*நீதிமன்றத் தீர்ப்பின்படி, அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட மாவட்டக் கிளைகள் விரைந்து செயலாற்றிட வேண்டும் - TNPTF பொதுச் செயலாளர் சுற்றிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
_பொதுச் செயலாளரின் சுற்றிக்கை எண்: 05/2020_
_நாள்: 30.05.2020_
*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*
*⚔️*
*🛡 கொரோனா ஊரடங்கால் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கல்விக்கூடங்கள் எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு விடையளிக்கும் சூழல் இப்போது இல்லை என்றே தோன்றுகிறது. அரசு அலுவலகங்கள் 50% ஊழியர்களுடன் இயங்கினாலும், நடைமுறையில் முழுமையான பணிகள் அங்கு நடைபெறுவதில் பெரும் பின்னடைவு உள்ளது.*
*⚔️*
*🛡 அதற்குக் கல்வித்துறை அலுவலகங்களும் விதிவிலக்கு அல்ல. தமிழ்நாடு முழுவதும் கல்வித்துறை அலுவலங்களில் ஆசிரியர்களின் பணப்பலன் சார்ந்த, பணி சார்ந்த உத்தரவுகள் பெறுவதில் தேக்கநிலை உள்ளது. தொடர்புடைய அலுவலர்கள் இவற்றைச் சரி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும்.*
*⚔️*
*🛡 தமிழ்நாடு முழுவதும் போராட்டக் காலங்களில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீது பழிவாங்கும் நடவடிக்கையாக மேற்கொள்ளப்பட்ட தமிழ்நாடு குடிமைப்பணி (ஒழுங்கு நடவடிக்கைகளும், மேல்முறையீடுகளும்) விதி 17(ஆ) நடவடிக்கைகளும், குற்றவியல் நடவடிக்கைகளும் இன்றளவும் நிலுவையிலேயே இருப்பது தமிழ்நாட்டில் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் ஆறாத ரணமாகவே இருந்து கொண்டிருக்கிறது.*
*⚔️*
*🛡 இது தொடர்பாக ஜாக்டோ-ஜியோ அமைப்பும் பல்வேறு தனிச்சங்கங்களும் தங்கள் தங்கள் வழியில் அரசுக்கு கோரிக்கைகள் விடுத்தும் தமிழக அரசு இதுவரை அதைக் கண்டு கொள்ளவேயில்லை.*
*⚔️*
*🛡 ஜாக்டோ ஜியோ போராட்டத்தில் பங்கேற்றதற்காக 5,500க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மீதும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மீட்புக்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தனிச்சங்க நடவடிக்கையாக நடத்திய அரசாணை எரிப்புப் போராட்டத்தில் பங்கேற்றதற்காக 1539 ஆசிரியர்கள் மீதும் மேற்கொள்ளப்பட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திடக்கோரி 26.04.2020 அன்று பத்தாயிரம் ஆசிரியர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டத்தை நடத்திட 22.02.2020 அன்று மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில செயற்குழுவில் முடிவு செய்யப்பட்டது.*
*⚔️*
*🛡 யாரும் எதிர்பாராத விதமாக, உலக வரலாற்றிலே இல்லாத அளவிற்கு கொரோனா கொடுந்தொற்றினால் ஏற்பட்ட ஊரடங்கால் திட்டமிட்டபடி நாம் போராட்டத்தை நடத்த இயலவில்லை.*
*⚔️*
