Monday, 23 September 2019

*ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தை - உண்ணாவிரதப் போராட்டம் ஒத்திவைப்பு*


🌟⟦T⟧ ⟦N⟧ ⟦P⟧ ⟦T⟧ ⟦F⟧🌟
  ⚡⟬ அ ⟭ ⟬ ய ⟭ ⟬ ன் ⟭⚡

https://tnptfayan.blogspot.com/2019/09/blog-post_23.html

**
*🛡ஜாக்டோ ஜியோ கூட்டமைப்புடனான பேச்சு வார்த்தையில் மாண்புமிகு. கல்வி அமைச்சர் மற்றும் மாண்புமிகு. வருவாய்த்துறை அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.*

*_சுமார் 30 நிமிடங்கள் இப்பேச்சுவார்த்தை நடைபெற்றது_*.

**
*🛡பேச்சு வார்த்தையின் முடிவில் ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பின் நிதிக்காப்பாளரும், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முன்னாள் தலைவருமான _தோழர்.மோசஸ்_ ஊடகங்களுக்கு பேட்டியளித்தார்*  

**
*🛡இன்றைய பேச்சு வார்த்தையில்*..
மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் செங்காட்டையன் மற்றும் மாண்புமிகு வருவாய்துறை அமைச்சர் ஆகிய இருவரும் ஜாக்டோ ஜியோ போராட்டத்தின் போது கைது செய்யப்பட்டவர்களின் மீது உள்ள நடவடிக்கையை   ஒரு வார காலத்திற்குள் ரத்து செய்யப்படும் என்றும் ...*

**
*🛡மற்றக் கோரிக்கைகள் முதல்வரிடம் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளனர்*...

**
*🛡அதுவரை போராட்டம் எதுவும் வேண்டாம் என்று இன்றைய பேச்சு வார்த்தையில் அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது*.. 


**
*🛡அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று நாளைய உண்ணாவிரதம் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது...*


**
*🛡அக்டோபர் 2 வது வாரத்தில் ஜாக்டோ ஜியோ மாநில விரிவடைந்த உயர்மட்டக்குழு கூட்டத்தை கூட்டுவது எனவும்*

**
*🛡அக்கூட்டத்தில் பல முக்கிய முடிவுகளை எடுப்பது எனவும் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.*

🤝தோழமையுடன்;

*_ச.மோசஸ்_*
*ஜாக்டோ ஜியோ நிதிகாப்பாளர்*

🗝тnρтfαyαn.вℓσgѕρσт.¢σм




No comments: