Tuesday, 26 March 2019

*JACTTO-GEO வழக்கு : ஓய்வு பெறுவோர் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் மட்டும் நீக்கம் - அடுத்த விசாரணை 08.04.2019*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/03/jactto-geo-08042019.html


*🌟ஜாக்டோ-ஜியோ போராட்டம் மீதான வழக்கு நேற்று சென்னை உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் இன்று (25.03.2019) மீண்டும் விசாரணைக்கு வந்தது.*


*🌟ஜாக்டோ-ஜியோ தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் திரு.N.G.R.பிரசாத், திரு.சங்கரன் & திரு.லஜபதிராய் உள்ளிட்டோர் வாதிட்டனர்.*


*🌟மூத்த வழக்கறிஞர் திரு.N.G.R.பிரசாத் அவர்கள் ஒழுங்கு நடவடிக்கை காரணமாக ஓய்வு பெற்றோரும் பெறுவோரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இப்போராட்டம் 2 ஆண்டுகளாக நடைபெற்று வருவதையும் நீதிமன்ற வழிகாட்டல் படி தலைமைச் செயலாளர் செய்துமுடிக்காததையும் குறித்து வாதிட்டார்.*

*🌟வழக்கறிஞர் திரு.சங்கரன் அவர்கள் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான பொய் வழக்குகளையும், ஒழுங்கு நடவடிக்கைகளையும் குறிப்பிட்டு வாதிட்டார்.*



*🌟வழக்கறிஞர் திரு.லஜபதிராய் அவர்கள், CPS நீக்கம் குறித்த ஸ்ரீதர் குழுவின் அறிக்கையை வெளியிடாதது, தமிழக அரசு அரசாணை எண்.254-ன் படி நடந்து கொள்ளாதது, தையலாசிரியராக இருந்து தற்போது தனது வயோதிகத்திலும் வாழ்வாதாரத்திற்காக 100 நாள் வேலை செய்து வரும் ஆசிரியர்.எலிசபத் பற்றியும் வாதிட்டார்.*

*🌟நீதிபதிகள் தரப்பில், நீதிபதிகளையும் நீதிமன்றத்தையும் படித்தவர்களே விமர்சிப்பதும், ஓய்வு பெற்றோர் இயக்கங்களை நடத்துவதையும், ஆளும் தரப்பிற்குச் சாதகமானோர் போராடாமலும் எதிர்த்தரப்பினர் போராட்டத்தைத் தூண்டுவதும் மாறி மாறி நடந்துவருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.*



*🌟சுமார் 50 நிமிடங்கள் நடைபெற்ற வழக்கு விசாரணையில், ஜாக்டோ-ஜியோ போராளிகள் மீது தொடுக்கப்பட்டுள்ள பணியிடை நீக்கம் குறித்த ஒழுங்கு நடவடிக்கைகளில், இக்கல்வியாண்டில் பணி நிறைவு பெறுவோருக்கு மட்டும் தற்போது நடவடிக்கைகளை விலக்கிக் கொள்ள நடவடிக்கை எடுப்பதாக அரசு தரப்பில் உறுதியளிக்கப்பட்டது.*

*🌟கோரிக்கைகள் தொடர்பான வாதங்களுக்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் அதுகுறித்து உறுதியளிக்க முடியாது என அரசு தரப்பில் கூறப்பட்டது.*



*🌟கிருஷ்ணகிரி மாவட்ட மீன்வளத்துறையில் மேற்பார்வையாளராகப் பணியாற்றி வரும் திரு.பழனிச்சாமி அவர்களை நாளது தேதிவரை பணியேற்க விடாது பிறப்பிக்கப்பட்ட தடையாணை ஜாக்டோ-ஜியோ தரப்பு வலியுறுத்தலைத் தொடர்ந்து திரும்பப் பெற உறுதியளிக்கப்பட்டது.*


*🌟முன்னதாகத் தேர்தலைக் காரணம் கூறி, வழக்கு விசாரணையை சூன் மாதத்திற்கு ஒத்திவைக்கக் கோரியது அரசு தரப்பு. ஆனால், நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஏப்ரல்-8-ற்கு ஒத்திவைத்தனர்.*


*📧தகவல் பகிர்வு:*

*_TNPTF விழுதுகள்_*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм



No comments: