Monday, 29 March 2021

*🛡️தபால் வாக்கு முகநூலில் வெளியான விவகாரம்! ஆசிரியையின் தபால் வாக்கை வேறுநபர் முறைகேடாகப் பெற்று வாக்களித்த உண்மையை வெளிக்கொணர்ந்த TNPTF தென்காசி மாவட்டக்கிளை!*

*🛡️தபால் வாக்கு முகநூலில் வெளியான விவகாரம்! ஆசிரியையின் தபால் வாக்கை வேறுநபர் முறைகேடாகப் பெற்று வாக்களித்த உண்மையை வெளிக்கொணர்ந்த  TNPTF தென்காசி மாவட்டக்கிளை!*


*⚔️*
*🛡 தனது தபால் வாக்கில் குறிப்பிட்ட வேட்பாளரைத் தேர்வு செய்தபின் அதைப் புகைப்படமெடுத்து முகநூலில் வெளியிட்டதாகத் தென்காசி மாவட்டம், சுரண்டை R.C நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் என்பவரை பணியிடை நீக்கம் செய்து வெளியான தென்காசி மாவட்டக் கல்வி அலுவலரின் செயல்முறைகள் தான் இன்று அனைத்து சமூக & செய்தி ஊடகங்களிலும் தீயென பரவி வருகிறது.*

*⚔️*
*🛡 தேர்தல் நடத்தை விதிமுறைகளின் படி, வாக்குப் பதிவு மையத்தில் யாருக்கு வாக்களித்தேன் என்று கூறுவதோ, தபால் வாக்கின் வாக்குச்சீட்டில் யாருக்கு வாக்களித்தேனென புகைப்படம் எடுத்து வெளியிடுவதோ தண்டனைக்குரிய குற்றங்களே.*

*⚔️*
*🛡 இது தொடர்பாக சம்பந்தப்பட்ட ஆசிரியை தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் உதவியை நாட, ஆசிரியை தபால் வாக்கைப் பெறவே இல்லை என்ற உண்மை வெளிவந்துள்ளது.*

*⚔️*
*🛡 சங்கரன்கோயிலில் நடந்த இரண்டாம் கட்ட பயிற்சி வகுப்பில் ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் தனது உடல்நிலை காரணமாக தனது தபால் வாக்குக் கவரை வாங்காமலே சென்றுவிட்டார். பெறப்படாத தபால் வாக்குகளை அஞ்சல் வழியே அனுப்பி வைப்பதுதான் தேர்தல் நடை முறை.*

*⚔️*
*🛡 ஆனால், ஆசிரியை திருமதி சகாய ஆரோக்கிய அனுஷ்டாள் அவர்களின் கையொப்பமுமின்றி யாரே வேறு நபர் ஆசிரியையின் தபால் வாக்கினைப் பெற்று அதிலுள்ள வாக்குச் சீட்டில் தனக்குப் பிடித்த வேட்பாளரைத் தேர்வு செய்து புகைப்படம் எடுத்துள்ளார்.*

*⚔️*
*🛡 மேற்படி புகைப்படத்தைத் தேங்காய் வியாபாரி ஒருவர் முகநூலில் பதிவிட்டுள்ளார். அப்புகைப்படம் வைரலாகப் பரவ அதைப் பார்த்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாவட்ட ஆட்சியரிடம் புகாரளிக்க, வாக்குச் சீட்டில் இருந்த வரிசை எண்ணை வைத்து முதற்கட்டமாக சம்பந்தப்பட்ட ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்வதாக அறிவித்திருந்தார் தென்காசி மாவட்டக் கல்வி அலுவலர்.*

*⚔️*
*🛡 தற்போது, தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளை சம்பந்தப்பட்ட ஆசிரியைக்கு உதவியாகக் களத்தில் இறங்கிய நிலையில் தான் மேற்கண்டவாறு ஆசிரியை தபால் வாக்கே பெறவில்லை என்பதும், வேறு யாரோ ஒருவர் முறைகேடாக ஆசிரியையின் தபால் வாக்கைப் பெற்ற உண்மையும் அதிகாரிகளுக்கும் வெளி உலகிற்கும் தெரிய வந்துள்ளது.*

*⚔️*
*🛡 இதனைத் தொடர்ந்து இரண்டாம் கட்ட பயிற்சியின் போது பொறுப்பில் இருந்த வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர் உள்ளிட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.*

*⚔️*
*🛡 மேலும், தபால் வாக்கினைப் பெற்றவர், புகைப்படம் எடுத்தவர் & முகநூலில் வெளியிட்ட நபர் யார் என்பது குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.*

*⚔️*
*🛡 இப்பிரச்சினையில் உரிய காலத்தில் துரித முறையில் செயல்பட்ட தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் தென்காசி மாவட்டக்கிளையின் செயல்பாடுகளால் தேவையற்ற மன உளைச்சலுக்கு உள்ளான ஆசிரியைக்கு நீதி உறுதிசெய்யப்பட்டுள்ளது.*

*⚔️*
*🛡 தேர்தல் விதிமுறைகளைப் பின்பற்ற வலியுறுத்தி உரிய காலத்தில் புகாரளித்த தென்காசி சட்டமன்றத் தொகுதி காங்கிரஸ் வேட்பாளரது செயலால் தபால் வாக்குகளைக் கொண்ட திட்டமிடப்பட்டிருந்த அநீதி வெளிச்சத்திற்கு வந்துள்ளது.*

*⚔️*
*🛡 தொடர் விசாரணையின் இறுதியில் தான் இது போன்று எத்தனை தபால் வாக்குகள் திருடப்பட்டுள்ளன என்பது தெரியவரும்.*

Wednesday, 10 March 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்ட அழைப்பிதழ்*

*🌟தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயற்குழு கூட்டம் 21.03.2021 ஞாயிற்றுக்கிழமை அன்று மதுரையில் உள்ள தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது*

*🌟மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் _தோழர்.மூ.மணிமேகலை_ அவர்கள் தலைமையில் நடைபெற உள்ளது.*

_கூட்டப்பொருள்:_

*⚡அஞ்சலி*
*⚡ வேலை அறிக்கை*
*⚡வரவு-செலவு*
*⚡15 அம்ச கோரிக்கைகள் - 20.02.2021 ல் சென்னையில் நடைபெற்ற தொடர்பு பக்கம் போராட்டம் - ஆய்வு*
*⚡இயக்கத்தின் 13 வது அமைப்புத் தேர்தல்கள் - வட்டார, நகர, மாநகர, மாவட்டக் கிளை தேர்தல்கள் - ஆய்வு*
*⚡அரசாணை எரிப்பு மற்றும் ஜாக்டோ ஜியோ போராட்டங்கள் - 17(ஆ) நடவடிக்கைகள் - ஆய்வு*
*⚡இயக்கத்தின் மாநில தேர்தல் - தேர்தல் தேதி முடிவு செய்தல்.*
*⚡இயக்கத்தின் மாநில தேர்தல் - தேர்தல் ஆணையாளர்கள் நியமனம்*
*⚡இயக்கத்தின் மாநில வரவு-செலவு தணிக்கை - தணிக்கைக் குழு நியமனம்*
*⚡இயக்கத்தின் 13 வந்து அமைப்பு தேர்தல்கள் - தேர்தல் தீர்ப்பாயம் அமைத்தல்*
*⚡ஆசிரியர்கள் பிரச்சினை (எழுத்துப்பூர்வமாக)*
*⚡பொதுச்செயலாளர் கொணர்வன.*

*🌟அனைத்து மாநில செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கூட்டத்தில் பங்குகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.*

*🌟21.03.2021 அன்று காலை 9.00 மணிக்கு மேற்குறித்த இடத்தில் மாநில நிர்வாகிகள் கூட்டம் நடைபெறும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.*

🤝தோழமையுடன்;
*_ச.மயில்,_*
மாநில பொதுச்செயலாளர்
*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி தூத்துக்குடி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

_தூத்துக்குடி மாவட்டக்கிளை 13 வது அமைப்புத்  தேர்தல் முடிவுகள்..._

*⚡மாவட்டத் தலைவர்*
திரு மா. கலை உடையார்

*⚡மாவட்டச் செயலாளர்*
திரு சு. செல்வராஜ்

*⚡மாவட்ட பொருளாளர்*
திருமதி கோ.ஜெயசீலி

*⚡மாநில செயற்குழு உறுப்பினர்*
திரு தே. அந்தோணி சார்லஸ்

*⚡மாநில பொதுக்குழு உறுப்பினர்கள்:*
1.திரு ஜீ. மகேந்திரன்
2.திரு அ. சகாயராஜன்
3. திரு ப.மு. பாப் ஹையஸ்
4. திரு ஆ.ராபர்ட்கிங்

*⚡மாவட்ட துணைத்தலைவர்கள்*
1. திரு ம.புனித அந்தோணி

2. திருமதி பெ.ரோஸ்லின் அன்னலீலா

3. திருமதி D.  அன்னலட்சுமி

*⚡மாவட்ட துணைச் செயலாளர்கள்:*
1. திரு R.பவுல் ஆபிரகாம் அந்தோணிராஜ்

2. திருமதி வே.செல்வி

*⚡STFI பெண் ஆசிரியர் ஒருங்கிணைப்புக் குழு*
திருமதி S.வசந்தி

*⚡தூத்துக்குடி கல்வி மாவட்டத்தலைவர்*
திரு K. குணசேகரன்

*⚡தூத்துக்குடி கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு மி.எபனேசர்

*⚡கோவில்பட்டி கல்வி மாவட்டத் தலைவர்*
திரு L.ஸ்ரீதரன்

*⚡கோவில்பட்டி கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு M. ரவீந்திர ராஜன்

*⚡திருச்செந்தூர் கல்வி மாவட்டத் தலைவர்* திருமதி இ.ஜேஸ்மின் விண்ணரசி

*⚡திருச்செந்தூர் கல்வி மாவட்டச் செயலாளர்*
திரு A. ராஜசேகர்

*⚡தேர்தல் ஆணையாளர்:*
திரு செ.பால்ராஜ்
மாவட்ட செயலாளர்
திருநெல்வேலி.

*⚡துணை ஆணையாளர்*
திரு மு. பிரம்மநாயகம்
மாநிலச் செயற்குழு உறுப்பினர்.

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

Tuesday, 9 March 2021

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தின கருத்தரங்கம்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, விழுப்புரம் மாவட்டம் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*

⚡நாள்:
*10.03.2021 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு

*📲ZOOM வழியில் மகளிர் தின கருத்தரங்கம் நடைபெற உள்ளது.*

⚡கருத்தாளர்:
*_தோழர்.மூ.மணிமேகலை_*
*மாநிலத் தலைவர்* *TNPTF*

⚡தலைப்பு :
*'பணிபுரியும் இடங்களில் பெண்கள் எதிர்கொள்ளும் சவால்களும் தீர்வுகளும்'*

⚡தலைமை :
*_தோழர்.கு.குணசேகரன்_*
*மாவட்டத் தலைவர்* *TNPTF*

⚡தொடக்கவுரை :
*_தோழர் அ.ரஹீம்_ மாநில துணைத் தலைவர் TNPTF*

*_தோழர் சா.சித்ரா_*
*மாநிலச் செயலாளர் TNPTF*

⚡நன்றியுரை:
*_திரு சு.தண்டபாணி_ மாவட்டப் பொருளாளர்.*

*📲தோழர்கள் அனைவரும் இணைய வழியில்  திரளாக  கலந்துகொள்ள வேண்டுமென மாவட்ட மையத்தின் சார்பில் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்!*

*📲கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி நேராக கருத்தரங்கில் கலந்துகொள்ளலாம்!*
👇👇👇👇👇👇👇👇👇👇👇

Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/7249280585

🤝தோழமையுடன்

*_இரா.சண்முகசாமி_*
*மாவட்ட செயலாளர்*
*TNPTF விழுப்புரம் மாவட்டம்.*


Sunday, 7 March 2021

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, சேலம் மாவட்டத் தேர்தல் முடிவுகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  சேலம் மாவட்டத் தேர்தல் முடிவுகள்*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,  சேலம் மாவட்டத் தேர்தல் இன்று (07.03.2021) ஞாயிற்றுக்கிழமை சிறப்பாக நடைபெற்றது  அனைத்து பொறுப்பாளர்களும் ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர்*

*⚡தேர்தல் ஆணையாளர்*

இரா.சண்முகசாமி விழுப்புரம் மாவட்டம்

*⚡தேர்தல் துணை ஆணையாளர்*

R.மலர்விழி   
 மாநில செயற்குழு உறுப்பினர் நாமக்கல்
 மாவட்டம்

*⚡மாவட்டத் தலைவர்*
செ.கணேசன்

*⚡மாவட்டச் செயலாளர்*
ந.பெரியசாமி

*⚡மாவட்டப் பொருளாளர்*
ச.தவமணி

*⚡மாவட்டத் துணைத் தலைவர்கள்*

1.கு.மாது
2.ந.கலையரசன்
3.(பெண்)காலியாக உள்ளது

*⚡மாவட்டத் துணைச் செயலாளர்கள்*
1.தி.குமார்
2.R.சரவணன்
3.(பெண்)காலியாக உள்ளது

*_கல்வி மாவட்ட பொறுப்பாளர்கள்_*

*⚡ஆத்தூர்கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
 KGS மனோகரன்

*செயலாளர்* 
தே.கணேசன்

*⚡சேலம்கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
காலியாக உள்ளது

*செயலாளர்*  
சி.அந்தோணி

*⚡சங்ககிரி கல்வி மாவட்டம்*
*தலைவர்*  
குணசேகரன்

*செயலாளர்* 
சி.சந்தோஷ்குமார்

*⚡எடப்பாடி கல்வி மாவட்டம்*
*தலைவர்* 
ந.இரவிச்சந்திரன்

*செயலாளர்* 
மு.கண்ணன்

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.*
🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் முடிவுகள் - செய்தி துளிகள்*

*🚩*

*🛡️தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கள்ளக்குறிச்சி மாவட்ட தேர்தல் நேற்று (06.03.2021) சனிக்கிழமை (புதிய மாவட்டமாக பிரிந்த நிலையில்) மிகச்சிறந்த முறையில் முதலாவது  தேர்தல் நடைபெற்றது.*

 *🚩*
*🛡️சேலம் மாவட்ட செயலாளர் _தோழர்.ந.பெரியசாமி_ மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து மாநில செயலாளர் _தோழர்.ச.டேவிட்ராஜன்_ அவர்களும் தேர்தல் ஆணையாளர்களாக வருகைபுரிந்து தேர்தலை ஜனநாயக முறையில் சிறப்பாக நடத்தினார்கள்.*

*🚩*
*🛡️தேர்தலில் அனைத்து பொறுப்பாளர்களும் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்*

_தேர்ந்தெடுக்கப்பட்ட பொறுப்பாளர்களின் பட்டியல்:_

*⚡மாவட்ட தலைவர்:*
*_தோழர்.மதலைமுத்து_*

*⚡மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.கலாநிதி_*

*⚡மாவட்ட பொருளாளர்:*
*_தோழர்.சுதா_*

*⚡மாவட்ட துணைத் தலைவர்:*
*_தோழர்.பழனிவேல்_*
*_தோழர்.இராஜ்மோகன்_*
*_தோழர்.பாத்திமா_*

*⚡மாவட்ட துணைச் செயலாளர்:*
*_தோழர்.அயன் சரவணன்_*
*_தோழர்.வை.கருணாகரன்_*
*_தோழர்.தேன்மொழி_*

*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.சரவணன்_*

*⚡கள்ளக்குறிச்சி கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.சாந்தகுமார்_*

 *⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.அ.வில்லியம்_*

 *⚡ உளுந்தூர்பேட்டை கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.அ.பாக்கியராஜ்_*

*⚡திருக்கோவிலூர் கல்வி மாவட்ட தலைவர்:*
*_தோழர்.ம.அலெக்ஸாண்டர்_*

*⚡ திருக்கோவிலூர் கல்வி மாவட்ட செயலாளர்:*
*_தோழர்.பி.ஷேக் ஜாகிர் உசேன்_*

💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐
*🚩புதிய பொறுப்பாளர்கள் அனைவருக்கும் _TNPTF அயன்_ சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்._*
💐🙏💐🙏💐🙏💐🙏💐🙏💐