*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட முடிவுகள் - பொதுச்செயலாளர் அறிக்கை*
🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡
https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post.html
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 12.08.2019 திங்கட்கிழமை குற்றாலம் மேலகரத்தில் உள்ள பேரூராட்சி மண்டபத்தில் மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற்றது.*
*கூட்ட முடிவுகள்:*
*_தீர்மானம் எண் : 1_*
*🌟காப்பீட்டுக் கழக ஊழியர் சங்கத்தின் முன்னாள் மாநில நிர்வாகியும், பொருளாதார அறிஞருமான திரு.இ.எம்.ஜோசப், நாகப்பட்டினம் மாவட்டம் மயிலாடுதுறை முன்னாள் வட்டாரச்செயலாளர் திரு.மோகன் ராஜ், கோவை மாவட்டம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம் இயக்க உறுப்பினர் இடைநிலை ஆசிரியை திருமதி.மெஸ்மின் பெனிட்டா மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களிலும், நீலகிரி மாவட்டத்திலும் தொடர் மழை, வெள்ளத்தால் உயிரிழந்த பொதுமக்கள் ஆகியோரின் மறைவுக்கு இம்மாநிலச் செயற்குழு தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறது.*
*_தீர்மானம் எண் : 2_*
*🌟மே – 2019 முதல் சூலை – 2019 முடிய உள்ள இயக்க வரவு – செலவு எழுத்துமூலமான அறிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டு செயற்குழுவால் ஏகமானதாக ஏற்பு செய்யப்பட்டது.*
*_தீர்மானம் எண் : 3_*
*🌟2019-2020 ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வு தொடர்பாக உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை விரைவில் முடிவுக்குக் கொண்டு வந்து இறுதித்தீர்ப்பைப் பெற பள்ளிக்கல்வித்துறை விரைவு நடவடிக்கை மேற்கொள்வதோடு, பணிமாறுதல் பெறுவதற்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் ஒரே இடத்தில் பணிபுரிந்திருக்க வேண்டும் என்ற நிபந்தனையையும், ஒன்றியம் விட்டு ஒன்றியம் பணிநிரவல் செய்வதில் பணியில் மூத்த ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புக்களையும், அங்கன்வாடிகளில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணிமாறுதல் கலந்தாய்வில் கலந்துகொள்ள வாய்ப்பளிக்காத அநீதியையும் நீக்கி நியாயமான, நேர்மையான கலந்தாய்வை விரைந்து நடத்திட தமிழக அரசை இம்மாநிலச் செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் எண் : 4_*
*🌟இந்திய நாட்டின் பொதுக்கல்வியைச் சீர்குலைக்கக்கூடிய, ஏழை எளிய, கிராமப்புறக் குழந்தைகளின் கல்வி உரிமையைப் பறிக்கக்கூடிய, தாய்மொழிவழிக் கல்விக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய தேசிய கல்விக் கொள்கை – 2019 வரைவு அறிக்கையை மத்திய அரசு முற்றிலுமாகத் திரும்பப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாட்டு ஏழை, எளிய, கிராமப்புறக் குழந்தைகளின் இலவச தமிழ்வழிக்கல்வி வாய்ப்பை முற்றிலும் பாதிக்கக்கூடிய வகையில் அரசுப்பள்ளிகளை தமிழக அரசு மூடுவதைக் கைவிடக்கோரியும், ஏற்கனவே மூடியுள்ள அரசுப்பள்ளிகளை திறக்க வலியுறுத்தியும், அரசுப்பள்ளிகளில் மாணவர்சேர்க்கையை வலியுறுத்தி பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் 23.09.2019 முதல் ஒரு வாரகாலம் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் ஆறு முனைகளிலிருந்து விழிப்புணர்வுப் பிரச்சாரப் பயணம் நடத்துவதெனவும், இப்பிரச்சாரப் பயணத்திற்கு மாநிலத்தலைவர், பொதுச்செயலாளர், மாநிலப்பொருளாளர், துணைப்பொதுச்செயலாளர், STFI பொதுக்குழு உறுப்பினர் மற்றும் மாநிலத்துணைத்தலைவர்கள் திரு.பெ.அலோசியஸ் துரைராஜ், திரு.அ.ரஹீம் ஆகியோர் மண்டல வாரியாக தலைமையேற்று நடத்துவதெனவும், ஆறு முனைகளிலிருந்து வரும் பிரச்சாரப்பயணத்தை கரூரில் நிறைவு செய்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்கும் பிரச்சாரக்கூட்டத்தை நடத்துவதெனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் எண் : 5_*
*🌟இந்தியப்பள்ளி ஆசிhயர் கூட்டமைப்பின்(STFI) மத்திய செயற்குழு(CEC) மற்றும் தமிழ்நாடு மாநிலக்குழு ஆகியவற்றின் முடிவின்படி 01.10.2019 மற்றும் 02.10.2019 ஆகிய தேதிகளில் திண்டுக்கல்லில் நடைபெறவுள்ள பெண்ணாசிரியர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி வகுப்பில் நமது இயக்கத்தின் சார்பில் பெண் மாநில நிர்வாகிகள் 8 பேர் உட்பட நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் பெண்ணாசிரியர்கள் கலந்து கொள்வதென ஏகமனதாகத் தீர்மானிக்கப்பட்டது.*
*_தீர்மானம் எண் : 6_*
*🌟தேசியக்கல்விக்கொள்கை – 2019 வரைவு அறிக்கையை ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க நமது இயக்கத்தின் சார்பில் துணைப்பொதுச்செயலாளர் தலைமையில் அமைக்கப்பட்ட ஏழுபேர் கொண்ட குழு அளித்துள்ள 25 பக்கங்கள் கொண்ட அறிக்கையை இம்மாநிலச் செயற்குழு ஏற்பு செய்வதோடு அவ்வறிக்கையை உடனடியாக மத்திய, மாநில அரசுகளுக்கு மின்னஞ்சல் மூலம் அனுப்பிடவும் இச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் எண் : 7_*
*🌟மாநில அமைப்பின் நிதிநிலைமை , இதுவரையிலான அரசாணை எரிப்புப் போராட்ட வழக்குச் செலவுகள், எதிர்கால வழக்குச் செலவுகள் மற்றும் தொடர் இயக்க நிகழ்வுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு மாவட்டக்கிளைகள் மாநில அமைப்பிற்குச் செலுத்தவேண்டிய நிதி நிலுவைகளை 22.08.2019-க்குள் செலுத்துவது எனவும், அவ்வாறு செலுத்தாத மாவட்டக்கிளைகளின் தலைவர், செயலாளர், பொருளாளர் ஆகியோர் கொண்ட சிறப்புக்கூட்டத்தை 31.08.2019 அன்று திருச்சியில் நடத்துவதெனவும், அக்கூட்டத்தில் நிதிநிலுவைகளை செலுத்துவதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதெனவும் இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் எண் : 8_*
*🌟2019-2020 இயக்க உறுப்பினர் சேர்க்கையை விரைந்து முடித்து உறுப்பினர் அடிக்கட்டை, உறுப்பினர் பட்டியல் மற்றும் உறுப்பினர் சந்தா பங்கீடு ஆகியவற்றை மாவட்டக்கிளைகள் மாநில மையத்தில் விரைந்து ஒப்படைத்திட இம்மாநிலச்செயற்குழு ஏகமனதாகக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் எண் : 9_*
*🌟ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தின் (SMSA) குறுவள மையங்களின் தலைமையிடமாக இனிமேல் மேல்நிலைப்பள்ளிகள் இயங்கும் என்பதும், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் குறுவள மையங்களின் எல்லைக்குட்பட்ட அனைத்துப் பள்ளிகளையும் கண்காணிக்கும் பணியையும் மேற்கொள்வார் என்பதும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்டத்தில் பல்வேறு குழப்பங்களையும், அத்திட்டத்தின் நோக்கத்தைச் சிதைப்பதோடு வட்டார வள மையங்களை இல்லாமல் செய்யும் நடவடிக்கை என்பதால் மேற்கண்ட முடிவை தமிழக அரசு உடனடியாகத் திரும்பப்பெற இம்மாநிலச்செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.*
*_தீர்மானம் எண் : 10_*
*🌟தொடக்கக்கல்வித்துறையில் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு தற்போது அரசாணை எண்:400 நாள் : 25.05.1995 மற்றும் அரசாணை எண்: 166 நாள் : 07.06.1999 ஆகியவற்றின் படி ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், தமிழாசிரியர் ஆகிய மூன்று பதவிகளின் ஒருங்கிணைந்த முன்னுரிமைப்பட்டியலின்படி வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தற்போது இந்நிலைலைய மாற்றி ஒரு குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டுமே நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று சிலர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து ஆணை பெற்றுள்ளதாகத் தெரிகிறது. இதனால், எதிர்காலத்தில் ஆரம்பப்பள்ளித் தலைமை ஆசிரியர்கள் நடுநிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வாய்ப்பை முற்றிலும் இழக்கக்கூடிய நிலை ஏற்படும் என்பதால் இது தொடர்பாக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில அமைப்பின் சார்பில் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வில் ஏற்கனவே உள்ள நடைமுறை தொடரும் வகையில் உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
*_தீர்மானம் எண் : 11_*
*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலப் பொறுப்பாளர்களுக்கான உணவுப்படியை விலைவாசி உயர்வைக் கருத்தில் கொண்டு நூறு ரூபாயாக உயர்த்தி வழங்கிட இம்மாநிலச் செயற்குழு ஏகமனதாகத் தீர்மானிக்கிறது.*
🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
*மாநில பொதுச்செயலாளர்,*
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*
🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм
No comments:
Post a Comment