Sunday, 13 May 2018

*பி.இ. ஆன்-லைன் விண்ணப்பம்: 45,000 பேர் பதிவு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/05/45000.html


🌟பொறியியல் மாணவர் சேர்க்கை கலந்தாய்வுக்கு வெள்ளிக்கிழமை வரை 45 ஆயிரம் பேர் ஆன்-லைனில் பதிவு செய்துள்ளனர்.




🌟தமிழகம் முழுவதும் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றிருக்கும் அரசு ஒதுக்கீட்டு பொறியியல் இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்-லைன் கலந்தாய்வு ஜூலை முதல் வாரத்தில் அண்ணா பல்கலைக்கழகம் தொடங்க உள்ளது.




🌟முதன் முறையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஆன்-லைன் முறை மூலம், மாணவர்கள் வீட்டில் இருந்தபடியே பி.இ. இடங்களைத் தேர்வு செய்யலாம்.




🌟வீட்டில் இணையதள வசதி இல்லாத மாணவர்களின் வசதிக்காகவும், அனைத்து விண்ணப்பதாரர்களின் அசல் சான்றிதழ் சரி பார்ப்புக்காகவும் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.




🌟இந்த மையங்களில் மாணவர்கள் கட்டணம் இன்றி சேவையைப் பெற முடியும்.


🌟மே 30 வரை விண்ணப்பிக்கலாம்...: இதற்கான விண்ணப்பப் பதிவு மே 3-ஆம் தேதி தொடங்கியது.



🌟வெள்ளிக்கிழமை வரை 9 நாள்கள் நிறைவுற்ற நிலையில் 45,608 மாணவ, மாணவிகள் விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர்.




🌟இவர்களில் 5,916 பேர் மட்டுமே பல்கலைக்கழக உதவி மையங்கள் மூலமாக விண்ணப்பப் பதிவைச் செய்துள்ளனர். ஆன்-லைனில் பதிவு செய்ய மே 30 கடைசி நாளாகும்.


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм

No comments: