*🖥️ கள்ளக்குறிச்சி TNPTF - இ பைலிங் பயிற்சி வகுப்பு அறிவிப்பு👨🏫*
*🖥️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்டக் கிளையின் சார்பில் 2021-2022 ஆம் ஆண்டிற்கான ஆசிரியர்கள் தங்களது வருமான வரி கணக்கினை தாக்கல் செய்வதற்கான இ-ஃபைலிங் பயிற்சியானது, எதிர்வரும் 12.9.2021- (ஞாயிற்றுக்கிழமை) அன்று காலை 10:30 மணி அளவில் கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் (ஆண்கள்) நடைபெற உள்ளது.*
*🖥️அப்பயிற்சியில் கள்ளக்குறிச்சி மாவட்டத்திலுள்ள அனைத்து வட்டார கிளைகளின் நிர்வாகிகள் மற்றும் தங்களது வட்டாரத்தில் அனைத்து ஆசிரியர்களும் பயனடையும் வகையில் இந்த ஆண்டிற்கான இ-ஃபைலிங்கை செய்துதர ஆர்வமுள்ள இயக்கத் தோழர்கள் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறோம். ஏனெனில், இப்பயிற்சியானது இயக்கத்தை மேலும் வலுப்படுத்துவதற்கு ஒரு காரணியாக இருக்கும் என்று மாவட்ட கிளை கருதுகிறது.*
*🖥️ மேற்கண்ட பயிற்சியானது சரியாக 11.00 மணிக்கு தரப்பட உள்ளதால் பயிற்சிக்கு வரும் தோழர்கள் கீழ்க்காணும் இனங்களைக் கொண்டு வந்தால் நலம்.*
*⚡1. நன்றாக சார்ஜ் செய்யப்பட்ட லேப்டாப்.*
*⚡2. நெட் கனெக்சன் கொடுப்பதற்கு உகந்த மொபைல் போன்.*
*⚡3. இ-ஃபைலிங் செய்ய வேண்டிய வருமான வரி கணக்கீட்டு படிவம்.*
*⚡4. மேற்கண்ட படிவத்திற்கான படிவம் 16 part-A and part-B.*
*⚡5. கொண்டுவரும் வருமானவரி கணக்கீட்டு படிவத்திற்கான username and password தெரிந்து வந்தால் நன்று. தெரியவில்லை என்றால் பயிற்சியில் விவரம் கூறப்படும்.*
*🤝தோழமையுடன்*
*_க.கலாநிதி_*
*மாவட்டச் செயலாளர்*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*
*கள்ளக்குறிச்சி மாவட்டம்*
No comments:
Post a Comment