Saturday 31 March 2018

*புதிய பாடத்திட்டத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி ஜூன் முதல் வாரத்தில் அளிக்கப்படும்.*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/03/blog-post_10.html


🌟தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் 5 ஆண்டுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்படவேண்டும். ஆனால் பல ஆண்டு களாக மாற்றப்படாமல் இருந்தது.


🌟இதன் காரணமாக தமிழக அரசு புதிய பாடத்திட்டத்தை தயாரித்தது. அதன்படி 1-வது வகுப்பு, 6-வது வகுப்பு, 9-வது வகுப்பு, 11-வது வகுப்பு ஆகியவற்றுக்கு 2018-2019 கல்வி ஆண்டில் புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும்.


🌟அவ்வாறு அமல்படுத்தும்போது அந்த பாடத்தை எவ்வாறு கற்பிக்கவேண்டும். அதில் உள்ள கதைகளை எப்படி சொல்லவேண்டும். புதிய தொழில் நுட்பத்தில் எவ்வாறு மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும் என்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சி குறித்து சென்னை டி.பி.ஐ. வளாக பள்ளிக்கல்வி அதிகாரி ஒருவர் கூறியதாவது:-


🌟புதிய பாடத்திட்டம் குறித்து மாணவர்-மாணவிகளுக்கு கற்பிக்க பயிற்சி அளிக்கப்படுவது உறுதி. பயிற்சி இல்லாமல் மாணவர்களுக்கு கற்பிக்க முடியாது. ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் கோடைவிடுறை விரைவில் விட உள்ளது. கோடை விடுமுறையின்போது ஆசிரியர்களை தொந்தரவு செய்யாமல் பள்ளிகள் திறந்த பின்பு ஜூன் மாதம் முதல் வாரத்தில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். பயிற்சி ஒரு வாரம் அல்லது 2 வாரம் நடைபெறும்.


🌟மாணவர்கள் மனப்பாடம் செய்வதை முடிந்த அளவுக்கு குறைத்து அவர்களுக்கு புரிந்து கொள்ளும்படி கற்பிக்கவேண்டும். ஏன் என்றால் மனப்பாடம் இல்லாமல் படித்தால் போட்டித்தேர்வு உள்ளிட்ட எந்த தேர்வையும் மாணவர்கள் எதிர்கொள்ளலாம். அதன் காரணமாக புதிய பாடத்திட்டத்தின்படி முடிந்த அளவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கம்ப்யூட்டரை பயன்படுத்தி பாடம் கற்பிக்க வேண்டி இருக்கும்


*சர்வசிக்‌ஷா அபியான் உள்பட பள்ளிக்கல்வி திட்டங்கள் ஒன்றாக இணைப்பு : மத்திய அரசு*



🌟மத்திய அரசு கடந்த 2000ம் ஆண்டில் அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற திட்டத்தை கொண்டு வந்தது. இது 10 ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தது. 10 ஆண்டுகளுக்கு பிறகு அந்த திட்டம் மேலும் நீட்டிக்கப்பட்டது.


 🌟அதைத் தொடந்து 2010ம் ஆண்டு மத்திய இடைநிலைக் கல்வி திட்டத்தையும் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த இரண்டு திட்டங்கள் தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் நடைமுறையில் உள்ளன. இந்நிலையில் இந்த இரண்டு திட்டங்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் தனித்தனியாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.


🌟இப்போது, மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறை மேற்கண்ட இரண்டு திட்டங்களையும் ஒன்றாக இணைப்பது, அத்துடன் ஆசிரியர் கல்வி திட்டத்தையும் ஒன்றாக இணைப்பது  குறித்து ஆலோசித்து வந்தது. இதற்கான ஆய்வுக் கூட்டம் புதுடெல்லியில் நேற்று முன்தினம் நடந்தது. அதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டார்.


🌟கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் பேரில் மேற்கண்ட 3 திட்டங்களையும் ஒரே திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளனர். ஒருங்கிணைந்த இந்த திட்டம் ஏப்ரல் 1ம் தேதி முதல் மார்ச் 2020 வரை ஒரே திட்டமாக செயல்படும். இதற்காக ரூ.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த ஒருங்கிணைந்த திட்டத்திற்கு ஏற்ப பள்ளிக் கல்வித்துறை வடிவமைக்கப்படும். கல்விக்கான தற்போதைய நிதி ஒதுக்கீட்டில் 20 சதவீதம் அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм 

No comments: