதம்ச கோரிக்கைகளை தமிழக அரசு நிறைவேற்றிட வேண்டும்.*


*⚡13.06.2019 அன்று மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்கள் சென்னையில் இல்லாததால் 19.06.2019 அன்று ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூடி மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடம் பழிவாங்கும் நடவடிக்கைகளை திரும்பப் பெறுவது, இட மாறுதல்களை இரத்து செய்வது, கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடர்பாக முறையீடு செய்வது என தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தினம் மாண்புமிகு அமைச்சர்களையும், அரசுத்துறை செயலாளர்களையும் சந்தித்து முறையிடுவது எனவும் முடிவு செய்யப்பட்டது.*


*⚡19.062019 அன்று நடைபெறும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழு கூட்டம் நடத்துவதற்கான தேதி இறுதிசெய்யப்படும். ஜாக்டோ ஜியோவின் உயர்மட்டக்குழு கூட்டத்தில் அடுத்தகட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து முடிவு செய்யப்படும்.*


🤝தோழமையுடன்;


*_மாநில ஒருங்கிணைப்பாளர்கள்,_*

*ஜாக்டோ ஜியோ.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: