*தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து, ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெறக் கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு முடிவின்படி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் தமிழக அரசுக்கு 15.05.2020 க்குள் கோரிக்கை மனு அனுப்ப வேண்டி பொதுச்செயலாளர் அறிக்கை*
*TNPTF மாநில பொதுச் செயலாளரின் முக்கிய அறிவிப்பு*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் மாவட்ட,வட்டார,நகரக் கிளைகளின் பொறுப்பாளர்களே!_ வணக்கம்*
*📩*
*🛡கடந்த (04.05.2020) அன்று காணொளி மூலம் நடைபெற்ற நம் பேரியக்க மாநில செயற்குழுவில் ஆசிரியர்கள்,அரசு ஊழியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தமிழக அரசு அண்மையில் வெளியிட்டுள்ள 18 மாதங்களுக்கான அகவிலைப்படி உயர்வு ரத்து, ஓராண்டுக்கு ஈட்டிய விடுப்பு ஊதியம் ரத்து, வருங்கால வைப்பு நிதி வட்டி விகிதம் குறைப்பு உள்ளிட்ட அரசாணைகளைத் திரும்பப் பெறக் கோரி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் தமிழக அரசுக்கு 15.05.2020 க்குள் கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்யப்பட்டது*
*📩*
*🛡தற்போது தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில மையம், இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் வகையிலும், தற்போது பணியில் உள்ளவர்களின் பதவி உயர்வு வாய்ப்பைத் தடுக்கும் வகையிலும் அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் ஓய்வு பெறும் வயதை 58 லிருந்து 59 ஆக உயர்த்தி கடந்த 07.05.2020 அன்று தமிழக அரசு வெளியிட்ட அரசாணையையும் சமூக நலன் கருதி திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையையும் மாநில செயற்குழு கோரிக்கையுடன் இணைத்து மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கு கோரிக்கை மனு அனுப்ப முடிவு செய்துள்ளது*
*📩*
*🛡அதன்படி மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களுக்கும், தலைமைச் செயலாளர் அவர்களுக்கும் அனுப்பவேண்டிய கோரிக்கை மனுவின் மாதிரி இத்துடன் இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.*
*📩*
*🛡மேற்படி கோரிக்கை மனு மாநில அமைப்பின் சார்பில் இன்று (09.05.2020) பதிவு அஞ்சல் வழியே தமிழக அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது. எனவே, மாவட்ட வட்டார நகரக் கிளை அமைப்புகள் மேற்படி கோரிக்கை மனுவை மாதிரியாகக் கொண்டு, கிளை அமைப்புகள் அனுப்புவது போல் மனுவின் இறுதியில் மட்டும் சிறு மாறுதல் செய்து பதிவு அஞ்சலில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் மதிப்புமிகு தலைமைச் செயலாளர் ஆகியோருக்கு 15.05. 2020க்குள் அனுப்பிட மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*
*📩*
*🛡மேற்படி கோரிக்கை மனு விவரம் word file ஆக தேவைப்படுவோர் நமது மாநில அலுவலகச் செயலாளர் திரு.பாபு அவர்களை (cell.No:9840944504) அலைபேசியில் தொடர்பு கொண்டு மின்னஞ்சல் மூலம் பெற்றுக் கொள்ளலாம்*
*📩*
*🛡மேலும், அனுப்பப்பட்ட மனுவின் நகலை மாவட்ட, வட்டார, நகரக்கிளைகள் மாநில அமைப்பின் மின்னஞ்சல் முகவரிக்கு (tnptfithal@gmail.com) தவறாது அனுப்பிட வேண்டும். தங்கள் மாவட்டத்தில் அனைத்துக் கிளைகளும் கோரிக்கை மனுவை அனுப்பிய விவரத்தை மாவட்டச் செயலாளர்கள் கண்காணித்து உறுதிப்படுத்தவும் மாநில மையம் அன்புடன் கேட்டுக்கொள்கிறது.*
*📩*
*🛡கோரிக்கை மனு அனுப்பப்பட்ட விவரத்தை கிளை அமைப்புகள் தங்கள் பகுதியில் பத்திரிகைகள் மற்றும் ஊடகங்களுக்கு செய்தியாக வழங்கிட வேண்டும்*
*📩*
*🛡மாவட்ட வாரியாக கோரிக்கை மனு அனுப்பிய கிளைகளின் விவரம் மாநில செயற் குழுவின் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் என்பதையும், மாநில மையம் அன்புடன் தெரிவித்துக் கொள்கிறது. எனவே, மிக மிக முக்கியமான இப்பணியை மாவட்ட, வட்டார, நகரக் கிளைகள் சிரமேற்கொண்டு செய்து முடித்திட மாநில மையம் மீண்டும் அன்புடன் கேட்டுக்கொள்கிறது*
*சென்னை*
*09.05.2020*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்_*
_பொதுச் செயலாளர்_ *தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment