Friday, 16 August 2019

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பாக தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த கருத்துக்களும், ஆட்சேபனைகளும் - பொதுச்செயலாளர் அறிக்கை*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟

  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡



https://tnptfayan.blogspot.com/2019/08/blog-post_16.html


*👉தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நமது  கருத்துக்களும், ஆட்சேபனைகளும் குறித்த முழு விபரம் PDF வடிவில்*

👇👇👇👇👇👇👇👇


https://drive.google.com/file/d/11mDGcQxt9M1WwLvSSs-gT8lHNMmfcyGg/view?usp=drivesdk


*_மாற்றம் ஒன்றே மாறாதது_ என்பார் _காரல் மார்க்ஸ்._* 


*🌟மாற்றங்கள் நம் விருப்பப்படி  நடைபெறுவதில்லை. மாறி வரும் பொருளாதாரச் சூழலிலும், வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அடிப்படையிலும்உலகம் உள்ளங்கையில் சுருங்கி விட்ட சூழ்நிலையில்  கல்வித்துறையும், அதன் கட்டமைப்புகளும் மாறி வரும் சூழலுக்கு ஏற்ப மாற வேண்டிய  கட்டாயச் சூழல் ஏற்படும் என்பதை நாம் அறிவோம்.*


*🌟அதோடு ஆளுகின்ற அரசுகள் தங்களது கட்சிகளின் மறைமுக அஜெண்டாக்களை  நிறைவேற்ற ஏதுவாக கல்விக் கொள்கைகளை மாற்றம் செய்து வந்துள்ளதும் வாடிக்கையாக  நடைபெறும் நிகழ்வுகளில் ஒன்றாகும். அந்த வகையில் அசுர பலத்தோடு ஆட்சி பொறுப்பேற்றுள்ள பா.ஜ.க அரசு தான் புதிதாக கடைபிடிக்க எத்தனிக்கிற கொள்கைகளை உள்ளடக்கிய தேசியக் கல்விக்  கொள்கை குறித்துக் கருத்துக் கேட்கிறேன் என்ற பெயரில் கடந்த மே மாதம் வரைவு  ஆவணம் ஒன்றை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை வெளியிட்டுள்ளது.*


*🌟நாடு முழுவதும் நடைமுறைப்படுத்த இருக்கக்கூடிய இந்த தேசிய கல்விக்  கொள்கை 2019, முந்தையக் கல்விக் கொள்கைகள விட மேம்பட்டதாகவும், நாட்டில் உள்ள  அனைவருக்கும் சமமான இலவசப் பொதுக்கல்வியை வழங்குவதாகவும், நாட்டில் உள்ள  அனைவருக்கும் சமமான தரமான இலவசப் பொதுக்கல்வியை வழங்குவதாகவும் அமைய வேண்டும்.  ஆனால் தற்போது பிஜேபி அரசால் வெளியிடப்பட்டு, விவாதிக்கப்பட்டுக்  கொண்டிருக்கும் புதிய கல்விக் கொள்கையின் வரைவு அறிக்கை 2019, ஏற்கனவே மரபு வழியில் உள்ள அத்தனை விழுமியங்களையும், சாதனைகளையும், புறந்தள்ளுகிறதாகவும், இருக்கிற கல்விச் சூழலை மேலும் மோசமான நிலைக்கு இட்டுச் செல்வதாகவும் அமைந்துள்ளது. இந்த மாற்றம் இந்தியாவின் பெரும் பகுதி மக்களுக்கு மிகுந்த  ஏமாற்றத்தை அளிப்பதாகவும், பல்வேறு தீமைகளையும், அச்சங்களையும்  உருவாக்குவதாயும் அமைந்த காரணத்தினாலேயே பெருமளவு எதிர்ப்பும் நாடு முழுவதும்  கிளம்பியுள்ளது  இந்த வரைவு அறிக்கை குறித்து கருத்துத் தெரிவிக்க, மாற்றங்களை முன் மொழிய  தமிழகத்தின் அனைத்துப் பகுதி மக்களுக்கும் குறிப்பாக ஆசிரியப் பெருமக்களுக்கும் தார்மீக கடமை உள்ளதை நாமறிவோம். அந்த வகையில் டாக்டர் கஸ்தூரிரங்கன் தலைமையில் அமைக்கப்பட்ட வல்லுநர் குழு இந்தியாவை மையப்படுத்தும் வகையில் தேசிய  அளவிலான வரைவு கல்விக் கொள்கை 2019 ஐ வெளியிட்டு நாடு முழுவதும்  கருத்துக்களைத் தெரிவிக்க கூறியுள்ளது.  இந்த தேசிய கல்விக் கொள்கை வரைவு குறித்து வரைவுக் குழுவின் தலைவரும்,  முன்னாள் இஸ்ரோ தலைவருமான டாக்டர் கஸ்தூரி ரங்கன் அவர்கள் தி இந்து ஆங்கிலப்  பத்திரிக்கைக்கு அளித்த பேட்டி ஒன்றில் இந்த வரைவு அறிக்கை குறித்து கூறுகையில்  ‘ஸ்மிருதி இராணி கல்வி அமைச்சராக இருந்த போது டி.சுப்பிரமணியன்  தலைமையில் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகள் மற்றும் அதோடு வெளி வந்த மனித வள மேம்பாட்டுத் துறையின் அறிக்கை போன்றவற்றை படித்த போது அவற்றைச்  செம்மைப்படுத்தினால் மட்டும் போதாது ஏற்கனவே வெளியிடப்பட்ட கல்விக் கொள்கை  குறித்த உள்ளீடுகள் முழுவதையும் மறுபார்வைக்கு உட்படுத்த வேண்டும் என்ற முடிவுக்கு வந்து, இப்போதுள்ள கல்வி முறையில் அடிப்படை மாற்றங்களை எங்களது வரைவுக்  கொள்கை 2019 வலியுறுத்துகிறது.” அந்த வகையில் வெளியிடப்பட்டு தேச முழுக்க அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ள  வரைவு தேசியக் கல்விக் கொள்கை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் 984 பக்கங்களைக் கொண்டுள்ளது. வரைவு தேசியக் கல்விக் கொள்கை ஹிந்தி மற்றும் ஆங்கில மொழிகளில்  மட்டும் வெளிவந்துள்ளதை மாற்றி தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளிலும் வெளியிட்டு  விரிவான கருத்துக்களை உள்வாங்க வேண்டும் என நாம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பு மக்களும் அரசுக்கு கோரிக்கை வைத்தும் மனித வள மேம்பாட்டுத்துறை செவி சாய்த்த பாடில்லை. பாரதி புத்தகாலயம், முற்போக்கு சிந்தனை கொண்ட கல்வியாளர்கள் மற்றும்அறிவியல்  இயக்கம் ஆகியவை முன் முயற்சி எடுத்து தமிழில் மொழி பெயர்த்து 484 பக்கங்களில் இந்த வரைவை வெளியிட்டுள்ளது.*


*🌟தேசிய கல்விக் கொள்கை 2019 வரைவு மொத்தம் 4 பகுதிகளை  உள்ளடக்கியதாகும். பகுதி 1 இல் 1 முதல் 8 தலைப்புகளில் பள்ளிக்கல்வி குறித்தும், பகுதி 2 இல் 9 முதல் 18 வரை உயர்கல்வி குறித்தும், பகுதி 3 இல் 19 முதல் 22 வரை முக்கியக்  தகவல் பகுதிகள் என்ற தலைப்பிலும், பகுதி 4 இல் உருமாறும் கல்வி என்ற தலைப்பிலும் ஒரு முழு நீள நாவல் போல் எழுதப்பட்டு வெளிவந்துள்ளது. மேலோட்டமாக படித்தால் மிகப் பெரிய மாற்றங்கள் நம் கண்ணெதிரே நிகழ்ந்து விடுவது போல் தோன்றினாலும் உள்ளார்ந்த பல அடிப்படையான அம்சங்களில், முடிவுகளில் BJB யின் அங்கமான RSS ன் கருத்துக்கள் ஆங்காங்கே மையப் புள்ளியாக நிலை  நிறுத்தப்பட்டு அதற்கு தரம், திறன், தகுதி போன்ற அலங்கார வார்த்தைகள்  பிரயோகிக்கப்பட்டுள்ளது. 484 பக்கங்களையும் படித்து வரிக்கு வரி நமது விமர்சனங்கள் மற்றும் மாற்றுக்  கருத்துக்களை, திருத்தப்பட வேண்டிய அம்சங்களை கூறுவது சாத்தியமில்லாத  சூழ்நிலையில், இந்திய தேசத்தின் பன்முக கலாச்சாரத்தை அசத்துப் பார்க்கிற ஏற்கனவே  சிறப்பாக செயல்படுகிற கட்டமைப்புகளைக் குலைக்கிற ஏற்பாட்டையும், மாநில உரிமைகளை முற்றாகப் பறித்து, மத்திய அளவில் அதிகாரத்தைக் குவிக்கிற ஏற்பாட்டை நாம் முன்னை விட வலுவாகவும், ஆணித்தரமாகவும் நம் கருத்தைப் பதிவிட வேண்டிய நிர்பந்தம்  ஏற்பட்டுள்ளது.*



*🌟அந்த வகையில் பிரதானமான அம்சங்களில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர்  கூட்டணியின் சார்பிலான திருத்தங்கள் மற்றும் ஆலோசனைகளை முன் வைக்கிறது.*


*👉தேசிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கை குறித்த நமது  கருத்துக்களும், ஆட்சேபனைகளும் குறித்த முழு விபரம் PDF வடிவில்*

👇👇👇👇👇👇👇👇


https://drive.google.com/file/d/11mDGcQxt9M1WwLvSSs-gT8lHNMmfcyGg/view?usp=drivesdk


🤝தோழமையுடன்;


*_ச.மயில்,_*

*மாநில பொதுச்செயலாளர்,*

*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.*


🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм


No comments: