Monday 30 September 2019

*தேசியக்கல்விக் கொள்கை - 2019 ஐ திரும்பப் பெறக்கோரி தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் - மாநிலம் முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம்*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/2019.html

*_பேரன்புமிக்க பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*🎙தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் கரூரில் நடைபெற்றது.*

*🎙தேசியக் கல்விக்கொள்கை - 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாக திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும், மூடப்பட்ட அரசுப்பள்ளிகளை மீண்டும் திறக்கவேண்டும் தமிழ்வழிப் பள்ளிகளைப் பாதுகாக்க வேண்டும். தொடக்கக் கல்வித்துறையைச் சீரழிக்கும் அரசாணைகள்: 100, 101, 145, 164 ஆகியவற்றை தமிழக அரசு திரும்பப் பெறவேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் 6 மண்டலங்களில் 30 மாவட்டங்களில் 25.09.2019; முதல் 29.09.2019 முடிய 5 நாட்கள் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் நடைபெற்ற கல்விப் பாதுகாப்பு விழிப்புணர்வுப் பிரச்சார இயக்க நிறைவுப் பொதுக்கூட்டம் இன்று (29.09.2019) கரூரில் 80 அடி சாலையில் நடைபெற்றது.*

*🎙கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் மூ. மணிமேகலை தலைமை தாங்கினார். ளுவுகுஐ பொதுக்குழு உறுப்பினர் ச. மோசஸ் முன்னிலை வகித்தார், துணைப்பொதுச்செயலாளர் தா. கணேசன் வரவேற்புரையாற்றினர். பிரச்சாரப் பயணத்தின் நோக்கம் மற்றும் கோரிக்கைகளை விளக்கி பொதுச்செயலாளர் ச. மயில் பேசினார்.*

*🎙கூட்டத்தில் கல்வியாளர்கள் பேராசிரியர் அருணன் மற்றும் பிரின்ஸ் கஜேந்திரபாபு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.*

*🎙மேலும் தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலப் பொதுச்செயலாளர் K.P.O. சுரேஷ், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலத் தலைவர் எஸ். பக்தவச்சலம், தமிழ்நாடு இடைநிலை ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர் அ. சங்கர், தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் சங்க மாநில பொதுச்செயலாளர்  P. பேட்ரிக் ரெய்மாண்ட், தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் மற்றும் அலுவலர் சங்க மாநில பொதுச்செயலாளர் சிவஸ்ரீரமேஷ், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் கழக மாநில பொதுச்செயலாளர் மா. ரவிச்சந்திரன், தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில பொதுச்செயலாளர் செ. நா. ஜனார்த்தனன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.*

*🎙கூட்டத்தில் பேசியவர்கள் தேசியக் கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை - 2019 ல் தெரிவிக்கப்பட்டுள்ள 3, 5, 8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு 9, 10, 11, 12 வகுப்புகளுக்குப் பருவத்தேர்வு என்பது நாட்டின் ஏழை, எளிய, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி வாய்ப்பைத் தடுப்பதோடு, மாணவர்களின் இடைநிற்றலை அதிகரிக்கும், தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டுவரும் நிலையில் அதுபற்றி தேசியக் கல்விக் கொள்கையில் எதுவும் இல்லாதது இட ஒதுக்கீட்டுப் பிரிவினரின் கல்வி வாய்ப்பை மிகக்கடுமையாகப் பாதிக்கும்.*

*🎙மும்மொழிக் கொள்கை குழந்தைகளின் கல்விச்சுமையை அதிகரிக்கும், 3 வயதில் முறையான கல்வி என்பது குழந்தைப் பருவத்தைப் பறிக்கும் செயல். ஒவ்வொரு நிலையிலும் நுழைவுத்தேர்வு, தகுதித்தேர்வு, பொதுத்தேர்வு, பருவத்தேர்வு என்பது மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக அமையும், 20 மாணவர்களுக்குக் கீழுள்ள பள்ளிகளை மூடப்படும் என்பது ஆரம்பக் கல்வியை முற்றிலும் பாதிக்கும், பள்ளிக்கல்வி உயர்கல்வி ஆராய்ச்சிக்கல்வி என அனைத்து நிலைக் கல்வியும் தனியார் மயமாக்கப்படுவதன் மூலம் கல்வி வணிகமயமாக்கப்படும் ஆகிய கருத்துக்களை வலியுறுத்திப் பேசியதோடு மத்திய அரசு தேசியக் கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் திரும்பப்பெற வேண்டும் என வலியுறுத்திப் பேசினர். நிரைவாக மாநிலப் பொருளாளர் க. ஜோதிபாபு நன்றி கூறினார்.*

*🎙பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கரூர் மாவட்டச் செயலாளர் ஜ. ஜெயராஜ், மாவட்டத்தலைவர் பெ.காளிதாஸ், மாவட்டப் பொருளாளர் வீ. மோகன் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் து. சின்னச்சாமி, த. சகிலா, த. செந்தில்குமார். வெ. காமராஜ், ஆ. தமிழரசி, க. ஜான்சன் உள்ளிட்டோர் செய்திருந்தினர். கூட்டத்தில் மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றனர்.*
     
🤝தோழமையுடன்;

*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: