Friday 12 June 2020

*அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான 3மாத காலமாக பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையினை மாற்றா விட்டால் களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாக்க வேண்டிவரும் என TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

*அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான 3மாத காலமாக பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. இந்த நிலையினை மாற்றா விட்டால் களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாக்க வேண்டிவரும் என TNPTF பொதுச்செயலாளர் அறிவிக்கை*

🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

*TNPTF ஆசிரியர் முழக்கம் _ஜுன்-2020_ பொதுச் செயலாளர் மடல்*

*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே!_ வணக்கம்.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றுக் கொரோனாவின் கோரத் தாக்குதலால் திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் திரு.ஜெ.அன்பழகன் அவர்கள் மரணமடைந்த செய்தி தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியா முழுவதும் பேரதிர்ச்சியையும், பெருங்கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. பல்வேறு உடல் உபாதைகளுடன் மக்கள் பணியாற்றி வந்த ஒரு சட்டமன்ற உறுப்பினர், தனது உடல்நலத்தைக்கூடப் பொருட்படுத்தாமல் கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிப் பணிகளில் ஈடுபட்டு வந்த நிலையில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டுக் காலமான செய்தி, நோய்த்தொற்றின் பெருங்கேட்டை நமக்கு உணர்த்துவதோடு, எதிர்கால அபாயத்தையும் நமக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது. மறைந்த மக்கள் பிரதிநிதிக்கு தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*

*⚔️*
*🛡️கொடுந்தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. இந்நிலை எப்போது முடிவுக்கு வரும் என்பதைக்கூட யாராலும் கணித்துக் கூற இயலவில்லை.இது எவ்வாறு முடிவுக்கு வரும் என்ற அச்சம் தற்போது எழுந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு வரை இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து போன்ற நாடுகளில் பெருந்தொற்றின் பரவலையும், அங்கு நிகழ்ந்து கொண்டிருந்த மரணங்களையும் ஊடகங்கள் வழியே நாள்தோறும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். அத்தகு நிலையைத் தற்போது நாமே நேரில் சந்தித்துக் கொண்டிருக்கிறோம். தற்போது உலக அளவில் கொரோனா பாதிப்பில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்துள்ள செய்தி மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது*

*⚔️*
*🛡️இந்தியா 130 கோடி மக்கள் தொகை கொண்ட மிகப்பெரிய நாடு மிகப் பெரிய இந்த மக்கள் சமுத்திரத்தில் பெருந்தொற்றின் தாக்கம் அதிகரித்தால், அது சமூகப் பரவலாக மாறினால் அடுத்து வரும் நாட்கள் எவ்வாறு இருக்கும் என்பதை மிகுந்த கவலையோடு நாம் நோக்க வேண்டியுள்ளது. எனவே, நோய் தொற்றிலிருந்து நம்மை, நம் குடும்பத்தாரை, உற்றார் உறவினர்களை, அக்கம்பக்கத்தாரை, நண்பர்களை, பொதுமக்களை,நம் இயக்கத் தோழர்களைப் பாதுகாக்க வேண்டிய தலையாய பொறுப்பும், கடமையும் நம் பேரியக்கத் தோழர்கள் ஒவ்வொருவருக்கும் உண்டு. அதற்காக நம்மால் இயன்ற விழிப்புணர்வுப் பணிகளை மேற்கொள்வது மிகவும் அவசியம்.*

*⚔️*
*🛡️15.06.2020 முதல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வையும், நடைபெறாத பாடங்களுக்கான பதினொன்றாம் வகுப்புப் பொதுத்தேர்வையும் ரத்து செய்து தமிழக அரசு கடந்த 09.06.2020 அன்று வெளியிட்ட அறிவிப்பு மிகவும் வரவேற்கத்தக்கது. கொடுந்தொற்றால் நோய் பரவும் வாய்ப்பு அதிகம் உள்ள நிலையில் பத்தாம் வகுப்பு மற்றும் பதினோராம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்திட வேண்டும் அல்லது நோய்த்தொற்றின் தாக்கம் குறைந்த பின்பு தேர்வை நடத்திட வேண்டும், தேர்வு நடத்துவதற்கு முன்பாக குறைந்தது 15 நாட்களாவது மாணவர்கள் தங்கள் பள்ளிக்குச் சென்று தங்கள் ஆசிரியர்களிடம் மீள் பயிற்சி பெற வேண்டும், அதன் மூலம் எதிர்கால சமுதாயத்தை உருவாக்கும் சிற்பிகளாம் 18 லட்சம் மாணவச் செல்வங்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி ஆரம்பம் முதலே வலியுறுத்தி வந்தது. ஒட்டுமொத்த தமிழகமும் இதைத்தான் கூறியது. ஆனால், இறுதிவரை தேர்வு நடத்துவது என்பதில் விடாப்பிடியாக இருந்த தமிழக அரசு மக்களின் மனநிலையை உணர்ந்து தனது முடிவை மாற்றிக் கொண்டது.*

*⚔️*
*🛡️தற்போது 10,11 வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. உலக வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்குக் கொடுந் தொற்று உலகையே ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதன் தொடர்ச்சியாக தமிழக வரலாற்றிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு பத்தாம் வகுப்பு மற்றும் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் முதன்முறையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.*

*⚔️*
*🛡️சமீபகாலமாக தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வித்துறையில் பரபரப்பான அறிவிப்புகளுக்குப் பஞ்சமில்லை. அவ்வப்போது நடைமுறை சாத்தியமற்ற பரபரப்பான அறிவிப்புக்களை வெளியிடுவதும், பின்பு அதைத் திரும்பப் பெறுவதும் வாடிக்கையான ஒன்றாகிவிட்டது. 2019- 20 ஆம் கல்வி ஆண்டில் முதல் பருவத் தேர்வு முடிந்த பின்பு 5,8 வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்போவதாக உளவியல் நெறிமுறைகளுக்கு மாறான அறிவிப்பைத் தமிழக அரசு வெளியிட்டது. தேர்வுகளை நடத்துவதில் இறுதிவரை உறுதியாக இருந்த தமிழக அரசு மக்களின் கடுங் கோபத்தை அறிந்து தனது முடிவை மாற்றிக்கொண்டது. 5,8 வகுப்புகளுக்கே பொதுத் தேர்வை நடத்த வேண்டும் என்று நினைத்த தமிழக அரசு தற்போது 10,11 ஆம் வகுப்புகளுக்கே பொதுத்தேர்வு நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. இதைக் "காலம் செய்த கோலம்; கொரோனா செய்த மாயம்" என்றுதான் சொல்ல வேண்டும்.*

*⚔️*
*🛡️10 ஆம் வகுப்புப் பொதுத்தேர்வை ரத்து செய்திட வேண்டும் என்று ஒட்டுமொத்த தமிழகமும் குரல் கொடுத்தது. அரசியல் கட்சிகள், ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என அனைத்து தரப்பினரின் கருத்தும் அதுவாகவே இருந்தது. இவ்வாறு பல அமைப்புகள் குரல் கொடுத்தாலும் கூட, இப்பிரச்சனையை துணிச்சலாக உயர் நீதிமன்றம் வரை கொண்டு சென்று, அங்கே ஒரு சட்டப் போராட்டத்தை நடத்தி, அதன் மூலம் நீதிமன்றத்தை நியாயமான கருத்துக்களை தெரிவிக்க வைத்து, இதைத் தமிழகம் தழுவிய மிக முக்கியப் பிரச்சனையாக மாற்றி, தமிழக அரசுக்கு மிகப்பெரிய அழுத்தத்தைக் கொடுத்த ஆசிரியர்  இயக்கம் இந்தியப் பள்ளி ஆசிரியர் கூட்டமைப்பில் (STFI) அங்கம் வகிக்கும் நம் தோழமை அமைப்பாகிய தமிழ்நாடு உயர்நிலை மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதற்காக அந்த அமைப்பிற்கு நமது தோழமை வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்.*

*⚔️*
*🛡️பத்தாம் வகுப்புப் பொதுத்தேர்வை நடத்துவதற்கு மின்னல் வேகத்தில் பணியாற்றிய பள்ளிக்கல்வித்துறை ஜுன்-8 முதலே அனைத்து ஆசிரியர்களும் பள்ளியில் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.01.06. 2020 முதல் மண்டலங்களுக்குள் 50 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தாலும் கிராமப்புறங்களில் பேருந்துகளின் இயக்கம் இன்று வரை இல்லாத சூழலில் பெண் ஆசிரியர்கள் பள்ளிகளுக்குச் சென்று வர மிகவும் சிரமப்பட்டனர். மண்டலம்  விட்டு மண்டலம் செல்வதற்கு வாடகைக்கு தனி வாகனம் பிடித்து அதற்காக இருபதாயிரம் ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுக்குத் தேவைப்பட்டால் தொடக்க கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியர்களையும் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும், அவ்வாறு பயன்படுத்தும் சூழலில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் தொடக்கக்கல்வி இயக்குநர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், தேவையில்லாமல் தூத்துக்குடி, திருநெல்வேலி,திருச்சி, திருப்பூர் உள்ளிட்ட சில மாவட்டங்களின் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலர்கள் தொடக்கக் கல்வித் துறையில் பணியாற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு வர வேண்டும் என்று உத்தரவிட்டு அலைக்கழித்தனர்.*

*⚔️*
*🛡️கொரோனா பெருந்தொற்றால் எழுந்துள்ள அசாதாரண சூழலைப் பயன்படுத்தி மத்திய மாநில அரசுகள் சில மக்கள் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளை இந்த ஊரடங்கு காலத்திலும் மேற்கொண்டுள்ளனர். மக்களின் கவனம் நோய்த்தொற்றின் மீது இருக்கும் சூழலில் இது போன்ற நடவடிக்கைகளுக்கு மக்கள் மத்தியில், ஊழியர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு உருவாகாது என அரசுகள் கருதுகின்றன.அந்த வகையிலான நடவடிக்கைகளில் ஒன்றுதான் அரசுத்துறையில் புதிய பணியிடங்களை உருவாக்குவதற்குத் தடை விதித்து தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டுள்ள அரசாணை எண்: 248 ஆகும். நோய்த்தொற்றுக் காரணமாகத் தமிழக அரசுக்கு ஏற்பட்டுள்ள செலவினங்களை குறைப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசாணையில் தெரிவிக்கப்பட்டிருந்தாலும், அதன் உண்மையான நோக்கம் அரசுத் துறைகளில் புதிதாக நியமனங்களை மேற்கொள்ளாமல் தொடர்ந்து ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது என்பதும், அரசுத் துறைகளை நீர்த்துப்போகச் செய்து அவற்றைத் தனியார் மயமாக்குவது என்பதும்தான்.*

*⚔️*
*🛡️ஏற்கனவே கடந்த சில ஆண்டுகளில் தமிழகத்தில் அரசுத் துறைகளில் பணி ஓய்வு, விருப்ப ஓய்வு, இறப்பு உள்ளிட்ட காரணங்களால் 4 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை 248 நிலைமையை மேலும் மோசமாக்குவதற்கே பயன்படும். தமிழகம் முழுவதும் படித்துவிட்டு வேலையின்றி தவிக்கும் 90 லட்சம் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் பிரச்சனைதான் இது.*

*⚔️
*🛡️"வேலை கேட்டு அனுப்பி வைத்த விண்ணப்பத்தாள்களை அடுக்கி வைத்தால் இந்தியாவில் இன்னொரு இமய மலையையே உருவாக்கிவிடலாம்" என்ற கவிதை வரிகள்தான் தற்போது நினைவுக்கு வருகின்றன.*

*⚔️*
*🛡️கடந்த 3 மாதகாலமாக அரசு ஊழியர்களின் நலனுக்கு விரோதமான பல அரசாணைகளைத் தமிழக அரசு வெளியிட்டிருக்கிறது. காலச் சூழலைப் பயன்படுத்தி இதுபோன்ற நடவடிக்கைகளை தமிழக அரசு தொடர்ந்தால் நாம் போராடிப் பெற்ற உரிமைகளை ஒவ்வொன்றாக பறித்துக் கொண்டிருப்பதை நாம் கைகட்டி, வாய் பொத்தி, மொளனமாக இருந்து கொண்டு வேடிக்கை பார்க்க முடியாது. களச்சூழலுக்கு ஏற்ப நம் எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட வேண்டிய சூழல் உருவாகிக் கொண்டிருக்கிறது.*

*_"பொறுமை ஒரு நாள் புலியாகும்; அதற்குப் பொய்யும், புரட்டும் பலியாகும்!_*

_🤝தோழமையுடன்;_

*_ச.மயில்_* _பொதுச்செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: