Friday, 28 September 2018

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக நடைபெற்ற பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்பு போராட்ட பிரகடன மாநாட்டில் கலந்துகொண்ட, களப்பணியாற்றிய தோழர்களுக்கு மாநில பொதுச்செயலாளர் தோழர் ச.மயில் அவர்கள் நன்றி மற்றும் வாழ்த்து தெரிவித்தல் தொடர்பான சுற்றறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡


https://tnptfayan.blogspot.com/2018/09/blog-post_28.html


*சுற்றறிக்கை -15, நாள்:27.09.2018.*


*_பேரன்புமிக்க நம் பேரியக்கத்தின் பெருமைக்குரிய தோழர்களே! வணக்கம்._*

         

*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நேற்று (26.09.2018) சென்னை சேப்பாக்கம் அண்ணா கலையரங்கில் நடத்திய  “பறிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர் ஊதிய மீட்புப் போராட்டப் பிரகடன மாநாடு மிகுந்த எழுச்சியோடும், நாம் எதிர்பார்த்ததை விட அதிகமான ஆசிரியர்களின் பங்கேற்போடும் மிகவும் வெற்றிகரமாக நடைபெற்றது.*            



*⭐சென்னை மாநகரில் ஒரு ஆசிரியர் இயக்கத்தின் மாநில மாநாடு இவ்வளவு ஆசிரியர்களின் பங்கேற்போடு இதுவரை நடைபெற்ற வரலாறு இல்லை என்று பத்திரிக்கையாளர்களே வியந்து பாராட்டக் கூடிய அளவிற்கு மாநாட்டு நிகழ்வுகள் அமைந்திருந்தன.*            



*⭐திராவிட முன்னேற்றக்கழகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்நாட்டின் முன்னாள் கல்வியமைச்சரும், தற்போதைய சட்டமன்ற உறுப்பினருமான மதிப்புமிகு.தங்கம் தென்னரசு அவர்கள் இப்படி ஒரு ஆசிரியர்கள் கூட்டத்தை இதுவரை நான் கண்டதில்லை என்று வியந்து கூறியதும், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வாழ்த்துரை வழங்கிய துணைப் பொதுச்செயலாளர் மதிப்புமிகு.மல்லை சத்யா அவர்கள் “நான் மாமல்லபுரத்திலிருந்து மாநாட்டு அரங்கிற்கு வருவதற்கு காலதாமதமானதற்கு நீங்கள் தான் காரணம், மாநாட்டுக்கு வந்த உங்கள் வாகனங்கள் மாமல்லபுரத்திலிருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அதில் என் வாகனமும் சிக்கிக்கொண்டது என்று மாநாட்டிலேயே கூறிய வார்த்தைகள் மாநாட்டின் சிறப்பை பறைசாற்றுவதாக அமைந்திருந்தது.*            


*⭐தமிழ்நாட்டின் மூலை முடுக்குகளிலிருந்தெல்லாம் மாநாட்டிற்கு வருகை தந்த ஆசிரியர்களின் பங்கேற்பு தமிழ்நாட்டின் ஆசிரியர் இயக்க வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயத்தை ஏற்படுத்தி விட்டது.*


*⭐தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சாதனைச் சரித்திரத்தில் இம்மாநாடு ஒரு தனியிடத்தைப் பெற்றுவிட்டது.*

            

*⭐இம்மாநாட்டின் வெற்றிக்கு உழைத்திட்ட நம் பேரியக்கத்தின் வட்டார, நகர, மாவட்ட, மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் மாநில மையம் தனது வீரஞ்செறிந்த வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் உரித்தாக்குகிறது.*



*⭐கடந்த 08.09.2018 மற்றும் 09.09.2018 ஆகிய இரு தினங்கள் கன்னியாகுமரியில் நடைபெற்ற அகில இந்தியப் பெண் ஆசிரியர்கள் மாநாட்டுப் பேரணியில் ஆசிரியர்களைப் பங்கேற்க வைத்த நிகழ்வு நடைபெற்று 15 நாட்களே ஆன நிலையிலும் மாநில மையம் வெளியிட்ட மாநாட்டுக்கான அழைப்பிதல், வால்போஸ்டர் மற்றும் துண்டுப்பிரசுரம் ஆகியவை மாநாட்டுக்கு நான்கு நாட்கள் முன்புதான் கிடைத்தது என்ற நிலையிலும், பள்ளிகளுக்கு முதல் பருவ விடுமுறை விடப்பட்டதால் பள்ளி பள்ளியாகச் சென்று ஆசிரியர்களைச் சந்திக்க இயலாத நிலையிலும் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்களை மாநாட்டுக்கு அழைத்து வந்த நம் ஸ்தாபன பலம், இயக்க நிர்வாகிகள் உழைப்பு பிரம்மிக்க வைப்பதாகவே உள்ளது.*            


*⭐மாநாட்டில் உணர்வுப்பூர்வமாகப் பங்கேற்ற அனைத்து ஆசிரிய சகோதரிகளுக்கும், ஆசிரிய நண்பர்களுக்கும் மாநில மையம் தனது நெஞ்சம் நிறைந்த நன்றிகளையும், பாராட்டுகளையும் உரித்தாக்கி மகிழ்கிறது.*


*👍தோழமையுடன்;*

*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм





No comments: