*அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 4 அரசாணைகள் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு கோரிக்கை கடிதம்*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*பெறுநர்*
*மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள்,*
*தலைமைச் செயலகம்*
*சென்னை 600 009.*
_மாண்புமிகு ஐயா,_
*பொருள்:*
*_அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன்களைப் பாதிக்கும் வகையில் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ள 4 அரசாணைகள் - அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நலன் கருதி திரும்பப் பெற வேண்டுதல் சார்பு._*
*பார்வை:*
_⚡(1) G.O(MS) No: 232 Finance (Allowance) Department dt: 27.04.2020_
_⚡(2) G.O(MS) No: 48 P&AR (FR - III) Department dt: 27.04.2020_
_⚡(3) G.O(MS) No: 231 Finance (Allowance) Department dt: 23.04.2020_
_⚡(4) G.O(MS) No: 51 P&AR (S) Department dt: 07.05.2020_
*⚔*
*🛡மனித குலத்திற்கே மாபெரும் துயரத்தைத் தந்து கொண்டிருக்கும் கொரோனா நோய்த்தொற்று உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் தங்கள் தலைமையிலான அரசு கொரோனா நோய்த் தொற்றிலிருந்து மக்களைக் காப்பாற்ற சிறப்பான பணிகளை மேற்கொண்டிருக்கிறது. தமிழக அரசில் பணியாற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள், காவல்துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறைகளில் பணியாற்றும் ஊழியர்கள் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் கொரோனா நோய்த் தடுப்புப் பணிகளில் இரவு பகலாக ஈடுபட்டுள்ளனர்.*
*⚔*
*🛡இந்த இக்கட்டான தருணத்தில் தமிழக அரசோடு பல தன்னார்வ அமைப்புகளும், அரசியல் கட்சிகளும், ஊழியர் அமைப்புகளும், தனி நபர்களும் பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பேருதவி புரிந்து வருகின்றனர்.*
*⚔*
*🛡தமிழகம் முழுவதும் தொடக்கக் கல்வித்துறையில் பணியாற்றும் 45 ஆயிரம் ஆசிரியர்களை உறுப்பினர்களாகக் கொண்டுள்ள எங்களது அமைப்பின் மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் மாநிலம் முழுவதும் கடந்த 35 நாட்களாக வறிய மக்களுக்கு வாழ்வாதாரப் பொருட்களை தொடர்ந்து வழங்கி வருகின்றனர். இதுவரை எங்களது அமைப்பின் சார்பில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பிலான உதவிப் பொருட்கள் மாநிலம் முழுவதும் ஏழை எளிய மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. தமிழக அரசின் நிவாரணப் பணிகளில் தன்னார்வலர்களாகவும் எங்கள் அமைப்பின் உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.*
*⚔*
*🛡இந்நிலையில் பார்வை 1ல் கண்ட அரசாணையின்படி 01.01.2020 முதல் 30.06.2021 முடிய 18 மாதங்களுக்கு தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை ரத்து செய்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அகவிலைப்படி உயர்வு என்பது உயரும் விலைவாசிக்கேற்ப, உயரும் வாழ்க்கைச் செலவுகளை ஈடுகட்டுவதற்காக 6 மாதங்களுக்கு ஒரு முறை அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படுவதாகும். விலைவாசி நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டிருக்கும் இன்றைய சூழலில் அடுத்த 18 மாதங்களுக்கு அகவிலைப்படி உயர்வே கிடையாது என்பது தமிழக அரசு ஊழியர்களின் வாழ்வாதாரத்தை மிகவும் பாதிக்கக் கூடிய நடவடிக்கையாகும்.*
*⚔*
*🛡மேலும், பார்வை 2ல் கண்ட அரசாணையின்படி அரசு ஊழியர்கள் தங்கள் கணக்கில் உள்ள ஈட்டிய விடுப்பை ஆண்டுக்கு ஒருமுறை 15 நாட்களோ அல்லது ஈராண்டுக்கு ஒருமுறை 30 நாட்களோ ஒப்படைப்புச் செய்து ஊதியம் பெறும் நடைமுறையும் ஓராண்டுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. காலங்காலமாக நடைமுறையில் இருந்த இச்சலுகை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது என்பது அரசு ஊழியர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தியுள்ளது.*
*⚔*
*🛡மேலும், பார்வை 3ல் கண்ட அரசாணையின்படி 01.04.2020 முதல் 30.06.2020 முடிய மூன்று மாதங்களுக்கு அரசு ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிக்கான வட்டி விகிதம் 7.9மூ லிருந்து 7.1மூ ஆக குறைக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதிக்கான வட்டிக்குறைப்பு என்பது ஊழியர்களுக்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையாகும்.*
*⚔*
*🛡மேலும், பார்வை 4ல் கண்ட அரசாணையின்படி தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயது 58 லிருந்து 59 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் வேலையில்லாத பல லட்சம் இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் அரசுப்பணி என்ற கனவு கானல் நீராகி விட்டது. இம்முடிவானது தற்போது பணியில் இருக்கும் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் பதவி உயர்வு வாய்ப்பைத் தடுத்துள்ளது. இவ்வாண்டில் 58 வயது நிறைவு பெற்று ஓய்வுக்காலப் பணப்பலன்கள் பெற்று குடும்பத் தேவைகளை நிறைவேற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு இந்த அரசாணை மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது.*
*⚔*
*🛡எனவே, தாங்கள் மேலே கண்ட எங்களது அமைப்பின் வேண்டுகோளை ஆய்வு செய்து அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ள மேற்கண்ட 4 அரசாணைகளையும் உடனடியாகத் திரும்பப் பெற்று உதவிட வேண்டுமாய் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் தங்களை வேண்டுகிறோம்.*
சென்னை
09.05.2020
_🤝தோழமையுடன்;_
*_ச. மயில்_* _பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment