*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில அமைப்பு நேற்று எடுத்த அதிரடி நடவடிக்கையால் இன்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஜூன் மாத ஊதியம் வழங்கும் பணி துவங்கியது.*
*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்ட அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையற்ற தொடக்க, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் உபரி இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதியத்தை நிறுத்தம் செய்யும் நடவடிக்கைகளில் தூத்துக்குடி மாவட்டக்கல்வித்துறை தொடங்கியது.*
*⚔️*
*🛡️முதற்கட்டமாக கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஜூன்மாத ஊதியம் வழங்கப்படவில்லை .இடைநிலையாசிரியர்களுக்கு ஜூலை முதல் ஊதியம் நிறுத்தம் செய்திட நோட்டீஸ் வழங்கப்பட்டது.*
*⚔️*
*🛡️தூத்துக்குடி கல்வி மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஊதிய நிறுத்தம் செய்ய நோட்டீஸ் வழங்கப்பட்டது.இந்திலையில் நமது மாநில அமைப்பு நேற்று எடுத்த அதிரடி நடவடிக்கையின் காரணமாக இன்று கோவில்பட்டி கல்வி மாவட்டத்தில் உபரி பட்டதாரி ஆசிரியர்களுக்கு நிறுத்தப்பட்ட ஜூன் மாத ஊதியம் வழங்கும் பணி இன்று நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.*
*⚔️*
*🛡️தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சுமார் 400 ஆசிரியர்களின் வாழ்வாதரப்பிரச்சனைக்கு உடனடி தீர்வு கண்ட மாநில அமைப்பிற்கு தூத்துக்குடி மாவட்டக்கக்கிளையின் சார்பாக நன்றியைத்தெரிவித்துக்கொள்கிறேன்.*
_🙏தோழமையுடன்;_
*_சு.செல்வராஜ்,_* _மாவட்டச்செயலாளர்,_
*தூத்துக்குடி மாவட்டம்.*
No comments:
Post a Comment