*ஊக்க ஊதியம் மறுப்பு: கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்த தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி முடிவு*
*⚔️*
*🛡️தமிழகத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆசிரியர்களுக்கு அனுமதிக்கப்பட்டு வரும் உயர்கல்விக்கான ஊக்க ஊதியத்தை அனுமதிக்க மறுக்கும் கருவூலத் துறையைக் கண்டித்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பு போராட்டம் நடத்தப்படும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி அறிவித்துள்ளது.*
_இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலர் ச.மயில், மாநில கருவூல கணக்குத்துறை ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:_
*⚔️*
*🛡️தமிழகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் செயல்படும் ஆரம்ப, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை, பட்டதாரி மற்றும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களுக்கு உயர்கல்வித் தகுதிக்காக அவர்களது பணிக் காலத்தில் இரண்டு ஊக்க ஊதிய உயர்வுகள் அனுமதிக்கப்பட்டு வந்தது.*
*⚔️*
*🛡️ஆனால் தற்போது தமிழகம் முழுவதும் மாவட்ட மற்றும் சார்நிலைக் கருவூல அலுவலர்கள் கடந்த மார்ச் 10-ஆம் தேதியிட்ட அரசாணையை (எண் 37) காரணம் காட்டி பள்ளிக் கல்வித்துறையில் தகுதி வாய்ந்த அலுவலர்கள், ஆசிரியர்களுக்கு அனுமதிக்கும் உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை ஏற்க மறுத்து அதற்குரிய பணப்பலன்களை அனுமதிக்க மறுத்து வருகின்றனர்.*
*⚔️*
*🛡️துறையின் அனுமதி பெற்று உயர்கல்வி பயின்று தகுதிவாய்ந்த துறை அலுவலர்களால் ஊக்க ஊதிய உயர்வு அனுமதிக்கப்பட்ட நிலையில் அதற்குரிய பணப்பலன்களை கருவூலத்துறையின் சார்நிலை அலுவலர்கள் அனுமதிக்க மறுப்பது என்பதும் விதிகளுக்குப் புறம்பானதாகும். மாநிலம் முழுவதும் எழுந்துள்ள இந்தப் பிரச்னையால் ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிருப்தியும், குழப்பமும் ஏற்பட்டுள்ளது.*
*⚔️*
*🛡️எனவே தாங்கள் தங்கள் துறையின் சார்நிலை அலுவலர்களுக்கு ஆசிரியர்களின் ஊக்க ஊதிய உயர்வு தொடர்பாக எழுந்துள்ள பிரச்னைக்குத் தீர்வு காணும் வகையில் தெளிவுரை மற்றும் வழிகாட்டுதல் வழங்க வேண்டும்.*
*⚔️*
*🛡️இந்தப் பிரச்னைக்கு விரைந்து தீர்வு கிடைக்காத நிலையில் மாநிலம் முழுவதும் அனைத்து மாவட்ட, சார்நிலைக் கருவூல அலுவலகங்கள் முன்பாக எங்களது அமைப்பின் சார்பில் போராட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதில் கூறியுள்ளார்.*
_🤝தோழமையுடன்;_
*_ச.மயில்,_*
_பொதுச்செயலாளர்_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
No comments:
Post a Comment