*🛡️பழைய ஓய்வூதியத் திட்டம் & பஞ்சப்படி உயர்வை தமிழக அரசு உடனே வழங்க TNPTF வலியுறுத்தல்*
*🗞️மாநில அமைப்பின் செய்தியறிக்கை எண் : 14/2021 நாள்: 14.08.2021*
*⚔️*
*🛡தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை 13.08.2021 அன்று சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் அறிவிக்கப்பட்டுள்ள பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரவேற்கிறது.*
*⚔️*
*🛡அதில் இடம்பெற்றுள்ள பெட்ரோல் விலை குறைப்பு, 100 நாள் வேலைத்திட்டத்தை 150 நாட்களாக உயர்த்தியுள்ளதோடு அதன் ஊதியத்தையும் ரூ.273 லிருந்து ரூ.300 ஆக உயர்த்தியுள்ளது, அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் போன்ற சமூக நலத் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை.*
*⚔️*
*🛡மேலும், மாநிலத்திற்கெனத் தனித்துவமான மாநிலக் கல்விக் கொள்கை ஒன்றை வகுப்பதற்கு, கல்வியாளர்கள் மற்றும் வல்லுநர்களைக் கொண்ட உயர்மட்டக்குழு நியமிக்கப்படும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.*
*⚔️*
*🛡அதேபோன்று அரசு ஊழியர்களின் குடும்பப் பாதுகாப்பு நிதி ரூ.5 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளதும், பெண் அரசு ஊழியர்களின் மகப்பேறு விடுப்புக்காலம் 9 மாதத்திலிருந்து 12 மாதங்களாக அதிகரிக்கப்பட்டுள்ளதும் வரவேற்கக் கூடியவைகளாகும்.*
*⚔️*
*🛡அதேநேரத்தில், சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு தி.மு.க தனது தேர்தல் அறிக்கையில் ஏராளமான வாக்குறுதிகளை அளித்தது. அரசு ஊழியர்களுக்கு அளித்த வாக்குறுதியில் மிகவும் முக்கியமானது தன் பங்கேற்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவோம் என்பதாகும். இந்த வாக்குறுதியின் மீது ஒரு வார்த்தை கூட இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெறாதது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் பெருத்த ஏமாற்றத்தையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளது.*
*⚔️*
*🛡அதேபோன்று எம்.ஜி.ஆர் அவர்கள் ஆட்சிக்காலம் முதல் தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஒன்றிய அரசு தனது ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு வழங்கும் தேதியில் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டு வந்தது. கடந்த 1½ ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்றைக் காரணம் காட்டி அகவிலைப்படியை முடக்கி வைத்த ஒன்றிய அரசு அதை 01.07.2021 முதல் தனது ஊழியர்களுக்கு வழங்கியுள்ளது. அதைக் கருத்தில் கொள்ளாமல் தமிழக அரசு ஊழியர்களுக்கு 01.04.2022 முதல் உயர்த்தப்பட்ட அகவிலைப்படி வழங்கப்படும் என்று நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டுள்ளது.*
*⚔️*
*🛡இது அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மத்தியில் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு ஒன்றிய அரசு போல் 01.07.2021 முதல் தனது ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*⚔️*
*🛡அதேபோன்று இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒன்றிய அரசு ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்குதல், குறைந்த ஊதியத்தில் தொகுப்பூதியத்தில் நீண்டகாலமாக பணியாற்றி வரும் 13,000-க்கும் மேற்பட்ட சிறப்பு ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்குதல், கடந்த ஆட்சியில் ஆசிரியர்களிடமிருந்து பறிக்கப்பட்ட ஊக்க ஊதியத்தை தேர்தல் அறிக்கையில் தெரிவித்தபடி மீண்டும் வழங்குதல், ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பை மீண்டும் வழங்குதல் போன்ற அறிவிப்புக்களையும் தமிழக அரசு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பு தமிழக அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.*
இப்படிக்கு,
*_ச.மயில்_*
_பொதுச்செயலாளர்,_
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
No comments:
Post a Comment