*🛡 அரசாணை எரிப்புப் போராட்டத்தைப் பொறுத்த அளவில் காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையின் பேரிலேயே 21 மாவட்டங்களில் கல்வித்துறை 17(ஆ) நடவடிக்கை மேற்கொண்டது. அவ்வாறு காவல்துறை பதிவு செய்த முதல் தகவல் அறிக்கைகள் அனைத்தும் உயர்நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டு சுமார் ஒரு வருடம் ஆகிவிட்டது.*
*⚔️*
*🛡 எனவே, நீதிமன்ற உத்தரவை மதித்து 21 மாவட்டங்களின் கல்வித்துறை அலுவலர்களும் சட்டப்படி 17(ஆ) நடவடிக்கைகளை உடனடியாக ரத்து செய்திருக்க வேண்டும். ஆனால், ஆசிரியர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய உத்தரவு என்றால் அதை மின்னல் வேகத்தில் அமல்படுத்தும் கல்வித்துறை அலுவலர்கள், 17(ஆ) கொடுக்கும்போது காட்டிய வேகத்தை 17(ஆ) வை ரத்து செய்வதில் காட்டவில்லை.*
*⚔️*
*🛡 ஒரே ஒரு ஆறுதலாக மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சரின் சொந்த மாவட்டமான ஈரோடு மாவட்டத்தில் கோபிச்செட்டிபாளையம், சத்தியமங்கலம், ஈரோடு, பவானிசாகர் ஆகிய அனைத்துக் கல்வி மாவட்டங்களிலும் அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகள் முற்றிலுமாக நீதிமன்ற உத்தரவின்படி எவ்வித விசாரணையுமின்றி ரத்து செய்யப்பட்டுள்ளன.*
*⚔️*
*🛡 ஒரு சில மாவட்டங்களில் 17(ஆ) வை ரத்து செய்வதற்கான நடைமுறைப் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இன்னும் ஒரு சில மாவட்டங்களில் அதிகார வர்க்கத்தின் அலட்சியப்போக்கு தொடர்ந்து கொண்டே இருக்கிறது.*
*⚔️*
*🛡 இதன் காரணமாக பணி ஓய்வு பெற்றுள்ள சிலரது ஓய்வூதியக் கருத்துக்கள் கூட உரிய அலுவலகத்திற்கு அனுப்பாத நிலையும் ஒரு சில இடங்களில் உள்ளது. காலம் நம் கைகளைக் கட்டிப் போட்டுள்ளது. களமிறங்கிப் போராடும் கள நிகழ்வை முன்னெடுக்க இயலாத சூழலை நமது பலவீனமாக அதிகாரிகள் எடுத்துக் கொள்ளக்கூடாது.*
*⚔️*
*🛡 தமிழ்நாடு தொடக்கக்கல்வி இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 3690/E1/2020 நாள்: 06.03.2020-ல் பணி ஓய்வு பெறுபவர்கள் மீதான நிலுவையில் உள்ள 17(ஆ) நடவடிக்கைகளை விரைந்து முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களை ஓய்வு பெற அனுமதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.*
*⚔️*
*🛡 உயர்நீதிமன்ற உத்தரவையும் மதிக்காமல், தொடக்கக்கல்வி இயக்குநரின் உத்தரவையும் மதிக்காமல் தன்னிச்சையாக, பழிவாங்கும் நோக்கோடு அல்லது அலுவலகத்தில் உள்ள சில 'மேதாவிகளின்" தவறான வழிகாட்டுதலில் செயல்படும் சில அலுவலர்களின் செயல்பாட்டினால் தான் 17(ஆ) நடவடிக்கைகள் பல மாவட்டங்களில் இன்று வரை நிலுவையில் உள்ளது.*
*⚔️*
*🛡 எனவே, 17(ஆ) நிலுவையில் உள்ள மாவட்டக்கிளைகளின் தோழர்கள் தொடர் நடவடிக்கை மேற்கொண்டு, போதுமான ஆவணங்களை கல்வித்துறை அலுவலர்களுக்கு வழங்கி நிலுவையில் உள்ள அரசாணை எரிப்புப் போராட்ட 17(ஆ) நடவடிக்கைகளை ரத்து செய்திட விரைந்து செயலாற்றிட மாநில மையம் தோழமையுடன் கேட்டுக் கொள்கிறது.*
சென்னை.
30.05.2020.
_🤝தோழமையுடன்_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment