Thursday 21 March 2019

*தேர்தல் பணி தொடர்பாக _இந்திய தலைமைத் தேர்தல் ஆணையாளர், தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையாளர், மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்/ மாவட்ட ஆட்சியர் மற்றும் வருவாய் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கு திருநெல்வேலி மாவட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/blog-post_70.html


*🌟2019 - நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்குமுதல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கு சீட்டு (படிவம்: 12, 12A, 12B, 12C, கொடுத்தல், தேர்தல் பணிச்சான்று (EDC) வழங்குதல், அடிப்படை வசதிகள் செய்து கொடுத்தல் - உடல்நலம் பாதிக்கப்பட்டோர், 50 வயதை தாண்டிய ஊழியர்களுக்குதேர்தல் பணியில் விலக்கு அளித்தல், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை பயன்படுத்துதல் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு மதிப்பூதியம் உயர்த்தி வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டி*

*_⚡தலைமை தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும்,_*

*_⚡தமிழ்நாடு தலைமைத் தேர்தல் ஆணையாளர் அவர்களுக்கும்,_*

*_⚡திருநெல்வேலி மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட ஆட்சி தலைவர் அவர்களுக்கும்,_*

*_⚡வருவாய் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் அவர்களுக்கும்,_*


*🛡தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, திருநெல்வேலி மாவட்ட கிளை சார்பாக கோரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.*


*_கோரிக்கைகள் விபரம்:_*


*🌟தமிழகத்தில் வரும் 2019-ம் ஆண்டு ஏப்ரல் - 18 ஆம் தேதி ஒரே கட்டமாக நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. இப்பணியில் 1 லட்சத்து 97  ஆயிரம் பெண்கள் உள்பட 3 லட்சத்து 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.*


*🌟இதில் வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடியில் தலைமை வாக்குப்பதிவு அலுவலர் முதல் அனைத்து நிலை வாக்குப்பதிவு அலுவலர்களாக பெரும்பாலும் ஆசிரியர்களே பணியாற்ற உள்ளனர்.*


*🌟திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த தேர்தலில் மொத்தம் 2,931 வாக்குச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒரு வாக்குச்சாவடிக்கு8 வாக்குப் பதிவு மைய அலுவலர்கள் நியமனம் செய்யப்படுகிறார்கள். இதனால் 23,448 வாக்குப்பதிவு அலுவலர்களும் 40% பேர் ரிசர்வ் அலுவலர்களாக வைக்கப்படுவதால் கூடுதலாக 9,379 வாக்குப்பதிவு மைய அலுவலர்கள் என மொத்தம் சுமார் 32,887 வாக்குச் சாவடி நிலை அலுவலர்கள் பாராளுமன்றத் தேர்தலுக்கான பணியில் ஈடுபடப்போகிறார்கள்.*


*🌟இவர்களில் பெரும்பாலும் 80% விழுக்காட்டிற்கு மேல் பெண் ஆசிரியர்கள் ஆவர். கடந்த 2014 பாராளுமன்ற தேர்தலின்போது ஒரு பாராளுமன்ற தொகுதி விடுத்து அடுத்த பாராளுமன்றதொகுதிக்கு வாக்குப்பதிவு அலுவலர் பணி வழங்கியதால் பல்வேறு இன்னல்களை குறிப்பாக பெண் ஆசிரியர்கள்  அடைந்துள்ளனர். எனவே இம்முறை தாங்கள் பணிபுரியும் சட்டமன்ற தொகுதிக்கு அருகில் உள்ள சட்டமன்ற தொகுதிக்கு பணியாணை வழங்க வேண்டுகிறோம்.*


*🌟கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்கள், கடுமையான நோயால் பாதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை செய்து கொண்டோர், மருத்துவ விடுப்பில் உள்ளோர், மாற்றுத் திறனாளிகள் 50 வயதை கடந்தவர்கள் மற்றும் தேர்தல் பணியாற்ற இயலாத நிலையில் உள்ள ஆசிரியர்களுக்கு குறிப்பாக பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.*


*🌟இவர்களுக்கு பதிலாக ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வேலைவாய்ப்பிற்காக காத்திருக்கும் ஆசிரியர்களையும், படித்து முடித்து வேலையில்லாமல் இருக்கும் பட்டதாரி இளைஞர்களையும் தேர்தல் பணியில் பயன்படுத்த வேண்டும்.*


*🌟வாக்குப்பதிவு நடைபெறும் வாக்குச் சாவடிகளுக்கு சென்றுவர ஆசிரியர்களுக்கு வாகன வசதி செய்து தர வேண்டும். வாக்குச் சாவடி பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு குடிநீர், உணவு, மின் விசிறி வசதி மற்றும் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும்.*


*🌟கடந்த மே-2016 சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் பணியில் ஈடுப்பட்ட பெரும்பாலான ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு தபால் வாக்கு முழுமையாக வழங்கப்படவில்லை. அரசு எதிர்பார்க்கும் 100% சதவீத வாக்களிப்பை நிறைவு செய்ய தேர்தல் பணியில் ஈடுபடும் ஊழியர்களுக்கு தபால் வாக்குச்சீட்டினை படிவம் -12, 12A,12B, 12C-யினை முறையாக குறிப்பிட்ட கால கெடுவுக்கள் வழங்க வேண்டும். குறிப்பாக முதல் தேர்தல் பயிற்சி வகுப்பிலேயே தபால் வாக்கு சீட்டு படிவங்களை வழங்க வேண்டும்.*


*🌟மேலும் ஒரே பாராளுமன்றதொகுதிகளுக்குள் வாக்குப்பதிவு அலுவலராக நியமனம் செய்யப்படும் பட்சத்தில் ஒவ்வொரு பணியாளரும் பணியாற்றக்கூடிய வாக்குச் சாவடியிலே தனது வாக்கினை செலுத்தும் விதமாக அவர்களுக்கு தேர்தல் பணிச்சான்று (ELECTION DUTY CERTIFICATE) வழங்கப்பட வேண்டும்.*


*🌟ஆசிரியர்கள் கல்விப் பணியை பாதிக்கும் வகையில் ஆண்டு முழுவதும் தேர்தல் தொடர்பான பணிகளில் ஈடுபடும் வகையிலான ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் பணிகளை ஆசிரியர்களுக்கு வழங்குவதை தவிர்க்க வேண்டும்.  தமிழகம் முழுவதும் தேர்தல் நடக்கும் நாளன்று ஒரே நேரத்தில் நண்பகல் 1 மணி முதல் 1.30 மணி வரை மதிய உணவு இடைவேளை வழங்க வேண்டும்.*


*🌟கடந்த சட்டமன்ற தேர்தலில் வாக்குச்சாவடி நிலை அலுவலர் II க்கு 17A பதிவேட்டை பராமரிப்பது உள்ளிட்ட 4 விதமான வேலைகளை செய்ய வேண்டியது இருந்தது. இதனை கருத்தில்கொண்டு இம்முறை கூடுதலாக ஒரு வாக்குச்சாவடி நிலை அலுவலரை நியமனம் செய்ய வேண்டும்.*


*🌟ஓட்டுச்சாவடியில் ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும் ஓட்டுப்பதிவு இயந்திரம் மற்றும் இதரப்பொருட்களை ஓட்டுப்பதிவு நிறைவு பெற்ற 2 மணி நேரத்திற்குள் மண்டல அதிகாரி பெற்றுக்கொள்ளஏற்பாடு செய்ய வேண்டும்.*


*🌟கடந்த தேர்தல் காலங்களில் மூன்று தேர்தல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படும். அதில் மூன்றாவது பயிற்சி வகுப்பில்தான் தேர்தல் பணிக்கான  ஓட்டுச்சாவடி இருப்பிடம் தெரிவிக்கப்படும். உடனடியாக பயிற்சி வகுப்பில் இருந்து அப்படியே ஓட்டுச்சாவடிக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்படுவதால் பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுகின்றன.*


*🌟தேர்தல் பணிக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையை முதல் அல்லது இரண்டாவது பயிற்சி வகுப்பிலேலே வழங்க வேண்டும். திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த காலங்களில் 704 வாக்குச் சாவடிகள் பதற்றமானவை எனக்கண்டறியபபட்டுள்ளது. எனவே அத்தகையே வாக்குச் சாவடி மையங்களில் பணியாற்றும் வாக்குப்பதிவு அலுவலர்களுக்குகூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள்மேற்கொள்ள வேண்டும்.*


*🌟தேர்தல் பணியில் ஈடுபடும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் உடல் நலனைக் கருத்தில் கொண்டு மண்டல அளவில் நடமாடும் மருத்துவ குழுவை  அமைத்திட வேண்டும். கடந்த 2016 சட்டமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்ட இரண்டு ஆசிரியர்கள் வாக்குச்சாவடிக்குஉள்ளே மரணம் தழுவிய துர்பாக்கிய நிலை ஏற்பட்டதால், மண்டல அளவிலான மருத்துவக் குழுவைக் கொண்டு அனைத்து மருத்துவ வசதிகளையும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.*


*_மதிப்பூதியத்தை உயர்த்தி வழங்க வேண்டுதல்:_*


*🌟கடந்த காலங்களில் தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பூதியம் மிகவும் குறைவாக உள்ளது. தலைமைத் தேர்தல் அலுவலருக்கு ரூ.1700/-ம் மற்ற வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு ரூ.1300/-ம் மதிப்பூதியமாக வழங்கப்படுகிறது.*


*🌟வாக்குப் பதிவு நடைபெறும் அன்று வாக்குப் பதிவு முடிவுற்று மண்டல அலுவலர் (Zonal Officer) வந்து மின்னனு வாக்குப்பதிவு (EVM) இயந்திரம் மற்றும் வாக்குப் பெட்டிகளை பெற்று செல்லும் வரை வாக்குச் சாவடியிலேயே இருக்க வேண்டும். அன்று வாக்குச்சாவடியிலேயே தங்க வேண்டிய சூழ்நிலைதான் பெரும்பலான கிராமங்களில் பணிபுரியும் தேர்தல் பணியாளர்களின் நிலையாக உள்ளது. இந்த தேர்தல் பணிக்காக ஒவ்வொரு பணியாளர்களும் 5 நாட்கள் தேர்தல் பணியாற்ற வேண்டியது உள்ளது.*


*🌟அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் தேர்தல் பணியாற்றுவது ஜனநாயக கடமை என்பதை உணர்ந்து நாங்கள் 100% முழுமனதுடன் தேர்தல் பணி புரிகின்றோம். ஆனால் தற்போது உள்ள விலைவாசி உயர்வு, போக்குவரத்து செலவு, உணவு செலவு ஆகியவற்றை கணக்கில் கொள்ளாமல் மதிப்பூதியமானது மிகவும் குறைவாக வழங்கப்படுகிறது.*


*🌟எனவே தற்போது உள்ள விலைவாசி உயர்வை கணக்கில் கொண்டு தேர்தல் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்க அவர்கள் பெறும் மொத்த ஊதியத்தில் 10% சதவீதம் மதிப்பூதியமாக வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என எங்கள் அமைப்பின் சார்பில் அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.*


*🤝தோழமையுடன்;*


*_செ.பால்ராஜ்,_*

*மாவட்ட செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,*

*திருநெல்வேலி மாவட்டம்.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 


No comments: